Desanthri (@Desanthrii) header
Desanthri (@Desanthrii) profile picture

Ambedkarite | Rationalist | Socialist Caste is not culture. Inequality is not destiny.

Chennai, India
Joined June 2020
Photo by Desanthri (@Desanthrii)Photo by Desanthri (@Desanthrii)Photo by Desanthri (@Desanthrii)Photo by Desanthri (@Desanthrii)Photo by Desanthri (@Desanthrii)Photo by Desanthri (@Desanthrii)Photo by Desanthri (@Desanthrii)Photo by Desanthri (@Desanthrii)Photo by Desanthri (@Desanthrii)Photo by Desanthri (@Desanthrii)
நான் அடையாறில் உள்ள அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்திற்கு சமீபத்தில் சென்றிருந்தபோது அங்கிருக்கும் நூலகத்தில் ஒரு அரைமணிநேரம் புத்தகங்களை பார்த்துக்கொண்டிருந்தேன். அப்பொழுது ஒரு வரிசை முழுக்க சமையல் குறிப்பு முதற்கொண்டு மற்ற தேவையில்லாத சில தலைப்புகளில் புத்தகங்களை பார்த்தேன். அப்பொழுதே யோசித்தேன் இதற்கு இதுமாதிரியான புத்தகங்கள்லாம் வாங்கி நூலகத்தில் வைத்திருக்கிறார்கள் என்று. அதையெல்லாம் பார்த்ததில் இது மாதிரியான புத்தகங்களையும் அந்த நூலக குழு பரிந்துரை செய்ததற்கான வாய்ப்புகள் அதிகம் என்றே கருத வேண்டியுள்ளது. ஏன்யா சமையல் குறிப்ப படிக்க யாராவது அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள நூலகத்திற்கு வருவார்களா? விவஸ்த கெட்டவனுங்க.
4
5
21
3,144
நவம்பர் 7, 2012 – தமிழ்நாட்டின் கருப்பு நாள்! 2012, நவம்பர் 7, தமிழ்நாடு அதுவரை கண்டிராத கொடூரமான சாதிவெறித் தாக்குதலை பாமகவும் வன்னியர் சங்கமும் இணைந்து தருமபுரியின் நத்தம், அண்ணா நகர், கொண்டம்பட்டி பகுதிகளில் அரங்கேற்றின. சுமார் 268-க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. எண்ணற்ற உடைமைகள் சூறையாடப்பட்டு, தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. எங்கும் அழுகுரல்கள். தலைமுறை தலைமுறையாகச் சிறுகச் சிறுகச் சேர்த்த சொத்துகள் அனைத்தும், இரு இதயங்களுக்குள் மலர்ந்த காதலுக்காகச் சாம்பலாக்கப்பட்டன. வரலாற்றின் கருப்புப் பக்கங்களில் என்றும் அழியாத நாள் அது! மக்களுக்கான அரசியல் என்று வேடமிட்டு, சாதியை அடிப்படையாகக் கொண்டு அரசியல் நடத்தும் எத்தனையோ கட்சிகளும் இயக்கங்களும் அன்று வாய்மூடி மௌனம் காத்தன. ஆனால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மட்டுமே பாதிக்கப்பட்ட மக்களோடு களத்தில் நின்று அவர்களுக்கான குரலாக ஒலித்தது. அன்று மட்டுமல்ல; விசிக உருவான காலத்திலிருந்து இன்றுவரை ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகக் களத்தில் நிற்கும் இயக்கமாக அது தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. விசிகவுக்கு முன்பும், பின்பும் எத்தனையோ அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் தோன்றியிருக்கின்றன; மறைந்திருக்கின்றன. ஆனால், ஒடுக்கப்பட்ட மக்களை வெறும் வாக்குகளாக மட்டுமே அணுகிய அரசியல் சக்திகளுக்கு மத்தியில், அவர்களை ரத்தமும் சதையுமாக, உணர்வும் உரிமையும் கொண்ட மனிதர்களாக அணுகிய