Pinned Tweet
#KalaignarFacts
இந்த thread ல் கலைஞரின் சாதனைகள் மீம்ஸ்களாக.... 🙏🙏🙏
Babu Vmk retweeted
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தி.மு.க. அரசு கடுமையாகப் போராடி, தமிழ்நாட்டின் அமைதியையும் மதநல்லிணக்கத்தையும் நிலைநாட்டியது.
த.வெ.க. அரசு அடுத்தகட்டமாக என்ன சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளது என்பதை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் விளக்க வேண்டும்.
Babu Vmk retweeted
#நீதிக்கட்சி பிறந்தது தமிழ்ச்சமூகம் சந்தித்த அநீதிகளைத் தகர்ப்பதற்காக!
தந்தை பெரியார் விதைத்த சுயமரியாதை, பேரறிஞர் அண்ணா முழங்கிய மாநில உரிமை, முத்தமிழறிஞர் கலைஞர் நிலைநாட்டிய சமூகநீதி எனப் பரிணமித்த திராவிட இயக்கம், தமிழ்நாட்டின் வரலாற்றையும் ஒவ்வொரு குடும்பத்தின் எதிர்காலத்தையும் மாற்றியெழுதியது!
இன்று ‘மாற்றம்’ என்ற பெயரில் ஆட்சிக்கு வந்தவர்கள், மாநில உரிமைகளையும் சமூகநீதியையும் பின்னுக்குத் தள்ள முயலும் சூழலில், திராவிட இயக்கத்தின் தேவை முன்னெப்போதையும்விட அதிகரித்துள்ளது. நூற்றாண்டுப் போராட்டத்தால் வென்றெடுத்த உரிமைகளை, ஓர் ஆட்சியின் தவறுகளுக்குப் பலிகொடுத்துவிடக் கூடாது!
பெற்ற உரிமைகளைக் காப்போம்!
மறுக்கப்படும் உரிமைகளை வெல்வோம்!
திராவிடச் சிந்தனையைத் தலைமுறைகள் கடந்து வலுப்படுத்துவோம்!
#JusticeParty
Babu Vmk retweeted
திராவிட இயக்கத்தின் தொடக்கப்புள்ளி நீதிக்கட்சி உருவான நாள் இன்று!
சமூகநீதி - பெண் விடுதலை - சுயமரியாதை - மாநில உரிமை - மொழி உரிமை ஆகியவற்றை தமிழ்நாட்டின் அரசியல் அடையாளமாக்கியது நீதிக்கட்சி.
நீதிக்கட்சியின் வழியில் இந்த அடையாளங்களை வளர்த்தெடுத்தது திராவிட முன்னேற்ற கழகம்.
தமிழ்நாட்டின் இப்பெருமைகளை அழிக்கத்துடிக்கும் Reels சோப்ளாங்கிகளின் முயற்சிகளை முறியடிப்போம்.
நீதிக்கட்சி காட்டிய கொள்கை பாதையில் இன்னும் உறுதியோடு நடைபோடுவோம்.
#JusticeParty
Babu Vmk retweeted
திமுக அரசு செயல்படுத்தி வந்த பல குழுக்களை மொத்தமாக கலைப்பது, துறைசார் நிபுணர்களை வெளியேற்றிவிட்டு புதிய ஆட்களை நியமிப்பது என்பதே தவெக அரசின் தொடர்அணுகுமுறை.
Guidance Tamilnadu குழுவில் இருந்த பழைய ஆட்களை நீக்கிவிட்டு, தவெக அரசு புதிய ஆட்களை நியமித்திருந்தது.
புதிதாக நியமிக்கப்பட்ட 15 பேரில் 13 பேரை தவெக அரசு பணி நீக்கம் செய்துள்ளது. அதில் மூன்றுபேர் ஆந்திர அரசில் பணியில் இருந்து கொண்டே இங்கேயும் பணியாற்றி இருக்கிறார்கள். தமிழ்நாடு அரசின் முதலீட்டு தகவல்களை மற்ற மாநிலங்களுக்கு விலை பேசியிருக்கிறார்கள் என்று புகார்.
