முதுக்கொடுவ, உடுகமகே ஹேமசிறி மற்றும் காமினி ஆகிய இரு சிங்களவர்கள், பல முஸ்லிம்கள் மற்றும் மலையகத் தமிழர்களின் பெயர்களும், இராணுவத்திற்கு எதிரான போரில் தமிழீழத்திற்காக உயிர்நீத்த போராளிகளை கௌரவிக்கும் வகையில் யாழ். நல்லூரில் நடைபெறும் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பொன்றில், ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை உள்ளிட்ட நீதிபதிகளைக் கொண்ட சர்வதேச நீதிமன்றம் (ICJ), மியன்மாரின் ரோஹிங்கியா மக்களுக்கு எதிராக இனப்படுகொலை செய்த குற்றத்திற்காக மியன்மார் அரசைக் குற்றவாளியாகக் கண்டுள்ளது.
In a historical ruling, the world top court @CIJ_ICJ -which included ex UN rights chief Navi Pillay- finds Myanmar guilty of committing genocide against its Rohingya minority. This is the first time a state has ever been found to have committed genocide by an international court
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பாக சர்ச்சையை ஏற்படுத்திய பேராசிரியர் ராஜ் சோமதேவவின் அறிக்கை தொடர்பில் இனிமேல் எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்போவதில்லையென யாழ். நீதவான் செ. லெனின்குமார் தீர்மானித்ததாக, அவருடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து சட்டத்தரணி கே.எஸ். இரத்தினவேல் தெரிவித்தார்.
இலங்கையின் மேன்முறையீட்டு நீதிமன்றம், 12 ஆண்டுகளுக்கு முன்னர் 11 வயதுடைய சிறுவர் பிக்குவொருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட எத்பிட்டியே சந்திரானந்த என்ற பௌத்த பிக்குவுக்கு உயர்நீதிமன்றம் விதித்த தண்டனையை உறுதிப்படுத்தியுள்ளது.
மறைந்த எம்.கே. சிவாஜிலிங்கம் தனது கொள்கையில் ஒருபோதும் நீர்த்துப்போகவில்லை எனவும், சமரசம் செய்துகொள்ளவில்லை எனவும், எந்தச் சூழ்நிலையிலும் தனது அரசியல் நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கவில்லை எனவும் @thirumaofficial தனது இரங்கல் உரையில் தெரிவித்துள்ளார்.
"தமது சம்பளத்திலிருந்து ஒரு தொகை வரியாக அறவிடப்படுவதை மலையக மக்கள் அறியாமலுள்ளனர்"
மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் EPF மற்றும் ETF நிதிகளுக்கு முதலீட்டு வருமான வரியாக 14% அறவிடப்படுவதை சுட்டிக்காட்டிய @ShanakiyanR இது அந்த மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி என வலியுறுத்தினார்.
செம்மணி மனிதப் புதைகுழி குறித்த பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவின் அறிக்கையையும், அவரது உருவப்பொம்மையையும் தீயிட்டுக் கொளுத்திய வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட பெருந்திரளான தமிழர்கள், நீதியைப் பெற்றுக்கொள்வதற்காக சர்வதேசத் தலையீட்டை கோருகின்றனர்.
எம். கே. சிவாஜிலிங்கத்தின் இறுதிக்கிரியைகள் வல்வெட்டித்துறை ஊறணி இந்து மயானத்தில், உள்நாட்டு, வெளிநாட்டு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பெருந்திரளான மக்களின் பங்கேற்புடன் நடைபெற்றன. அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வல்வெட்டித்துறை நகரில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்தன.
தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான நியாயப்பாடுகளைச் சிங்கள மொழியில் விளக்குவதற்காகப் பல தசாப்தங்களாகத் தொடர்ந்து முயற்சித்த, வடக்கைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், வல்வெட்டித்துறை நகர சபையின் தலைவருமான எம்.கே. சிவாஜிலிங்கம் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.
