Actor Ramarajan (@Raamaraajan) header
Actor Ramarajan (@Raamaraajan) profile picture

Actor/ Director/ writer/ producer/ Distributor/ EX. Member of parliament lok sabha.

Joined December 2025
Photo by Actor Ramarajan (@Raamaraajan)Photo by Actor Ramarajan (@Raamaraajan)Photo by Actor Ramarajan (@Raamaraajan)Photo by Actor Ramarajan (@Raamaraajan)Photo by Actor Ramarajan (@Raamaraajan)Photo by Actor Ramarajan (@Raamaraajan)Photo by Actor Ramarajan (@Raamaraajan)Photo by Actor Ramarajan (@Raamaraajan)Photo by Actor Ramarajan (@Raamaraajan)Photo by Actor Ramarajan (@Raamaraajan)
#AyudhaPooja #saraswathi அனைவருக்கும் எனது இனிய ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி நல்வாழ்த்துகள்! தங்களது தொழில் வளர்ச்சி பெற்று, கல்வி இனிதே தொடங்கப்பெற்று, செல்வம் உழைப்பினால் உயரப்பெற்று மென்மேலும் வளம்பெருகி வாழ்வாங்கு வாழ்ந்திட மகிழ்வான வாழ்த்துக்கள்!
21
29
1
248
2,384
#Deva தேனிசை தென்றல் தேவாவின் மறைவுக்கு நடிகரும் இயக்குநரும் முன்னாள் எம்பி யுமான ராமராஜன் அவர்களின் இரங்கல் அறிக்கை :- தேவா சார் இறந்து விட்டார் என்ற செய்தி பேரிடியாகவும் பெருந்துயரமாகவும் இது பொய்யான செய்தியென வரக்கூடாதா? என மனம் ஏங்குகிறது. நான் முதல் படத்திற்கு வாய்ப்பளித்தேன் என்பதை ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மேடையிலும் சொல்லி நன்றி கூறி வந்த மிகச்சிறந்த பண்பாளர் பாசமிகு தேவா சார் அவர்கள், அவரின் இசை பிடிப்புனாலும் அதில் ஆழ்ந்து கற்பிப்புனாலும் தொடர்ந்து கணக்கிலங்கடாத படங்களுக்கு இசையமைத்து ஒரு நல்ல இசையமைப்பாளராகவும் நல்ல மனிதராகவும், சிறந்த ஆன்மீகவாதியாகவும் இன்றளவும் வலம் வந்த மிகச்சிறந்த திறமைசாலி தேவா அவர்கள், புரட்சித் தலைவி அம்மாவின் ஆட்சிக்காலத்தில் "இயல் இசை நாடக மன்ற" தலைவராகவும் கழக கொள்கை பாடல்களை உருவாக்கியும் வந்த அம்மா மீது மாறா பற்றுக்கொண்டவர் தேவா சார் அவர்கள், அவரை இழந்து வாடும் அவர் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அன்னாரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்....
11
105
925
7,487
இன்று எனது பிறந்த நாளினை நான் பிரமிக்கும் நாளாக உணரும்படியான எண்ணற்ற மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட நற்பணிகளை செய்த தமிழகம் முழுவதும் உள்ள என் ரசிகர் மன்ற நிர்வாகிகள், சகோதரர்கள் அனைவருக்கும் என் உள்ளம் நிறைந்த நன்றி! வாழ்த்துக்கள் தெரிவித்தும் பிரார்த்தனைகள் செய்தும் உங்கள் அன்பின் வெளிப்பாட்டினை நான் அன்பனாய் அறிவேன். பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறிய என் நெஞ்சில் நிறைந்த திரைத்துறை சார்ந்த நண்பர்களுக்கும் பெருமதிப்புமிகு, பத்திரிகை தொலைக்காட்சி ஊடக மீடியாத்துறை நண்பர்களுக்கும் , யூடியூப்பர்ஸ், சினிமா சார்ந்த சேனல் கிரியேட்டர்ஸ்களுக்கும், என் வளர்ச்சியில் அன்றும் இன்றும் பெரும் பங்காற்றிவரும் பிஆர்ஓ க்கள், என் உறவினர்கள், நண்பர்கள்,மற்றும் அன்பு பாராட்டி வரும் அனைத்துக்கட்சி பிரமுகர்கள், நட்புள்ளம் கொண்ட பல்வேறு சங்க தலைவர்கள், அமைப்பு சார்ந்த தோழர்கள், அனைத்து நடிகர்களின் ரசிக பண்பாளர்கள், அன்று முதல் இன்று வரை ஆதரவளித்து வரும் புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி அம்மாவின் உண்மை விசுவாசிகள், உங்கள் அனைவருக்கும் இந்த ராமராஜனின் மனமார்ந்த நன்றி! உங்கள் அனைவரின் வாழ்த்தையும் அன்பையும் என் உதவியாளர் நாகராஜன் மூலம் அனைத்தையும் அறியப்பெற்றேன். விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருக்கும் "கடவுள் தந்த பரிசு" உங்கள் அனைவருக்கும் பிடிக்கக் கூடிய அதே வேளையில் எனக்கு மிக முக்கியமான ஒரு படமாக நிச்சயம் இது இருக்கும். எல்லோரும் இன்றளவும் கொண்டாடி வரும் மாபெரும் சாதனை படைத்த "கரகாட்டக்காரன்" மறுவெளியீட்டிற்கான ஏற்பாட்டு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. பிறகு ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து தரமான கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க தயாராக இருக்கிறேன் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவிப்பதோடு, மீண்டும் ஒரு முறை உங்கள் அனைவரின் வாழ்த்துக்களுக்கும், ஆசிக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியினை என் இதய மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி! நன்றி! நன்றி! - அன்பன் ராமராஜன் Ex. MP நடிகர் - இயக்குநர்
55
44
4
583
10,988
இந்தியராய் பிறந்திட என்ன தவம் செய்தோமோ...? பெருமை... பேரானந்தம்.... #SmitMachchhar ராயல் சல்யூட் சார்....
3
5
24
1,088
#Sivaji Ganesan's 99th Birthday பூலோகம் கண்ட அதிசய நட்சத்திரம் எங்கள் ஐயா "சிவாஜி கணேசன்" அவர்களுக்கு இன்று 99 வது பிறந்த நாள்! நடிப்புலகின் இலக்கணமாய், கதாபாத்திரங்களின் பல்கலைக்கழகமாய், அர்ப்பணிப்பு என்பதன் அடையாளமாய் திரையுலகில் விளங்கி கண்டங்கள் வியந்த கலைஞனாய் காலங்கள் கடந்தும் கலையாத புகழ், விஞ்ஞானங்கள் வளர்ந்தும் வியக்கத்தக்க செயல் ஐயாவின் நடிப்பு! இப்படி ஒரு நடிகன் இனி எந்த நூற்றாண்டிலும் பிறக்கப்போவதில்லை என்ற மாறா பெருமையை தமிழ்நாட்டிற்கு தந்த அன்பு திலகமே! விருதுகளின் விருதே! நீங்கள் இருந்த சினிமாவில் நானும் இருக்கிறேன் என்பதே எனக்கு பெரும் கௌரவம் ஐயா.... இந்நாள் அல்ல, எந்நாளும் வணங்கி போற்றுகிறேன்... நடிகர் ராமராஜன்
4
19
111
1,713
இசைக்கெனவே தன்னை அர்ப்பணித்த இசையின் இசை நம் இசைஞானி என் அண்ணனின் 50 ஆண்டு கால இசை சாதனையை பாராட்டி அதனை கொண்டாடும் விதமாக ஆஸ்திரேலியா நாடாளுமன்றம் அவருக்கு தபால் தலை வெளியிடப்பட்டது எல்லையற்ற மகிழ்ச்சியை தருகிறது. இந்தியராக தமிழராக நாம் தலைநிமிர்ந்து நம் நாட்டுக்காரர், நம் மண்ணுக்காரர் என போற்ற வேண்டிய அவசியமான காலகட்டமிது. வயது ஒரு பொருட்டே அல்ல, இசையே மூச்சென சுவாசிக்கும் இசைஞானி உலகிலுள்ள எல்லா புகழுக்கும் உரித்தானவர் தான் என்பதில் எவருக்கும் ஐயமில்லை. "கடவுள் தந்த பரிசு" எங்களுக்கு நீங்கள்! அன்புத்தம்பி - ராமராஜன் #Ilayaraaja
