Voice Of Global Tamil Rights (@VoiceCounts1) header
Voice Of Global Tamil Rights (@VoiceCounts1) profile picture

உலகத்தமிழர் உரிமைக்குரல்

Joined December 2020
உலகத்தமிழர் உரிமைக்குரல் அமைப்பினர் இன்று Brampton நகரில், நகரமுதல்வர் Patrick Brown தலைமையில் நடாத்திய தமிழீழத்தேசியக் கொடிநாள் நிகழ்வுகளின் நிழற்படங்கள்.. கனடாவின் Brampton நகரில், நகரமுதல்வர் Patrick Brown தலைமையில் Voice of Global Tamil Rights நடாத்திய தேசியக்கொடிநாள் நிகழ்வின் நிழற்படங்கள். ஓவியக்கலைவல்லுநர் நிசான் சஞ்ஜே அவர்கள் நகரமுதல்வருக்கு நன்றிதெரிவித்து அவர் நிழற்படமொன்றை வரைந்து பரிசளித்தார். @patrickbrownont @NishanSanjee
1
7
16
319
தாயகத்தில் தொடர்ச்சியாகக் கடத்தப்படும் அல்லது வலிந்துகாணாமலாக்கப்படும் பெண்பிள்ளைகள். பெற்றோரே கண்காணிப்புடன் செயற்படுக
32
தமிழர் சேனையின் பொன்விழா - 22.11.2026 Soest, Germany
4
11
81
தமிழீழத் தேசியக்கொடி நாள் - 2026 உலகத்தமிழர் உரிமைக்குரல் அமைப்பினர் கனடாவில் முன்னெடுக்கும் தமிழீழத்தேசியக் கொடிநாள் நிகழ்வுகள் பிரம்டன் நகரில் நடைபெறவுள்ளது. 🗓️ சனிக்கிழமை நவம்பர் 21, 2026. ⏰ காலை 10.00 மணியிலிருந்து 11.00 வரை 📍Ken Whillans Square, Community Flag Pole, 41 Main ST S, Brampton, ON. L6W 2C4 📞மகாஜெயம் +1 (647) 262-5587 அனைவரும் வருக கொடியேந்தி எழுக
4
9
78
புகழ்வணக்கம் ஐயா
6
18
174
மாவீரர் நினைவேந்தி அறம்செய்யும் நாள். “உலகத்தமிழர் உரிமைக்குரல்” முன்னெடுத்த குருதிக்கொடை இன்று கனடாவில் நடந்தேறியது. மண்ணுக்காகக் குருதி சிந்தியோரின் நினைவில் எம்குருதியைக் கொடையாய் வழங்குவோம். மாவீரம் போற்றுதும்..! ❤️💛🐅 A Day of Remembrance and Giving in Honour of Our Maaveerer. The blood donation drive organised by the “Voice of Global Tamil Rights” took place today in Canada. In memory of those who shed their blood for our homeland, let us give our own blood as a gift to save lives. Let us honour the valour and sacrifice of our National Maaveerer! ❤️💛🐅
4
8
113
தமிழீழத்தேசியக்கொடி நாளுக்கு தனது வாழ்த்தினைத் தெரிவித்தார் NDP இன் தலைவரான @MaritStiles அம்மையார்
5
9
108
"மக்கள் அனைவரும் வருக, தமிழீழத் தேசியக் கொடி ஏந்தி எழுக"... என உலகத்தமிழர் உரிமைக்குரல் சார்பாக Brampton நகர முதல்வர் Patrick Brown அழைக்கிறார். தமிழீழத் தேசியக்கொடி நாள் - 2026 உலகத்தமிழர் உரிமைக்குரல் அமைப்பினர் கனடாவில் முன்னெடுக்கும் தமிழீழத்தேசியக் கொடிநாள் நிகழ்வுகள் பிரம்டன் நகரில் நடைபெறவுள்ளது. 🗓️ சனிக்கிழமை நவம்பர் 21, 2026. ⏰ காலை 10.00 மணியிலிருந்து 11.00 வரை 📍Ken Whillans Square, Community Flag Pole, 41 Main ST S, Brampton, ON. L6W 2C4 📞மகாஜெயம் +1 (647) 262-5587 அனைவரும் வருக கொடியேந்தி எழுக @30sec2remember
10
17
332
சொந்த இருப்பிற்காக அரசியல் செய்தவர்கள் மத்தியில் நொந்த மக்களுக்கான அரசியல் செய்தவர் #புகழ்வணக்கம் #மாமனிதர் #raviraj
5
13
164
தமிழீழத் தேசியக்கொடிநாள் பிரகடனம்
6
11
226
எந்தப்போரில் பெரும் உயிர்த்தியாகங்களுடன் ஓர் இனம் தன்னுரிமையை, தனது இறையாண்மையை இழக்கிறதோ, அந்த இழப்புத்தான் அவர்களது தேசத்தின் பிறப்பாகிறது. #புலிப்பண்பாடு #மாவீரர்மாதம் #november27
