Valarmeyyarivaan @ Visuvaa Viswanaath (@Journalist_Vish) header
Valarmeyyarivaan @ Visuvaa Viswanaath (@Journalist_Vish) profile picture

News Editor : Tamil Oodagam Magazine & Tamil Oodagam Digital Network

Chennai
Joined August 2010
தமிழ் ஊடகம் ; தனித்துவமான தமிழ் ஊடகம் பணிகளுக்கு நீங்களும் ஆதரவு தரலாம் வங்கிக் கணக்கு விவரம் : Tamil Oodagam Current Account Number : 1200 36 75 79 25 Canara Bank, Edayar Palayam Branch, Coimbatore. IFSC : CNRB0005634 SWIFT : CNRBINBBFD GPay, PayTM, PhonePe - 8012271745 Viswanaath T M Razorpay link in the comment box
1
1
4
1,312
பருந்தார் EXCLUSIVE BREAKING ஜெம் வீரமணி வழக்கு! அருண் IPS பணி இடை நீக்கமா?! தற்போது கட்டாயக் காத்திருப்பில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். பணி இடை நீக்கம் செய்யப்பட வாய்ப்பு எனத் தகவல். தமிழ் ஊடகம் பருந்தார் தகவல்கள் 11/11/26
27
🎉 சவுதியில் மரண தண்டனையை எதிர்கொண்ட தமிழ் இளைஞர் அனோஜன் முழுமையாக விடுதலை! முகநூல் பதிவு தொடர்பான வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கைத் தமிழ் இளைஞர் சிவராசா அனோஜன் மீதான அனைத்து சட்ட நடவடிக்கைகளும் முடிவுக்கு வந்துள்ளன. 🌐 முழுமையான செய்திக்கு: இந்த இணைப்பை அழுத்துங்கள் : tamiloodagam.com/saudi-arabi…
49
🚨 NVIDIA தலைவரைச் சுற்றி இறுகும் உளவு சர்ச்சை! உலகின் முன்னணி AI சிப் நிறுவனமான NVIDIA-வின் தலைவர் ஜென்சன் ஹுவாங்கைச் சுற்றி புதிய சர்ச்சை! சீனாவுக்குக் கடத்தப்பட்டதாக எழுந்த AI சில்லுகள் குறித்த சந்தேகம், Megaspeed நிறுவனத்தின் பின்னணி, அமெரிக்காவின் FBI விசாரணை, நாடாளுமன்றத்தின் விளக்கக் கோரிக்கை எனப் பரபரக்கும் சர்வதேச விவகாரம்! அமெரிக்கா – சீனா தொழில்நுட்பப் போரில் புதிய திருப்பமா? முழுமையான செய்தி ஆய்வு: வாசிக்க இந்த இணைப்பை அழுத்துங்கள் : tamiloodagam.com/nvidia-jens…
69
கமல்ஹாசன்: திரைத்திறமைக்குப் பின்னால் வன்மங்களும் முரண்பாடுகளும் மறைந்திருக்கின்றனவா? இந்தியத் திரையுலகின் திறமையான நடிகர்களில் ஒருவரான கமல்ஹாசனின் 50 ஆண்டுகாலத் திரைப்பயணம் உண்மையில் எத்தகையது? 2003ஆம் ஆண்டின் சண்டியர் தலைப்புச் சர்ச்சை மீண்டும் ஏன் பேசப்படுகிறது? கமல்ஹாசனின் திரைப்பயணத்தையும் பொதுவாழ்க்கை முரண்பாடுகளையும் விமர்சனப் பார்வையில் அலசுகிறார் பத்திரிகையாளர் நாச்சி செல்வராஜ். முழுக் கட்டுரையையும் வாசிக்க இந்த இணைப்பை அழுத்துங்கள் : tamiloodagam.com/kamal-haasa…
1
1
2
239
எம்.எல்.ஏக்கள் கூட்டம்: இன்ப அதிர்ச்சி கொடுத்த ஜோசப் விஜய்! @CMOTamilnadu @TVKVijayHQ @rajakumaari தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷின் 'தலை உருண்ட' கதை! கள்ளக்குறிச்சியில் ஒரு குட்டிப் பரந்தூர் அரசியலா? தமிழ் ஊடகம் பருந்தார் தகவல்கள் : வாசிக்க இந்த இணைப்பை அழுத்துங்கள் :tamiloodagam.com/kallakurich…
1
1
186
"தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு குறித்த குற்றச்சாட்டுகள் தற்போது எழுப்பப்படும் நிலையில் முந்தைய திமுக ஆட்சியில் அவை கட்டுப்பாட்டுக்குள் இருந்தனவா என்று ஆராய்வது தமிழ்நாட்டின் உண்மையான சட்டம் ஒழுங்கு நிலை குறித்து சீர்தூக்கிப் பார்க்க அவசியமாகிறது. @CMOTamilnadu @rajakumaari 2021–2026 காலகட்டத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை எப்படி இருந்தது? கொலைச் சம்பவங்கள், காவல் மரணங்கள், பெண்கள் பாதுகாப்பு, காவல்துறையின் செயல்பாடுகள், ஊடகங்கள் மீதான ஒடுக்குமுறை குற்றச்சாட்டுகள் எனப் பல்வேறு விவகாரங்களை ஆதாரங்களுடன் அலசும் அரசியல் புலனாய்வுக் கட்டுரை. ஆட்சி மாறினாலும் கேள்விகள் மாறக்கூடாது! தமிழ் ஊடகம் சிறப்புக் கட்டுரையை வாசிக்க இந்த இணைப்பை அழுத்துங்கள் : tamiloodagam.com/dmk-law-and…
97
😁😁😁 போலி நூல்கள் வாங்கினா உனக்கு என்ன? உன் காசிலா வாங்கினோம் ?! என்று கேட்டாலும் கேட்பார் இவர். அதிகமாக திமுக அரசு கடன் வாங்குகிறதே என்ற கேள்விக்கு... வாங்கினா உனக்கு என்ன? நீயா கட்டப்போகிறாய் என்று கேட்டவர்தான் இவர். குறிப்பு : பெரியார் நூலகத்திற்கு அகல்விளக்கு, பீனிக்ஸ் பதிப்பகங்களிடம் இருந்து வாங்கப்பட்ட நூல்களுக்கு ஒப்புதல் கொடுத்த ஐந்து பேரில் இவர் பெயரும் இருப்பதாக ஒரு தகவல் காற்றுவாக்கில் கசிகிறது ! தமிழ் ஊடகம் பருந்தார் தகவல்கள்
1
9
2
28
712
ஜோசப் விஜய் அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர முடியுமா? அரசுக்கு ஆபத்தா? ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கும் மற்றொன்றிற்கும் இடையில் ஆறு மாதங்கள் கட்டாயமா? சட்டமன்ற விதி 72 என்ன சொல்கிறது? அவைத்தலைவரின் அதிகாரம் என்ன? தவெக அரசின் தற்போதைய உறுப்பினர் பலம் எவ்வளவு? தமிழ் ஊடகம் ஆசிரியர் வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத் எழுதிய விரிவான அரசியல் சட்ட ஆய்வுக் கட்டுரை முழுக் கட்டுரையை வாசிக்க இந்த இணைப்பை அழுத்துங்கள் : tamiloodagam.com/joseph-vija…
1
3
193
தமிழகத்தில் மத்திய அரசு ஊழியர்கள், பொதுத்துறை வங்கி மற்றும் நிறுவன ஊழியர்கள் லஞ்சம் கேட்டால், சி.பி.ஐ.யிடம் புகார் அளிக்கலாம் என அறிவிப்பு இதற்காக 94444 42519 என்ற தொலைபேசி எண்ணும், [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியும் வெளியிடப்பட்டுள்ளன. - தமிழ் ஊடகம் ; தனித்துவமான தமிழ் ஊடகம்
2
4
155
தமிழக காவல்துறைக்குள் என்ன நடக்கிறது? கட்டாயக் கையூட்டு இல்லாத நிர்வாகம் சில அதிகாரிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறதா? காவல்துறையில் உள்ளடி அரசியல், அதிகாரிகள் மோதல், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் என முதலமைச்சர் ஜோசப் விஜய் அரசு எதிர்கொள்ளும் சவால்கள் என்ன? தமிழ் ஊடகம் பருந்தார் தகவல்கள்! வாசியுங்கள்... பகிருங்கள்... கட்டுரையை வாசிக்க இந்த இணைப்பை அழுத்துங்கள் : tamiloodagam.com/tamil-nadu-…
1
158
