Pinned Tweet
Entertainment-க்கு நாங்க எங்கே போவோம்.?
இது ரொம்ப தப்பு ப்ரோ..
@TVKVijayHQ #TVKVijay
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு:
தலைமைக் கழகத்தின் அனுமதியின்றி, கழக மாநில மற்றும் மாவட்டக் கழக நிர்வாகிகள், தோழர்கள் யாரும் எவ்வித ஊடக விவாதங்களிலும் பங்கேற்கக் கூடாது.
பொதுவெளியில் நடத்தப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விவாதங்கள், நேரடிப் பேட்டிகள் மற்றும் யூடியூப் (YouTube) உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கு நேர்காணல் வழங்குவது உள்ளிட்டவை குறித்து, தலைமைக் கழகத்தின் முன்அனுமதி கண்டிப்பாகப் பெற வேண்டும். முன்அனுமதி பெறாமல், எந்த விதமான மாநில அல்லது தேசிய ஊடகத் தளங்களிலும், விவாதங்களிலும் பங்கேற்பதோ அல்லது நேர்காணல் வழங்குவதோ கூடாது என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இப்படிக்கு
என்.ஆனந்த்,
பொதுச் செயலாளர்,
தலைமை நிலையச் செயலகம்
(Party Headquarters Secretariat),
தமிழக வெற்றிக் கழகம்
Satire Talks retweeted
தமிழ்நாட்டில் விளையாட்டை மாபெரும் மக்கள் இயக்கமாக்கிட வேண்டும் என்று ‘முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை’ நம் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் மிக பிரம்மாண்டமாக நடத்தி இருந்தோம்.
Untapped Sports Talents-ஐ கண்டறியும் விதமாக நடத்தப்பட்ட இந்தப் போட்டிகளின் மூலமாக, எண்ணற்ற விளையாட்டு வீரர்கள் - வீராங்கனைகள் அடையாளம் காணப்பட்டனர்.
நம் திராவிட மாடல் ஆட்சியிட்ட அடித்தளத்தில் இந்தாண்டு நடத்தப்பட்டுள்ள இப்போட்டிகளில், வெற்றி பெற்ற வீரர்களுக்கு வாழ்த்துகளையும் - பங்கேற்றோருக்கு என் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
Water Sports வீரர்களை உருவாக்கும் வகையில் ராமநாதபுரம் மாவட்டம் பிரப்பன்வலசையில், நம் திராவிட மாடல் ஆட்சியில் ரூ.42.90 கோடி மதிப்பில் Olympic Water Sports Academy அமைப்பதற்காக கடந்தாண்டு ஜனவரி மாதமும், சேலத்தில் ரூ.20 கோடி மதிப்பில் Multilevel Sports Complex அமைப்பதற்காக 2024-லும் நம் தலைவர் அவர்களின் திராவிட மாடல் ஆட்சியில் அடிக்கல் நாட்டினோம்.
அந்த இரண்டு திட்டங்களுக்குமான பெரும்பாலான பணிகள் நம் திராவிட மாடல் ஆட்சிக்காலத்திலேயே நிறைவுற்ற நிலையில், அந்த விளையாட்டுக் கட்டமைப்புகளை இன்றைய முதலமைச்சர் திறந்து வைத்திருக்கிறார்.
நம் தலைவர் தலைமையிலான திராவிட மாடல் அரசு கொண்டு வந்த இந்தத் திட்டங்களை திறந்து வைத்து Sticker ஒட்டிக்கொள்வதோடு நிற்காமல், பல ஆயிரம் விளையாட்டு வீரர் - வீராங்கனையர் உருவாக்கிடும் வகையில் இம்மையங்களை இந்த Dummy அரசு பராமரித்திட வேண்டும்.
குறிப்பாக, சேலம் Multi-level sports Complex-ல் ரூ.11.40 கோடி மதிப்பில் புதிய Synthetic Athletic Track அமைக்கவும் கடந்த டிசம்பர் மாதம் நம் தலைவர் அவர்களின் திராவிட மாடல் ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டது.
இப்படி நம் திராவிட மாடல் ஆட்சியில் விளையாட்டுக்கென்று நாம் கொண்டு வந்த உள்கட்டமைப்புத் திட்டப்பணிகளை இந்த ஆட்சியாளர்கள் முறையாக செய்து முடித்தாலே, அடுத்து வரும் ஆண்டுகள் முழுவதும் அவற்றை திறந்து வைத்துக் கொண்டிருக்கலாம்.
