ARUL Rathinam (@arulgreen) header
ARUL Rathinam (@arulgreen) profile picture
Chennai, India
Joined November 2009
Photo by ARUL Rathinam (@arulgreen)Photo by ARUL Rathinam (@arulgreen)Photo by ARUL Rathinam (@arulgreen)Photo by ARUL Rathinam (@arulgreen)Photo by ARUL Rathinam (@arulgreen)Photo by ARUL Rathinam (@arulgreen)Photo by ARUL Rathinam (@arulgreen)Photo by ARUL Rathinam (@arulgreen)
ARUL Rathinam retweeted
#WATCH | 📍 சுண்ணாம்புக் கால்வாய், கோவை காவிரி ஆற்றில் கலக்கும் நொய்யல் ஆறு, கழிவுநீர் மற்றும் சாயக் கழிவுகளால் மாசடைந்து வருவது பொதுமக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் உள்ள இந்த ஆற்றில் அதிக அளவில் நுரை பொங்கி எழுந்த நிலையில், ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். #SunNews | #NoyyalRiver | #Kovai
7
73
6
180
14,596
ARUL Rathinam retweeted
"‘ஆறுகளில் Sewage கலப்பது ஒரு சூழலியல் படுகொலை (ecocide)’ - உச்சநீதிமன்ற உத்தரவு அமைச்சருக்கு தெரியுமா?" -அருள் ரத்தினம், பசுமை தாயகம் அமைப்பு #SunNews | #MinisterRajiv | #Sewage
4
96
1
263
8,440
‘ஆறுகளில் Sewage கலப்பது ஒரு சூழலியல் படுகொலை (ecocide)’ - உச்சநீதிமன்ற உத்தரவு தமிழக அமைச்சருக்கு தெரியுமா? ---------- ‘ஆறுகளில் நுரை பொங்குவதற்கு சோப்பு, ஷாம்பு பயன்பாடு தான் காரணம்’ என்று தமிழக சுற்றுச்சுழல் அமைச்சர் வி.கே. இராஜிவ் கூறியது சர்ச்சைக்கு உள்ளானதை தொடர்ந்து, இன்று மீண்டும் ‘தான் சொன்னது தான் சரி’ என விளக்கம் அளித்துள்ளார். தொழிற்சாலை கழிவுகள் அல்லது சாயப்பட்டறைக் கழிவுகளால் ஆற்றில் நுரை வரவில்லை. Sewage கலப்பதுதான் இதற்கு காரணம் என்று அவர் மீண்டும் விளக்குகிறார்! இதன்மூலம், ‘நகராட்சிகளின் கழிவுநீர் ஆற்றில் கலப்பது ஒரு சாதாரண செயல்’ என்பதுபோல சுற்றுச்சுழல் அமைச்சர் பேசுகிறார். இது கண்டிக்கத்தக்கது ஆகும். தொழிற்சாலை கழிவுகள் மட்டுமல்ல; சுத்திகரிக்கப்படாத நகராட்சிகளின் கழிவுநீர் (Sewage) ஆறுகளில் கலப்பதும் அதற்கு இணையான குற்றம் தான். இந்திய சட்டங்களின் கீழ், ஆற்றிலோ நீர்நிலைகளிலோ கழிவு நீர் கலப்பது தண்டனைக்குரிய குற்றம். தொழிற்சாலையாக இருந்தாலும், நகராட்சியாக இருந்தாலும் – சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை வெளியேற்ற சட்டத்தில் இடம் இல்லை. இந்த சட்டம் முறையாக நடைமுறைப் படுத்தப்பட்டால் ஆறுகளில் நுரை பொங்குவதற்கு வாய்ப்பே இல்லை. எனவே, ஆறுகளில் நுரை பொங்குவது – அரசாங்கம் சுற்றுச்சூழலை காப்பதில் கடமை தவறியுள்ளது என்பதன் அடையாளமே ஆகும். பாலாறு மாசுபாடு தொடர்பான உச்சநீதிமன்றத்தின் 30.01.2025 தீர்ப்பில், ஆறுகளில் Sewage கலப்பது – இனப்படுகொலை போன்ற, சூழலியல் படுகொலை (ecocide) என விளக்கம் அளித்துள்ளது. (Ecocide is defined as 'unlawful or wanton acts committed with knowledge that there is a substantial likelihood of severe and either widespread or long-term damage to the environment.' Acts such as the pollution of rivers with untreated sewage, illegal sand mining, large-scale deforestation etc. fall under this definition.) மேலும், தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும், புறநகர்களிலும் Sewage