8
78
2
573
5,350
அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்
25
59
984
7,184
தமிழ் இலக்கிய பேச்சை தரணியெங்கும் கொண்டுச்சேர்த்த மூத்த தமிழறிஞர்,பரணி போற்றும் பேச்சாற்றல் கொண்ட பல்சுவை வித்தகரான ஐயாவின் மறைவு ஆறுதல் அடைய முடியாதது. அவரின் மறைவுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்..... ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். #SolomonPappaiah
3
10
106
1,701
வான் மழை பூமி வந்தடைந்து வாழ்வுக்கு வித்திட்டது கடவுள் தந்த பரிசு தாயின் இரத்தம் பாலாகி தனையர்கள் உண்டு உயிர் வாழ்வது கடவுள் தந்த பரிசு விதைத்தது முளைத்தும் முளைத்தது அன்னமாகி அரிசியானது கடவுள் தந்த பரிசு காற்றின் வீச்சும் கதிரவனின் பேச்சும் களநிலை மாறுவது கடவுள் தந்த பரிசு கனிகள் பல சுவைகளும் கலர்மயமான மலர்களும் விதவிதமான மணங்கள் ஆனது கடவுள் தந்த பரிசு இசைஞானியின் இசையமைப்பு இறைவனே பெரும்திகைப்பு இதுவரை இசைத்ததே செவிகள் கண்டது பிரமிப்பு எங்கள் ராமராஜனுக்கு இசை தந்த இதுவரை அத்தனையும் அரிய பரிசு 25 வது படமாய் இவரிருவர் இணையும் சங்கமமே "கடவுள் தந்த பரிசு" வெற்றிமலர்கள் தூவி வணங்குகிறேன் -N. நாகராஜன் மக்கள் நாயகன் ராமராஜன் உதவியாளர்
3
13
79
2,034
இசைபிரம்மன் அண்ணன் @ilaiyaraaja எனக்கு இசையமைக்கும் 25 ஆவது படம் "கடவுள் தந்த பரிசு" இறைவனின் அருளோடும், இசைஞானியின் ஆசியோடும், உங்களனைவரின் நல்வாழ்த்துக்களோடும் விரைவில் படப்பிடிப்பு தொடக்கம்....
36
118
9
1,376
35,713
அனைவருக்கும் வாழ்த்துக்கள் #HappyJanmashtami
20
67
1
1,113
13,528
நபிகளாரின் வழிகாட்டு நெறியில் நல்லதையே போதித்து நாம் அனைவரும் சகோதர - சகோதரிகளாய் என்றென்றும் வளர்ச்சி, மகிழ்ச்சி கொண்டு நெகிழ்ச்சியோடு வாழ்ந்திட மிலாடி நபி வாழ்த்துகளை பகிர்ந்து பெருவின்பம் கொள்கிறேன்.
3
1
19
1,085
தங்கள் அனைவரின் வாழ்வும் வளம்பெற்று பெருவாழ்வு வாழ்ந்திட எனது வாழ்த்துக்கள்!
6
22
2
389
5,655
AUG 2026 USA CONSERT TOUR நிகழ்ச்சியில் பங்குகொள்ள HOUSTON நகருக்கு சென்றுள்ள "இசை மாமேதை" என் அண்ணனை சந்தித்து ஆசிபெற்று மகிழ்ந்த என் மகன் அருண்-மருமகள் - பேரன்கள்...
26
81
6
1,134
98,428
#August15 அனைவருக்கும் 80 வது சுதந்திர தின வாழ்த்துகள்! தேசத்தினை தலைவணங்கி இச்சுவாசக்காற்றை பெற்றுத்தந்த நம் முன்னோர் பெரியோர்களை எண்ணி மதித்திடுவோம் நாடு முன்னேற்றம் பெற நாம் ஒவ்வொருவரும் நம் கடமையை சரிவர செய்து குடிமகனாய் நடந்திடுவோம். ஜெய்ஹிந்த்!!!
4
54
4,869
இந்தியன் என்பதில் பெருமிதமாய்..... #IndependenceDay
2
11
201
5,875
#Kamarajar124 தமிழகத்தின் அடிப்படை வளர்ச்சியில் மிக முக்கிய பங்காற்றிய நாடு போற்றும் உத்தம அரசியல் புனிதராக வாழ்ந்து மறைந்தும் வாழும் கர்மவீரர் ஐயாவின் 124 வது பிறந்த நாளில் அவர் ஆற்றிய திட்டங்களை நினைவுகொண்டு போற்றி வணங்குவதில் பெருமை கொள்கிறேன்.
2
6
54
3,795