அன்று யாருக்கு வாக்குரிமை இருந்தது? சோழர் காலத்தில் குடவோலை முறை மூலம் மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால் அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமை இருந்ததா? பெண்களுக்கு வாக்குரிமை இல்லை. வயது, சொத்து, வரி செலுத்துதல் எனப் பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்தன. அதனால் அரசியல் பேசுகிறேன்! பத்திரிகையாளர் ஜோதி நரசிம்மன் எழுதும் தொடர் – 2. முழுக் கட்டுரையை வாசிக்க இந்த இணைப்பை அழுத்துங்கள் : tamiloodagam.com/kudavolai-t…
1
2
4
254
தமிழ்த் தேசியத்தை வணிகமயமாக்கித் தட்டுத் தடுமாறித் தடம் மாறிய தலைவன் ! "வேலுப்பிள்ளை மகனின் தம்பி என்றார்! ஆனால் கெட்ட வார்த்தைகளில் வசைபாடும் ஒரு கூட்டத்தை உருவாக்கிவிட்டிருக்கிறார் ! இரத்தமும் சதையுமாக வந்தேன் என்றார்! ஈ*ழத் தமிழருக்கு நீதி பெற ஒரு செயலும் இல்லை ! தமிழ்நாட்டைத் தமிழர் ஆள வேண்டும் என்றார்! தான் மட்டுமே தமிழர் என்கிறார் ! இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டும் என்றார்! இயற்கை வளங்களை சுரண்டி விற்றவர்கள் சுடச்சுடப் பிரியாணி கொடுத்தால் வேண்டாம் என்று சொல்ல முடியுமா என்கிறார் ? திராவிடத்தை ஒழிக்க வேண்டும் என்றார்! திராவிடப் பிரியாணி மட்டும் ஓகே என்கிறார் ! அன்று எந்தத் திமுக தமிழ்த் தேசியத்தை அழிக்க எண்ணியதோ இன்று அதற்கு ஆதரவு கொடுத்தால் தப்பா என்கிறார் ! "ஓட்டுப் போட்டால் போடுங்கள்; இல்லாவிட்டால் போங்கள்" என்ற மனநிலையில் தேர்தலை அணுகுவது அரசியல் தலைமைக்கான அணுகுமுறையாக இருக்க முடியாது. வாக்காளர்களின் நம்பிக்கையைப் பெறுவதுதான் ஒரு தலைவரின் முதன்மையான கடமை." தமிழ் ஊடகம் ஆசிரியர் வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத் எழுதிய அரசியல் அறிவியல் கட்டுரையை விரிவாக வாசிக்க இந்த இணைப்பை அழுத்துங்கள் : tamiloodagam.com/seeman-tami…
30
8
4
29
2,886
தமிழ்த் தேசியப் பேராசான் பெ. மணியரசன் ஐயா கால் வலிக்காக சித்தமருத்துவ சிகிச்சை எடுத்து வருகிறார். நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்து அவருடன் உரையாடிவிட்டு வந்தோம் நானும் நண்பர் சூலூர் சிவக்குமாரும். தமிழ்த் தேசியம் குறித்த தெளிவான கொள்கைகள் கொண்ட ஒரு இயக்கத்தின் தலைவர். தமிழர்களின் உரிமைக்காக சமரசம் இன்றிப் போராடும் வழிகாட்டி.. பல்லாண்டு வாழ்வாங்கு வாழ அருட்பெருஞ்சோதி ஆண்டவரை வேண்டுகிறோம். - வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத்
3
11
99
2,475
தீபாவளி தமிழர் தொன்மை மரபா? பிற்காலப் பண்பாட்டுக் கலப்பா? சங்க இலக்கியங்களில் தீபாவளிக்குச் சான்று உள்ளதா? அகநானூறு பதிவு செய்யும் கார்த்திகை விளக்கீடு என்ன சொல்கிறது? ஐப்பசி அமாவாசையில் தீபாவளி கொண்டாடப்படுவதன் வானியல் பின்னணி என்ன? நரகாசுரன் கதை உண்மையிலேயே தீபாவளியின் தொடக்கத்துடன் தொடர்புடையதா? இலக்கியம், வானியல், புராணங்கள், கல்வெட்டுகள் என வரலாற்று ஆதாரங்களின் அடிப்படையில் ஒரு சுவையான ஆய்வு. வாசியுங்கள்... வரலாற்றை ஆதாரங்களுடன் அணுகுவோம்! வாசிக்க இந்த இணைப்பை அழுத்துங்கள் : tamiloodagam.com/deepavali-t…