வெளியாவதை தடுப்பதற்கான கட்டமைப்புகளை அமைக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட வேண்டும் என்று இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது! இதற்கு பொறுப்பாக உள்ள அமைச்சரே இவர்தான்! இந்திய உச்சநீதிமன்றமே ‘சூழலியல் படுகொலை’ என சுட்டிக்காட்டியுள்ள ஒரு மிகப்பெரிய சட்டவிரோத செயலை, சாதாரணமான பிரச்சனையாக சுற்றுச்சூழல் அமைச்சர் பேசுவது – அவர் வகிக்கும் பதவிக்கு உகந்த செயல் அல்ல! #MinisterRajeev | #RiverPollution | #Ecocide
20
34
435
‘ஆறுகளில் Sewage கலப்பது ஒரு சூழலியல் படுகொலை (ecocide)’ - உச்சநீதிமன்ற உத்தரவு தமிழக அமைச்சருக்கு தெரியுமா? ---------- ‘ஆறுகளில் நுரை பொங்குவதற்கு சோப்பு, ஷாம்பு பயன்பாடு தான் காரணம்’ என்று தமிழக சுற்றுச்சுழல் அமைச்சர் வி.கே. இராஜிவ் கூறியது சர்ச்சைக்கு உள்ளானதை தொடர்ந்து, இன்று மீண்டும் ‘தான் சொன்னது தான் சரி’ என விளக்கம் அளித்துள்ளார். தொழிற்சாலை கழிவுகள் அல்லது சாயப்பட்டறைக் கழிவுகளால் ஆற்றில் நுரை வரவில்லை. Sewage கலப்பதுதான் இதற்கு காரணம் என்று அவர் மீண்டும் விளக்குகிறார்! இதன்மூலம், ‘நகராட்சிகளின் கழிவுநீர் ஆற்றில் கலப்பது ஒரு சாதாரண செயல்’ என்பதுபோல சுற்றுச்சுழல் அமைச்சர் பேசுகிறார். இது கண்டிக்கத்தக்கது ஆகும். தொழிற்சாலை கழிவுகள் மட்டுமல்ல; சுத்திகரிக்கப்படாத நகராட்சிகளின் கழிவுநீர் (Sewage) ஆறுகளில் கலப்பதும் அதற்கு இணையான குற்றம் தான். இந்திய சட்டங்களின் கீழ், ஆற்றிலோ நீர்நிலைகளிலோ கழிவு நீர் கலப்பது தண்டனைக்குரிய குற்றம். தொழிற்சாலையாக இருந்தாலும், நகராட்சியாக இருந்தாலும் – சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை வெளியேற்ற சட்டத்தில் இடம் இல்லை. இந்த சட்டம் முறையாக நடைமுறைப் படுத்தப்பட்டால் ஆறுகளில் நுரை பொங்குவதற்கு வாய்ப்பே இல்லை. எனவே, ஆறுகளில் நுரை பொங்குவது – அரசாங்கம் சுற்றுச்சூழலை காப்பதில் கடமை தவறியுள்ளது என்பதன் அடையாளமே ஆகும். பாலாறு மாசுபாடு தொடர்பான உச்சநீதிமன்றத்தின் 30.01.2025 தீர்ப்பில், ஆறுகளில் Sewage கலப்பது – இனப்படுகொலை போன்ற, சூழலியல் படுகொலை (ecocide) என விளக்கம் அளித்துள்ளது. (Ecocide is defined as 'unlawful or wanton acts committed with knowledge that there is a substantial likelihood of severe and either widespread or long-term damage to the environment.' Acts such as the pollution of rivers with untreated sewage, illegal sand mining, large-scale deforestation etc. fall under this definition.) மேலும், தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும், புறநகர்களிலும் Sewage வெளியாவதை தடுப்பதற்கான கட்டமைப்புகளை அமைக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட வேண்டும் என்று இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது! இதற்கு பொறுப்பாக உள்ள அமைச்சரே இவர்தான்! இந்திய உச்சநீதிமன்றமே ‘சூழலியல் படுகொலை’ என சுட்டிக்காட்டியுள்ள ஒரு மிகப்பெரிய சட்டவிரோத செயலை, சாதாரணமான பிரச்சனையாக சுற்றுச்சூழல் அமைச்சர் பேசுவது – அவர் வகிக்கும் பதவிக்கு உகந்த செயல் அல்ல! #MinisterRajeev | #RiverPollution | #Ecocide
Dear Mr Manga Better luck next time
17
25