நம் திராவிட மாடல் ஆட்சியில் அறிவிக்கப்பட்ட Global Sports City திட்டத்தை ரத்து செய்த இந்த ஆட்சியாளர்கள், Olympic City அமைக்கப் போவதாக சொன்னார்கள். அதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள பணிகள் என்ன? அந்தத் திட்டத்தின் நிலை என்ன?
வரலாற்றில் இல்லாத வகையில் கடந்த பிப்ரவரி மாதம், 3% Sports Quota-வின் கீழ், நம் திராவிட மாடல் அரசு சார்பில் நம் தலைவர் அவர்கள் ஒரே நாளில் 178 வீரர் - வீராங்கனையருக்கு அரசு வேலைவாய்ப்பை வழங்கினார்கள். 3% இட ஒதுக்கீட்டின் கீழ் மொத்தமாக 300 வீரர்களுக்கு அரசுப்பணிகள் வழங்கிய அரசு, நம் தலைவர் தலைமையிலான திராவிட மாடல் அரசு. எனவே, இப்பணியில் சுணக்கம் காட்டாமல் இந்த அரசு தொடர்ந்திட வேண்டும்.
முக்கியமாக, முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிக்கான நிதி ஒதுக்கீட்டை முதல்முறையாக ஏதோ இந்த மூடர் கூட்ட ஆட்சியில் தான் அதிகபட்சமாக ரூ.83 கோடி என ஒதுக்கியது போல் மீண்டும் ஒரு பொய்யை சொல்லி இருக்கிறார்கள். ஆனால், கடந்தாண்டே நம் திராவிட மாடல் ஆட்சியில் நம்முடைய தலைவர் அவர்கள், ரூ.83.37 கோடி ரூபாயை CM Trophy Games-க்காக ஒதுக்கி இருந்தார்கள்.
எனவே, இந்த Circus கூட்ட ஆட்சியாளர்கள், பொய்பேசி பெருமைத் தேடுவதை தவிர்த்து, வரும் காலங்களில், போட்டிக்கான நிதி ஒதுக்கீட்டையும் - பரிசுத்தொகையையும் அதிகப்படுத்தி நம் வீரர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.
#DravidianModel
Satire Talks retweeted
Ok where is the investment of MOUs u signed 2 months before?
I feel like do we really have industrial minister for Tamilnadu?
ஜெயலலிதா அம்மாவை போல் எங்களை முடக்க பார்க்கிறார்கள்.. அவரை போல் நாங்களும் வெகுண்டெழுந்து வருவோம் - அமைச்சர் கீர்த்தனா நம்பிக்கை
#Virudhunagar | #TVK | #MinisterKeerthana | #PolimerNews
Satire Talks retweeted
5 ஆயிரம் கோடி ரூபாய் மக்கள் பணத்தைக் கொள்ளை அடித்த BLM பிரேம்குமாருக்கும் தூய சக்தி முதலமைச்சருக்கும் என்ன தொடர்பு?
தனியார் கூட்டுறவு நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி மக்கள் முதலீடு செய்த பணத்தை தன்னுடைய சொந்தக் கணக்கிற்கு வரவு வைத்துக் கொண்டதாக பிரேம்குமார் என்பவரை கேரள காவல்துறை கைது செய்துள்ளது.
இந்த பிரேம்குமார் கடந்த ஜூலை மாதம் தான் இங்கிருக்கும் Dummy CM-ஐ சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார். மேலும், த.வெ.க-வின் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பிரேம்குமாருக்கு சொந்தமான பேருந்துகள் தான் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.
முக்கியமாக சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து, நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்பாக ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பிரேம்குமாரின் பேருந்துகளிலேயே அழைத்து வரப்பட்டனர்.
பிரேம்குமாருக்கும் முதலமைச்சருக்கும் இருக்கும் நெருக்கத்தைப் பார்க்கும் போது, அந்த நபருக்கும் - ஆளுங்கட்சிக்கும் இடையே இருக்கும் தொடர்பு என்ன?
