Pinned Tweet
🪔✨ ஒளி நிறைந்த தீபாவளி... மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கை! ✨🪔
இருளை அகற்றி ஒளியை ஏற்றும் இந்த இனிய தீபாவளித் திருநாளில், ஒவ்வொரு இல்லத்திலும் மகிழ்ச்சி மலரட்டும்... ஒவ்வொரு இதயத்திலும் நம்பிக்கை பிறக்கட்டும்... ஒவ்வொரு கனவும் நனவாகட்டும்!
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! 🎇
உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சி, மனநிறைவு, ஆரோக்கியம், செல்வம், அமைதி என்றும் நிறைந்திருக்கட்டும். இந்தத் தீபாவளி உங்கள் வாழ்வில் புதிய ஒளியையும், நம்பிக்கையையும், இனிய தருணங்களையும் கொண்டு வரட்டும்! ✨
அனைவருக்கும் என் இதயம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்! 🪔 🎇
கடந்த #திமுக ஆட்சியில் நடந்திருந்தாலும் சரி, தற்போதைய #தவெக ஆட்சியில் நடந்திருந்தாலும் சரி... குற்றம் குற்றம்தான்!
அரசியல் பாகுபாடின்றி, சம்பந்தப்பட்ட அனைவரிடமும் உரிய விசாரணை நடத்தப்பட்டு, குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில், தவறு செய்தவர்கள் மீது பாரபட்சமின்றி தக்க சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்!
#PeriyarArivulagamScam
தங்கள் உறவுகளை இழந்த வலியில், வேதனையில்,
தங்களுக்கு எந்தவித உதவியும் செய்யாத ஒரு அரசை நோக்கி, தாங்கள் தேர்ந்தெடுத்த அமைச்சரை நோக்கி கேள்வி கேட்க கூட இந்த ஆட்சியில் உரிமை இல்லையா?
ஐஏஎஸ் அதிகாரி சொல்ல முயலும் குறைந்தபட்ச வார்த்தையைக் கூட அமைச்சர் ஸ்ரீநாத் சொல்ல மாட்டாரா? முதல்வரின் நண்பர் என்பதால் அவரைப்போலவே தான் இருப்பாரா?
சாதனை எல்லாம் பல்லிளிக்க பிரஸ் மீட் கொடுக்க முன்வரும் தவெக அறிவுஜீவி அமைச்சர்கள், பிரச்சனை என்றால் மட்டும் கையும் வாயும் காட்டிக்கொண்டு அமைதியாக இருப்பது ஏனோ?
அமைச்சர் சென்ற பிறகு காவல்துறை அதிகாரி கேள்வி கேட்ட நபரை மிரட்டி இருப்பது கேவலமான பாசிசப் போக்கின் கொடூர உச்சம். அமைச்சர் என்றால் கேள்வி கேட்கக் கூடாதா? கேள்வி கேட்டால் காவல்துறை இப்படி தான் மிரட்டுமா? மக்கள் நினைத்தால் மட்டும் தான் இந்த அதிகாரம் எல்லாம்!
எளிய மக்கள், கேட்க யாருமே இல்லை என்று நினைக்க வேண்டாம். கடலாடிச் செல்லும் மீனவ மக்களுக்கு மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் வழியில் @AIADMKOfficial என்றும் துணைநிற்கும்!
#பொய்க்கால்_குதிரை_அரசு
காவல்துறையை ஏவல்துறையாக்கியதே தற்குறிகளின் சாதனை!
முதலில் போதைப்பொருள் கடத்தல், பாலியல் குற்றங்களில் ஈடுபடும் #தவெக நிர்வாகிகளைக் கைது செய்யுங்கள்.
#TVKFails #BringBackAIADMK #WeNeedEPSBack
சிங்கம்புணரி திருக்காளப்பட்டியில் டாஸ்மாக் மதுக்கடைக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வரும் இளைஞர் ராஜ்குமாரைப் பழிவாங்கும் நோக்கில், அவர் நடத்தி வரும் மளிகைக் கடையில் காவல்துறை அதிகாரிகளே சிலரைத் தூண்டிவிட்டு கஞ்சா பொட்டலங்களை வைத்துப் பொய் வழக்கில் கைது செய்ய முயன்றதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியளிக்கிறது.