576
Is the Use of Soap and Shampoo Responsible for Foaming Rivers? Whose Voice Is the Environment Minister Echoing? It is shocking that Minister Dr. V.K. Rajiv has claimed that the excessive foaming of rivers, including the Noyyal in Tiruppur, is caused by the use of soap and shampoo. What is even more distressing and concerning is that the person making this statement is Tamil Nadu's Minister for Environment, Climate Change and Pollution Control. Even children know that the foaming of rivers such as the Noyyal is caused by the discharge of waste into them. The uncontrolled discharge of textile dyeing effluents into the Noyyal River in Coimbatore, Tiruppur and Karur districts is the reason for the excessive foaming. It is also widely known that the contamination of the Orathuppalayam Dam, built across the Noyyal River, with textile dyeing effluents has prompted farmers to protest against opening the dam. The excessive foaming at the Kelavarapalli Dam on the Thenpennai River is caused by the discharge of waste into the river in Karnataka. I have personally inspected both these rivers on several occasions and urged the authorities to take action to prevent the discharge of effluents into them. The Supreme Court, too, has issued several orders to the governments of Tamil Nadu and Karnataka in this regard. Despite all this, it is shocking that a minister entrusted with the responsibility of cleaning up these rivers has made such a statement. Everyone must pay attention to the circumstances in which the Environment Minister made these remarks. During his inspection of the effluent treatment infrastructure at the Kasipalayam Common Effluent Treatment Plant in Tiruppur, the Minister praised the functioning of the textile dyeing effluent treatment facilities in the district. He also assured the dyeing mill owners that steps would be taken to fulfil their demands. It was after making these remarks and assurances that he attributed river foaming to the use of soap and shampoo. This raises serious doubts about whose interests the Minister is representing and whose voice he is echoing. Urgent measures must be taken on a war footing to prevent the discharge of textile dyeing effluents, municipal sewage, solid waste and various other forms of waste into rivers and other water bodies across Tamil Nadu. Instead of making a mockery of the issue by claiming that soap and shampoo are responsible for river foaming, the Environment Minister must take concrete action to protect our rivers. @CMOTamilnadu
32
128
7
464
27,639
