பிபிசி உலக சேவையின் தமிழ்ப்பிரிவே பிபிசி தமிழ். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

India
Joined March 2009
ஆந்திராவின் உப்பாடா கடற்கரையில் சீறிப்பாய்ந்த ராட்சத அலைகள் ஆந்திராவின் காக்கிநாடாவில் உள்ள உப்பாடா கடற்கரையில் அர்னாப் புயல் காரணமாக நேற்று அலைகள் சீறிப் பாய்ந்தன. ஆந்திரா மற்றும் ஏனாம் இடையே அர்னாப் புயல் இன்று கரையை கடந்து வருகிறது. மதியத்துக்குள் முழுமையாக கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1
1
1,361
அர்னாப் புயல் எதிரொலி; ஆந்திராவில் சூறைக்காற்றுடன் கன மழை வங்கக்கடலில் உருவான அர்னாப் புயல் ஆந்திர பிரதேசத்தில் கரையை கடந்து வருகிறது. புயலின் கண் சற்று நேரத்தில் கரையை கடக்கக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அர்னாப் புயல் காரணமாக நேற்று இரவு முதல் ஆந்திர பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது.
1
1,694
தேனி விவகாரம்: சிறைத்துறை பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு எத்தகையது? எங்கே தவறு நடந்தது? bbc.in/4e4jr6M
1
1,371
அர்னாப் புயல்: 150கி.மீ வேகத்தில் வீசும் காற்று; 15 மாவட்டங்களில் வெள்ள அபாயம் - சென்னையிலும் மழை பெய்யுமா? bbc.in/4iFUVeN
2
1,751
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளைப் படைத்த அபிஷேக் சர்மா #AbhishekSharma
2
9
2,790
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள அர்னாப் புயல் ஆந்திரப் பிரதேசக் கடலோரத்தை நோக்கி நகர்ந்து வருகிறது... இதன் தாக்கமாக சென்னையின் வடக்கு பகுதியில் கடல் சீற்றமாக காணப்படுகிறது... வீடியோ... #CycloneArnab
5
24
4,459
செர்பியாவில் மாணவர்கள் போராட்டத்தால் நடந்த ஆட்சி மாற்றத்தை கொண்டாடி மகிழ்ந்த மக்கள் செர்பியாவில் மாணவர்கள் தலைமையிலான போராட்டத்தால் நீண்டகாலமாக ஆட்சியில் இருந்த அலெக்சாண்டர் வூசிக் பதவியிலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து, மக்கள் வீதிகளில் திரண்டு கொண்டாடினர்.  #Serbia #StudentsProtest
8
1
22
3,561
யுக்ரேனில் பொதுமக்களின் உள்கட்டமைப்புகளை வேண்டுமென்றே குறிவைத்ததன் மூலம் ரஷ்யா போர்க்குற்றங்களிலும், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களிலும் ஈடுபட்டுள்ளதாக ஐநாவின் சுயாதீன விசாரணைக் குழு முடிவு செய்தது. Link: youtu.be/d93L5rrz1gk
1
3
2,372
கடந்த வாரம் விற்பனைக்கு வந்த iPhone Duo திரையில் கோளாறு என புகார் தெரிவித்த வாடிக்கையாளர்கள்; மாற்றித் தருவதாக அறிவித்த ஆப்பிள் நிறுவனம் #iPhoneDuo #Apple
1
4
2,907
சென்னையில் டிவைடரில் மோதி விபத்துக்குள்ளான அரசுப் பேருந்து; 10-க்கும் மேற்பட்ட கார்கள் சேதம் சென்னை பாரிமுனையில் உள்ள உயர்நீதிமன்றம் அருகே என்.எஸ்.சி.போஸ் சாலையில் அரசுப் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளனது. பேருந்தின் பிரேக் பழுதடைந்ததால், கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் மீது மோதி, சாலையில் இருந்த டிவைடர் மீது ஏறி நின்றதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. #ChennaiBus #Accident
1
3
3
2,633
சித்தப்பா வீட்டில் இருந்து தங்கத்தை திருடி 'தார்' கார் வாங்கிய இளைஞர்; போலீசில் சிக்கியது எப்படி? #Maharashtra #Thar
1
4
3,921
மானை வேட்டையாடிய மலைப்பாம்பு மகாராஷ்டிராவின் பர்பனியில் உள்ள ஒரு வேளாண் பல்கலைக்கழக வளாகத்திற்கு உட்பட்ட பகுதியில் மலைப்பாம்பு ஒரு மானை வேட்டையாடியது. இந்த மலைப்பாம்பு 15 அடி நீளம் கொண்டதாக இருந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இந்த மலைப்பாம்பை பிடித்து, மக்கள் நடமாட்டம் இல்லாத தொலைதூர பகுதியில் விடுமாறு வனத்துறையிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #Maharashtra #Python
1
3
6
7,659
புயல் காரணமாக மேல்நோக்கி பாய்ந்த நீர்வீழ்ச்சி ஸ்காட்டிஷ் ஹைலேண்ட்ஸில் உள்ள லேர்க் பகுதியில், புயல் காலநிலையில் நீர்வீழ்ச்சி ஒன்று மேல்நோக்கி பாய்வது போல் காணப்பட்டது. 'போலோ' புயலால் குறைந்தது இருவர் உயிரிழந்துள்ளனர்; இந்தப் புயல் பிரிட்டன் முழுவதும் வெள்ளம், போக்குவரத்து பாதிப்பு மற்றும் மின்சாரத் தடைகளை ஏற்படுத்தியுள்ளது. #Waterfall
9
42
6,264
"ஆட்சி மாறுது.. ஆனால் ஆட்சி முறை மாறல" - சீமான் சிவகங்கை மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35-க்கு கொள்முதல் செய்யப்படுவதை குறிப்பிட்டு தவெக அரசை விமர்சித்துப் பேசினார். #TVK #Seeman
1
1
7
3,084
'அர்னாப்' புயலின் கணிக்கப்பட்ட பாதை வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள அர்னாப் புயல் மிகத் தீவிர புயலாக வலுவடைந்து ஆந்திரப் பிரதேச கடலோரத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்தப் புயல் அக்டோபர் 28-ஆம் தேதி காலை பாபட்லா – விசாகப்பட்டினம் இடையே, ஏனாம் அருகே கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #WeatherUpdate #ArnabCyclone
1
2,103
பதுங்கி இருந்த கைதிகள் ட்ரோன் மூலம் சிக்கிய தருணம் தேனி சிறையிலிருந்து நேற்று இரவு 17 கைதிகள் தப்பியோடினர். இதில் இன்று பிற்பகல் வரை 5 பேர் பிடிபட்ட நிலையில், தற்போது மேலும் 8 பேர் டிரோன் உதவியுடன் பிடிபட்டுள்ளனர். இது தொடர்பான காணொளியை தமிழ்நாடு தென்மண்டல காவல்துறை வெளியிட்டுள்ளது. மீதமுள்ள 4 பேரை பிடிப்பதற்கான தேடுதல் பணிகள் நடந்துவருதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Theni #Prison
4
32
7,732
தேனி சிறையில் இருந்து கைதிகள் தப்பியது எப்படி? | Explained தேனி மாவட்டத்தில் 17 விசாரணை கைதிகள் சிறையிலிருந்து தப்பித்துள்ளனர். வலிப்பு வந்தது போல் நாடகமாடி காவலர்களின் கவனத்தை திசை திருப்பி அவர்கள் தப்பித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதில் சிலர் பிடிபட்டுள்ளதாகவும், தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர். #Theni #Prison
3
1,930