இயக்கம் விசிக. அதனால்தான், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக இன்றளவும் அதிகார மையங்களையும் ஆதிக்கச் சக்திகளையும் எதிர்த்து நிற்கிறது. எங்கெங்கோ அமர்ந்துகொண்டு விசிகவுக்கு எதிராக யார் வேண்டுமானாலும் பொய்ப் பிரச்சாரங்களை முன்னெடுக்கலாம். ஆனால், களத்தில் மக்களுக்காக நிற்கும் அரசியலில் இருந்தும், மக்கள் விடுதலைக்கான போராட்டத்தில் இருந்தும் விசிக ஒருபோதும் பின்வாங்காது. தருமபுரியில் பாமக நிகழ்த்திய அந்தச் சாதிவெறித் தாக்குதல் இன்றும் கண்முன்னே நிழலாடுகிறது. இதை எழுதும்போதே கண்கள் குளமாகின்றன. ஆம்! சாதிய அடையாளத்தை அரசியல் ஆயுதமாகக் கொண்டு இயங்கும் பாமக, சாதிவெறி அரசியலின் ஆபத்தான முகங்களில் ஒன்று. அது அரசியல் ரீதியாகத் தனிமைப்படுத்தப்பட வேண்டிய இயக்கம் என்பதைத் தொடர்ந்து சுட்டிக்காட்டிக் கொண்டே இருப்போம். ஆதிக்கத்தையும் வெறுப்பையும் அடிப்படையாகக் கொண்ட ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புகள் எவ்வாறு கருத்தியல் ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் எதிர்கொள்ளப்பட வேண்டுமோ, அதேபோலச் சாதிவெறி அரசியலை முன்னெடுக்கும் பாமகவையும் ஜனநாயக அரசியல் களத்தில் தனிமைப்படுத்தி, தோற்கடிக்க வேண்டியது அவசியம். தருமபுரி நமக்கு வெறும் கடந்தகால நினைவல்ல; சாதிவெறி அரசியலுக்கு எதிரான நிரந்தர எச்சரிக்கை! இந்த வரலாற்றை மறக்காமல் இருப்பதும், அடுத்த தலைமுறைக்குக் கடத்துவதும், சாதி ஒழிப்புக்கான அரசியலைத் தொடர்ந்து முன்னெடுப்பதும் ஒவ்வொரு சிறுத்தையின் கடமை! சாதி ஒழியட்டும்! சமத்துவம் வெல்லட்டும்! - தேசாந்திரி #BoycotPMK #BoycotRSS
5
11
347
நவம்பர்- 7 சாதிவெறி அரசியல் எதிர்ப்பு நாள்: கடந்த 2012 ஆம் ஆண்டு தருமபுரி நத்தம், காலணி, அண்ணாநகர் சேரிகளில் தலித் மக்களுக்குச் சொந்தமான 268-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் பொருள்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. பாமக-வன்னியர் சங்கம் சார்ந்த சாதிவெறிக் கும்பல் தீயிட்டு சூறையாடிய நாளை நினைவுகூர்வோம்.
6
21
330
14
38
1
144
7,587
ஆளுங்கட்சி, ஆண்டக் கட்சி இப்படி மாற்றி மாற்றி குற்றம் சொல்வதை விடுத்து யார் இந்த போலிப் பதிப்பகத்தில் கொள்முதல் செய்தது, யார் இதற்கு பின்னால் இருப்பது என்பதை கண்டுபிடித்து அவர்களை நீதிமன்றத்தின் முன்னால் நிறுத்துவதே தீர்வு. சமீபகாலமாக இளந்தலைமுறையினரின் அறிவை மழுங்கடிக்கும் வேலை தொடர்ந்து நடைப்பெற்று கொண்டிருக்கின்றன. அறிவுசார்ந்து ஒரு தலைமுறை இடைவெளியை உருவாக்கினால் போதும். அதன்பிறகு வரும் தலைமுறைக்கான அறிவு மங்கிவிடும் என்பதே இதன் உண்மையான உள்ளடக்கம். இதுவொரு திட்டமிட்ட கொள்ளை என்பதை விட, எதிர்கால சந்ததியினருக்கான வரலாற்று புரிதலை மடைமாற்றும் செய்யும் ஆர்எஸ்எஸ் செயல். ஆகவே குற்றவாளிகள் கண்டுணரப்பட வேண்டியதும், தண்டிக்கப்பட வேண்டியதுதான் அடுத்து இதுபோல் ஒன்று நடவாமல் இருப்பதை உறுதி செய்யும். பெரியாரை எப்பொழுதும் ஏற்காத இயக்கம் ஆர்எஸ்எஸ். கடந்த சில பத்தாண்டுகளில் நிறைய ஆர்எஸ்எஸ், அரசு பதவிகளில் தமிழ்நாட்டில் ஊடுருவியுள்ளனர் என்பதை நாம் அனைவரும் அறிவோம். பெரியார் அறிவுலகத்திலும் அவர்களின் கை நீண்டிருக்காதா என்ன? -தேசாந்திரி
