வந்தியத்தேவர் retweeted
" சுதந்திரப் போராட்ட வீரரும், ஆன்மிகச் சிந்தனையாளரும், சமூக நல்லிணக்கத்திற்காகவும், மக்களின் உரிமைகளுக்காகவும் தமது வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவருமான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் எனது மரியாதைமிகு புகழஞ்சலியைச் செலுத்தினேன்.
தேசப்பற்று, தியாகம், துணிவு, ஆன்மிகம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வு ஆகிய உயரிய பண்புகளின் அடையாளமாகத் திகழ்ந்தவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். இந்திய விடுதலைப் போராட்டத்தில் அவர் ஆற்றிய பங்களிப்பும், ஒடுக்கப்பட்ட மற்றும் பின்தங்கிய மக்களின் முன்னேற்றத்திற்காக அவர் மேற்கொண்ட பணிகளும் என்றும் நினைவுகூரத்தக்கவை.
சமூகத்தில் ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் மனித மாண்பை நிலைநாட்டுவதன் அவசியத்தைத் தனது வாழ்வின் மூலம் வலியுறுத்தியவர் தேவர் திருமகனார். ஆன்மிகத்தையும் தேசப்பற்றையும் ஒருங்கிணைத்த அவரது சிந்தனைகள், தனிமனித ஒழுக்கம், தன்னம்பிக்கை, தியாக உணர்வு மற்றும் பொதுநலச் சேவை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்துகின்றன.
குறிப்பாக, இளைஞர்கள் அவரது வாழ்க்கையிலிருந்து தேசப்பற்று, நேர்மை, துணிவு, ஒழுக்கம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வு ஆகிய நற்பண்புகளைக் கற்றுக்கொண்டு, நாட்டின் முன்னேற்றத்திற்கும் சமூக நல்லிணக்கத்திற்கும் தங்களை அர்ப்பணித்துக்கொள்ள வேண்டும். அவரது உயரிய கொள்கைகளைப் பின்பற்றி, ஒற்றுமையும் சமத்துவமும் நிறைந்த, வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்க நாம் அனைவரும் உறுதியேற்போம்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் தியாகமிகு வாழ்க்கையும், தேசத்திற்கும் சமூகத்திற்கும் அவர் ஆற்றிய தொண்டும் என்றும் நம் நினைவுகளில் நிலைத்திருக்கும்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் ஜெயந்தி நாளில், அவரது நினைவுகளைப் போற்றி, அவருக்கு எனது பணிவான வணக்கங்களைச் செலுத்துகிறேன்." - ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், தமிழ்நாடு ஆளுநர்
@rashtrapatibhvn @VPIndia @PMOIndia @HMOIndia
@rajendraarlekar @MIB_India @PIB_India @pibchennai
@DDNewslive @PTI_News @airnewsalert @ani_digital
@DDTamilNews @AIRNews_Chennai
வந்தியத்தேவர் retweeted
இன்று (30.10.2026), மதுரை மாவட்டம், கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள விடுதலைப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 119-வது ஜெயந்தி விழா மற்றும் 64-வது குருபூஜையை முன்னிட்டு, அவரது திருவுருவச் சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தியபோது..
இந்நிகழ்வில் மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சர் திரு. பி. மதன்ராஜா அவர்கள், மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு. வி.கே. ராஜீவ் அவர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. எஸ்.ஆர். தங்கபாண்டியன் (மதுரை மேற்கு), திரு. எம்.வி. கருப்பையா (சோழவந்தான்), திரு. எம்.எம். கோபிசன் (மதுரை தெற்கு), திரு. பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா (கம்பம்), திரு. ஆர். சீனிவாச சேதுபதி (திருப்பத்தூர்) உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
வந்தியத்தேவர் retweeted
ஆர்எஸ்எஸ் பேரியக்கத்தின் இரண்டாவது தலைவரான பரமபூஜனீய ஸ்ரீகுருஜி கோல்வால்கர் அவர்கள் மீதும், இந்துத்வாவின் பிதாமகன் வீரசாவர்க்கர் அவர்கள் மீதும், மாவீரன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் மீதும் பேரன்பும், பெருமதிப்பும் கொண்ட ...
தேசியமும் தெய்வீமும் எனது இரு கண்கள் எனக்கூறி தமிழகத்தில் தேசியம் வளர்க்க! தெய்வீகம் காக்க! தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த விடுதலை போராட்ட வீரர் தெய்வத் திருமகன் தேவர் பெருமகனாரின் ஜெயந்தி.
தெய்வத் திருமகன் தேவர் பெருமகனாரின் ஜெயந்தி தினத்தில் அவரது தியாகத்தையும், தேசபக்தியையும் போற்றி வணங்குவோம்.
