Pinned Tweet
வடகிழக்கு பருவமழை முன்னறிவிப்பு- 2026
சூப்பர் எல் நினோ & நேர்மறை IOD தாக்கம் எப்படி இருக்கும்?
புயல் ஆபத்தா? பெருமழையா?
விரிவான விளக்கம்..
#NEM2026 #ChennaiRains #Chennairains
Deltaweatherman Hemachander retweeted
திருவள்ளூர் : ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் பகுதியில் நேற்று இரவு பெய்த கனமழையால் விவேகானந்தர் தெரு மற்றும் விஜி தெரு உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.
#AVADI | #rain | #flood | #Puthiyathalaimuraitv | Puthiya thalaimurai
டெல்டாவெதர்மேன் ஹேமச்சந்தர் தினசரி வானிலை அறிக்கை| தேதி: 24.11.2026| காலை 8 மணி நிலவரம்
==> கீழைக்காற்றின் ஊடுருவலால் வடகடலோர மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் பரவலாக மழை செய்துள்ளது. தற்போது சற்று இடைவெளி கொடுத்திருக்கும் நிலையில் முற்பகலில் மீண்டும் மழை துவங்கும்.
==> காவிரி டெல்டா பகுதிகளில் தற்போது தான் கிழக்கு காற்று ஊடுருவ துவங்கியுள்ளது. அடுத்த 1 மணி நேரத்தில் #மயிலாடுதுறை, #காரைக்கால், #நாகப்பட்டினம் மாவட்டங்களில் மழை துவங்கி #திருவாரூர், #தஞ்சாவூர் மாவட்டங்களில் பரவலாகும்.
==> வரக்கூடிய 24 மணி நேரத்தில் காவிரி டெல்டா, வடகடலோர மாவட்டங்கள் மற்றும் வடக்கு உள் மாவட்டங்களில் பரவலாக மழை எதிர்ப்பார்க்கலாம்.
குறிப்பு: காணொளி பதிவுசெய்யப்பட்டது நவ 23 இரவு 7 மணி அளவில்...
என்றும் இயற்கையுடன்
டெல்டாவெதர்மேன் ஹேமச்சந்தர்
What a welcome spell across the #Chennai suburbs! Much needed intense rain lashed #Redhills , #Ponneri , #Gummidipoondi and #Cholavaram , with parts of North Chennai also seeing a heavy downpour.
We need more spells like this.
#Chennairains
டெல்டாவெதர்மேன் ஹேமச்சந்தர் 3ம் சுற்று மழை அறிக்கை -8| தேதி: 23.11.2026|
#தலைப்பு: கார்த்திகை தீப திருநாளில் பரவலாக மழை வாய்ப்பு.
தென்னாட்டுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
அனைவருக்கும் இனிய கார்த்திகை தீப திருநாள் நல்வாழ்த்துகள்.
==> ஈரப்பதமான கீழைக்காற்று வருகையால் வட தமிழகம், காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.
==> குறிப்பாக #திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்றே மழை துவங்கியுள்ளது. நாளை பிற்பகல், மாலை, இரவு நேரத்தில் விட்டு விட்டு மழை பதிவாகும். மாலை நேரத்தில் ஒரிரு முறை 20- 30 நிமிடங்கள் பெய்யக்கூடிய கனமழைக்கு வாய்ப்பு.
==> இம்மழை எந்தவிதத்திலும் கார்த்திகை தீபத்திருநாள் நிகழ்வை பாதிக்காது, சிறு இடையூறு அளிக்கலாம்.
==> கிரிவலம் செல்லக்கூடிய பக்தர்கள் குடை, ரெயின் கோட் எடுத்துச்செல்வது நல்லது.
==> அண்ணாமலையாரின் ஆசியுடன் தமிழகம் முழுதும் பரவலான மழை பதிவாகி ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்ப இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
==> தற்போது தென் சென்னை பகுதிகளில் மழை மேகங்கள் காணப்படுகிறது வரக்கூடிய மணி நேரத்தில் சென்னை மாநகரில் மழை எதிர்ப்பார்க்கலாம்.