1
4
5
128
நூலகத்தில் வரலாற்றுப் பிழைகள் மலிந்த __________________________________ நூல்கள் : _______ விசாரணை ஆணையம் அமைத்து உண்மை கண்டறிய வேண்டும் ! ___________________________________ தமிழ்நாடு அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள்! ___________________________________ கோவையில் அண்மையில் முதல்வர் ஜோசப் விஜய் அவர்களால் திறந்து வைக்கப் பெற்ற 'பெரியார் அறிவுலகம்' என்னும் நூலகத்தில் இடம் பெற்று பல நூல்கள் போலியானவை என கண்டறியப்பட்டுள்ளது. எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்கள் அந்த நூலகத்தை நேரில் சென்று பார்வையிட்டதில் அவர் இதனைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளாகி மனம் நொந்து தனது இணையத்தளத்தில் பதிவிட்டுள்ளார். சான்றுக்கு சில நூல்களைக் குறிப்பிட்டு நூல்களைக் கொள்முதல் செய்ததில் எத்தகைய முறைகேடுகள் நடந்துள்ளன என்பதை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளார். இது மிகுந்த பேரதிர்ச்சியை அளிக்கிறது. போலி நிறுவனங்களின் பெயரால் தரமில்லாத நூல்களைக் கூடுதலான விலைக்கு கொள்முதல் செய்ததால் பெரிய அளவில் ஊழல் நடந்திருக்கிறது என ஊகிக்கும் அதே வேளையில்; வரலாற்றுப் பிழைகள் மலிந்த மிகவும் கீழான நூல்களை நூலகங்களில் வைத்திருப்பது புதிய -இளைய தலைமுறையினரைப் பாழாக்கும் மிகமோசமான மன்னிக்கமுடியாத பெருங்குற்றம் ஆகும். இது தீராத ஆத்திரத்தையும் பெருங்கவலையையும் அளிக்கிறது. இதன்பின்னணியில் உள்ள உண்மையைக் கண்டறிந்து தொடர்புடையோர் யாவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி கடும் தண்டனை அளித்திட அரசு உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம். பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட அரசுக்கான பொதுநூலகங்களில் இடம்பெற்றுள்ள நூல்களின் உள்ளீட்டுக்கான தரம் எத்தகையது என்பதைக் கண்டறியவும்; போலி நிறுவனங்களின் மூலம் நடந்துள்ள ஊழல் முறைகேடுகளைக் கண்டறிந்து தொடர்புடையோரைத் தண்டிக்கவும் ஏதுவாக தமிழ்நாடு அரசு உடனடியாக 'விசாரணை ஆணையம்' ஒன்றை அமைத்திட வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவண்: தொல்.திருமாவளவன், நிறுவனர்-தலைவர், விசிக.
76
5
260
31,698
நானா நாடா என்றால் என் நாட்டின் பக்கம்தான் நிற்பேன்.நாடா ஒடுக்கப்பட்ட மக்களா என்றால் நான் ஒடுக்கப்பட்ட மக்களோடு தான் நிற்பேன் என்ற அண்ணல் அம்பேத்கரின் வழியில் என்றுமே விசிக நிற்கும். நீட் தேர்வினால் பாதிக்கப்படுவது எளிய வீட்டு பிள்ளைகள் தான். அந்த வகையில் கட்சி அரசியல்,கூட்டணி அரசியல் கடந்து விசிக எப்பொழுதும் மக்களோடுதான் நின்று கொண்டிருக்கிறது. -தேசாந்திரி
8
17
131
3,592
No equality without democracy spread wide. Working-class democracy must cut across caste. #Thirumavalavan #AnnihilationOfCaste #VCK #TheRationalist
1
12
1
16
341
திருட்டு கம்னாட்டிகளா நீங்க செஞ்சுட்டு இருக்கதுக்கு பேரு என்னடா..