அரசு தகவல்கள் - பொதுவெளிக்கும் நீதிமன்றத்திற்குப் பதில் சொல்ல வேண்டியவை என்பதால் இப்போது தவெக அரசு சொல்லும் உளவாளிக் கதைகளை நான் நம்பவில்லை. இதில் வேறு ஏதோ தனிநபர் சர்ச்சை இருக்கிறது.
ஆனால் மே மாதத்திற்கு பிறகு தமிழ்நாட்டை ஆந்திராதான் ஆள்கிறது என்கிற குற்றச்சாட்டை தவெக அரசு நிரூபித்து வருகிறது.
Babu Vmk retweeted
சென்னை மாதவரத்தில் சுமார் ரூ.700 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல்.
போதை மருந்துகள் புழக்கம் குறித்து ஆதவ் அர்ஜுனா குபீர் பேட்டி.
என்ன 6 மாசத்துக்கு முன்னால குடுத்தாரு, இப்போ தேடினாலும் கிடைக்க மாட்டார்.
Babu Vmk retweeted
TVK ஆட்சியில் Vice City ஆகும் தமிழ்நாடு!
சென்னையில் 700 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப் பொருளை ஒன்றிய அரசின் வருவாய்ப் புலனாய்வுத் துறை பறிமுதல் செய்துள்ளது.
கடந்த மாதம் நாகையில், 270 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருளுடன் த.வெ.க. நிர்வாகியான 'மெத்' பூபாலனின் கடத்தல் சாம்ராஜ்யத்தைப் பிடித்த அதே DRI அமைப்புதான் இதனையும் பிடித்துள்ளது. நம் மாநிலத்தில் அவர்கள் மாதாமாதம் பிடிக்கிறார்கள்.
இதில் நமக்கு எழும் கேள்வி என்னவென்றால், தமிழ்நாட்டுக்குள் நடக்கும் இவ்வளவு பெரிய அளவிலான போதைப் பொருள் நடமாட்டங்களை மாநில அரசின் காவல்துறையால் ஏன் பிடிக்க முடியவில்லை?
பிடிக்க முடியவில்லையா அல்லது கண்டும் காணாமல் இருக்கிறார்களா? முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக இருந்த தமிழ்நாடு இப்போது மெத், ஹெராயின் கடத்தல்காரர்களின் favourite destination ஆகிவிட்டது.
தொடரும் சட்ட ஒழுங்கு சீர்குலைவு, த.வெ.க.வினரின் கட்டுக்கடங்காத பாலியல் அத்துமீறல்கள், மாபெரும் கொள்ளைச் சம்பவங்கள், குலைநடுங்க வைக்கும் லாக்கப் மரணங்கள் என TVK ஆட்சியில் தமிழ்நாடே Vice City ஆகிக் கொண்டிருக்கிறது.
இவற்றில் இருந்தெல்லாம் திசைதிருப்ப நேற்று புள்ளிவிவரங்களை ஒப்பித்த காவல்துறைத் தலைவர் இந்த ஹெராயின் பறிமுதல் குறித்து என்ன சொல்லப் போகிறார்? எல்லவாற்றுக்கும் 'வழக்கு பதியப்பட்டுள்ளது' என்பதை மட்டுமே பதிலாகத் தரும் அவர், மாநில அரசின் அமைப்புகளால் ஏன் போதைக் கடத்தல்காரர்களைப் பிடிக்க முடியவில்லை என்பதற்கு பதில் சொல்ல வேண்டும்.
போதைப் பொருள் கடத்தலைத் தடுக்க அமைக்கப்பட்ட 65 சிறப்பு அதிரடிப் படை என்ன செய்துகொண்டிருக்கிறது?
முதலமைச்சர் விஜய் அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் உள்துறையில் இத்தனை பிரச்சினைகள் நடந்துகொண்டிருக்கிறது. இப்போதும் பேசவில்லை என்றால் எப்போதுதான் அவர் பேசுவார்?
த.வெ.க. ஆட்சியில் அக்கட்சியின் ரீல்ஸ்மோகிகள் சட்டவிரோதமாக அணையைக் கூட திறக்கிறார்கள். ஆனால், முதலமைச்சர் விஜயின் வாயை யாராலும் திறக்க முடியவில்லையே!
#TVKfails





