1
2
163
தமிழ் ஊடகம் குழுமத்தின் இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள். எல்லாம் செயல் கூடும் என்னாணை அம்பலத்தே எல்லாம் வல்லான் தனையே ஏத்து! --இராமலிங்க வள்ளற்பெருமான் #தீபாவளித்திருநாள் #தமிழ்ஊடகம்
1
2
179
ஜெம் வீரமணி வழக்கில் புதிய திருப்பம்! சிறுமிகள் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில், ஜெம் வீரமணி மீது மேலும் ஒரு சிறுமி புகார் அளித்துள்ளார். முழுச் செய்தியை வாசிக்க இந்த இணைப்பை அழுத்துங்கள் : tamiloodagam.com/gem-veerama…
2
218
🔥 பெரியார் நூலகத்தில் புத்தகக் கொள்முதல் சர்ச்சை! யார் பொறுப்பு? நாம் நாடகக் கம்பெனியாகிவிட்டதா நாம் தமிழர் கட்சி ?! தினகரன் சுரேஷ் வேதநாயகம், நக்கீரன் பிரகாஷ் வழக்கு ! அமைச்சர் உதவியாளரின் அதிர்ச்சிப் பின்னணி... தகவல் ஆணையர் நியமனத்தின் அரசியல் எதிர்வினை... இவை அனைத்தையும் அலசுகிறார் பருந்தார்! 📌 முழுமையான தகவல்களுக்கு: 🌐 தமிழ் ஊடகம் – வாசிக்க இந்த இணைப்பை அழுத்துங்கள் : tamiloodagam.com/periyar-lib…
135
இதைவிட ஒரு நீதிமன்றம் கடுமையான கருத்தைத் தெரிவிக்க முடியாது ! சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் தலைவர் 'பதவியை' தினகரன் சுரேஷ் வேதநாயகம் இன்னமும் பிடித்துக்கொண்டிருப்பது ஏனோ !? வழிகாட்டும் குழுவினர் என்.ராம். பகவான் சிங், டி.எஸ்.கே, சாவித்திரி கண்ணன் உள்ளிட்ட மூத்த பத்திரிகையாளார்கள் இப்போது (மட்டும்) மவுனம் காப்பது ஏனோ ? முடிவு எடுக்க முடியாமல் திணறுகிறதா மன்றத்தின் 'நிர்வாகக் குழு' ?! -பத்திரிகை ஊடக சிந்தனைப் பேரவை கேள்வி ! சென்னை பத்திரிகையாளர் மன்றம் (சென்னை ப்ரெஸ் க்ளப் என்று முன்பு அழைக்கப்பட்டது) எந்த ஒரு அரசியல் கட்சியின் சார்பாகவும், ஒருபக்கமாகவும் செயல்பட்டது என்ற கெட்ட பெயர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்புவரை சுமார் 25 ஆண்டுகாலமாக அதற்கு இல்லை. அந்த நிர்வாகத்தின் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சொன்ன இப்போதைய நிர்வாகிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிர்வாகத்தில் இருந்துவரும் நிலையில், முன்னாள் நிர்வாகிகள் மீது தாங்கள் சுமத்திய குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கும் விதமாக எந்த ஆதாரங்களையும் முன்வைக்கவில்லை, அவற்றை நிரூபிக்கவும் இல்லை. மாறாக, இந்தப் புதிய நிர்வாகிகளின் 'வழிகாட்டும் குழு' சட்டவிரோதமாக (மன்றத்தின் துணை விதிகளுக்கு எதிராக) சுமார் 800 பேரைச் சேர்த்துத் தேர்தல் எனும் பெயரில் மன்றத்தை பண பலம் - அதிகார பலம் - ஆள் பலம் ஆகியவற்றைத் தவறாகப் பயன்படுத்திக் கைப்பற்றி திமுக ஆதரவுப் பத்திரிகையாளர்கள் சுரேஷ் வேதநாயகம், ஹாசிப், நெல்சன் சேவியர் போன்றவர்களிடம் ஒப்படைத்தது. வழிகாட்டும் குழுவும், புதிய நிர்வாகிகளும் செய்கின்ற தவறுகளைச் சுட்டிக்காட்டிய சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் மூத்த முதன்மை உறுப்பினர் நிலாவேந்தன் மீது