என்றும் இயற்கையுடன்
டெல்டாவெதர்மேன் ஹேமச்சந்தர்
DWM NOWCAST WEATHER REPORT -7 FOR 3RD ROUND OF RAINS| DATED 23RD NOV| 6:30 PM
#Topic: Easterly wave brings on and off rains over #Chennai.
==> Under the influence of easterly wave associated with trough of low, on and off rainfall activity observed over North TamilNadu, Cauvery delta region.
==> #Chennai & suburbs likely to see rather heavy rainfall activity for next 1 hr. On and off rains with occasional heavy showers likely to occur during night & early morning hours.
==> Cauvery delta region also will see widespread rainfall activity tomorrow early morning & morning hours.
==> Good to see rains has spreaded till interiors. From tomorrow more widespread rainfall possible.
Thanks & Regards
R.Hemachander B.Tech., M.sc., M.E, (PhD).,
Independent weather blogger & Climate Activist.
#Chennairains #ChennaiRains #deltarains
டெல்டாவெதர்மேன் ஹேமச்சந்தர் நிகழ்நேர வானிலை அறிக்கை| தேதி: 23.11.2026| நண்பகல் 1 மணி நிலவரம்.
==> இன்று (23.11.2026) காலை 8:30 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் அதிகாபட்சமாக சென்னை மாவட்டம் #கத்திவாக்கம் 3 செ.மீ, மழையும், சென்னை மாவட்டம் #சைதாப்பேட்டை, #எண்ணூர், #மீனம்பாக்கம், #மணலி, #திருவெற்றியூர் தலா 2 செ.மீ மழையும் பதிவு.
==> தற்போது கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை மவட்டத்தின் கடலோரம் & புதுச்சேரி பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசான/மிதமான மழை பெய்து வருகிறது.
==> வரக்கூடிய 6 மணி நேரத்தில் #சென்னை, #திருவள்ளூர், #காஞ்சிபுரம், #செங்கல்பட்டு, #விழுப்புரம், #கடலூர், #மயிலாடுதுறை, #நாகப்பட்டினம், #திருவாரூர் மற்றும் #காரைக்கால், #புதுச்சேரியில் இடி,மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு.
==> வடகடலோர மாவட்டங்கள் &காவிரி டெல்டா பகுதிகளில் நிலவிய வறண்ட காற்றை விலக்கி, ஈரப்பதமான கீழைக்காற்று ஊடுருவி வருகிறது.
குறிப்பு: கடந்த சில நாட்களாக நிலவிய பனிப்பொழிவு, வறண்ட வாடைக்காற்றை விலக்கி ஈரப்பதமானகாற்றின் ஊடுருவல் தற்போது தான் துவங்குவதால் மழை ஆங்காங்கே தான் பெய்யும் நாளை முதல் தான் பரவலான மழை எதிர்ப்பார்க்கலாம்.
என்றும் இயற்கையுடன்
டெல்டாவெதர்மேன் ஹேமச்சந்தர்
#chennairains #NEM2026 #Deltarains
Widespread rains observed over #Chennai core city and southern suburbs. Gradually coastal interiors will start getting rains during upcoming hours. #Chennairains.
DWM NOV 23–27 WET SPELL UPDATE -5 | DATED 23RD NOV, 7 AM|
#Topic: Trough of low / low-pressure area associated with easterly wave likely to bring active Northeast Monsoon conditions across Tamil Nadu during 23rd–27th November 2026| Heavy to Very Heavy rain chances at isolated places|
#Weathersynopsis:
==> A trough of low in the easterlies over southwest Bay of Bengal likely to bring active monsoon conditions over Tamil Nadu from 23rd to 27th November 2026.
==> It may intensify into a low pressure area and travel across Srilanka, Gulf of Mannar, Comorin sea and Lakshadweep sea.
#Weatherforecast:
Day 1 (23.11.2026)
Watch out for dry-moisture line thunderstorm at Chennai.
