இன்று (27.11.2026) தனது 49-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் மாண்புமிகு தமிழ்நாடு முன்னாள் துணை முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழக இளைஞரணிச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான அண்ணன் திரு. உதயநிதி ஸ்டாலின் @Udhaystalin எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், அவர்கள் நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் மக்கள் நலனுக்காகத் தமது பொதுவாழ்வுப் பணியைத் வெற்றியோடு தொடர்ந்திட எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
@arivalayam #DMK
உலகிற்கு ஒளியூட்டும் திருக்கார்த்திகைத் திருநாளில், விண்ணுயர்ந்து சுடர்விடும் தீபத்தின் அருளொளி திசையெங்கும் பரவி, உங்கள் அனைவரது வாழ்விலும், நலமும் வளமும் அமைதியும் நிறைத்திடவும், அன்பும் சகோதரத்துவமும் மேலோங்கவும், அனைவருக்கும் எனது இனிய திருக்கார்த்திகைத் தீபத் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஓம் நமசிவாய!
சென்னை, கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திரு. வி.எஸ். பாபு அவர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (19.11.2026) காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனையும் வருத்தமும் அடைந்தேன்.
அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டு, அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
@TVKVijayHQ
நாளைய சமூகத்தின் நம்பிக்கைகளாகத் திகழும் மழலைச்செல்வங்கள் அனைவரும் கல்வி, ஒழுக்கம், தன்னம்பிக்கை மற்றும் நற்பண்புகளுடன் வளர்ந்து, தங்களது கனவுகளை நனவாக்கி வாழ்வில் உயர்ந்த நிலையை அடையவும், அவர்களின் மகிழ்ச்சியான எதிர்காலம் சிறக்கவும், வாழ்வில் பல சாதனைகள் படைக்கவும் அனைத்துக் குழந்தைகளுக்கும் எனது அன்பான இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
#ChildrensDay
இந்திய விடுதலைப் போராட்டத்தில் மகாத்மா காந்தியடிகளுடன் இணைந்து நம் தாய்த்திருநாட்டின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்டு, சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் அரும்பணியாற்றிய பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் 137-ஆவது பிறந்தநாளில், அவர்தம் தேசப்பற்றையும், குழந்தைகள் மீது அவர் கொண்டிருந்த அளவற்ற அன்பையும், நாட்டிற்காக அவர் ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க பணிகளையும் நினைவுகூர்ந்து, அவரது புகழினைப் போற்றி வணங்குகிறேன்.
8
392
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் தம்பி! @VPJayapradeep
உன் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியும் மனநிறைவும் நிறைந்ததாக அமையவும், நீ தொடங்கும் அனைத்து நற்பணிகளும் வெற்றிபெறவும், நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும், வாழ்வில் மென்மேலும் பல உயரங்களை அடையவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
தீப ஒளி திசையெங்கும் பரவி, இருள் நீங்கி ஒளி பிறக்கும் இனிய தீப ஒளித் திருநாளில், அனைவரது வாழ்விலும் இறையருள் துணைநின்று, இடர்கள் யாவும் நீங்கி, மகிழ்ச்சியும் மனநிறைவும், நலமும் வளமும் பெருகிட அனைவருக்கும் எனது இதயம் கனிந்த இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
#HappyDiwali2026
1
10
500
இன்று 72-ஆவது பிறந்தநாள் காணும், இந்தியத் திரையுலகில் தனது தனித்துவமான கலைத்திறத்தாலும், புதுமையான படைப்பாற்றலாலும் முத்திரை பதித்து, அரசியல் களத்தில் மக்கள் நலச் சிந்தனைகளை முன்னிறுத்தி வரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர், மாநிலங்களவை உறுப்பினர், உலகநாயகன், பத்மஸ்ரீ திரு. கமல்ஹாசன் @ikamalhaasan அவர்களுக்கு எனது இதயம் கனிந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் அவர்கள் நீண்ட ஆயுளுடனும், நிறைந்த உடல்நலத்துடனும், மாறாத கலைத்துடிப்புடனும் பல்லாண்டு வாழ்ந்து, தொடர்ந்து பல சாதனைகள் படைக்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
@maiamofficial
ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராகக் குரலெழுப்பி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸுடன் தேசியப் போராட்டப் பாதையில் பயணித்து, “தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள்” என்ற உயரிய கொள்கையைத் தம் வாழ்வின் அடையாளமாகக் கொண்டு, மக்களின் உரிமைகளுக்காகவும் பொதுநலனுக்காகவும் வாழ்ந்த தெய்வத்திருமகனார் ஐயா பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் ஜெயந்தி மற்றும் குருபூஜை நாளில், அவரது வீரத்தையும் தியாகத்தையும் வரலாற்றுப் புகழையும் போற்றி வணங்குகிறேன்.
விடுதலை வேள்வியில் வீரத்தின் அடையாளங்களாய் விளங்கி, அந்நிய ஆதிக்கத்திற்கு எதிராகப் போராடி, தாய்மண்ணின் விடுதலைக்காகத் தங்கள் இன்னுயிரை ஈந்த, சிவகங்கைச் சீமையின் வீர வரலாற்றிலும், காளையார்கோவிலின் வரலாற்றுப் பெருமையிலும் நீங்கா இடம்பிடித்த வீரமிகு மருதுபாண்டியர் சகோதரர்கள் அவர்களின் 225-வது ஆண்டு குருபூஜை நாளில், அவர்தம் வீரத்தையும் தியாகத்தையும் நினைவுகூர்ந்து போற்றி வணங்குகிறேன்.