பொய்ப் புகார் கொடுத்து காவல்நிலையத்தில் அமரவைத்து அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தினார்கள். மன்றத்தின் மூத்த முதன்மை உறுப்பினர் வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத் மீது பொய்ப் புகாரின் பேரில் FIR பதிய வைத்தார்கள். நிலாவேந்தன் மீது தமிழே எழுதப் படிக்கத் தெரியாத ஜானகிராமன் எனும் மன்றத்தின் உதவியாளரிடம் கையெழுத்து வாங்கிப் பொய்ப் புகார் கொடுத்தனர். வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத் மீது மன்றத்தின் பொதுச் செயலாளர் ஹாசிப் என்பவரைக் கொண்டே பொய்ப் புகார் கொடுத்து FIR பதிய வைத்தார்கள். கடந்த 23 ஆண்டுகளாக மன்றத்தின் முதன்மை உறுப்பினராக இருந்த மறைந்த நிலாவேந்தன் மற்றும் இன்றும் இருக்கும் வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத் மீது கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், தேர்தல் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு உறுப்பினராக சேர்ந்த சுரேஷ் வேதநாயகம் மற்றும் ஹாசீப் ஆகியோர் இதுபோன்ற அடாவடியான பொய்ப் புகார் கொடுத்து அச்சுறுத்தும், மிரட்டும் வேலைகளை செய்தது ஒட்டுமொத்த பத்திரிகை ஊடக உலகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாகியது. திமுக ஆட்சி மாறிய நிலையில் தவெக ஆட்சி வந்துள்ள நிலையில், ஜெம் வீரமணியின் சிறுமிகள் மீதான பாலியல் வழக்கு விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவின்படி தீவிரமடைந்தது. அந்த வழக்கை மேற்கொண்டு விசாரணையின்றி மூடச் செய்ததாக காவல்துறை முன்னாள் ஆணையர் அருண் ஐபிஎஸ் உள்ளிட்ட அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அவர்களின் அதிகாரம் மற்றும் பதவிகள் பறிக்கப்பட்டுக் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். அந்த அருண் ஐபிஎஸ் அதிகாரியின் மிக நெருங்கிய நண்பரும், சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் தற்போதைய தலைவருமான சுரேஷ் வேதநாயகம் மற்றும் சுரேஷின் கூட்டாளி நக்கீரன் தாமோதரன் பிரகாஷ் ஆகியோர் சக பத்திரிகையாளர்கள் மீதே அவதூறு பரப்பிய புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். அந்த வழக்கில் முன்பிணையும் கேட்டுப் பெற்றுள்ளனர். அந்த முன்பிணை விசாரணையின்போது சென்னை உயர்நீதி மன்றம் தெரிவித்த கருத்துக்கள் ஒவ்வொரு பத்திரிகை ஊடகவியலாளரையும் சிந்திக்க வைக்கும் மிகப் பொறுப்பான சமூக அக்கறையுடன் கூடிய கருத்துக்கள். “பத்திரிகையாளர் சங்கங்களில் பதவி வகிப்பவர்களின் கைகளில் பத்திரிகைத்துறை இந்த நிலைக்குத் தாழ்ந்திருப்பது வருத்தமளிக்கிறது. அவர்கள் பத்திரிகைத் தொழிலில் பெற்றுள்ள அந்தஸ்து, அவர்களிடம் கட்டுப்பாட்டுடன் அணுகுவதற்கான காரணமாக இருக்கலாம்; ஆனால், அவர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்கான காரணமாக இருக்க முடியாது.” என்பதே சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.ரமேஷ் அவர்கள் தெரிவித்த கருத்துகள். 1/2..Cntd...
