கள்ளக்குறிச்சி மாவட்டம் - பொரசக்குறிச்சி கிராமத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், கனமழையின் காரணமாக மழைநீர் தேங்கியதையடுத்து, மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்சரும், கள்ளக்குறிச்சி மாவட்ட பொறுப்பு அமைச்சருமான திரு. வன்னி அரசு அவர்கள் 25.10.26 அன்று பள்ளியில் நேரில் ஆய்வு மேற்கொண்டு, தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
@VanniTamizhVCK
#TNGovt #socialjusticeministervanniarasu #officeofsocialjusticeminister
திண்டிவனம் சுற்றுவட்டார பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக, கோட்டிக்குப்பம் மற்றும் எம். புதுப்பாக்கம் கிராமங்களில் மூன்று வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்து சேதமடைந்தன. இதனையடுத்து, 24.10.26 அன்று மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்சர் திரு. வன்னி அரசு அவர்கள், நேரில் ஆய்வு மேற்கொண்டு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசின் சார்பில் நிதியுதவி மற்றும் நிவாரணப் பொருட்களை உடனடியாக வழங்க நடவடிக்கை மேற்கொண்டார்.
மேலும், வீடு இடிந்து தவிப்போருக்கு விரைவில் அரசின் சார்பில் புதிய வீடுகள் கட்டித் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் உறுதியளித்தார்.
@VanniTamizhVCK
#TNGovt #socialjusticeministervanniarasu #officeofsocialjusticeminister
கனமழையின் காரணமாக திண்டிவனம் உழவர் சந்தையில் மழைநீர் தேங்கியதையடுத்து, 24.10.26 அன்று மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்சர் திரு. வன்னி அரசு அவர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டு, உழவர் சந்தையில் மழைநீர் தேங்காத வகையில் நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
@VanniTamizhVCK
#TNGovt #socialjusticeministervanniarasu #officeofsocialjusticeminister
வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக, 24.10.26 அன்று மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்சர் திரு. வன்னி அரசு அவர்களின் தலைமையில் அனைத்துத் துறை சார்ந்த அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
@VanniTamizhVCK
#TNGovt #socialjusticeministervanniarasu #officeofsocialjusticeminister
கனமழையால் மழைநீர் சூழ்ந்த பள்ளியில் ஆய்வு!
கள்ளக்குறிச்சி மாவட்டம் - பொரசக்குறிச்சி கிராமத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், கனமழையின் காரணமாக மழைநீர் தேங்கியது
மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்சரும், கள்ளக்குறிச்சி மாவட்ட பொறுப்பு அமைச்சருமான திரு. வன்னி அரசு அவர்கள், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் திருமதி. J.E. பத்மஜா, மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி. ரா. ஜீவா மற்றும் அதிகாரிகள் உடன் இன்று (25.10.26) பள்ளியில் நேரில் ஆய்வு மேற்கொண்டு, தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், பள்ளிக்கு அருகிலுள்ள ஏரியின் கால்வாயில் நீர் அடைபட்டுள்ளதை பார்வையிட்டு, நீரை முறையாக வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
@VanniTamizhVCK
@collector_kki
@KallakurichiPro
@TNDIPRNEWS
#VanniArasu
#SocialJustice
#Kallakurichi
#TamilNadu
#TNRains
கள்ளக்குறிச்சி மாவட்டம் – விருகாவூர் கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல்!
கள்ளக்குறிச்சி மாவட்டம், விருகாவூர் கிராமத்தில் கனமழையின் காரணமாக சுமார் 15 வீடுகள் சேதமடைந்தன. பல வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததுடன், சில வீடுகளின் சுவர்களும் இடிந்து பாதிப்படைந்தன.
இதுகுறித்து தகவலறிந்து மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்சரும், கள்ளக்குறிச்சி மாவட்ட பொறுப்பு அமைச்சருமான திரு. வன்னி அரசு அவர்கள், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் திருமதி. J.E. பத்மஜா, மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி. ரா. ஜீவா மற்றும் அதிகாரிகள் உடன் இன்று (25.10.26) விருகாவூர் கிராமத்திற்கு நேரில் சென்று, மழையால் பாதிக்கப்பட்ட வீடுகளைப் பார்வையிட்டு, மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.
மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசின் நிவாரண உதவிகளை விரைந்து வழங்கவும், சேதமடைந்த வீடுகளில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தி, தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கவும் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அத்துடன், மழையால் வீடுகள் சேதமடைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு சார்பில் செயல்படுத்தப்படும் வெற்றி வீடு திட்டத்தின் கீழ் வீடுகளைக் கட்டித் தர உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
@VanniTamizhVCK
@collector_kki
@KallakurichiPro
@TNDIPRNEWS
#VanniArasu
#SocialJustice
#Kallakurichi
#TamilNadu
#TNRains
திண்டிவனம் சுற்றுவட்டார பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக, கோட்டிக்குப்பம் மற்றும் எம். புதுப்பாக்கம் கிராமங்களில் மூன்று வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்து சேதமடைந்தன.
இதனை அறிந்த மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்சர் திரு. வன்னி அரசு அவர்கள், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசின் சார்பில் நிதியுதவி மற்றும் நிவாரணப் பொருட்களை உடனடியாக வழங்க நடவடிக்கை மேற்கொண்டார்.
அதன்படி, கோட்டிக்குப்பத்தைச் சேர்ந்த மாலதி – அனந்திராஜ், லலிதா – சுந்தரமூர்த்தி மற்றும் எம். புதுப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கன்னியம்மாள் – முனுசாமி ஆகியோரின் குடும்பங்களுக்கு இன்று (24.10.26) நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.
மேலும், வீடு இடிந்து தவிப்போருக்கு விரைவில் அரசின் சார்பில் புதிய வீடுகள் கட்டித் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த மாண்புமிகு அமைச்சர் அவர்கள், அதற்காக உரிய நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
@VanniTamizhVCK
@DistrictColVpm
#VanniArasu
#SocialJustice
#Tindivanam
#TamilNadu
திண்டிவனம் உழவர் சந்தையில் தேங்கிய மழைநீர் – உடனடி நடவடிக்கை!
கனமழையின் காரணமாக திண்டிவனம் உழவர் சந்தையில் மழைநீர் தேங்கியதால், அங்கு வியாபாரம் செய்து வரும் விவசாயிகளும் பொதுமக்களும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இதுகுறித்து மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்சர் திரு. வன்னி அரசு அவர்களின் கவனத்திற்கு வந்ததும், தேங்கிய மழைநீரை உடனே அகற்ற நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, மாண்புமிகு அமைச்சர் அவர்கள், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் திரு. ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் மற்றும் அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். உழவர் சந்தையில் மழைநீர் தேங்காத வகையில் நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
@VanniTamizhVCK
@DistrictColVpm
@CommrTindivanam
#VanniArasu
#SocialJustice
#Tindivanam
#TamilNadu
மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம்!
திண்டிவனம் நகராட்சியில், வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக, அனைத்துத் துறை சார்ந்த அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று (24.10.26) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்சர் திரு. வன்னி அரசு மற்றும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் திரு. ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் ஆகியோர் கலந்துகொண்டு, மழைக்காலத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்தல், மழைநீர் தேங்குவதைத் தடுத்தல், வடிகால்களைச் சீரமைத்தல் மற்றும் மழையால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்த்தல் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்கினர்.
@VanniTamizhVCK
@DistrictColVpm
@CommrTindivanam
#VanniArasu
#SocialJustice
#Tindivanam
#TamilNadu
திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினரின் இரண்டாவது அலுவலகத்தை 21.10.2026 அன்று மரக்காணத்தில் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் து. ரவிக்குமார் அவர்கள் திறந்துவைத்து சிறப்பித்தார்.
@VanniTamizhVCK
@WriterRavikumar
#TNGovt #socialjusticeministervanniarasu #officeofsocialjusticeminister
சமூக நீதித்துறை விடுதி மாணாக்கருக்கு உணவுக் கட்டணம் (Food Allowance) உயர்த்தப்படுகிறது!
