Virudhunagar Help Desk | MLA Office (@VNR_HelpDesk) header
Virudhunagar Help Desk | MLA Office (@VNR_HelpDesk) profile picture

Official Public Grievance & Support Desk | Virudhunagar MLA @selvamVNR Virudhunagar MLA Office | Mail your Queries to [email protected]

virudhunagar
Joined May 2026
Have a concern, complaint, or suggestion? Please fill out the Google Form and share your issues with us at anytime🙏🏻✅ Link in Bio!! Your voice matters. @selvamVNR MLA., Virudhunagar. #tvk #Virudhunagar #tvkvijay #virudhaiselvam #NammaOorMLA
3
22
54
2,441
நேற்று (06-11-2026) சென்னையில், கழகப் பொதுச்செயலாளரும் மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சருமான அப்பா திரு. @BussyAnand அவர்களை நேரில் சந்தித்து, தீபாவளித் திருநாளை முன்னிட்டு வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டேன்.❤️ S.P.செல்வம் DCE.,MLA., விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட கழகச் செயலாளர், விருதுநகர் கிழக்கு மாவட்டம்.
14
56
649
தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு திருச்சுழி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மாவட்டக் கழக இளைஞரணி சார்பில், சுமார் 300 தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தூய்மைக் காவலர்களுக்கு சேலை, வேட்டி மற்றும் சட்டைகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. மேலும், அவர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. அதேபோல், இசலி ஊராட்சிக்குட்பட்ட இனக்கநேரி கிராமத்தில் 50 தூய்மைப் பணியாளர்களுக்கு சேலை மற்றும் வேட்டிகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. பொதுமக்களின் சுகாதாரத்தையும், சுற்றுப்புறத் தூய்மையையும் பேணுவதில் அயராது உழைக்கும் தூய்மைப் பணியாளர்களின் சேவையைப் போற்றும் வகையில் இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.🙏🏻 S.P.செல்வம் DCE.,MLA., விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட கழகச் செயலாளர், விருதுநகர் கிழக்கு மாவட்டம். #VirudhunagarMLA #Diwali2026 #CMJosephVijay
22
52
666
விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தினமும் பொதுமக்களைச் சந்தித்து, அவர்களது கோரிக்கை மனுக்களைப் பெற்று வருகிறேன். தொகுதி மக்கள் தங்கள் பகுதிகளில் நிலவும் அடிப்படை வசதிகள் மற்றும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாகத் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர். பெறப்பட்ட மனுக்களைப் பரிசீலித்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் உரிய நடவடிக்கை எடுத்து, விரைவில் தீர்வு காணப்படும் என உறுதியளித்தேன். மக்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்து தொடர்ந்து செயல்படுவேன்.🙏🏻 S.P.செல்வம் DCE.,MLA., விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட கழகச் செயலாளர், விருதுநகர் கிழக்கு மாவட்டம். #VirudhunagarMLA #CMJosephVijay
14
41
619
விருதுநகர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் (BDO), ஒன்றிய அலுவலகப் பணியாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், விருதுநகர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஊராட்சிகளில் பொதுமக்களுக்குத் தேவையான சாலை வசதி, குடிநீர் வசதி, தெருவிளக்குகள், கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் மக்கள் நலப் பணிகளின் தற்போதைய நிலை குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொண்டேன். மக்களின் அடிப்படைத் தேவைகளை முன்னுரிமையாகக் கொண்டு, அனைத்துப் பணிகளையும் தொடர்ந்து கண்காணித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். S.P.செல்வம் DCE.,MLA., விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட கழகச் செயலாளர், விருதுநகர் கிழக்கு மாவட்டம். #VirudhunagarMLA #CMJosephVijay
10
26
536
இன்று (04-11-2026) விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான வங்கி நிதி இணைப்பு வழங்கும் விழாவில் கலந்து கொண்டு, மாவட்ட ஆட்சியர் திருமதி. ஷரண்யா அறி IAS அவர்களுடன் இணைந்து மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பயனாளிகளுக்கு வங்கிக் கடன் இணைப்பு உதவிகளை வழங்கினேன். பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், சுயதொழில் மூலம் புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கவும், மகளிர் சுய உதவிக் குழுக்களின் வளர்ச்சிக்கு தொடர்ந்து துணை நிற்போம். S.P.செல்வம் DCE.,MLA., விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட கழகச் செயலாளர், விருதுநகர் கிழக்கு மாவட்டம். #VirudhunagarMLA #CMJosephVijay
9
32
571
விருதுநகர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மேலக்கட்டனார்பட்டி பகுதியில், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் கல்குவாரிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டேன். சர்வே எண் 136க்கு மட்டுமே அனுமதி பெற்றிருந்த நிலையில் சர்வே எண் 134க்கான உரிமம் ஆறு மாதங்களுக்கு முன்பே காலாவதியாகிருந்தும் பகுதியில் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு வந்தது கண்டறியப்பட்டது. இதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட கல்குவாரியின் செயல்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட்டு (Suspended) நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மக்கள் நலன் மற்றும் கனிமவளம் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். S.P.செல்வம் DCE.,MLA., விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட கழகச் செயலாளர், விருதுநகர் கிழக்கு மாவட்டம். #விருதுநகர் #VirudhunagarMLA
3
58
151
2,298
விருதுநகர்: பாலவநத்தம் பகுதியில் அமைந்துள்ள ஜெய் சாய்ராம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், நாட்டு நலப்பணித் திட்டத்தின் (NSS) அணி சார்பில் நடைபெற்ற டெங்கு காய்ச்சல் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். இந்நிகழ்ச்சியில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், சுற்றுப்புறத் தூய்மையின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், மாணவர்களின் நலன் கருதி நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் பங்கேற்று, சமூக நலப்பணியில் ஈடுபட்ட மாணவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்! S.P.செல்வம் DCE.,MLA., விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட கழகச் செயலாளர், விருதுநகர் கிழக்கு மாவட்டம். #VirudhunagarMLA #CMJosephVijay
23
48
571
தீபாவளி திருநாளை முன்னிட்டு, விருதுநகர் கிழக்கு மாவட்ட இளைஞரணி சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு, தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினேன்.மேலும் மதிய உணவு வழங்கப்பட்டது. தினந்தோறும் தங்களின் அயராத உழைப்பால் நமது சுற்றுப்புறத்தைத் தூய்மையாகப் பராமரித்து வரும் தூய்மைப் பணியாளர்களின் சேவையைப் போற்றும் வகையில் இந்த உதவிகள் வழங்கப்பட்டன.🙏🏻 S.P.செல்வம் DCE.,MLA., விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட கழகச் செயலாளர், விருதுநகர் கிழக்கு மாவட்டம்.