விசாரணைப் பணிகள் இடைநிறுத்தப்பட்ட இலங்கையின் மூன்றாவது பெரியதாகக் கருதப்படும் மாத்தளை மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகளை மீண்டும் ஆரம்பிக்குமாறு காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்ப ஒன்றியம் விடுத்த கோரிக்கை தொடர்பான வழக்கு விசாரணை ஜனவரி 13ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அனோஜன் சிவராசாவுக்கு எதிரான வழக்கைத் தொடர்ந்து முன்னெடுக்கப் போவதில்லை என சவுதி அரச தரப்பு சட்டத்தரணிகள் தீர்மானித்ததைத் தொடர்ந்து, அவரை விடுதலை செய்ய அந்நாட்டு உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. 2 வாரங்களுக்குள் அனோஜனை இலங்கைக்கு அழைத்து வர @HMVijithaHerath எதிர்பார்த்துள்ளார்.
தையிட்டி திஸ்ஸ விகாரையில் இன்று சமய ஊர்வலமும் வழிபாட்டு நிகழ்வும் நடைபெற்ற நிலையில், அதில் பங்கேற்பதற்காக தென்னிலங்கையிலிருந்து நூற்றுக்கணக்கான பௌத்தர்கள் பேருந்துகளில் அழைத்து வரப்பட்டிருந்தனர். இந்தப் பின்னணியில் விகாரையை அகற்றுமாறு தமிழர்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.
பலாலியில் இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் உள்ள காணி விடுவிக்கப்பட்ட பின்னர், அந்த மண்ணிலேயே இறுதியாகக் கண்மூட வேண்டும் என 36 ஆண்டுகளாக போராடி, ஆசை நிறைவேறாமலேயே உயிர் நீத்த, 83 வயது தம்பித்துரை இளையகுட்டியின் பூதவுடல், காணி விடுவிப்பு போராட்டக் களத்திற்கு நேற்று கொண்டுவரப்பட்டது.
ஐ.நா. நிபுணர்கள் சட்டமூலம் குறித்து எச்சரிக்கை விடுத்து ஒரு வாரத்திற்கும் குறைவான காலப்பகுதியில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளும் உரிமைகள் குழுக்களுமே ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலத்திற்கு (POCB) எதிர்ப்புத் தெரிவிப்பதாக @anuradisanayake தெரிவிக்கின்றார்.
வலுவான அரச இயந்திரத்தை உறுதிப்படுத்தி, புதிய பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்துவதற்காகப் பழைய சட்டங்களை மாற்றியமைத்து, புதிய நிறுவனக் கட்டமைப்பை நிறுவும் வகையில், ‘பழைய துருப்பிடித்த கட்டமைப்புகளிலிருந்து வெளியே வருமாறு’ @anuradisanayake, JVP-வுடன் இணைந்த தொழிற்சங்கங்களிடம் கோரிக்கை.
பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட மூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக சுகாதாரம், மின்சாரம், தபால் உள்ளிட்ட பல்வேறு சேவைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசாங்கம் முன்மொழிந்துள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலத்தைத் திருத்துமாறு வலியுறுத்தியுள்ள ஐ.நா நிபுணர்கள், PSTA தொடர்பாகத் தமது கரிசனைகளை முன்வைத்து 2026 பெப்ரவரியில் அனுப்பிய கடிதத்திற்கும் இதுவரை பதில் கிடைக்கவில்லை என வருத்தம் தெரிவித்துள்ளனர்.
யாழ். கந்தரோடை தொல்லியல் தளத்தில் புத்தர் சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளதாக முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து, தான் அங்கு சென்றபோது அவ்வாறான சிலை எதுவும் இருக்கவில்லை என வலி. வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா பிரகாஷ் தெரிவிக்கின்றார்.
பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படாத அரச பெருந்தோட்டக் காணிகளைத் தனியார் நிறுவனங்களுக்குக் குத்தகைக்கு வழங்கும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்தும் எமது கோரிக்கை குறித்து, பெருந்தோட்ட அமைச்சின் செயலாளர் அளித்த பதிலில் தமக்கு நம்பிக்கையில்லை என, ஜீ.சுரேஸ் தெரிவிக்கின்றார்.