"ஆறுகளில் நுரை பொங்குவதற்கு சோப்பு, ஷாம்பு பயன்பாடு தான் காரணமா? யாருடைய குரலாக ஒலிக்கிறார் சுற்றுச்சூழல் அமைச்சர்?" - பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் வினா ----------- திருப்பூரில் ஓடும் நொய்யல் உள்ளிட்ட ஆறுகளில் நுரை பெருக்கெடுப்பதற்கு சோப்பு மற்றும் ஷாம்பு பயன்பாடு தான் காரணம் என்று அமைச்சர் மருத்துவர் வி.கே. இராஜிவ் கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்தக் கருத்தைக் கூறியிருப்பவர் தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டுத் துறை அமைச்சர் என்பது தான் வருத்தமும் கவலையும் அளிக்கிறது. நொய்யல் உள்ளிட்ட ஆறுகளில் நுரை பொங்குவதற்கு காரணம் கழிவுகள் கலக்கவிடப்படுவது தான் என்பது சிறு குழந்தைகளும் அறிந்தது தான். கோவை, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சாயப்பட்டறைக் கழிவுகள் நொய்யல் ஆற்றில் கட்டுப்பாடின்றி கலக்கவிடப்படுவது தான் அதில் நுரை பெருக்கெடுப்பதற்கு காரணம் ஆகும். நொய்யலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஒரத்துப்பாளையம் அணையில் சாயப்பட்டறைக் கழிவுகள் கலந்திருப்பது தான் அந்த அணையைக் திறக்கக் கூடாது என உழவர்கள் போராட்டம் நடத்துவதற்கு காரணம் என்பதும் பெரும்பான்மையினர் அறிந்தது தான். தென்பெண்ணை ஆற்றில் கெலவரப்பள்ளி அணையில் நுரை பெருக்கெடுப்பதற்கு காரணம் கர்நாடகத்தில் அந்த ஆற்றில் கலக்கவிடப்படும் கழிவுகள் தான். இந்த இரு ஆறுகளிலும் கழிவுகள் கலக்கவிடப்படுவதைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த ஆறுகளை பலமுறை நான் நேரில் ஆய்வு செய்து அறிவுறுத்தியுள்ளேன். உச்சநீதிமன்றமும் இதுதொடர்பாக தமிழக, கர்நாடக அரசுகளுக்கு பல ஆணைகளை பிறப்பித்திருக்கிறது. இவ்வளவுக்குப் பிறகும் அந்த ஆறுகளை தூய்மைப்படுத்த வேண்டிய பொறுப்பில் உள்ள அமைச்சர் ஒருவரே இவ்வாறு கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. சுற்றுச்சூழல் அமைச்சர் இந்தக் கருத்துகளை எந்த சூழலில் கூறினார் என்பதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும். திருப்பூர் காசிபாளையம் பொது சுத்திகரிப்பு நிலையத்தில் சாயக்கழிவுநீர் சுத்திகரிப்புக் கட்டமைப்புகளை ஆய்வு செய்த அவர், திருப்பூரில் சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்கள் சிறப்பாகச் செயல்படுகின்றன என்று பாராட்டியது மட்டுமின்றி, சாய ஆலை உரிமையாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த பிறகு இவ்வாறு கூறியிருக்கிறார். அதை வைத்து பார்க்கும் போது தான் அமைச்சர் யாருடைய குரலாக ஒலிக்கிறார் என்ற ஐயம் ஏற்படுகிறது. தமிழ்நாட்டில் ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் சாயப்பட்டறை, நகரக் கழிவுகள், திடக்கழிவுகள் உள்ளிட்ட பல வகையான கழிவுகள் கலப்பதைத் தடுக்க போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இத்தகைய சூழலில் ஆறுகளில் நுரை பொங்குவதற்கு சோப்பு, ஷாம்பு பயன்பாடு தான் காரணம் என நகைச்சுவை செய்வதை விடுத்து ஆறுகளைப் பாதுகாக்க சுற்றுச்சூழல் அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். #Rajeev | #RiverPollution | #AnbumaniRamadoss
9
12
262