ஜெய் பீம்/ #JAIBHIM திரைப்படம் வெளியானபோது, ' சங்கிகளும் பாமகவினரும் ' கம்யூனிஸ்டுகள் மீது பரப்பிய EDIT செய்யப்பட்ட அதே புகைப்படத்தையே இப்போது இந்த விசிகவினர் தூக்கிக்கொண்டு வருகிறார்கள். உண்மையான புகைப்படம் அதுவல்ல 2011ஆம் ஆண்டு சிதம்பரம் தொகுதியில் CPI(M) போட்டியிட்டபோது இடம்பெற்ற சுவர் விளம்பரம் குறித்து, VCK-வைச் சேர்ந்த @WriterRavikumar தனது நிறப்பிரிகை வலைப்பதிவில் பதிவு செய்திருந்தார் அதில் அவர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: 👇🏻 “கத்தரிமேடு பழனிவேலு வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் அந்த சமூகத்து மக்களை ஸ்ரீதர் வாண்டையாருக்கு எதிராகத் திருப்பிவிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் ஒரு அங்கமாகவே தோழர் கே.பாலகிருஷ்ணனுக்கும் ‘சாதி முத்திரை’ குத்தப்பட்டிருக்கிறது.” மேலும், “ஒரு சுவர் விளம்பரத்தைப் பார்த்து அதிர்ந்துபோனேன். ‘பாலகிருஷ்ணன் படையாட்சி’ என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. தோழர் கே.பி.யும் அந்த விளம்பரத்தைப் பார்த்திருந்தால் அதிர்ந்துதான் போயிருப்பார். அவருடைய இயல்பு எனக்குத் தெரியும். நிச்சயம் அவர் அந்த விளம்பரத்தைப் பார்த்திருக்க மாட்டார். அனுமதிபெற்று செய்யப்பட்டிருந்த அந்த விளம்பரத்தை அவரது கூட்டணிக் கட்சிக்காரர்கள் எவரேனும் செய்திருக்கக்கூடும்” என்று எழுதியிருந்தார். அதாவது, தோழர் கே.பாலகிருஷ்ணன் மீது சாதி முத்திரை குத்தப்பட்டிருப்பதையே ரவிக்குமார் தனது பதிவில் சுட்டிக்காட்டியிருந்தார். அந்த விளம்பரத்தை CPI(M) செய்ததாகவோ, தோழர் கே.பி.யின் ஒப்புதலுடன் வெளியிடப்பட்டதாகவோ அவர் கூறவில்லை. அந்தப் பதிவில் இடம்பெற்றிருந்த ‘படையாட்சி’ என்ற வார்த்தையே EDIT செய்யப்பட்டதுபோல இருப்பதாக அன்றே Blogspot வாசகர்களும், முகநூலில் இயங்கிய இடதுசாரிகளும் விமர்சித்திருந்தனர். ஆனால், இதையெல்லாம் மறைத்துவிட்டு, ஜெய் பீம் திரைப்படம் வெளியானபோது சங்கிகளும் பாமகவினரும் கம்யூனிஸ்டுகள் மீது பரப்பிய அதே அவதூறைப் பயன்படுத்தி, எந்தக் கூச்சமும் இல்லாமல் இப்போது விசிக-வினர் பிரச்சாரம் செய்கிறார்கள் வரலாற்றுப் பதிவுகளைக்கூடச் சரிபார்க்காமல், பழைய அவதூறுகளையே மீண்டும் தூக்கிக்கொண்டு வருவது என்ன அரசியல்? உண்மையில், இன்று VCK செய்வது மிகவும் தரம் தாழ்ந்த அரசியல்!
1
2
8
174
கர்வாட் வந்துருக்கு ப்ராண்டஸ் 🤧🤧
துரைமுருகன் பேசிய கடவுள் மறுப்பு...
1
4
116
ஆட்சி அதிகாரம் போனதில் இருந்து இவனுங்க உண்மையாவே மென்டலான்கள் ஆயிட்டானுங்க போல.. இந்த ட்ரோல் மெட்டீரியல தான் இவ்ளோ நாள் ஆர் எஸ் எஸ் எதிரின்னு நினைச்சிருக்கோம்... ச்சைக் 🤧🤧🤧
1
1
6
199
பாட்டாளி வர்க்க விடுதலைக்காக வாழ்நாள் முழுவதும் தெருக்களில் இடதுசாரி கொள்கை பாடல்களை பாடிய பாவலர் சகோதரர் இளையராசா மீது மதுரை காம்ரேட் நிகழ்த்திய தீண்டாமை .....அவ்வளவுதான் கம்யூனிசம் . "லால் சலாம்" பதிவு: @Elansezhian3
26
1
63
1,600
பாட்டாளி வர்க்க விடுதலைக்காக வாழ்நாள் முழுவதும் தெருக்களில் இடதுசாரி கொள்கை பாடல்களை பாடிய பாவலர் சகோதரர் இளையராசா மீது மதுரை காம்ரேட் நிகழ்ததிய தீண்டாமை .....அவ்வளவுதான் கம்யூனிசம் . "லால் சலாம்" (@Tndalitpanthers
17
227
12
1,043
48,689
google பண்ணி பார்த்தா மாவோ பொண்டாட்டிய விட்டு ஓடிப் போனவர் என்று கூட தான் சொல்லுது அதெல்லாம் ஆதாரமா எடுத்து போட முடியுமா
Replying to @E_quality_5ter_
அது book இல்லையா,collected volumes, google பண்ணி பாருங்க...