8
19
185
October 29 ஆம் திகதி, செல்வழகன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகு மீன்பிடிக்க கடலுக்குள் சென்றது. படகில், காசிமேட்டைச் சேர்ந்த ஓட்டுநர் சூர்யா, 49 தலைமையில், குப்பன், 48, மோகன், 47, முருகன், 48, குப்புசாமி, 58, அரவிந்த், 40, நாராயணன், 57, திருவொற்றியூர், திருச்சினாங்குப்பத்தைச் சேர்ந்த ராஜேஷ், 52, விஜயகாந்த், 44 உள்ளிட்ட ஒன்பது பேர் மீன்பிடிக்க ஆழ்கடலுக்கு சென்றனர். ஆந்திர மாநிலம் நிசாம் பட்டினம் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, '#முரசு' புயல் எச்சரிக்கை கிடைத்துள்ளது. இதையடுத்து, கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மூன்று படகுகள் ஆந்திராவின் ராமாயபட்டினம் துறைமுகத்திலும், ஒரு படகு நிசாம்பட்டினம் துறைமுகத்திலும் நிறுத்தப்பட்டன. தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகள் பாதுகாப்பாக இருப்பதை, கடந்த, 2ம் தேதி தமிழக அதிகாரிகள் உறுதி செய்ததாக, பிரகாசம் நகராட்சித் தலைவர் ராஜா பாபு தெரிவித்தார். மறுநாளான, 3ம் தேதி நிசாம்பட்டினம் துறை முகத்தில் நிறுத்தப்பட்டிருந்த படகில் இருந்த ஒன்பது மீனவர்களும், அதிகாரிகளிடம் தெரிவிக்காமல் ராமாயபட்டினம் நோக்கிப் புறப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது, புயலில் சிக்கியதில், படகின் உந்து பழுதாகியுள்ளது. இதையடுத்து, கடலோர காவல் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மீட்புப் பணிகள் தொடங்கின. அதன்பின், ஒன்பது மீனவர்களையும் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், மீனவர்கள் மாயமாகி மூன்று நாட்களாகியும், எந்த நடவடிக்கையும் இல்லை எனக்கூறி, உறவினர்கள், 200க்கும் மேற்பட்டோர், காசிமேட்டில் உள்ள மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். தொடர்ந்து கண்ணீர் மல்க, சூரியநாராயணா சாலையில் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விரைவாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, அரசு தரப்பில் போலீசார் உறுதி அளித்ததை அடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர். இதற்கிடையில்,ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் கொத்தப்பட்டினம், பள்ளிபாலம் கடற்கரையில் நேற்று படகு கவிழ்ந்த நிலையில் இருந்தது. இதையடுத்து அங்கு போய் பார்த்த போது 5 உடல்கள் கரை ஒதுங்கியிருந்தன. அது போல் மன்னூரில் ஒரு சடலமும் குண்டம்மல்லம் பகுதியில் ஒரு சடலமும் கரை ஒதுங்கியுள்ளன. இதுவரை 9 பேரில் 7 சடலங்கள் மீட்கப்பட்டது. இதில் 5 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டன. அவர்கள் காசிமேடு மீனவர்கள் என தெரியவந்தது. புயல் நேரத்தில் மீனவர்கள் கடலுக்குள் எவ்வாறு சென்றனர் எனவும் அரசின் அலட்சியப் போக்கே இதன் காரணம் என எதிர்க்கட்சிகள் காரசாரமாக விமர்சனம் செய்து வரும் நிலையில் மீன்வளத்துறை அமைச்சரும் நேற்று வரை மீனரவர்களை சந்திக்காததும் பெரும் சர்ச்சையை உள்ளாக்கியுள்ளது. உயிரிழந்த உறவுகளுக்கு எமது கண்ணீர் வணக்கம். #TamilNadu #TamilNaduPolitics
1
3
3
163