ஆறுகளில் நுரை பொங்குவதற்கு சோப்பு, ஷாம்பு பயன்பாடு தான் காரணமா? யாருடைய குரலாக ஒலிக்கிறார் சுற்றுச்சூழல் அமைச்சர்? திருப்பூரில் ஓடும் நொய்யல் உள்ளிட்ட ஆறுகளில் நுரை பெருக்கெடுப்பதற்கு சோப்பு மற்றும் ஷாம்பு பயன்பாடு தான் காரணம் என்று அமைச்சர் மருத்துவர் வி.கே. இராஜிவ் கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்தக் கருத்தைக் கூறியிருப்பவர் தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டுத் துறை அமைச்சர் என்பது தான் வருத்தமும் கவலையும் அளிக்கிறது. நொய்யல் உள்ளிட்ட ஆறுகளில் நுரை பொங்குவதற்கு காரணம் கழிவுகள் கலக்கவிடப்படுவது தான் என்பது சிறு குழந்தைகளும் அறிந்தது தான். கோவை, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சாயப்பட்டறைக் கழிவுகள் நொய்யல் ஆற்றில் கட்டுப்பாடின்றி கலக்கவிடப்படுவது தான் அதில் நுரை பெருக்கெடுப்பதற்கு காரணம் ஆகும். நொய்யலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஒரத்துப்பாளையம் அணையில் சாயப்பட்டறைக் கழிவுகள் கலந்திருப்பது தான் அந்த அணையைக் திறக்கக் கூடாது என உழவர்கள் போராட்டம் நடத்துவதற்கு காரணம் என்பதும் பெரும்பான்மையினர் அறிந்தது தான். தென்பெண்ணை ஆற்றில் கெலவரப்பள்ளி அணையில் நுரை பெருக்கெடுப்பதற்கு காரணம் கர்நாடகத்தில் அந்த ஆற்றில் கலக்கவிடப்படும் கழிவுகள் தான். இந்த இரு ஆறுகளிலும் கழிவுகள் கலக்கவிடப்படுவதைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த ஆறுகளை பலமுறை நான் நேரில் ஆய்வு செய்து அறிவுறுத்தியுள்ளேன். உச்சநீதிமன்றமும் இதுதொடர்பாக தமிழக, கர்நாடக அரசுகளுக்கு பல ஆணைகளை பிறப்பித்திருக்கிறது. இவ்வளவுக்குப் பிறகும் அந்த ஆறுகளை தூய்மைப்படுத்த வேண்டிய பொறுப்பில் உள்ள அமைச்சர் ஒருவரே இவ்வாறு கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. சுற்றுச்சூழல் அமைச்சர் இந்தக் கருத்துகளை எந்த சூழலில் கூறினார் என்பதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும். திருப்பூர் காசிபாளையம் பொது சுத்திகரிப்பு நிலையத்தில் சாயக்கழிவுநீர் சுத்திகரிப்புக் கட்டமைப்புகளை ஆய்வு செய்த அவர், திருப்பூரில் சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்கள் சிறப்பாகச் செயல்படுகின்றன என்று பாராட்டியது மட்டுமின்றி, சாய ஆலை உரிமையாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த பிறகு இவ்வாறு கூறியிருக்கிறார். அதை வைத்து பார்க்கும் போது தான் அமைச்சர் யாருடைய குரலாக ஒலிக்கிறார் என்ற ஐயம் ஏற்படுகிறது. தமிழ்நாட்டில் ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் சாயப்பட்டறை, நகரக் கழிவுகள், திடக்கழிவுகள் உள்ளிட்ட பல வகையான கழிவுகள் கலப்பதைத் தடுக்க போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இத்தகைய சூழலில் ஆறுகளில் நுரை பொங்குவதற்கு சோப்பு, ஷாம்பு பயன்பாடு தான் காரணம் என நகைச்சுவை செய்வதை விடுத்து ஆறுகளைப் பாதுகாக்க சுற்றுச்சூழல் அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். @CMOTamilnadu
58
175
13
519
99,323
காலத்தின் கோலம்...😲😲
ஆற்றுப் படுகைகளில் நுரை பொங்கும் பிரச்சனைக்கு சோப்பு, ஷாம்பு காரணம் - அமைச்சர் ராஜீவ் புதிய விளக்கம்.. #Tiruppur | #Rajeev | #River | #PolimerNews
9
21
546
ARUL Rathinam retweeted
"பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அறிவிக்கை செய்ய வேண்டும்" - தலைமை வனப் பாதுகாவலர் ராகேஷ்குமார் ஜகானியாவிடம் மனு கொடுத்த பாமக சட்டமன்றக் குழுத் தலைவர் சௌமியா அன்புமணி #SowmiyaAnbumani | #PMK | #PallikaranaiMarshland
21
33
3,348