1
2
4
471
சாதி ஒழிப்பை பேசாத கம்யூனிசம் எங்கள் மயிருக்கு சமம் @Tndalitpanthers @mohan_selvaraj @Elansezhian3 @E_quality_5ter_
1
8
25
500
சாதிவெறி பொறுக்கிகள் சூழ் கம்யூனிசம்
1
6
1
14
338
தத்துவ வறட்சியில் தத்தளிக்கும் கம்யூனிசம்! இந்தியாவில் நூறு ஆண்டுகளைக் கடந்த அரசியல் இயக்கங்களில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் ஒரு வரலாற்று இடம் இருக்கிறது. ஆனால், ஐரோப்பியச் சூழலில் உருவான கம்யூனிசச் சித்தாந்தத்தை இந்தியாவுக்குள் கொண்டுவந்து நடைமுறைப்படுத்தியபோது, இந்நாட்டின் தனித்துவமான சமூகக் கட்டமைப்பையும், சாதியப் பிரச்சினைகளையும் புரிந்துகொள்வதில் இவர்கள் தவறிவிட்டார்கள் என்பதே இன்றளவும் தொடரும் விமர்சனம். மேலோட்டமாகப் பார்த்தால், உழைக்கும் வர்க்கத்தை ஒன்றுதிரட்டி, அவர்களின் உரிமைகளுக்காகப் போராடும் இயக்கங்களாகக் கம்யூனிஸ்ட் கட்சிகள் தோன்றலாம். ஆனால், உலக அளவில் கம்யூனிச ஆட்சிகள் எதிர்கொண்ட தோல்விகளையும், அவற்றின் அதிகாரக் கட்டமைப்புகளையும் நாம் விமர்சனப் பார்வையோடு அணுக வேண்டியிருக்கிறது. வர்க்க விடுதலையைப் பேசும் பல கம்யூனிச ஆட்சிகள் அதிகாரத்திற்கு வந்த பிறகு சர்வாதிகாரப் போக்கைக் கையிலெடுத்தன. ஜனநாயகத்தையும் கருத்துச் சுதந்திரத்தையும் ஒடுக்கிய வரலாறும் அவற்றுக்கு உண்டு. வடகொரியாவில் தாத்தா, தந்தை, மகன் என ஒரே குடும்பத்தின் வாரிசு அரசியல் தொடர்கிறது. சீனாவிலோ, அதிபர் ஜி ஜின்பிங்கின் ஆட்சியில் அதிகாரக் குவிப்பும் கருத்துச் சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகளும் தொடர்ந்து விமர்சனத்திற்கு உள்ளாகின்றன. இத்தகைய அரசியல் நடைமுறைகள் கம்யூனிசம் முன்வைக்கும் சமத்துவம், ஜனநாயகம், மக்கள் அதிகாரம் ஆகிய கருத்துகளின் நம்பகத்தன்மை குறித்த கேள்விகளை எழுப்புகின்றன. இந்தியச் சமூகத்தின் அடிக்கட்டுமானமாக இருக்கும் சாதியை ஆழமாக ஆராயாமல், அதன் மீது கட்டப்பட்டிருக்கும் வர்க்க முரண்பாட்டை மட்டுமே மையப்படுத்தி மக்களை ஒன்றுதிரட்ட முயல்வதுதான் இந்தியக் கம்யூனிஸ்டுகளின் அடிப்படையான தத்துவச் சிக்கல். சாதி ஒழியாமல் வர்க்க விடுதலை சாத்தியமா என்ற கேள்விக்கு இன்றளவும் இவர்களிடம் முழுமையான நடைமுறைப் பதில் இல்லை. இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் உருவான காலத்திலிருந்து இன்றுவரை எத்தனை பிளவுகளைச் சந்தித்திருக்கிறது என்பதுதான். ஒரே சித்தாந்தத்தின் அடிப்படையில் இயங்குவதாகச் சொல்லிக்கொள்ளும் இயக்கங்களால் தங்களுக்குள்ளேயே ஒரு பொதுவான அரசியல் புரிதலை உருவாக்கிக்கொள்ள