🩸 Donate Blood in Memory of Our National Maaveerars Let us come together in a noble act of kindness and humanity to honour the memory of our National Maaveerars of Tamileelam. Join us on Saturday, November 14, 2026, and make a meaningful difference by donating blood. Every donation has the power to save lives and is a beautiful way to honour their sacrifice. ❤️ Sign up under Team *Tamileelam* and be part of this life-saving initiative. blood.ca/pfl 📅 Date: Saturday, November 14, 2026 ⏰ Time: 9:50 AM – 12:45 PM 📍 Location: Scarborough Donor Centre, 880 Warden Avenue, Toronto Let us honour their memory through compassion, unity, and the gift of life.🙏💛❤️
3
3
223
தேசியத்தலைவரின் பிறந்தநாள் விழா - கனடா
7
18
219
ஜெயராஜ் அவர்களின் உளறல்: எமது வன்மையான கணடனங்களை முன்வைக்கிறோம். சிலர் வாழ்நாள் முழுதும் செய்த நற்செயல்களை ஒரு பெரும்பாவத்தில் தொலைப்பார்கள். அதைத்தான் ஜெயராஜ் அவர்கள் செய்திருக்கிறார். அண்மையில் ஒரு காணொளியில் இவ்வாறு கூறுகிறார்: " இரண்டு விடயங்களை என்றைக்கு இந்தத் தமிழினம் மறக்கிறதோ, அன்றைக்குத்தான் இந்த இனம் உருப்படும்: 1. நடந்த போராட்டத்தை இம்மக்கள் மறக்க வேண்டும் 2. என்றைக்கு புலம்பெயர் நாட்டு மக்களின் செல்வம் நம்மிடம் வருவது நிற்கிறதோ, அன்றைக்குத்தான் எங்கள் இனம் உருப்படும்." ஆயிரக்கனக்கான மாவீரர்கள் மக்களின் விடிவிற்காக போராடி தியாகம் செய்திருக்கிறார்கள். ஜெயராஜ் அவர்களின் கூற்றுப்படி இதையெல்லாம் மறக்கவேண்டும். வள்ளுவர் இதற்கு ஒரு பதில் வைத்திருக்கிறார்: எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு. எந்த அறத்தை மறந்தார்க்கும் வாழ்வு உண்டு; ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்தார்க்கு வாழ்வில்லை. இந்தப் பாவத்தைத் தான் ஜெயராஜ் செய்திருக்கிறார், செய்யத் தூண்டுகிறார். அவர் உண்மையில் ஒரு ஆன்மீக வாதியா என்பதில் எனக்கு பல நாட்களாக சந்தேகம் உண்டு. அவருடைய ஒரு பேச்சில் "இறைவனைப் பார்ப்பதற்கு பெரும் தடையாக இருப்பது கல்வி" என்றார். அறியாமையால்தான் ஒருவன் இறைவனைக் காண முடியும் என்றால், அவர் காண்பது அறியாமையைத்தான் , இறைவனை அல்ல. யார் இறைவன் என்பதே அவருக்குத் தெரியவில்லை. அனைத்து இறைவடிவங்களும் ஏன் ஆயுதங்களுடன் நிற்கின்றன என்ற கேள்வியைக் கேட்டாலே பதில் கிடைக்கும். இறைவன் என்பவன் சமூகத்தைக் காத்த தியாகி. இன்று இலட்சக்கணக்கான தமிழர்கள் தலைவரை இறைவனாகக் காண்கிறார்கள். ஏன்? இது யாரும் திட்டமிட்டு உருவாக்கவில்லை. அவர்கள் மனதில் தானாக தோன்றுவது. தலைவரை இறைவனாக உணரும் ஒவ்வொருவரும் இறைவனைக் கண்டவர்கள்தான். அவர்கள் அனைவரும் ஆன்மீக வாதிகள்தான். ஜெயராஜ் அவர்கள் கல்லை மட்டும் கண்டிருக்கிறார், இறைவனை அல்ல. அவருக்குத் தனக்கு எல்லாம் தெரியும் என்ற ஆணவம் வந்துவிட்டது. தலைவர் அவர்களை மனதில் நினைத்தவுடன் பலருக்கு கண்ணில் நீர் வழியும். இதைவிட எவ்வாறு சிறப்பாக இறைவனைக் காண முடியும்? காரைக்கால் அம்மையார் இவ்வாறு கூறுகிறார்: "பிறவாமை வேண்டும்; மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும் மறவாமை வேண்டும்." "வழுவாது எம்பெருமானை வாழ்த்தா