पसुम्पोन मुत्तुरामलिंग तेवर जी की गुरु पूजा :
वे एक स्वतंत्रता सेनानी और आध्यात्मिक नेता थे। संघ के द्वितीय सरसंघचालक गुरु गोलवलकर जी के साथ उनका गहरा वैचारिक संबंध था।
उन्होंने कहा —
“राष्ट्रीयता और दिव्यता मेरी दो आँखें हैं।”
उन्होंने लोगों को संगठित किया और 1920 में अंग्रेजों द्वारा लागू किए गए आपराधिक जनजाति अधिनियम (CTA) के खिलाफ विरोध प्रदर्शन किया। यह अधिनियम मुक्कुलत्तोर समुदाय के खिलाफ था और यह विरोध उनके जीवन का एक महत्वपूर्ण मोड़ बना।
வந்தியத்தேவர் retweeted
இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், தேசியத் தலைவருமான
பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் ஐயா அவர்களின்
119ஆம் ஆண்டு ஜெயந்தி மற்றும்
64ஆம் ஆண்டு குருபூஜை நாளில்,
அவரது வீரத்தையும், தியாகத்தையும், தேசப்பற்றையும் போற்றி வணங்கி மரியாதை செலுத்துவோம்!
வந்தியத்தேவர் retweeted
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அய்யா அவர்களின் 119-வது ஜெயந்தி விழா மற்றும் 64-வது குருபூஜை விழாவை முன்னிட்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சார்பில் அவரது புகழையும் பெருமையையும் போற்றி வணங்குகிறேன்!
வீரம், தியாகம், சமூகநீதி எனப் பல தளங்களில் வரலாற்று முத்திரை பதித்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அய்யா அவர்கள், தனது வாழ்நாள் முழுவதையும் மக்கள் உரிமைக்காகவும் சமூக ஒற்றுமைக்காகவும் அர்ப்பணித்தவர்.
தலைமுறைகள் கடந்தும் நம்மை வழிநடத்தும் அவரது வீரத்தையும் தியாகத்தையும் நெஞ்சில் ஏந்தி, அவர் காட்டிய வழியில் சமூக ஒற்றுமையையும் சமத்துவத்தையும் பேணிக் காப்போம்!
டாக்டர். TK. பிரபு
இயற்கை வளங்கள் துறை அமைச்சர்
தவெக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று மட்டும் தேவர் ஜெயந்திக்கு வாழ்த்து சொன்ன அளவுக்கு கூட கடந்த 5 வருட ஆட்சியில் திமுக வாழ்த்து சொன்னது இல்லை.
தவெக திமுகவை விட எவ்வளவோ மேல் என்று தெற்கில் பேசிட்டு இருக்காங்க.
#தேவர்_ஜெயந்தி
@DrSenthil_MDRD
வந்தியத்தேவர் retweeted
தேசியத்தையும் தெய்வீகத்தையும் இரண்டு கண்களாக போற்றிய பசும்பொன் தேவர் திருமகனார் அவர்களின் குருபூஜை தினத்தில், நமது புகழ் வணக்கத்தை காணிக்கையாக்குகிறோம்.
நம் நாட்டின் சுதந்திரப் போராட்டத்திற்காக நேதாஜி கட்டமைத்த ராணுவத்துக்கு தமிழகத்தில் இருந்து இளைஞர் படை திரட்டி அனுப்பிய தீரர், சாதிய பாகுபாட்டுக்கு எதிரான தூய்மையான ஆன்மீகவாதி, இன்றைக்கும் லட்சோப லட்சம் மக்களால் தெய்வமாக போற்றப்படும் மகான் தேவர் ஐயாவின் புகழ் என்றைக்கும் நிலைத்திருக்கும்!
@TVKVijayHQ | @TVKPartyHQ | @TVKHQITWingOffl | @BussyAnand
#தமிழகவெற்றிக்கழகம் #TVK
ஆங்கிலேயரை எதிர்த்த மாவீரன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் இந்திய தேசிய ராணுவத்திற்கு தமிழகத்திலிருந்து பெரும் படையை திரட்டி அனுப்பியவர்.
மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்திற்குள் பட்டியலின மக்களை அழைத்துச் செல்ல வைத்தியநாத அய்யர் முடிவு செய்தபோது அதை ஏற்று, பட்டியலின மக்களை அழைத்து வரும்போது அடியேனும் உடன் வருவேன் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் அந்த ரவுடிக் கும்பலை சந்திக்க வேண்டிய முறையில் சந்திப்பேன் என்று ஒரு துண்டு பிரசுரம் மூலம் தெரிவித்து ஆலய பிரவேசத்தினை அமைதியாக நடத்தியவர்.
