Reporter Ramji (@TNNEWSLIVE_) header
Reporter Ramji (@TNNEWSLIVE_) profile picture

Journalist | ✍️

Joined June 2014
Photo by Reporter Ramji (@TNNEWSLIVE_)Photo by Reporter Ramji (@TNNEWSLIVE_)Photo by Reporter Ramji (@TNNEWSLIVE_)Photo by Reporter Ramji (@TNNEWSLIVE_)Photo by Reporter Ramji (@TNNEWSLIVE_)Photo by Reporter Ramji (@TNNEWSLIVE_)Photo by Reporter Ramji (@TNNEWSLIVE_)Photo by Reporter Ramji (@TNNEWSLIVE_)Photo by Reporter Ramji (@TNNEWSLIVE_)Photo by Reporter Ramji (@TNNEWSLIVE_)
ராட்வீலர் நாய்க் கடியால் பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் முத்து ரூ. 10 லட்சம் இழப்பீடு கோரிய வழக்கு தமிழக அரசு, சென்னை மாநகராட்சி, நாய் உரிமையாளர் உள்ளிட்டோர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு நீதிபதி என்.செந்தில்குமார் தடை செய்யப்பட்ட நாய்கள், செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படுகிறதா என்பதை, மாநில அரசு அதிகாரிகள் முறையான கண்காணிக்கும் கடமையிலிருந்து தவறியுள்ளதால், பாதிக்கப்பட்டுள்ளேன் - மனு
4
715
முடி வழக்கு சிறைக்கைதி முடி வளர்க்கும் விவகாரத்தை கூடவா நீதிமன்றத்துக்கு கொண்டு வருவீர்கள்?? - சென்னை உயர் நீதிமன்றம் கைதி சுதர்சன் தலைமுடி வளர்க்க தடைவிதித்து எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என சிறைத்துறை தரப்பில் விளக்கம் திருச்செந்தூர் முருகன் கோயிலில் முடி காணிக்கைச் செலுத்துவதற்காக கணவர் சுதர்சனுக்கு அனுமதி வழங்கக் கோரி மனைவி பிரியதர்ஷினி வழக்கு தலைமுடி, மீசை, தாடி எடுக்காமல் வளர்த்து வந்த நிலையில், சிறைத்துறை அதிகாரிகள் அனுமதி மறுப்பு - மனு வழக்கை முடித்துவைத்து நீதிபதி வி.லட்சுமிநாராயணன் உத்தரவு
3
909
தமிழக அரசுக்கு ரூ.5 லட்சம் அபராதம் - சென்னை உயர்நீதிமன்றம் தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்வதற்கு ஏற்பட்ட காலதாமதத்திற்கு கூறும் காரணங்கள் நீதித்துறையை கேலி செய்யும் வகையில் உள்ளதாக கண்டித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம் பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2023 நவம்பர் 29ம் தேதி ஒரு பிறப்பிக்கப்பட்ட து இந்த உத்தரவை எதிர்த்து கள்ளக்குறிச்சி தலைமை கல்வி அதிகாரி 809 நாட்கள் கழித்து உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்தார் நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், இ.மனோகரன் ஆகியோர் அடங்கிய அமர்வு கால தாமதத்திற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட தலைமை கல்வி அதிகாரி கூறிய காரணங்கள்: 2023 நவம்பரில் அரையாண்டு தேர்வு நடந்ததால் மேல் முறையீடு செய்ய நேரம் கிடைக்கவில்லை. 2024ல் புத்தாண்டு மற்றும் பொங்கல் விடுமுறையால் தாமதம் ஏற்பட்டது. 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ெசயல்முறை தேர்வுகள், தொடர்ந்து பொது தேர்வு நடத்தப்பட்டது. ஜூன் ஜூலையில் கணக்கு தணிக்கை, ஆகஸ்டில் டாக்டர் ராதாகிருஷ்ணன் சிறந்த ஆசிரியர் விருதுக்கான ஆசிரியர்கள் தேர்வு, 2024 மார்ச்சில் நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு, அதன் பிறகு தேர்தல் பணிக்காக ஆசிரியர்களுக்கு பயிற்சி, பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தம், 2025ல் புத்தாண்டு, பொங்கள் விடுமுறை, செய்முறை தேர்வு, பொதுத் தேர்வு, அதன்பிறகு 2025 அக்டோபரில் ஒன்று முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கான கலை திருவிழா, நவம்பர், டிசம்பரில் அரையாண்டு தேர்வு, 2026 புத்தாண்டு, பொங்கல் விடுமுறை, பிப்ரவரியில் செய்முறை தேர்வு என்று 809 நாட்கள் காலதாமதத்திற்கு காரணங்கள் கூறப்பட்டுள்ளன. இந்த வழக்கில் கல்வித்துறை கூறியிருக்கும் காரணம் நீதித்துறையை கேலி செய்வது போல் உள்ளது. எனவே, இந்த காலதாமத மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. தமிழக அரசுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது
6
22
4
81
11,512