==> Moisture filled warm easterlies are expected to replace the current dry northerly cool winds.
==> Under their influence, thunderstorm heavy rainfall activity expected over #Chennai, #Thiruvallur and #Chengalpet districts.
==> Moderate to rather heavy showers are likely over #Villupuram, #Pudhucherry, #Cuddalore, #Mayiladuthurai, #Karaikal, #Nagapattinam, #Thiruvarur, #Thanjavur dts during next 24 hrs.
==> North interior & central interior dts also will receive light rainfall activity during evening and night hours.
Day 2 (24.11.2026) & Day 3 (25.11.2026)
==> Heavy to very heavy rainfall is likely over #Cuddalore, #Puducherry, #Mayiladuthurai, #Karaikal, #Nagapattinam, #Thiruvarur, #Thoothukudi and the coastal zones of #Rameswaram.
==> On and off showers with occasional heavy spells are expected over #Chennai, #Tiruvallur, #Kanchipuram, #Chengalpattu, #Villupuram, #Pudukkottai, #Tirunelveli and #Kanyakumari districts.
==> Interiors, western interiors and the Kongu region are likely to experience widespread rainfall activity.
Day 4 (26.11.2026) & Day 5 (27.11.2026)
==> Moderate to rather heavy rains with isolated heavy spells are likely to continue over south coastal, cauvery delta and interior districts, with better activity expected over the interiors and Western Ghats.
#ImportantNote:
This is not a flooding rain or widespread very heavy rains alert. The expectation is for good, beneficial rains during 23rd–27th November, with only isolated very heavy spells.
#KeyPoints:
1. The trough of low in the easterlies may organise into a low-pressure area. There is no possibility of it becoming a depression or cyclone.
2. Rains are expected to be occasional (on and off) and not continuous throughout the day.
3. Cauvery delta & parts of south TamilNadu region is likely to receive heavy to very heavy rains on 24th & 25th November 2026.
4. Interiors and Western Ghats are expected to see better rains on 25th & 26th November 2026.
5. This wet spell is expected to benefit farmers and help improve reservoir levels.
Thanks & Regards
R. Hemachander B.Tech., M.Sc., M.E., (PhD).,
Independent Weather Blogger & Climate Activist
#NortheastMonsoon #TamilNadu #NEM2026 #DWMUpdate #ChennaiRains #DeltaRains #CauveryDelta
டெல்டாவெதர்மேன் ஹேமச்சந்தர் விரிவான தினசரி வானிலை அறிக்கை| தேதி: 22 நவம்பர், 2026|
தமிழகத்தில் நிலவும் மார்கழி பனி விலகி, மழை எப்போது துவங்கும்? தேதி வாரியாக, மாவட்டம் வாரியாக விரிவான விளக்கம்..
விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்குமான விரிவான தகவல்...
டெல்டாவெதர்மேன் ஹேமச்சந்தர் விரிவான தினசரி வானிலை அறிக்கை| தேதி: 22.11.2026| மாலை 5 மணி 30 நிமிடங்கள்
#தலைப்பு: சம்பா, தாளடி, மானாவாரி விவசாயிகளுக்கு உயிர்க்கொடுக்க வருகிறது மழை..நம்பிக்கை இழக்காமல் காத்திருங்கள்!
==> தென்மேற்கு வங்ககடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை அடுத்த 5 நாட்களில் இலங்கை கடல்பகுதி - மன்னார் வளைகுடா - குமரிக்க்டல் - லட்சதீவு கடற்கரை நோக்கி நகரக்கூடும்.