அப்படி எந்த “விவகாரமான”தொடர்பும் இல்லை எனில், ஏன் அவசர அவசரமாக, முதலமைச்சரும் - கைது செய்யப்பட்டுள்ள நபரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தமிழ்நாடு காவல்துறை உதவியோடு சமூக வலைத்தள பக்கத்தில் இருந்து அகற்ற வேண்டும்?
MLA-க்களை Purchase செய்வது, Sofa அனுப்புவது, இடைத்தேர்தல்களில் வாரி இறைத்தது என்று த.வெ.க.வின் முறைகேடான அரசியல் செயல்பாடுகளுக்கும் இவருக்கும் தொடர்பு இருக்கிறதா?
இதையெல்லாம் CBI, SFIO, ED போன்ற ஒன்றிய அரசின் தன்னாட்சி அதிகாரம் கொண்ட விசாரணை அமைப்புகள் தலையிட்டு விசாரிக்க வேண்டும் - கைதான பிரேம்குமாருக்கும், த.வெ.க தலைமை முதல் முக்கிய நிர்வாகிகள் வரைக்கும் இருக்கும் தொடர்பை கண்டறிய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
Satire Talks retweeted
சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் மாற்றம்
துறை அமைச்சர் மீது நடவடிக்கை இல்லையா.?
Satire Talks retweeted
போலிஸ்கார் @tnpoliceoffl @COPTBM ஒரு சந்தேகம்!
யாரையாவது கைது பண்ணி கூட்டிட்டு போறப்ப இதில் சொன்ன மாதிரி ஆளும் கட்சிக்காரங்க தொடர்பு கொண்டா, வண்டிய நடுவில நிறுத்திட்டு காவலர்கள் என்ன செய்யலாம்னு உயர் அதிகாரிகளுக்கு போன் போட்டு கேட்டுட்டு இருப்பாங்களா?
இது காவல்துறையின் நடவடிக்கையில் தலையிடுவதா வராதா?!🧐
MIDS இணைப்பேராசிரியர் கலையரசன் அவர்களின் புகைப்படத்தை போலி வலைதள கணக்கின் மூலம் பயன்படுத்தி ஆபாசமான கமெண்ட்கள் போடப்பட்டிருக்கும் செயல் மிகுந்த கண்டனத்திற்குரியது.
இந்த போலிக்கணக்கு மூலமான ஆபாச கமெண்ட் தொடர்பாக காவல்துறை விசாரணைக்கு வந்திருக்கிறார்கள் என்று
28.10.2026 அன்று காலை 5.56க்கு கலையரசன் அவர்கள் எனக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்தார்.
உடனடியாக, அவரை அழைத்துச் செல்ல வந்திருந்த காவலர்களிடம் முனைவர் கலையரசன் அவர்களை 10 ஆண்டுகாலமாக நன்கு அறிவேன் என்றும், சர்வதேச பல்கலைக்கழகங்களில் அவர் ஆற்றியிருக்கும் பங்களிப்புகள் குறித்தும், தமிழ்நாட்டுக்கான அறிவார்ந்த தளத்தில் அவர் ஆற்றிவரும் பங்களிப்புகள் குறித்தும் முழுமையாக எடுத்துக்கூறி நிச்சயமாக அது போலிக்கணக்காகத்தான் இருக்கும் என்றும், தேவைப்பட்டால் உடனடியாக நான் கிளம்பி வருவதாகவும் தெரிவித்தேன். உடனே அவரை காவல்நிலையம் அழைத்துச் செல்லும் நடவடிக்கையை காவலர்கள் நிறுத்திவிட்டார்கள். ஆனால், காவலர்கள் இறுதி முடிவெடுக்கும் இடத்தில் இல்லாததால் காவல் ஆய்வாளர் அவர்களிடம் இதுதொடர்பாக கூடுதல் தகவல் தெரிவிக்க அழைத்தபோது அவர் அழைப்புகளை எடுக்கவில்லை. இதனால், முனைவர் கலையரசன் சாலையில் காத்திருக்கும் தர்மசங்கடமான சூழல் ஏற்பட்டுவிட்டது.
உடனடியாக, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அண்ணன் @imrajmohan அவர்களுக்கு அழைத்து தகவலை பரிமாறி, அவரும் முனைவர் கலையரசன் அவர்களிடம் மிகவும் சங்கடமான இச்சூழ்நிலைக்கு வருத்தம் தெரிவித்தார்.