2
26
2
70
6,406
சக பத்திரிகையாளர்கள் மீது பொய்ப் புகார் கொடுத்து வழக்குப் பதிவு செய்வது, பொய்ப் புகார் கொடுத்து FIR பதிவு செய்வது, பொய்யான அவதூறுகளைப் பரப்பி மிரட்டி அச்சுறுத்துவது ஆகியவற்றை ஒரு வழக்கமாக கொண்டிருக்கிறார்கள் என். ராம் தலைமையிலான வழிகாட்டும் குழுவினரும், பத்திரிகையாளர் மன்றத்தின் தற்போதயை தலைவர் தினகரன் சுரேஷ் வேதநாயகம், உறுப்பினர் நக்கீரன் தாமோதரன் பிரகாஷ் உள்ளிட்டவர்களும் என்பது அவர்களின் கடந்த இரண்டு ஆண்டுச் செயல்பாடுகளில் நிரூபணம் ஆகியிருக்கிறது. ஆக, தினகரன் சுரேஷ் வேதநாயகம், நக்கீரன் பிரகாஷ் போன்றோர் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் பதவிகளைப் பிடிக்க முன்னாள் காவல்துறையினர் - திமுக முன்னாள் அமைச்சர்கள் - திமுக ஆதரவு வழக்கறிஞர்கள் எனப் பலரையும் தவறாகப் பயன்படுத்தி அவர்களின் ஆற்றல்மிகு பதவி, பொறுப்புகளை மடைமாற்றி அதன் மூலம் இவர்கள் இத்தகைய பொறுப்புகளுக்கு வந்ததே இப்படி மிரட்டி, அடக்கி, ஒடுக்கி, வழக்குப் பதிவு, FIR பதிவு செய்யத்தானோ எனும் ஐயம் வலுவாக எழுகிறது. மேலும், தங்களின் சமூக விரோதச் செயல்களுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றத்தை ஒரு பதுங்கு குழியாக, முகமூடியாகப் பயன்படுத்திக்கொள்ளவே இத்தகைய பதவிகளில் அடாவடியாக வந்து அமர்கிறார்களோ எனும் அச்சமும் ஏற்படுகிறது. சென்னை பத்திரிகையாளர் மன்றம் போன்ற பத்திரிகை ஊடகர்களின் நலன் காக்கவேண்டிய, அவர்களைப் பாதுகாக்க வேண்டிய அடிப்படை கடமைகள் உள்ள அமைப்புகளில் தலைவர், பொதுச் செயலாளர் போன்ற பொறுப்புகளில் இவர்களை போன்றவர்கள் அடாவடியாகத் வந்து அமர்ந்து கொன்டு பத்திரிகை ஊடகர்கள் மத்தியில் ஒரு தொடர் அச்சுறுத்தல் விடுத்துக்கொண்டே சமூகப் பொறுப்புள்ள பத்திரிகை ஊடகத்துறையைத் தரம் கெடுத்து வருவது அதிர்ச்சியான செயல்கள். எனவே, நீதிமன்றமே வருத்தத்துடன் தெரிவித்துள்ள கருத்தைக் கவனத்தில் கொண்டு சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து தினகரன் சுரேஷ் மற்றும் உறுப்பினர் பொறுப்பில் இருந்து நக்கீரன் தாமோதரன் பிரகாஷ் ஆகியோரை சென்னை பத்திரிகையாளர் மன்ற செயற்குழு நீக்கவேண்டும். முடியாத நிலையில் செயற்குழுவே ஒட்டுமொத்தமாகப் பொறுப்பு விலகவேண்டும் என்று பத்திரிகை ஊடக சிந்தனைப்பேரவை கேட்டுக்கொள்கிறது. --பத்திரிகை ஊடக சிந்தனைப் பேரவை உயர்மட்டக் குழு Journalism and Media Think Tank, Coimbatore, Tamil Nadu. மின்னஞ்சல் : [email protected] 06/11/26 2/2..End
7
191
செம்மணிப் புதைகுழி குறித்த அறிக்கைக்கு கடும் எதிர்ப்பு நோயால் இறந்தவர்கள் என்பதா என அதிர்ச்சி இலங்கையில் இவ்வாரம் #LankaFiles #TNTVTamilOodagam காணொலி இணைப்பு : youtu.be/BaG-5REYGfo
1
94