சென்னையில், ஆங்கில செய்தி நிறுவனங்களுக்கு நேர்காணல் அளித்த போது.! #SavePallikaranaiWetland #Pallikaranai #PasumaiThaayagam #PMK #sowmiyaanbumani
1
33
93
1,369
சென்னையில், தமிழ்நாடு ஈரநிலங்கள் ஆணையம் உறுப்பினர் செயலர், ராகேஷ் குமார் ஜகானியா, IFS அவர்களை சந்தித்து கீழ்க்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முறையிட்டபோது.! 1.பள்ளிக்கரணை வடிநிலத்தில் உள்ள 65 நீர் நிலைகள் மற்றும் நீர் வரும் வழிகளை பள்ளிக்கரணை சதுப்புநிலத்தின் தாக்கப்பகுதிகளில் (zone of influence) இணைக்க வேண்டும் 2.பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை Wetlands (Conservation and Management) Rules, 2017 விதிகளின் கீழ் உடனடியாக அறிவிக்கை (Notification) செய்ய வேண்டும். 3.தமிழ்நாடு ஈரநிலங்கள் ஆணையம் (Tamil Nadu State Wetland Authority) அமைக்கப்பட்ட 8 ஆண்டுகளில் ஒரே ஒரு சதுப்புநிலத்தைக் கூட அறிவிக்கை செய்யவில்லை. இனிமேலும் காலம் தாழ்த்தாமல் அனைத்து சதுப்புநிலங்களையும் அறிவிக்கை செய்ய வேண்டும். 4.தமிழ்நாடு ஈரநிலங்கள் ஆணையத்தின் கூட்டம் (Tamil Nadu State Wetland Authority) ஒரே ஒருமுறை கூட நடக்கவில்லை. தமிழ்நாடு ஈரநிலங்கள் ஆணையத்தின் கூட்டத்தை உடனடியாக நடத்த வேண்டும். 5.உச்சநீதிமன்ற உத்தரவின் படி தமிழத்தின் 26,883 சதுப்புநிலங்களின் எல்லைகளை வரையறை செய்ய வேண்டும். 6.தமிழ்நாட்டின் கடலோர சுற்றுச்சூழலை காப்பதற்கான உலக வங்கி திட்டத்தின் (World Bank Project - The Strengthening Coastal Resilience and the Economy – SHORE) கீழ் அமைக்கப்படும் பள்ளிக்கரணை புதிய சுற்றுச்சுவர், நடைபாதையை அகற்ற வேண்டும். @CMOTamilnadu #SavePallikaranaiWetland #Pallikaranai #PasumaiThaayagam #PMK
27
72
1,910
“கோரங்கி: ஆந்திர புயலால் அழிந்த வன்னியர் வணிக சாம்ராஜ்யம்!” ------------ வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் தற்போது ஆந்திராவின் காக்கிநாடா அருகே கரையை கடக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு இதே இடத்தை தாக்கிய ஒரு பெரும் புயலில் – ‘கோரங்கி’ எனும் ஊரின் வன்னியர்களின் வணிக சாம்ராஜ்யம் தகர்ந்து போனது. அந்த வரலாற்றை சுருக்கமாக காண்போம்! ஆந்திராவின் கோதாவரி ஆற்றின் முகத்துவாரத்தில் அமைந்துள்ள கோரங்கி எனும் ஊர், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ஒரு மிகப்பெரிய வர்த்தக துறைமுகமாகவும், கப்பல் கட்டும் தளமாகவும் இருந்தது. ஆங்கிலேயர்களின் பல வணிக கப்பல்கள் இங்கு கட்டப்பட்டன. பர்மாவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான வணிகப் போக்குவரத்தின் மையமாக கோரங்கி இருந்தது. கோரங்கி துறமுகத்தின் முதன்மையான வணிகர்களாக வன்னியர்கள் இருந்தனர். அவர்களில் இருந்து மிகப்பெரிய செல்வந்தர்கள் உருவாகினர். “பினபோத்து கஜேந்துருடு” பினபோத்து கஜேந்துருடு (Pinapotu Gajendrudu) எனும் கப்பல் தொழிலதிபர் 1759 ஆம் ஆண்டு வாக்கில் ‘கோனசீமா திருப்பதி’ எனப்படும் வாடபள்ளி வெங்கடேஸ்வர சாமி கோவிலை கட்டினார். 