கடையில் சிசிடிவி கேமரா இருப்பதை அறிந்து பொய் வழக்கில் ராஜ்குமாரை கைது செய்ய வந்த காவலர்கள் தப்பியோடிய சம்பவம், தவெக ஆட்சியில் காவல்துறை எந்த அளவிற்குச் சீரழிந்து கிடக்கிறது என்பதற்கு மேலும் ஒரு சாட்சியாக அமைந்துள்ளது.
செஞ்சியில் காணாமல் போன சிறுமியைக்கூட கிட்டத்தட்ட ஒரு மாத காலம் ஆகியும் மீட்கத் துப்பில்லாத தவெக அரசும், காவல்துறையும், மதுக்கடைக்கு எதிராகப் போராடும் இளைஞர்களைப் பொய் வழக்குகளில் சிக்க வைக்கும் கீழ்த்தரமான செயல்களில் ஈடுபட்டிருப்பது வெட்கக்கேடானது.
மதுக்கடைக்கு எதிராகப் போராடினால் கஞ்சா பொட்டலங்களை வைத்துப் பொய் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று காவல்துறைக்கு உத்தரவிட்ட அந்தச் சார் யார்?
தனது நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் காவல்துறையே இத்தகைய தரங்கெட்ட செயல்களில் ஈடுபடும் அளவிற்கு கீழ்த்தரமான துறையாக மாற்றியிருக்கும் முதலமைச்சர், இந்தச் சம்பவத்திற்குப் பொறுப்பேற்று வெட்கித் தலைகுனிய வேண்டும்!
#பொய்க்கால்_குதிரை_அரசு
இது பாசிசத்தில் வருமா? இல்லை, பாயாசத்தில் வருமா, திரு. #விஜி (எங்கள் அண்ணன், தம்பி, மாமா, புள்ள...) அவர்களே?
#TVKFails #BringBackAIADMK #WeNeedEPSBack #RealHeroEPS
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்களின் ஆணைக்கிணங்க, மதுரை மாவட்டக் கழகங்களின் செயலாளர்கள் திரு. @SellurKRajuOffl, திரு. @rbudhayakumar_, திரு. @rajanchellppavv ஆகியோர், தவெக அரசின் காவல்துறையால் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கழக கொள்கைப் பரப்புத் துணைச் செயலாளர் திரு. மன்னன் அவர்களை காவல் நிலையத்தில் சந்தித்து, செய்தியாளர் சந்திப்பில் மதுரை மாவட்டக் கழகங்களின் சார்பில் தவெக அரசின் ஜனநாயக விரோதப் போக்கிற்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர்.
#பொய்க்கால்_குதிரை_அரசு
உறவுகளை இழந்தவர்கள் வேதனையிலும் கோபத்திலும் கொந்தளிக்கத்தான் செய்வார்கள்...
ஜனநாயக நாட்டில் அடிப்படையான கேள்விகளைக் கேட்கக்கூட ஒரு மனிதனுக்கு உரிமை இல்லையா?
"கோரிக்கையாகத்தான் வைக்க வேண்டும்" என்று அதிகாரத் திமிரைக் காட்டும் நீங்கள், உங்கள் வீட்டில் இப்படியொரு நிகழ்வு நடந்தாலும் இப்படித்தான் பேசுவீர்களா..?
#TVKFails #TVKFailsTN
அட மானங்கெட்ட மங்குனி அமைச்சர்களா..!
நாட்டுல என்ன மாதிரியான பிரச்சினைகள் எல்லாம் ஓடிக்கிட்டு இருக்கு...
கொஞ்சம்கூட வெட்கமே இல்லாமல்... அடச் சை! 🤦♀️
#TVKFails #TVKFailsTN
"தமிழ்நாட்டில் நடப்பது, பக்காமாஸின் பக்கா மசாலா ஆந்திரப் படம்!"
— பத்திரிகையாளர் ஜீவசகாப்தன்
#TVKFails #TVKFailsTN
காசிமேட்டில் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்று உயிரிழந்த மீனவர்களின் உறவினர்கள், அமைச்சர் மரிய வில்சனை முற்றுகையிட்டு சரமாரியாகக் கேள்வி எழுப்பினர்!