ரயில்வே ஒப்பந்தப் பணிகளை முடித்த பிறகும், ஒப்பந்ததாரருக்கு இறுதிக்கட்ட தொகையை வழங்காமல் இழுத்தடித்துவிட்டு, காலதாமதத்தைக் காரணம் காட்டி பணம் வழங்க மறுத்த தெற்கு ரயில்வே நிர்வாகத்தை கண்டித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்
6
424
போலி புத்தகம் : நூலகங்கள் அழிந்துவிடும் அகல் விளக்கு மோகனை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதித்த நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி உத்தரவு விவரம்: போலி புத்தகங்களால் சமூகத்திற்கு ஏற்பட்ட இழப்பு அல்லது சேதம் ஈடு செய்ய முடியாதது மற்றும் மன்னிக்க முடியாதது தவறான உள்ளடக்கம் கொண்ட போலி புத்தகம், தலைமுறைகளின் அறிவை மாசுபடுத்தி, வாசகரையும் பாதிக்கப்பட்டவராக ஆக்குகிறது நூலகம் என்பது நாகரிகம் மற்றும் பண்பாட்டின் அடையாளம். குழந்தைகள், இளைஞர்கள் மத்தியில் கற்றலை ஊக்குவிக்கும் சிந்தனைக் களஞ்சியம். நூலகத்தின் அலமாரிகள் ஞானத்தின் புகலிடம். மனித சிந்தனைகளின் காப்பகம் போலி புத்தகங்கள் விரைவில் தமிழ்நாட்டின் பொது நூலகங்களை அழித்து, எகிப்து நாட்டில் அழிக்கப்பட்ட அலெக்ஸாண்ட்ரியா நூலகத்தின் நிலையை அடையச் செய்துவிடும் நூலகத்தின் அலமாரிகள் கற்பனையான ஆசிரியர்களின் போலி புத்தகங்களாலும், திருட்டு எழுத்துகளை கொண்ட பக்கங்களாலும், தவறான உள்ளடக்கம் கொண்ட கள்ள புத்தகங்களாலும் நிரப்பப்படுவது நாகரிகம் மற்றும் பண்பாட்டிற்கு எதிரான கடுமையான குற்றமாகும் போலி புத்தகத்தின் வாசகரும், பொது நூலகங்களின் பயனாளரும், குற்றத்தின் கண்ணுக்கு தெரியாத பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை எண்களால் அளவிட முடியாது. நூலகங்களுக்காக கொள்முதல் செய்யப்பட்ட இத்தகைய போலி புத்தகங்களின் அளவையும், பொது நூலகங்களுக்கு இத்தகைய சந்தேகத்திற்குரிய வெளியீடுகளை பரிந்துரைத்த நிபுணர்களையும், தொடர்புடைய உண்மைகளையும் கண்டறிய, காவலில் வைத்து விசாரிப்பது லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உதவியாக இருக்கும் அகல்விளக்கு மோகனை காவலில் வைத்து விசாரிக்க வேண்டிய அடிப்படை தேவை உள்ளதால், அவரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
1
6
793
சாலை அமைப்பதற்காக ஏரியின் குறுக்கே பாதை அமைக்க அனுமதி அளித்த திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவு ரத்து.... சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு சாலை அமைக்க விண்ணப்பித்திருந்தால் நில நிர்வாக ஆணையர், விரைந்து பரிசீலிக்க உத்தரவு திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே சாலை அமைப்பதற்காக சாவிதி ஏரியில் சாலை அமைப்பதை எதிர்த்து வழக்கறிஞர் பி.வி.செல்வகுமார் வழக்கு
5
1,077
பணிகளை முடித்த ஒப்பந்ததாரருக்கு கொடுக்க பணம் இல்லை என சென்னை மாநகராட்சி தரப்பில் உயர் நீதிமன்றத்தில் விளக்கம் ஆணையரின் சம்பளத்தை நிறுத்திவைக்கலாமா அல்லது 6% சதவீத வட்டியுடன் கொடுக்க முடியுமா என உயர் நீதிமன்றம் கேள்வி 2025 மார்ச் முதல் 2026 செப்டம்பர் வரை முடிக்கப்பட்ட 16 பணிகளுக்கு பணம் செலுத்தப்படவில்லை என சென்னையைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் ஆர்.ராமாராவ் என்பவர் வழக்கு சென்னை மாநகராட்சியின் பேருந்து வழித்தட சாலைகள் மற்றும் மழை நீர் வடிகாலுக்கான பணிகளை முடித்துக் கொடுத்தும், அளவீடு கணக்கு, வவுச்சர் ஆகியவை கொடுக்கபட்ட பிறகும், ரூ. 25.79 கோடி பணத்தை செலுத்தவில்லை - மனு மாநகராட்சியில் தற்போது நிதி எதுவும் இல்லை என்பதால், ஒப்பந்ததாரருக்கான செலுத்த வேண்டிய தொகை கொஞ்சம் கொஞ்சமாக தரப்படும் - மாநகராட்சி எத்தனை நாள்களுக்குள் ஒப்பந்தப் பணிகளுக்கான பணம் கொடுக்கப்படும் என டிசம்பர் 4ல் தெரிவிக்க நீதிபதி என்.செந்தில்குமார் உத்தரவு
2
1
1
19
2,257