2
26
60
800
தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத்துறை சார்பில், பொதுமக்களுக்கு குறைந்த விலையில் அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் கிடைக்கும் வகையில், ₹200-க்கு 10 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தீபாவளி சிறப்புத் தொகுப்பு விற்பனையை விருதுநகரில் இன்று தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு மளிகைத் தொகுப்புகளை வழங்கினேன். மேலும், கூட்டுறவு அங்காடிகள் மூலம் கிலோ ₹30-க்கு சன்னரக அரிசி விற்பனைத் திட்டமும் பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ளது. பொதுமக்கள் இத்திட்டங்களைப் பயன்படுத்திப் பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன்.🙏🏻 S.P.செல்வம் DCE.,MLA., விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட கழகச் செயலாளர், விருதுநகர் கிழக்கு மாவட்டம். #VirudhunagarMLA #CMJosephVijay‌
13
24
494
தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத் துறை சார்பில், பொதுமக்களுக்கு குறைந்த விலையில் அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் கிடைக்கும் வகையில், ₹200-க்கு 10 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தீபாவளி சிறப்புத் தொகுப்பு விற்பனையை விருதுநகரில் இன்று தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு மளிகைத் தொகுப்புகளை வழங்கினேன். மேலும், கூட்டுறவு அங்காடிகள் மூலம் கிலோ ₹30-க்கு சன்னரக அரிசி விற்பனைத் திட்டமும் பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ளது. பொதுமக்கள் இத்திட்டங்களைப் பயன்படுத்திப் பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன்.🙏🏻 S.P.செல்வம் DCE.,MLA., விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட கழகச் செயலாளர், விருதுநகர் கிழக்கு மாவட்டம். #VirudhunagarMLA #CMJosephVijay‌
9
29
574
விருதுநகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பாவாலி கிராமத்தில், மயானத்திற்கும் தார் சாலைக்கும் இடையே தனியாருக்குச் சொந்தமான பட்டா நிலம் இருப்பதால், அப்பகுதி மக்கள் மயானத்திற்குச் செல்ல வழிப்பாதை இல்லாமல் சிரமப்படுவதாகத் தெரிவித்தனர். இதையடுத்து, உடனடியாக வட்டார வளர்ச்சி அலுவலர் (BDO), பொறியாளர் மற்றும் மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் (Zonal BDO) ஆகியோரை நேரில் அழைத்துச் சென்று, சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்தேன். நில உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, சுமுகமான முறையில் தீர்வு கண்டு மயானத்திற்குச் செல்ல உரிய வழிப்பாதை வசதி ஏற்படுத்தித் தரத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மக்களிடம் உறுதியளித்தேன். மேலும், அப்பகுதியில் உள்ள இரண்டு மயானங்களுக்கும் சேர்த்து ரூ.13 லட்சத்து 69 ஆயிரம் மதிப்பீட்டில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள விவரத்தையும் மக்களிடம் எடுத்துரைத்தேன். தொகுதி மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி, அவர்களின் உரிமைகளையும் கண்ணியத்தையும் உறுதி செய்வதில் தொடர்ந்து செயல்படுவேன்!🙏🏻 S.P.செல்வம் DCE.,MLA., விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட கழகச் செயலாளர், விருதுநகர் கிழக்கு மாவட்டம். #VirudhunagarMLA #CMJosephVijay‌
2
105
3
319
6,946
விருதுநகர்: P. குமாரலிங்கபுரம் பகுதியில் நேரில் ஆய்வு மேற்கொண்டு, சாலை வசதி, வருகால், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பாகப் பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தேன். மேலும், அங்குள்ள ஆரம்பப் பள்ளியைப் பார்வையிட்டு, மாணவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தேன். பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் பள்ளியின் தேவைகள் தொடர்பாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். S.P.செல்வம் DCE.,MLA., விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட கழகச் செயலாளர், விருதுநகர் கிழக்கு மாவட்டம். #VirudhunagarMLA #CMJosephVijay‌
16
39
669