பெரியவர் தேசபக்தர் தெய்வத்திருமகன் பசும்பொன் உ.முத்துராமலிங்க தேவர் அவர்களின் ஜெயந்தி தினத்தில் அவரது தியாகத்தினையும், தேசபக்தியையும் போற்றுவோம்.
#தெய்வத்திருமகன் #தேவர்ஜெயந்தி
வந்தியத்தேவர் retweeted
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெருமகனார் அவர்களின் குருபூஜையை முன்னிட்டு, இன்று திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு, திருச்சி மாவட்ட தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் துணைப் பொதுச்செயலாளர்கள் ஆகியோருடன் இணைந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்.
தியாகம், வீரம், உறுதி மற்றும் சமூகப் பற்றின் அடையாளமாகத் திகழும் பெருமகனாரின் புகழையும் பெருமையையும் போற்றுவோம்!
@CMOTamilnadu | @TVKVijayHQ
வந்தியத்தேவர் retweeted
அமைச்சர் க. விக்னேஷ் அவர்கள் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஐயா அவர்களுக்கு மரியாதை செலுத்தினர்!..🙏
கோயில் நிலத்துல என்னத்துக்கு வைக்கணும்.. இஷ்டம் இருந்தா அறிவாலயத்துல வைங்க தோழி..
வந்தியத்தேவர் retweeted
ம் இவங்க ஒரே சயின்ஸ் எக்சிபிசனா நடத்துராங்கல்ல.. உங்க அறிவ வச்சு நெறைய கண்டுபிடிப்புகளா கண்டுபிடிச்சு பேட்டர்ன் ரைட்சா வாங்கி குமிச்சு வச்சிட்ருக்கீங்களா
கேட்டா நீங்க ஒடுக்குன ஒடுக்குல நாங்களெல்லாம் வெளியே வந்து படிக்குரதே பெரிய விசயம்னு ஒரு உருட்டு உருட்டுவாய்ங்க பாருங்க
அவர்களுக்கு பெருமை படுவதற்கு குருப்பூஜை தவிர எதுவுமே கிடையாது. இந்த ஜாதிய பெருமிதம் ஒன்று தான் அவர்களுக்கு இருக்கும் சொத்து.
படிப்பு,சிந்தனை,முன்னேற்றம் என்று எது இல்லாமல் போனாலும்,ஜாதி அவர்களுக்கு ஒரு validity ஐ கொடுக்கிறது. ஆகவே தங்கள் ஆற்றல் முழுவதையும் இந்த தேதிக்காக செலவிடுகிறார்கள். முக்கியத்துவம் தருகிறார்கள்.
இந்த நாளை அவர்கள் வாழ்வில் இருந்து கழித்து விட்டால் அவர்களுக்கு மிஞ்சுவது ஒன்றும் இல்லை .
அரசியல் கட்சிகள் இந்த உணர்வை சுரண்டி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இது புரியாமல் புளங்காகிதம் அடைகிறார்கள் .
Really sad .
வந்தியத்தேவர் retweeted
தேசப்பற்றையும் ஆன்மீகத்தையும் தன் வாழ்வின் இரு கண்களாகப் போற்றி, நாட்டின் விடுதலைக்காகவும் மக்கள் உரிமைக்காகவும் சமரசமின்றிப் போராடிய மாபெரும் தலைவர், பெருமதிப்பிற்குரிய பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் ஜெயந்தி மற்றும் குருபூஜை தினம் இன்று!
அய்யா முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் தியாகத்தையும் தொண்டையும் நினைவுகூர்ந்து, எனது வீரவணக்கத்தைச் செலுத்துகிறேன்.
வந்தியத்தேவர் retweeted
A moment of great pride for Tamil Nadu!
The visit of the Hon’ble Vice-President of India, Shri @CPR_VP Ji, to the sacred land of Pasumpon to pay homage to the legendary Pasumpon Thiru. Muthuramalinga Thevar Ayya on his Jayanthi and Guru Pooja is a fitting tribute to one of India’s greatest patriots.
Thevar Ayya was an embodiment of courage, sacrifice, spirituality and uncompromising nationalism. His close association with Netaji Subhas Chandra Bose and his unwavering commitment to the nation remain an inspiration for generations.
His legacy transcends generations and communities. His life will continue to inspire the spirit of national unity and patriotism.
Veera Vanakkam to Pasumpon Muthuramalinga Thevar Ayya! 🙏
வந்தியத்தேவர் retweeted
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் குரு பூஜையையொட்டி அவருக்கு பணிவுடன் மரியாதை செலுத்துகிறேன்.