எனவே, விலைவாசி உயர்வை குறித்து கலையரசன் அவர்கள் பேசியதற்காக கைது என்பதிலோ, அரசு அச்சுறுத்தல் என்பதிலோ, பொருளாதார அறிஞர் பழிவாங்கல் என்பதிலோ துளியும் உண்மை கிடையாது.
உண்மையில், கலையரசன் அவர்கள் திமுக ஆட்சியில் சந்தித்த நெருக்கடிகளும், கொடுமைகளும் அதிகம்.
அவர் 'திராவிட மாடல்' புத்தகத்தை எழுதுவதற்கான ஆய்வுப்பணியில் இருந்த காலத்திலிருந்து நான் அவரை நன்றிவேன். அதேகாலகட்டத்தில் தமிழ் ஊடக உலகில் முதன்முதலாக 'திராவிட மாதிரி வளர்ச்சி' என்ற ஆவணப்படத்தொடர் நிகழ்ச்சி தயாரிப்பில் நான் ஈடுபட்டிருந்ததால், அப்புத்தகம் வெளிவரும் முன்பிருந்தே, தமிழ்நாட்டின் சமூகப்பொருளாதார வளர்ச்சியின் உண்மையான வரலாற்றை அறிந்துகொள்ளும் ஒத்தக்கருத்துச் சிந்தனை பகிர்வு எனக்கு அவருடன் இருந்துள்ளது.
எந்த குடும்பப்பின்புலமும் இல்லாத, தன் அறிவுத்திறனால் மட்டுமே உயர்ந்த முனைவர்.கலையரசனின் அபாரமான ஆய்வுத்திறமையால், விஜயபாஸ்கர் அவர்களுடன் இணைந்து உருவாக்கப்பட்ட 'திராவிட மாடல்' என்கிற புத்தகம் - கருத்தாக்கமும் திமுக ஆட்சியில் கலையரசன் கண்ணுக்கு முன்னால் அப்பட்டமாக திருடப்பட்டது. அவருடைய அறிவும், உழைப்பும் சுரண்டப்பட்டது.
இதுதொடர்பாக திமுக ஆட்சிக்காலத்தில் மிகுந்த மன உளைச்சலில் இருந்த கலையரசன் அவர்கள் 'திராவிட மாடல்' புத்தகத்தை பொதுச்சாலையில் வைத்து கொளுத்தப்போகிறேன் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு, எனக்கு உட்பட பலருக்கும் குறுந்தகவல் அனுப்பியிருந்தார். ஊடக உலகம் இதை நன்கறியும்.
தவெக ஆட்சி அமைந்த பிறகும் அவரை நான் 3 முறை சந்தித்து விரிவாக பேசியுள்ளேன். தேர்ந்த பொருளியல் கல்வியாளரான முனைவர் கலையரசனுக்கு 2026 தேர்தலில் தமிழ்நாட்டில் நடந்தது உலகம் முழுவதும் நடைபெற்றுவரும் Gen Z கிளர்ச்சியின் தமிழ் ஜனநாயக உள்வாங்கல் என்பதில் ஆழமான சமூக பொருளியல் அரசியல் புரிதலும், நுட்பமும் உண்டு.
எனவே, அவர் தவெக ஆட்சிக்கு எதிரான மனநிலையில் கருத்துக்களை பகிர்ந்துகொண்டார் என்பதிலோ, தவெக ஆட்சிக்கு எதிரான மனநிலையில் அரசை விமர்சித்தார் என்பதிலேயே முதலில் எந்த அடிப்படையும் கிடையாது.
விலைவாசி ஏற்றம் குறித்து அவரது அக்கறை, அறிவார்ந்த பங்களிப்புகளால் தமிழ்நாட்டை வளப்படுத்த வேண்டும் என்கிற அவரது உத்வேகத்தின் ஒருபகுதி. அவ்வளவே. அதை வெற்றிக்கழக அரசு நன்கு உணர்ந்துள்ளது.
என்றாலும் காவல்துறை அவரிடம் நடந்துகொண்ட விதத்தால் சான்றோண்மைமிக்க ஒரு முனைவருக்கு ஏற்பட்ட வருத்தம் நிச்சயம் புரிந்துகொள்ளத்தக்கது. அதற்காக மீண்டும் ஒருமுறை அவரிடம் அனைவரின் சார்பாகவும் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறோம். கலையரசன் அவர்கள் டிஜிபி அவர்களுக்கு எழுதியிருக்கும் கடிதம் முழுக்க முழுக்க அவருடைய தனிமனித உரிமை சார்ந்தது.