மீனவர்களைக் காப்பாற்ற அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால் அவர்களின் உயிரைக் காப்பாற்றியிருக்கலாம். ஆந்திர மீனவர்கள் கண்டுபிடித்துத் தகவல் தெரிவித்த பிறகுதான் மீனவர்களின் நிலை தெரியவந்தது. மூன்று நாட்களாகத் தொடர்ந்து முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர் மீனவர்களின் உறவினர்கள்!
#TVKFails #TVKFailsTN
#அதிமுக-வை அழிக்க நினைக்கும் விஜய்யும், செங்கோட்டையனும் #புரட்சித்தலைவர்_எம்ஜிஆர் அவர்களின் பெயரைச் சொல்லவோ, பயன்படுத்தவோ எவ்விதத் தகுதியும் அற்றவர்கள்! 🖤🤍❤️
காலியாக உள்ள 5 தொகுதிகளுக்கு எப்போது #இடைத்தேர்தல்?
திருடியவனுக்கு எந்த அளவுக்குத் திருட்டில் பங்கு இருக்கிறதோ, அதே அளவுக்குத் திருடத் தூண்டியவனுக்கும் பங்கு இருக்கிறது!
That's all, Your Honour! 🤷♀️
கல்வியை வளர்த்த ஆட்சி #அதிமுக…
கல்வியைப் பின்னுக்குத் தள்ளும் ஆட்சி #தவெக!
#புரட்சித்தலைவர்_எம்ஜிஆர் அவர்கள் கொண்டு வந்த #சத்துணவுத்_திட்டம்…
#புரட்சித்தலைவி_அம்மா வழங்கிய விலையில்லா #மடிக்கணினித்_திட்டம்…
#புரட்சித்தமிழர்_எடப்பாடியார் கொண்டு வந்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% #மருத்துவ_இடஒதுக்கீடு…
இப்படி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும், எதிர்காலத்திற்கும் முன்னுரிமை அளித்தது #அண்ணா_திமுக ஆட்சி!
ஆனால், இன்றைய #தவெக ஆட்சியில் என்ன நடக்கிறது?
நேற்று முதல்வர் #விஜய் அவர்களின் புதுக்கோட்டை வருகைக்காகச் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு… இன்று பெருந்துறையில் முதல்வர் #விஜய் அவர்களைப் பார்ப்பதற்காகக் கல்லூரி நிர்வாகமே மாணவர்களை அழைத்து வந்துள்ளது!
மாணவர்கள் படித்து முன்னேறுவதற்காகத் திட்டங்களை உருவாக்கிய ஆட்சிக்கும், மாணவர்களின் கல்வி நேரத்தை அரசியல் நிகழ்ச்சிகளுக்காகப் பயன்படுத்தும் ஆட்சிக்கும் எவ்வளவு பெரிய வித்தியாசம்!
கல்விக்கு #அதிமுக ஆட்சியில் அளிக்கப்பட்ட முக்கியத்துவம், இன்றைய #தவெக ஆட்சியில் கானல் நீராக மாறி வருவது வேதனையளிக்கிறது!
#TVKFails #TVKFailsTN
மக்களுக்கான நல்லாட்சி... பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்த ஆட்சி...
என்றும்... என்றென்றும் அண்ணா திமுக மட்டுமே! 🖤🤍❤️
எப்பேர்ப்பட்ட சாதனையாளர்களையெல்லாம் #தவெக அமைச்சர்களாகக் கொண்டிருக்கிறது என்று நினைக்கும்போதே...
நெஞ்சு பொறுக்குதில்லையே! 😂
பெண்களுக்கு ஒரு பிரச்சினைன்னா ஓடி வந்து நிப்பேன், கேள்வி கேட்பேன்னு சொன்னீங்களே #CM சார்...
உங்க கட்சி நிர்வாகிகளாலேயே பெண்களும் குழந்தைகளும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்களே...
இப்ப மட்டும் கேள்வி கேட்க மாட்டீங்களா?
#TVKFails #TVKFailsTN