மாபெரும் விடுதலை போராட்ட வீரர், தேசியவாத தலைவர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸுடன் நெருங்கிப் பணியாற்றிய அவர், ஒடக்குமுறை மிக்க பிரிட்டிஷ் காலனித்துவ ஆதிக்கத்திலிருந்து பாரதத்தை விடுவிப்பதற்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணித்தார். அவரது அசைக்க முடியாத துணிச்சல், தளராத தேசப்பற்று, எழுச்சியூட்டும் தலைமை ஆகியவை தேசிய விடுதலை போராட்டத்தில் இணைய மக்களைத் தூண்டின.
சமூக நீதியின் அச்சமற்ற பாதுகாவலரான அவர், பாகுபாடு நிறைந்த காலனித்துவ சட்ட எதிர்ப்பை முன்னின்று வழிநடத்தினார். மேலும், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் சமூகத்தின் விளிம்புநிலை மக்களின் உரிமைகளுக்காகவும் கண்ணியத்துக்காகவும் அயராது போராடினார்.
அவரது அசாதாரணமான தியாகங்கள், சமூக நீதிக்கான தளராத அர்ப்பணிப்பு, பாரதத்துக்கான வாழ்நாள் சேவை ஆகியவை, அவரது லட்சியங்களை முன்னெடுத்துச் செல்லவும், வலிமையான, வளமான மற்றும் சுயசார்பு பாரதத்தை கட்டியெழுப்புவதற்கான நமது கூட்டுறுதியை வலுப்படுத்தவும் நம்மை ஊக்குவிக்கும்.
#பசும்பொன்முத்துராமலிங்கதேவர் #குருபூஜை #நேதாஜி #விடுதலைவீரர்கள் #ஆளுநர்ரவி #லோக்பவன் #மக்கள்மாளிகை
வந்தியத்தேவர் retweeted
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் ஜெயந்தி மற்றும் குருபூஜை நாளான இன்று, இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் அமைந்துள்ள திருக்கோயிலில் மரியாதை செலுத்திய பின்னர், அவரது நினைவிடத்தைப் பார்வையிட்டு, உறவினர்களுடன் கலந்துரையாடினேன்.
தேச விடுதலை, சமூக நல்லிணக்கம், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகள் மற்றும் ஆன்மிகம் எனப் பல்வேறு தளங்களில் அளப்பரிய பங்களிப்பை வழங்கிய பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் வாழ்வும் பணிகளும் என்றும் போற்றத்தக்கவை.
வந்தியத்தேவர் retweeted
தேசியமும் தெய்வீகமும் தன் இரு கண்கள் என வாழ்ந்த
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின்
ஜெயந்தி & குருபூஜை நாளில் அவரை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் 🙏
நேதாஜியின் தோளோடு தோள் நின்ற தேசபக்தர்.
குற்றப் பரம்பரைச் சட்டம் என்ற அநீதியை எதிர்த்து சிறை சென்ற போராளி.
முருகப் பெருமானின் பக்தர்,பாரத அன்னையின் வீரப்புதல்வன்!
"வீரம் இல்லாத வாழ்வும், விவேகம் இல்லாத வீரமும் வீணாகும்" என வாழ்ந்து காட்டிய மாமனிதர்.
அவர் காட்டிய தேசப்பற்றும், ஆன்மீக நெறியும் நம் வழிகாட்டி. முருகன் அருளால் அவர் கனவு கண்ட வலிமையான பாரதம் படைப்போம்!
வந்தியத்தேவர் retweeted
ஆன்மீகப் பற்றும், தேசப்பற்றும், மக்கள் நலச் சிந்தனையும் ஒருங்கே கொண்ட தெய்வத் திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் ஜெயந்தி விழா இன்று!
விடுதலைப் போராட்டத்தில் பங்காற்றி, சமூக ஒற்றுமை, வீர உணர்வு, தியாகம் ஆகியவற்றின் அடையாளமாகத் திகழ்ந்தவர் தேவர் திருமகனார். அவரது துணிச்சலும், கொள்கைப் பற்றும், தன்னலமற்ற பொதுவாழ்வும் தலைமுறைகள் பலவற்றிற்கு என்றும் வழிகாட்டும் ஒளியாகத் திகழ்கின்றன.
அவரது உயரிய சிந்தனைகளையும், மக்கள் நலன் சார்ந்த பணிகளையும் போற்றி, அவர் காட்டிய பாதையில் தேசத்திற்கும் மக்களுக்கும் தொண்டாற்றுவோம். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் புகழ் என்றும் நிலைத்திருக்கட்டும்!














