==> இதனால் ஈரப்பதமான கீழைக்காற்றின் ஊடுருவல் நவ 23 முதல் 27 வரை தமிழகம் முழுதும் ஊடுருவி 3ம் சுற்று வடகிழக்கு பருவமழையை கொண்டு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
==> தற்போது நிலவும் மார்கழி மாதம் போன்ற பனிப்பொழிவு நாளை மாலையுடன் முழுமையாக விலகும். நாளை நவ 23 ம் தேதி துவங்கி நவ 27 வரை 4-5 நாட்களுக்கு மழை வானிலை நிலவும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
==> தமிழ்நாட்டில் சம்பா, தாளடி, மானாவாரி விவசாயம் செய்துள்ள விவசாயிகளுக்கு இந்த சுற்று மழை கண்டிப்பாக கைக்கொடுக்கும். நம்பிக்கையயுடன் காத்திருங்கள். தமிழ்நாடு முழுதும் பரவலான மழை பெய்யும். டெல்டா & தென் மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் நல்ல மழை வாய்ப்பு உள்ளது.
==================================
மூன்றாம் சுற்று மழை எதிர்ப்பர்ப்பு:
நாள் 1 (23.11.2026)
==> வறண்ட வாடைக்காற்றை விலக்கி ஈரப்பதமான கீழைக்காற்று ஊடுருவும். சென்னை உள்பட வடகடலோர மாவட்டங்கள் & காவிரி டெல்டா மாவட்டங்களில் மிதமான மழைக்கு துவங்கும்.
நாள் 2 (24.11.2026) முதல் நாள் 4 (26.11.2026)
==> #சென்னை, #திருவள்ளூர், #காஞ்சிபுரம், #செங்கல்பட்டு, #விழுப்புரம், #புதுச்சேரி உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழையும், ஒருசில இடங்களில் கனமழையும் பதிவாகும்.
==> #கடலூர், #மயிலாடுதுறை, #காரைக்கால், #நாகப்பட்டினம், #திருவாரூர், #தஞ்சாவூர், #தூத்துக்குடி #திருநெல்வேலி, #கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் #இராமேஸ்வரம், #பாம்பன், #தங்கச்சிமடம் போன்ற கடலோர பகுதிகளில் பரவலாக கனமழையும், கடலோரத்தில் ஒரிரு இடங்களில் மிககனமழையும் பதிவாகும்.
==> #இராணிப்பேட்டை, #வேலூர், #திருவண்ணாமலை, #கள்ளக்குறிச்சி, #திருச்சி, #அரியலூர், #பெரம்பலூர், #புதுக்கோட்டை, #இராமநாதபுரம், #சிவகங்கை #விருதுநகர், #மதுரை, #திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் பிற்பகல், மாலை, இரவு நேரங்களில் விட்டு விட்டு பரவலாக மழை எதிர்ப்பார்க்கலாம்.
==> #திருப்பத்தூர், #கிருஷ்ணகிரி , #தர்மபுரி , #சேலம் , #நாமக்கல் , #ஈரோடு , #கரூர், #திருப்பூர் , #தேனி மாவட்டங்களில் மாலை/இரவு நேரத்தில் சீரான மழைக்கு வாய்ப்பு.
==> #கோயம்புத்தூர் , #நீலகிரி , #தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழைக்கும், ஒரிரு இடங்களில் மிககனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.
நாள் 5 (27.11.2026)
==> காவிரி டெல்டா, தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் பரவலாக மழை தொடரும்.
முக்கிய குறிப்பு: காவிரி டெல்டா விவசாயிகள் தயவுசெய்து நம்பிக்கை இழக்காதீர்கள்..நிச்சியமாக போராடியாவது சம்பாவில் வெல்வோம். அடுத்த 5 நாட்கள் மழை நமக்கு கைக்கொடுக்கும்.
என்றும் இயற்கையுடன்
டெல்டாவெதர்மேன் ஹேமச்சந்தர்
டெல்டாவெதர்மேன் ஹேமச்சந்தர் விரிவான தினசரி வானிலை அறிக்கை| தேதி: 21 நவம்பர், 2026|
தமிழகத்தில் மழை எப்போது துவங்கும்? தேதி வாரியாக, மாவட்டம் வாரியாக விரிவான விளக்கம்..
விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்குமான முக்கிய தகவல்...
உலக மீனவர்கள் தின நல்வாழ்த்துகள்!