அகல் விளக்கு பதிப்பக உரிமையாளர் மோகனுக்கு 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி சென்னை ஊழல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவு கோவை பெரியார் அறிவுலகத்துக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கு இன்று பிற்பகல் 12மணியிலிருந்து 30-11-26 மாலை 4மணி வரை காவல்துறை காவல் விசாரணைக்கு அனுமதி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அகல் விளக்கு பதிப்பக உரிமையாளர் மோகனை மூன்று நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த மனு சிறப்பு நீதிமன்ற நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி
3
7
599
திருமணத்தை மீறிய உறவு காரணமாக குழந்தைகளை கொலை செய்த வழக்கில் விதிக்கப்பட்ட சாகும் வரை தண்டனையை ரத்து செய்யக்கோரி பிரியாணி கடை ஊழியர் மீனாட்சி சுந்தரம் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு சாகும்வரை ஆயுள் தண்டணை என்ற தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டுமெனவும் மனுவில் கோரிக்கை திருமணம் தாண்டிய உறவுக்குத் தடையாக இருந்த தனது 2 குழந்தைகளுக்கும் கடந்த 2018-ம் ஆண்டு பாலில் விஷம் வைத்து, அபிராமி கொலை செய்தார் குற்றவாளிகள் அபிராமி மற்றும் மீனாட்சி சுந்தரத்திற்கு சாகும் வரை சிறைத் தண்டனை விதித்து காஞ்சிபுரம் மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது நீதிபதிகள், ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, பி.கார்த்திகேயன் அமர்வு
6
1,476
மாதம் ஒரு லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் நஷ்ட ஈடாக 75 லட்சம் வழங்க கோரி அமைச்சர் வெங்கட்ரமணன் மனைவி மீனாட்சி சைதாப்பேட்டை நீதிமன்றம் 17 வது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமனறத்தில் குடும்ப வன்முறை வழக்கு தாக்கல் செய்துள்ளார்
23
385
44
1,144
78,888
TVK MLA arrested
5
400
TVK MLA அருள் விக்னேஷ் கைது.
6
376
நீலகிரி மாவட்டத்தில் அமைச்சர் வன்னி அரசு புலியை துரத்திய நிகழ்வு தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு நீலகிரி மாவட்டத்தில் அமைச்சர் வன்னி அரசு புலியை துரத்திய நிகழ்வு தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் கந்தன் தொடர்ந்த வழக்கு சமூக வலைதளத்தில் வெளியான வீடியோவை வைத்து பொத்தாம் பொதுவாக வழக்கு தொடர முடியாது - உயர்நீதிமன்றம் விளம்பரத்திற்காக வழக்கு தொடரப்பட்டது தெரிய வந்தால் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் - உயர்நீதிமன்றம் எச்சரிக்கை நீதிபதிகள் என்.சதீஷ்குமார், ஜி. கே.முத்துக்குமார் அமர்வு
1
1
4
862
திருப்பரங்குன்றம் கோயிலில் தீபத்தூணில் நாளை தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவு CISF பாதுகாப்பில் நடைபெற உத்தரவு கோயிலின் நிர்வாகப் பொறுப்பை ஏற்பதற்காக, மேகாலயா உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வுபெற்ற நீதிபதி எஸ். வைத்தியநாதன் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வுபெற்ற நீதிபதி வி.பார்த்திபன் ஆகியோர் அடங்கிய குழுவை நிர்வாகிகளாக (RECEIVERS) நியமித்தும் உத்தரவு
2
7
87
23,269
திருப்பரங்குன்றம் மலை அமைந்துள்ள முழு பகுதியையும் சி ஆர் பி எப் கட்டுப்பாட்டில் எடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
1
6
312
சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக பதிவு செய்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி போக்ஸோ நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
1
457
நீதிமன்றம் விதித்த தீர்ப்பை கண்டிப்புடன் எதிர்க்கட்சித் தலைவர் பின்பற்றுவதாகவும் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார்
2
13
781
முதலமைச்சர் விஜய் வழக்கு தள்ளுபடி பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து தேர்தல் வழக்கு தேர்தல் வழக்கை நிராகரிக்க்கோரி முதலமைச்சர் விஜய் நிராகரிப்பு மனு தாக்கல்
4
248
கள்ளக்குறிச்சி வழக்கு பிற்பகல் 3.30 மணிக்கு ஒத்திவைப்பு விசாரணையின் போது சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்களுக்கு மட்டுமே அனுமதி ஊடகங்களுக்கு உள்ளிட்ட எவருக்கும் அனுமதி மறுப்பு வீடியோ கான்பரன்ஸ் மூலமாக விசாரணை நடத்தப்படும் என நீதிபதி அறிவிப்பு
3
11
731