2026-2027-ஆம் ஆண்டிற்கான சமூக நீதித்துறையின் மானியக் கோரிக்கையின் போது மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்சர் திரு. வன்னி அரசு அவர்கள் அறிவிப்பு எண்.1-இல் கீழ்க்கண்ட அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்:
'தரமான, சத்தான உணவு வழங்கும் பொருட்டு விடுதி மாணாக்கருக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர உணவுக் கட்டணம் உயர்த்தப்படும்'
மாண்புமிகு அமைச்சர் அவர்களின் அறிவிப்பினை நடைமுறைப்படுத்தும் விதமாக, சமூக நீதித்துறையின் கீழ் செயல்படும் சமூகநீதி விடுதிகளில் தங்கி கல்விப் பயிலும் மாணாக்கருக்கு வழங்கப்பட்டு வரும் உணவுக் கட்டணத்தை உயர்த்தி 21.10.26 அன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல பள்ளி / கல்லூரி விடுதிகள், உண்டு உறைவிடப்பள்ளிகள், தொண்டு நிறுவனங்களின் கீழ் செயல்படும் பள்ளி விடுதிகளில் தங்கி கல்விப் பயிலும் மாணவ / மாணவியருக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் உணவுக் கட்டணத்தை நபர் ஒருவருக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.1400/-லிருந்து ரூ.1800/-ஆகவும், அதேபோல் கல்லூரி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ / மாணவியரின் உணவுக் கட்டணத்தை நபர் ஒருவருக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.1,500/-லிருந்து ரூ.2000/-ஆகவும் உயர்த்தி வழங்கப்படும். அதற்கு ஏற்ப மாற்றி அமைக்கப்பட்டுள்ள உணவுப் பட்டியலும், மாதாந்திர தனிநபர் நுகர்வு பொருட்களின் அளவு படியும் வழங்கப்படும்.
இத்திட்டமானது ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளி விடுதிகள் (859), தொண்டு நிறுவனங்களால் செயல்படுத்தப்பட்டு வரும் பள்ளி விடுதிகள் (18) மற்றும் கல்லூரி விடுதிகள் (292) என மொத்தம் 1,169 விடுதிகளில் தங்கி பயிலும் மாணாக்கருக்கும், பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகள் (316), பழங்குடியினர் நல பள்ளி விடுதிகள் (38), வனத்துறை பள்ளிகள் (11), தொண்டு நிறுவனங்களால் செயல்படுத்தப்பட்டு வரும் பள்ளி விடுதிகள் (3) மற்றும் கல்லூரி விடுதிகள் (11) என ஆக மொத்தம் 379 பள்ளிகள் / கல்லூரி விடுதிகளில் தங்கி கல்வி பயிலும் மாணாக்கருக்கும் செயல்படுத்தப்படும்.
செய்தி வெளியீடு: சமூக நீதித்துறை, தமிழ்நாடு அரசு - 24.10.26
@CMOTamilnadu
@VanniTamizhVCK
@srkias2012
@ADWDtamilnadu
@TN_Tribal_WD
@tahdco
@TNDIPRNEWS
#VanniArasu
#SocialJustice
#TamilNadu
மாற்றியமைக்கப்பட்ட சமூகநீதி விடுதி உணவுப் பட்டியல் அடிப்படையில் மாணாக்கருக்கு பரிமாறும் அளவு மற்றும் மாதாந்திர தலா பொருள் அளவு
வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, திண்டிவனம் சட்டமன்ற தொகுதி, மரக்காணம் பேரூராட்சிக்கு உட்பட்ட அம்பேத்கர் நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால் கால்வாயை மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்சர் திரு. வன்னி அரசு அவர்கள் 21.10.26 காலை ஆய்வு செய்து, மழைநீர் கால்வாயில் உள்ள அடைப்புகளை உடனே நீக்கி சீரமைக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இதனையடுத்து கால்வாயில் இருந்த அடைப்புகளை சரி செய்யும் பணியில் பேரூராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதை மாண்புமிகு அமைச்சர் அவர்கள் பார்வையிட்டார்.
@VanniTamizhVCK
#TNGovt #socialjusticeministervanniarasu #officeofsocialjusticeminister




















