ஆழ்கடல் சென்று மழை, வெயில், குளிர், வெப்பம் ஆகிய இயற்கைச் சவால்களை எதிர்கொண்டு, நமக்கு உணவு வழங்கும் மீனவர்களின் உழைப்பும், பங்களிப்பும் என்றும் மறவாதவை. அவர்களின் தியாகத்திற்கு என்றும் நன்றியும், மரியாதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
மீன் பிடி தடைக்காலமாக 60 நாட்களும், புயல் எச்சரிக்கைகள் காரணமாக ஏறத்தாழ 90 நாட்களும் சேர்ந்து, ஆண்டுக்கு 150 நாட்களுக்கும் மேலாகக் கடலுக்குச் செல்ல முடியாத நிலையில் உள்ள மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும். அத்துடன், தொழில் செய்யும்போது ஏற்படும் இயற்கைப் பேரிடர்களிலிருந்தும், அண்டை நாடுகளின் அச்சுறுத்தல்களிலிருந்தும் அவர்களைப் பாதுகாக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
மீனவர்களின் நலன் காப்போம்!
உலக மீனவர் தின வாழ்த்துகள்!
என்றும் இயற்கையுடன்
டெல்டாவெதர்மேன் ஹேமச்சந்தர்
தமிழ்நாட்டில் பரவலாகும் வடகிழக்கு பருவமழை..
நவ 23 முதல் 27 வரை 5 நாட்களுக்கு மழை வானிலை..
நவ 24,25 ஆகிய தேதிகளில் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழையும், காவிரி டெல்டா & தென் மாவ்ட்டங்களில் மிககனமழையும் பதிவாக கூடும்.
கருகி வரும் பயிர்களை காக்க வருகிறது வடகிழக்கு பருவமழை..
நியூஸ் தமிழ் 24*7 செய்தி தொலைகாட்சிக்கு அளித்த பிர்த்யேக விளக்கம்..
Deltaweatherman Hemachander retweeted
Weather Update | மிக கனமழைக்கு வாய்ப்பு
நவம்பர் 24, 25, 26 ஆகிய தேதிகளில் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால், நாகை, திருவாரூர், தூத்துக்குடி, நெல்லை ஆகிய 7 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு
- தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர்
TamilNaduRain | HeavyRainAlert | WeatherUpdate | 21 November 2026 #TamilNaduRain #HeavyRainAlert #WeatherUpdate #NewsTamil24x7
DWM NOV 23–27 WET SPELL UPDATE -3 | DATED 21ST NOV, 7 AM|
#Topic: Trough of low / low-pressure area associated with easterly wave likely to bring active Northeast Monsoon conditions across Tamil Nadu during 23rd–27th November 2026| Heavy to Very Heavy rain chances at isolated places|
#Weathersynopsis:
==> A trough of low in the easterlies (or a low-pressure area associated with an easterly wave) is expected to establish active monsoon conditions over Tamil Nadu from 23rd to 27th November 2026.
#Weatherforecast:
==> Mostly dry weather with foggy/misty conditions is likely to continue over most parts of Tamil Nadu today and tomorrow (21st–22nd November).
Day 1 (23.11.2026)
==> Moisture filled easterlies are expected to replace the current dry northerly winds. Under their influence, light to moderate showers are likely over coastal districts from #Chennai to #Thoothukudi, including the Cauvery delta region.
Day 2 (24.11.2026) & Day 3 (25.11.2026)
==> Heavy to very heavy rainfall is likely over #Cuddalore, #Puducherry, #Mayiladuthurai, #Karaikal, #Nagapattinam, #Thiruvarur, #Thoothukudi and the coastal zones of #Rameswaram.
==> On and off showers with occasional heavy spells are expected over #Chennai, #Tiruvallur, #Kanchipuram, #Chengalpattu, #Villupuram, #Pudukkottai, #Tirunelveli and #Kanyakumari districts.
==> Interiors, western interiors and the Kongu region are likely to experience widespread rainfall activity.