முடியவில்லை. கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டால் அவற்றை விவாதித்து ஒருங்கிணைப்பதற்குப் பதிலாகப் புதிய அமைப்புகளை உருவாக்கிப் பிரிந்து செல்வதே இவர்களின் வரலாற்றில் மீண்டும் மீண்டும் நிகழ்ந்திருக்கிறது. தங்களுக்குள்ளேயே ஒற்றுமையை நிலைநாட்ட முடியாதவர்கள், ஒட்டுமொத்த உழைக்கும் மக்களையும் வர்க்க அடிப்படையில் ஒன்றுதிரட்டி புரட்சியை ஏற்படுத்தப் போகிறார்களாம்! கேட்கவே வேடிக்கையாக இருக்கிறது. சரி, தலைப்பிற்கு வருவோம். இந்தியாவின் சமூக யதார்த்தத்தையும், இங்குள்ள சாதியப் பிரச்சினைகளையும் ஆழமாகப் புரிந்துகொள்ளாமல், ஐரோப்பியச் சூழலில் உருவான வர்க்கப் போராட்டக் கோட்பாடுகளை அப்படியே இறக்குமதி செய்து நடைமுறைப்படுத்த முயன்றவர்கள், இறுதியில் தாங்கள் நீண்டகாலம் ஆட்சி செய்த மேற்கு வங்கத்திலும் கேரளத்திலும் பல்வேறு அரசியல் சவால்களை எதிர்கொண்டனர். இத்தனை ஆண்டுகள் ஆட்சியில் இருந்திருக்கிறார்களே! குறைந்தபட்சம் அந்த மாநிலங்களிலாவது வர்க்க ஒற்றுமையை வலுப்படுத்தி, சாதியப் பாகுபாடுகளைத் தகர்த்தெறிந்து விட்டார்களா? அதுவும் நிகழவில்லை. மேற்கு வங்கத்தின் நீண்டகால ஆட்சிக்குப் பிறகும் சாதிய ஒடுக்குமுறைகள் குறித்த கேள்விகள் தொடர்கின்றன. கேரளத்திலும் சாதி முற்றாக ஒழிக்கப்பட்டுவிடவில்லை. இத்தனை ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் சாதியத்தை ஒழிக்க முடியவில்லை என்றால், அவர்களின் சாதி குறித்த புரிதலிலும் நடைமுறை அரசியலிலும் எங்கேனும் அடிப்படையான குறைபாடு இருக்கிறதா என்று கேட்பதில் என்ன தவறு? இப்படி வர்க்க அரசியலை மட்டுமே முன்னிறுத்தி வந்தவர்களின் அரசியல் செல்வாக்கு சுருங்கிவரும் சூழலில், தமிழ்நாட்டில் சில கம்யூனிஸ்ட் அமைப்புகள் தற்போது விசிகவைத் தனிமைப்படுத்தும் அரசியலைக் கையிலெடுத்திருப்பது கவனிக்கத்தக்கது. இதற்குப் பின்னால் ஒரு வரலாறு இருக்கிறது. 1950, 60-களில் தமிழகத்தின் சேரிப்பகுதிகளில் கம்யூனிஸ்ட் இயக்கங்களுக்குக் கணிசமான மக்கள் ஆதரவு இருந்தது. ஆனால், அந்த மக்களின் உழைப்பையும் ஆதரவையும் பெற்றுக்கொண்ட இயக்கங்கள், கட்சியின் அதிகாரக் கட்டமைப்பிலும் முக்கியப் பொறுப்புகளிலும் அதே அளவிலான பிரதிநிதித்துவத்தை அவர்களுக்கு வழங்கினவா என்ற கேள்வி இன்றும் எழுப்பப்பட வேண்டிய ஒன்றுதான். ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் உணர்வையும், தனித்துவமான அரசியல் அடையாளத்தையும் அங்கீகரிப்பதற்குப் பதிலாக, அவர்களைத் தங்களுடைய வர்க்க அரசியலின் ஒரு பகுதியாக மட்டுமே பார்த்ததன் விளைவாகவே இந்த முரண்பாடு உருவானது. 1/3 தொடரும்...