பிரபல சமையல் கலைஞரும், பத்மஸ்ரீ விருது பெற்றவரும், கின்னஸ் உலகச் சாதனையாளருமான செஃப் திரு.தாமோதரன் அவர்கள் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த மிகவும் வருந்துகிறேன்.
தனது தனித்துவமான சமையல் திறமையாலும், இனிய அணுகுமுறையாலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வாயிலாகத் தமிழ் மக்களின் இல்லங்கள்தோறும் அறிமுகமானவர். சமையல் கலையை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்த்தவர்.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டு அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
கலைமகளின் அருளால் கல்விச் செல்வம் பெருகவும், அறியாமை அகன்று அறிவொளி தழைக்கவும், முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையவும், உழைக்கும் கரங்கள் உயர்வடையவும், எண்ணிய செயல்கள் யாவும் இனிதே நிறைவேறவும், வாழ்வில் வளமும் நலமும் பெருகவும் அனைவருக்கும் எனது இனிய ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமித் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
#Vijayadashami
துள்ளல் இசையிலும், மெல்லிசையிலும் தனக்கெனத் தனி முத்திரை பதித்து, தனது இனிமையான பாடல்களால் தமிழ் மக்களின் இதயங்களில் நீங்கா இடம்பிடித்த இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் திரு.தேவா அவர்கள் மறைந்த அறிந்து மிகவும் வருந்துகிறேன்.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், தமிழ் திரையுலகினருக்கும், இசை ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டு, அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு அடிபணிய மறுத்து, அந்நிய ஆதிக்கத்திற்கு எதிராக வீரத்துடன் போராடி, விடுதலை வேட்கைக்காகவும், தாய்மண்ணின் உரிமையை காப்பதற்காகத் தனது உயிரையும் துச்சமெனக் கருதி இறுதிவரை போராடிய பாஞ்சாலங்குறிச்சியின் மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் 227-வது நினைவு நாளில், அவரது வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன்.
இந்தியாவின் ஏவுகணை நாயகனாகவும், நாட்டின் 11-வது குடியரசுத் தலைவராகவும் திகழ்ந்து, தமது எளிமையாலும், அறிவாற்றலாலும், உயரிய சிந்தனைகளாலும் கோடிக்கணக்கான இளைஞர்களின் உள்ளங்களில் நீங்கா இடம்பிடித்தவரும், இந்தியாவின் பெருமைமிகு அறிவியல் அறிஞருமான, டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் 95-வது பிறந்தநாளில் அவர்தம் புகழையும், தொலைநோக்குச் சிந்தனைகளையும் போற்றி வணங்குகிறேன்.
சமூகத்தில் நிலவிய சாதியப் பாகுபாடுகளையும் ஏற்றத்தாழ்வுகளையும் எதிர்த்து, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகள், சமத்துவம், சமூகநீதி மற்றும் சுயமரியாதைக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து, சமூக முன்னேற்றத்திற்காகப் பாடுபட்ட சுதந்திரப் போராட்டத் தியாகியும், இராணுவ வீரருமான தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்களின் 102-ஆவது பிறந்த நாளில், அவர்தம் சமூகப் பணிகளையும், தியாகத்தையும் நினைவுகூர்ந்து, அவர்தம் புகழினைப் போற்றி வணங்குகிறேன்.
கல்வியே சமூக முன்னேற்றத்தின் அடித்தளம் என்பதை உணர்ந்து, தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்கு புதிய பாதை வகுத்து, பள்ளிக்கூடங்களைப் பெருக்கி, மதிய உணவுத் திட்டத்தை விரிவுபடுத்தி, அணைகள் மற்றும் நீர்ப்பாசனத் திட்டங்கள் மூலம் வேளாண் வளர்ச்சிக்கும் வித்திட்ட தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர், பெருந்தலைவர் கர்மவீரர் கு. காமராஜர் அவர்களின் 51-ஆம் ஆண்டு நினைவு நாளில், அவர்தம் புகழையும், மக்கள் நலப் பணிகளையும் போற்றி வணங்குகிறேன்.
இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு ஒளிவிளக்காகத் திகழ்ந்து, அஹிம்சை, சத்தியம் மற்றும் மனிதநேயம் ஆகிய உயரிய நெறிகளை உலகுக்கு வாழ்வால் எடுத்துக்காட்டி, சுதந்திர இந்தியாவின் கனவை கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களில் விதைத்த தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் 157-வது பிறந்தநாளில், அவர்தம் தியாகத்தையும், தேசப்பணியையும் போற்றி வணங்கி, அவர்களுக்கு எனது வீரவணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழரின் கலைமரபிற்குப் பெருமை சேர்த்து, வீரத்திலும் விவேகத்திலும், பாசத்திலும், பண்பாட்டிலும் தமிழரின் வாழ்வியலைத் திரையில் கண்முன் நிறுத்தி, தான் ஏற்ற கதாபாத்திரங்கள் தோறும் தனித்துவ முத்திரை பதித்து, தலைமுறைகள் கடந்தும் தமிழர் நெஞ்சங்களில் நீங்கா இடம்பிடித்த கலைப்பேராளுமை, நடிகர் திலகம், செவாலியேர் திரு. சிவாஜி கணேசன் அவர்களின் 99-ஆவது பிறந்தநாளில், அவர்தம் புகழினைப் போற்றி வணங்குகிறேன்.


