Day 4 (26.11.2026) & Day 5 (27.11.2026)
==> Moderate to rather heavy rains with isolated heavy spells are likely to continue over coastal and interior districts, with better activity expected over the interiors and Western Ghats.
#ImportantNote:
This is not a flooding rain or widespread very heavy rains alert. The expectation is for good, beneficial rains during 23rd–27th November, with only isolated very heavy spells.
#KeyPoints:
1. The trough of low in the easterlies may organise into a low-pressure area. There is no possibility of it becoming a depression or cyclone.
2. Rains are expected to be occasional (on-and-off) and not continuous throughout the day.
3. Cauvery delta & parts of south TamilNadu region is likely to receive heavy to very heavy rains on 24th & 25th November 2026.
4. Interiors and Western Ghats are expected to see better rains on 25th & 26th November 2026.
5. This wet spell is expected to benefit farmers and help improve reservoir levels.
Thanks & Regards
R. Hemachander B.Tech., M.Sc., M.E., (PhD).,
Independent Weather Blogger & Climate Activist
#NortheastMonsoon #TamilNadu #NEM2026 #DWMUpdate #ChennaiRains #DeltaRains #CauveryDelta
விவசாயிகள் வயிற்றில் பால்வாற்க வருகிறது கீழைக்காற்று..
நவ 23 முதல் 26 வரை பரவலான மழை வாய்ப்பு!
காவிரி டெல்டா & தென் மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு.
மாநிலம் முழுதும் மழை பெய்யும்..
டெல்டாவெதர்மேன் ஹேமச்சந்தர் 3ம் சுற்று மழை அறிக்கை-2| தேதி: 20.11.2026| காலை 7 மணி நிலவரம்
#தலைப்பு: மீனவர்கள் & விவசாயிகளுக்கான 3ம் சுற்று மழை அறிக்கை.
#வானிலைஅமைப்பு:
==> "அக்வான்" புயல் அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுவிழக்கும்.
==> இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்ககடலில் நவ 22ல் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி நவ 23 முதல் 26 வரை சீரான மூன்றாம் சுற்று மழையை கொண்டு வரும்.
மீனவர்களுக்கான தகவல்...
==> #அர்னாப் , #முரசு , #அக்வான் என அடுத்தடுத்து புயல்களால் தொழிலுக்கு செல்ல முடியாமல் முடங்கியுள்ள மீனவர்கள் நவ 21 முதல் 30 வரை 10 நாட்களுக்கு ஆழ் கடல் வரை மீன் பிடிக்க செல்லலாம். நவ 23 முதல் 27 வரை கடலில் அவ்வப்போது கனமழை பெய்யும் அதற்கு தகுந்தார் போல திட்டமிட்டுக்கொள்ளுங்கள்.
விவசாயிகளுக்கான தகவல்..
==> காவிரி டெல்டா மாவட்டங்களில் குடத்தில் தண்ணீர் எடுத்து ஊற்றும் அவல நிலை, தென் மாவட்டங்களில் பயிர்கள் கருகி வருவதையும் பார்க்க முடிகிறது.
==> நவ 23 முதல் 26 வரை 4 நாட்கள் பெய்யவிருக்கும் 3ம் சுற்று மழை உறுதியாக சம்பா, தாளடி, மானாவாரி பயிர்களுக்கு கைக்கொடுக்கும் நம்பிக்கையோடு இருங்கள்.
==> நவ 23ம் தேதி மிதமான மழையாக துவங்கி, நவ 24,25 ஆகிய இரண்டு நாட்கள் காவிரி டெல்டா, தென் மாவட்டங்கள் மற்றும் வடகடலோர மாவட்டங்களில் பரவலாக மழை எதிர்ப்பார்க்கலாம்.
==> சென்னை உள்பட வடகடலோர மாவட்டங்களிலும் நவ 23 ல் மழை துவங்கி 24, 25 ல் நல்ல மழை எதிர்ப்பார்க்கலாம்.