1
4
1
9
527
1989-க்குப் பிறகு தலைவர் எழுச்சித்தமிழர் திருமாவளவனின் தலைமையில் ஒடுக்கப்பட்ட மக்கள் தனித்த அரசியல் சக்தியாக அணிதிரளத் தொடங்கியபோது, ஏற்கெனவே அந்த மக்களின் வாக்குகளையும் அரசியல் ஆதரவையும் தங்களுடைய அரசியலுக்குப் பயன்படுத்தி வந்த பல கட்சிகளுக்கு அது சவாலாக அமைந்தது. கம்யூனிஸ்டுகள் மட்டுமல்ல; திமுக, அதிமுக, காங்கிரஸ் எனப் பல கட்சிகளும் இந்த மாற்றத்தை எளிதில் ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனென்றால், தமிழகத்தின் தேர்தல் அரசியலில் ஒடுக்கப்பட்ட மக்களின் வாக்குகள் முக்கியமானவை. ஆனால் அந்த மக்களுக்கென்று ஒரு தனித்துவமான அரசியல் இயக்கம் உருவாகி, அவர்களே தங்களுடைய அரசியல் உரிமைகளுக்காகத் தலைமையேற்கத் தொடங்கியபோது, ஏற்கெனவே அவர்களைத் தங்களுடைய வாக்கு வங்கியாகப் பார்த்த கட்சிகளுக்கு அது நெருக்கடியை உருவாக்கியது. இன்றைய அரசியல் சூழலைக் கவனித்துப் பாருங்கள். திமுகவின் அரசியல் விமர்சனங்களிலும், பாமகவின் அரசியல் நகர்வுகளிலும் விசிக தொடர்ந்து இலக்காக்கப்படுகிறது. பல்வேறு இடைநிலைச் சாதி அரசியல் சக்திகளும் விசிகவை எதிர்கொள்ளத் தயாராக இருக்கின்றன. இடைநிலைச் சாதி இயக்கங்கள் சாதிய மனநிலையோடு விசிகவை அணுகுகின்றன என்று நாம் விமர்சித்தால், அதே அணுகுமுறையைச் சில கம்யூனிஸ்ட் அமைப்புகளும் கையாள்வது ஏன்? சாதி ஒழிப்பைப் பேசும் இயக்கங்களே ஒடுக்கப்பட்ட மக்களின் தனித்துவமான அரசியல் எழுச்சியை ஏற்றுக்கொள்ள முடியாமல் போனால், அவர்களின் சாதி ஒழிப்பு அரசியலின் நேர்மையை எப்படிக் கேள்விக்குட்படுத்தாமல் இருக்க முடியும்? தலைவர் திருமாவளவனின் வருகைக்குப் பிறகு ஒடுக்கப்பட்ட மக்கள் பெருமளவில் தனித்த அரசியல் அடையாளத்தோடு அமைப்பாய்த் திரண்டிருக்கிறார்கள். 1990-களுக்குப் பிறகான தமிழக அரசியலை விசிகவையும் திருமாவளவனையும் தவிர்த்துவிட்டு எழுதிவிட முடியாது. இந்த உண்மையை ஏற்றுக்கொள்ள மறுப்பவர்கள்தான் விசிகவைத் தனிமைப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். இந்த அரசியல் நகர்வுகளின் ஒரு பகுதியாகவே மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்களையும் அவற்றில் வெளிப்பட்ட அரசியல் அணுகுமுறைகளையும் பார்க்க வேண்டியிருக்கிறது. குறிப்பாக, விசிகவின் ஆதரவு வலுவாக இருந்ததாகக் கருதப்பட்ட மதுராந்தகம் போன்ற தொகுதிகளில் கம்யூனிஸ்ட் கட்சிகளால் எதிர்பார்த்த அளவுக்கு அரசியல் செல்வாக்கை வெளிப்படுத்த முடியவில்லை என்றால், அதற்கான காரணங்களை அவர்கள் சுயவிமர்சனத்தோடு ஆராய வேண்டும். ஆனால், அதற்குப் பதிலாக விசிகவை விமர்சிப்பதிலும், அதன் அரசியல் நம்பகத்தன்மையைக் கேள்விக்குட்படுத்துவதிலும் சிலர் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். வர்க்க அரசியல் இந்தியச் சூழலில், குறிப்பாகத் தமிழகத்தில், ஏன் எதிர்பார்த்த அளவுக்கு மக்களிடம் வேரூன்றவில்லை என்பதை ஆராய்வதற்குப் பதிலாக, ஒடுக்கப்பட்ட மக்களின் தனித்த அரசியல் எழுச்சியைச் சிதைக்க முயல்வது எந்த வகையான அரசியல்? இன்னொரு முக்கியமான விஷயத்தையும் கவனிக்க வேண்டும். சிஜேபி முன்னெடுத்த போராட்டத்தின் அரசியல் முக்கியத்துவத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, நேஹா போராவை மையப்படுத்திய விவாதங்கள் முன்னிலைப்படுத்தப்படுவது