நாளெல்லாம் வாழா நாளே." - அப்பர் இவ்வாறுதான் தலைவரை இறைவனாக நாங்கள் பார்க்கிறோம். அவரை மறக்கவேண்டும் எனும் பாவத்தை நீங்கள் கற்பிக்கிறீர்கள். தமிழ்ச்சமூகத்தின் இன்றைய இழிவிற்கு காரணமே இவரைப் போன்ற ஆன்மீகவாதிகள் தான் என்பேன். ஆன்மீகம் என்பது இறைவழிபாடு மட்டுமல்ல, அரசியல் முதற்கொண்டு சமூகத்தை ஒட்டுமொத்தமாக தீர்மானிக்கும் தன்மை அதற்கு உண்டு: அனைத்தும் ஆன்மீகத்தில் ஆரம்பித்து அரசியலில் முடிகிறது என்கிறார் சார்லஸ் பெங்குயி. "Everything begins in mysticism and ends in politics" - Peguy இன்றைய தமிழ் சமூகத்தின் ஆன்மீகம் கிறுக்கர்களின் கைகளில் சிக்கி இருப்பதால், சமூகம் அழிந்து கொண்டிருக்கிறது. இன்று பல்வேறு ஒழுக்கக் கேடுகளில் சமூகம் சிக்கி இருக்கிறது. அதைத் தடுக்க ஜெயராஜ் அவர்களால் முடிந்ததா? ஆனால் ஒரு ஆன்மீக சொற்பொழிவுக்கூட இல்லாமல், ஒழுக்கத்தில் உயர்ந்த சமூகத்தை தலைவர் கட்டி எழுப்பினார். இறைவன் ஒருவனால் மட்டுமே அவ்வாறான சமூகத்தைப் படைக்க முடியும். தமிழ் சமூகம் பிழைக்கவேண்டும் என்றால், ஜெயராஜ் அவர்கள் கூறுவதற்கு எதிர்மாறாக செய்யவேண்டும்: 1. போராட்டத்தையும் மாவீரர்களையும் என்றும் மறவக்கூடாது. தலைவரை இறைவனாக உயர்த்தவேண்டும். ஒரு புதிய ஆன்மீகப் புரட்சியை உருவாக்கவேண்டும். 2. புலம்பெயர் தமிழர்கள் இதை முன்னின்று நடத்தி, உலகெங்கும் கொண்டு செல்லவேண்டும். போராட்ட நிலத்தில் பிறந்து வளர்ந்த ஜெயராஜ் அவர்கள் ஏன் இவ்வாறு ஆன்மீகத்தைத் தவறாகப் பார்க்கிறார் என்பதை உலக வரலாற்றில் இருந்துஓரளவு புரிந்து கொள்ளலாம். உள்ளூரில் இருப்பவர்களுக்கு அவர்களின் தெய்வீகத்தன்மை புலப்படுவதில்லை. வெளியில் இருப்பவர்களுக்குத்தான் தெரியும். ஆனால் தன்னை ஆன்மீகவாதி என்று கூறிக்கொள்ளும் ஜெயராஜ் அவர்களுக்கு , தலைவரின் இறை பண்பு தெரியவில்லை என்பது அவரின் ஆன்மீகத் தன்மையையே கேள்விக்கு உள்ளாக்குகிறது. இப்பொழுதும் கெட்டுப்போகவில்லை. உண்மையை உணர்ந்து, தலைவரை இறையாக ஏற்றுக்கொண்டு சொற்பொழிவு ஆற்றினால் அவருக்கு விமோச்சனம் கிடைக்கும், இல்லையென்றால் அவருக்குத் தீராப் பழி பாவம் சென்றடையும். - கலாநிதி சேதுராமலிங்கம்
5
11
231
10,000 பிரதிகளைத் தாண்டி.....
எங்களது இரண்டாவது வெளியீடு 📚 பிரபா*கரன் சட்டகம் 🖋️ கலாநிதி சேதுராமலிங்கம் Voice - உலகத்தமிழர் உரிமைக்குரல் @VoiceCounts1 அமைப்பால் 2020 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இரண்டாவது நூல் … ❤️💛 6 வருடங்களில் 10,000 பிரதிகள் தாண்டி உலகெங்கும் சென்றடைந்த நூல்! #voicepublishers #book
3
10
150
தந்தைக்கு மகளாற்றும் உரை
2
32
117
1,384
தமிழீழத் தேசியக் கொடி நாள் 2026 Tamileelam National Flag day 2026 கனடாவின் Brampton  நகரபிதா Patrick Brown அவர்களது தலைமையில் “தமிழீழத் தேசியக்கொடி நாள்” நிகழ்வுகள் தமிழீழத் தேசியக்கொடியேற்றலோடு நிகழ்விருக்கிறது. நாள்: சனிக்கிழமை, நவம்பர் 21, 2026 நேரம்: காலை 10:00 மணி முதல் 11:00 மணி வரை இடம்: Ken Whillans Square, Community Flag Pole, 41 Main St S, Brampton, ON L6W 2C4. 📞 மகாஜெயம் +1 (647) 262-5587 அனைவரும் வருக, கொடியேந்தி எழுக..! உலகத்தமிழர் உரிமைக் குரல் Voice of Global Tamil Rights
2
1
9
244