என்றும் இயற்கையுடன்
டெல்டாவெதர்மேன் ஹேமச்சந்தர்
DWM CYCLONIC STORM “#AKVAN” – POST EVENT NOTE | DATED 19TH NOV, 2026
#Title: Acceptance of Landfall Scenario Failure | Complex Ridge-Trough Dynamics & Model Divergence | Official Tracks & Numerical Guidance Also Shifted Significantly | System Ultimately Weakened Over Open Waters
==> Yes, my earlier technical interpretation for a 80% chances for North Tamil Nadu landfall scenario (#Ennore– #Cuddalore sector) did not materialise. I have already explained the reasons in real time (persistent high wind shear, dry air intrusion, unexpected ridge-trough interplay and model oscillations) and I accept the miss fully. An apology is due to those who followed the updates closely.
==> This was a highly complex system from the beginning. Official agencies also revised their track day by day: initial very severe cyclonic storm landfall between #Nellore and #Tuni (near #Yanam) → central Andhra Pradesh → north Andhra Pradesh → finally south Odisha as a weaker cyclonic storm. Deterministic models, ensembles and AI guidance repeatedly zigzagged between Andhra Pradesh and Tamil Nadu before locking central AP, yet the system ultimately weakened and is dissipating over the sea with only a remnant feature moving toward the Odisha coast. They nearly changed the landfall place 700 kms away from the initial projection.
==> When uncertainty is high, a clear call still has to be made based on available real time analysis. Waiting until the last minute and then issuing a pure nowcast is not practical forecasting I don't like to claim a award for maintaing peace also I never claimed certainty or created panic; every update carried the explicit note that even a North Tamil Nadu crossing was not expected to produce destructive winds or flooding rains.
==> I am not the only one who missed the final trend. Official agencies, numerical models and AI guidance all struggled with the steering and intensity evolution in our basin. No other independent blogger correctly captured the eventual dissipation path either.
==> A single miss does not erase the body of work. Core followers remember the #Ditwah extreme rainfall call for Chennai, the 2024 #Fengal stance when many (including official and blogger consensus) had written it off I stood by cyclone possibility, the 2023 #Michaung 24-hour non-stop very heavy rain call for #Chennai, and earlier events such as #Gaja, #Nivar, #Burevi and the 2022 Mayiladuthurai 40 cm event. These are not for sympathy, they are part of the public record.
==> I track systems out of passion, whether or not I am active on social media. One failure will not stop the work. If anyone feels the forecasts are no longer reliable, they are free to unfollow. I will continue issuing scientific interpretations till the last day.
Thanks & Regards
R. Hemachander M.E., (PhD).,
Independent Weather Blogger & Climate Activist
#NortheastMonsoon #TamilNadu #NEM2026 #DWMUpdate #Akvan #CycloneAkvan
டெல்டாவெதர்மேன் ஹேமச்சந்தர் விவசாயிகளுக்கான அறிக்கை| தேதி: 19.11.2026|
#தலைப்பு: கீழைக்காற்றுடன் காற்றழுத்த தாழ்வு நிலை, தமிழ்நாட்டில் மழை வாய்ப்பு.
#வானிலைஅமைப்பு:
==> இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்ககடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை நவ 23ம் தேதி உருவாக கூடும்.
==> இத்தாழ்வு நிலை ஈரப்பதமான கீழைக்காற்றை தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் நவ 23ம் முதல் கொண்டு வரும்.
#வானிலைஎதிர்ப்பார்ப்பு:
==> நவம் 23 முதல் 26 வரை 4 நாட்களுக்கு வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் பரவலாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
==> நவ 24,25, 26 தேதிகளில் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.
==> காவிரி டெல்டா, தென் மாவட்டங்களில் மழையின்றி கருகி வரும் பயிர்களுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தி செளிப்பை தரும் மழையாக இந்த அமையும். உள் மாவட்டங்களுக்கு உயிர்க்கொடுக்கும் மழையாக அமையும்.
என்றும் இயற்கையுடன்
டெல்டாவெதர்மேன் ஹேமச்சந்தர்


