ஏன்? ஒரு போராட்டத்தின் அடிப்படை நோக்கத்தையும், அதை முன்னெடுத்த அமைப்பின் பங்களிப்பையும் விடுத்து, தனிநபர்களை மையப்படுத்தும் அரசியல் விவாதங்கள் உருவாக்கப்படும்போது அதன் பின்னணியை ஆராய வேண்டியது அவசியம். காங்கிரஸ் போன்ற நூற்றாண்டைக் கடந்த கட்சிகளே பாஜகவுக்கு எதிரான அரசியலில் பல சவால்களைச் சந்தித்துவரும் சூழலில், சிஜேபி முன்னெடுத்த போராட்டத்தின் மூலம் கல்வித் துறை அமைச்சரின் பதவி விலகல் போன்ற அரசியல் விளைவுகள் ஏற்பட்டதாகக் கூறப்படும் நிலையில், அந்த இயக்கத்தின் பங்களிப்பு ஏன் போதிய அளவில் விவாதிக்கப்படவில்லை? அதேநேரத்தில், நேஹா போராவை இந்திய ஊடகங்கள் முன்னிலைப்படுத்துவதற்குப் பின்னால் என்ன காரணங்கள் இருக்கின்றன என்பதையும் கேள்விக்குட்படுத்த வேண்டும். ஊடகங்களின் அணுகுமுறையில் ஏற்படும் மாற்றங்களையும், ஒரு குறிப்பிட்ட போராட்டத்தின் அரசியல் அடையாளம் எவ்வாறு மாற்றியமைக்கப்படுகிறது என்பதையும் கவனிக்க வேண்டியிருக்கிறது. தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்ட மக்களின் தனித்துவமான வாக்கு வங்கியாகவும், அரசியல் சக்தியாகவும் வளர்ந்திருக்கும் விசிகவைப் பலவீனப்படுத்தினால், தங்களுக்கான அரசியல் இடத்தை மீண்டும் உறுதிப்படுத்திக்கொள்ளலாம் என்ற கணக்கில் சிலர் காய்களை நகர்த்துகிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. அதற்கான முன்னோட்டமாகவே சமூக வலைத்தளங்களில் விசிகவைக் குறிவைத்து ஒருங்கிணைக்கப்பட்ட விமர்சனங்களும், தனிநபர் தாக்குதல்களும் அதிகரித்து வருவதாகத் தோன்றுகிறது. 2/3 தொடரும்...
1
1
3
113
இறுதியாக ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். கம்யூனிசம் என்பது வெறுமனே வர்க்கம் என்ற ஒற்றைச் சொல்லுக்குள் அடங்கிவிடக்கூடிய அரசியல் அல்ல. இந்தியச் சமூகத்தில் சாதி என்பது வெறும் மேல்கட்டுமானப் பிரச்சினையல்ல; அது மனிதர்களின் வாழ்வையும், உழைப்பையும், அதிகாரத்தையும், சமூக உறவுகளையும் தீர்மானிக்கும் அடிப்படையான ஒடுக்குமுறை அமைப்பு. சாதியைப் புறக்கணித்துவிட்டு வர்க்க விடுதலையைப் பேசுவதும், ஒடுக்கப்பட்ட மக்களின் தனித்த அரசியல் எழுச்சியை ஏற்றுக்கொள்ள மறுப்பதும் எந்த வகையிலும் புரட்சிகர அரசியலாகாது. அம்பேத்கரிய அரசியலைக் கம்யூனிசம் எதிரியாகப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் அம்பேத்கரியர்களின் அரசியல் சுயமரியாதையையும், தனித்துவமான அமைப்புத் திரட்சியையும் கட்டுப்படுத்த நினைக்கும் எந்த இயக்கத்தையும் கேள்வி கேட்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்கள் யாருடைய அரசியல் கேடயமும் அல்ல. யாருடைய வாக்கு வங்கியும் அல்ல. அவர்கள் தங்களுக்கான அரசியலைத் தாங்களே தீர்மானிக்கும் உரிமை கொண்டவர்கள். அந்த உரிமையை அங்கீகரிக்க மறுக்கும் எந்த அரசியலும், அது கம்யூனிசமாக இருந்தாலும் சரி, திராவிட அரசியலாக இருந்தாலும் சரி, சாதி அரசியலாக இருந்தாலும் சரி, விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதல்ல. தத்துவ வறட்சியை மறைக்க வர்க்க முழக்கங்கள் உதவாது. ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் எழுச்சியைச் சிறுமைப்படுத்துவதன் மூலம் எந்த இயக்கமும் தனது அரசியல் வீழ்ச்சியைச் சரிசெய்துவிட முடியாது. 3/3 — தேசாந்திரி
1
2
5
96