அது அரசுக்கு எதிரானது அல்ல.
வெற்றிக்கழக அரசு அவரது புகாருக்கு ஆதரவாக உள்ளது. அவருடைய உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து, அந்தப்புகாரின் மீது தீவிரமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் அரசும், கட்சியும் பொறுப்புகொண்டிருக்கிறது.
1/2
Satire Talks retweeted
இந்த பாசிசப் போக்கை உடனடியாகக் கைவிடுங்கள்…
பேராசிரியர் கலைரசன் கைது போன்ற நடவடிக்கைகளில் நேரத்தையும் மக்கள் வரிப்பணத்தையும் வீணடிக்காமல், தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் குற்றச் சம்பவங்களைத் தடுத்து, குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, காணாமல் போகும் குழந்தைகளை மீட்பதில் கவனம் செலுத்துங்கள்… #tvkrss
Satire Talks retweeted
சாத்தான்குளத்தில் படுகொலை செய்யப்பட்ட மேரி விஜிலா அவர்களின் கணவர் முத்துக் கிருஷ்ணன் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரும் இன்று மரணமடைந்திருக்கிறார்.
பாதுகாப்பைத்தான் ஒழுங்காக வழங்க முடியவில்லை என்றால் மருத்துவ சிகிச்சையைக் கூட இந்த அரசால் முறையாக வழங்க முடியாதா? தூத்துக்குடியில் ஒரு வாரத்தில் இது 8-வது கொலை; என்ன சொன்னாலும் மக்களின் உயிரைப் பற்றி கவலையில்லை எனச் செயல்படும் ஒருவரிடம் தமிழ்நாடு சிக்கிச் சீரழிந்து கொண்டிருக்கிறது.
சிகிச்சையில் இருக்கும் சிறுவனுக்காவது உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவதை அரசு உறுதி செய்யவேண்டும்.
Satire Talks retweeted
கழக முதன்மைச் செயலாளர் திரு. @KN_NEHRU அவர்களது இல்லத்தில் மீண்டும் சோதனை என்ற பெயரில் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது தவெக அரசு.
நிர்வாகத் தோல்வியால் எழுந்துள்ள மக்கள் கோபத்தைத் திசைதிருப்பவும், இடைத்தேர்தல் தோல்வி பயத்திலும் சோதனை, கைது என நாடகமாடுகிறது தவெக அரசு.
இந்தப் பூச்சாண்டிக்கெல்லாம் கழகம் அஞ்சாது!
Satire Talks retweeted
தொடர்ந்து தவெக நிர்வாகிகள் மீது எழும் குற்றச்சாட்டுகளில் சட்டப்படி விரைந்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதில் வேகத்தை காட்டாத "பஞ்ச் பண்ணையார்" விலைவாசி உயர்வைக் கேள்வி கேட்கும் பொருளாதார நிபுணரிடம் காட்டுவது ஏன்?
அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தால் சாமானிய மக்கள் தங்கள் குடும்பத்தை நடத்தவே திணறிக் கொண்டிருக்கிறார்கள். இந்தச் சூழலில், விலைவாசி உயர்வு குறித்துக் கேள்வி எழுப்பிய பொருளாதார நிபுணர் பேராசிரியர் கலையரசனை அதிகாலையில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற சம்பவம் கடும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
மக்களின் பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டுவது ஜனநாயக உரிமை! கருத்துக்களை கூறுவோர் மீது அச்சுறுத்துவதாகத் தோன்றும் நடவடிக்கைகள் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையையே சிதைக்கும்.
விலைவாசியைக் கட்டுப்படுத்த வேண்டிய அரசு, விலைவாசியைப் பற்றிப் பேசுபவர்களைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறதா என்ற கேள்வி இன்று எழுகிறது!
ஆட்சி அதிகாரம் என்பது மக்களுக்குச் சேவை செய்யவே விமர்சனங்களை ஒடுக்குவதற்கல்ல!
டம்மி முதல்வர் விஜய் அவர்களே! மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்குப் பதில் சொல்லுங்கள்!
#Dummy_CM




