275 ஏக்கர் நிலமும் ஏராளமான நகைகளையும் இக்கோவிலுக்கு வழங்கினார். அரிதான சந்தனமரத்தில் வெங்கடேஸ்வர சாமி சிலையை அமைத்தார். “கோபநாதி கிருஷ்ணம வர்மா” கோபநாதி கிருஷ்ணம வர்மா (1775 – 1835), கோதாவரி ஆற்றில் கப்பல் தொழில் செய்தார். பெரும் செல்வந்தரான இவர் தனது நிலங்களையும் நகைகளையும் அளித்து 1823ஆம் ஆண்டில் அந்தர்வேதி லட்சுமி நரசிம்மசாமி கோவிலை எழுப்பினார். “மல்லாடி சத்தியலிங்க நாயகர்” கோரங்கியில் பிறந்த மல்லாடி சத்தியலிங்க நாயகர் (1840 – 1915), அங்கிருந்து பர்மா சென்று, ரங்கூன் நகரின் ஒரு மிகப்பெரிய கப்பல் அதிபராக இருந்தார். அங்கு அவர் சேர்த்த சொத்துக்களை கொண்டு காக்கிநாடாவில் 1600 ஏக்கர் நிலத்தில் கல்வி நிறுவனங்களை தொடங்கினார். அக்காலத்திலேயே 8 லட்சம் ரூபாயை கல்விக்கு அளித்தார். இப்போது அது பலநூறு கோடிகளுக்கு சமம். தமிழ்நாட்டின் செங்கல்வ நாயகர் போன்று ஆந்திராவின் கல்வி வள்ளல் சத்தியலிங்க நாயகர் என புகழப்படுகிறார். ஆந்திர மாநில பள்ளி பாடநூலில் இவரது வரலாறு இடம்பெற்றுள்ளது. “பொன்னமண்டா லட்சுமணசாமி வர்மா” பொன்னமண்டா லட்சுமணசாமி வர்மா, ஆந்திர மாநில வன்னியர்களின் தந்தை என போற்றப்படுகிறார். இவர் கோரங்கி துறமுக நகரில் 1869 பிறந்தார். கிழக்குக் கோதாவரி மாவட்ட அக்னிகுல சத்திரிய மகா சங்கத்தின் தலைவராக இருந்த இவர் போராடி, ‘பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் அனைத்து வன்னியர்களும் - தமிழகத்தில் 'வன்னியகுல சத்திரியர்கள்' என்றும் ஆந்திராவில் 'அக்னிகுல சத்திரியர்கள்' என்றும் அழைக்கப்படுவார்கள் என்றும் 1929ஆம் ஆண்டில் சென்னை மாகாண சபை தீர்மானம் நிறைவேற்ற செய்தார். இன்று வன்னியர்களின் சாதி சான்றிதழில் ‘வன்னியகுல சத்திரியா’ என்று குறிப்பிடப்படுவதற்கான அரசாணையை வெளியிட செய்தவர் இவர்தான். இவரது பிறந்தநாள் ஆந்திர மாநில அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. இவ்வாறு, ஆந்திர மாநிலத்தின் வன்னியர் தலைவர்களாக போற்றப்படும் பினபோத்து கஜேந்துருடு, மல்லாடி சத்தியலிங்க நாயகர், கோபநாதி கிருஷ்ணம வர்மா, பொன்னமண்டா லட்சுமணசாமி வர்மா ஆகிய நால்வருமே பழம்பெரும் துறைமுக நகரமான கோரங்கியுடனோ அல்லது கப்பல் வணிகத்துடனோ தொடர்புடையவர்கள் ஆகும். ------------ கோரங்கி துறைமுக நகரம் மற்றும் அதனுடன் தொடர்புடைய பர்மா, மலேசிய இந்திய சமூகத்தில் வன்னியர்கள் முதன்மையாக இருந்தனர். இப்போது அந்த துறைமுகம் அழிந்து, கோரங்கி சதுப்புநிலக் காடுகளாக உள்ளது. பழங்கால கடல் வணிகத்தின் அடையாளமாக அங்கு இப்போது ஒரு பழைய கலங்கரை விளக்கத்தின் இடிபாடு மட்டுமே எஞ்சியுள்ளது. “பின்னணி” சோழர்களும் பல்லவர்களும் படையெடுத்து சென்ற பகுதிகள், ஆட்சி செய்த பகுதிகளில் இப்போதும் வன்னியர்கள் பரவலாக வாழ்கின்றனர். ஆந்திராவில் குலோத்துங்க சொழனின் தந்தை ராஜராஜ நரேந்திரனும், பின்னர் குலோத்துங்க சோழனும், அதன் பின் அவனது மகன் வீர சோழனும் ஆட்சி செய்த கோதாவரி படுகை பகுதியில் இப்போதும் வன்னியர்கள் பரவலாக வசிக்கின்றனர். இந்திய சாதி அமைப்பில் ஒரு சாதிக்கு ஒரு தொழில் என்கிற மரபில் இல்லாமல், பல்வேறு தொழில்களில் ஈடுபடும் ஒரு சமூகமாக வன்னியர்கள் இருக்கின்றனர். மன்னராட்சி காலத்தில் போர்த்தொழிலை கொண்டிருந்தவர்கள், அதன்பின் பல்வேறு பணிகளில் ஈடுபட்டனர். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ஆந்திராவில் கடல்வணிகத்திலும் கப்பலோட்டும் தொழிலிலும் முன்னணியில் இருந்த வன்னியர்களின் கணிசமானோர் இப்போது மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு சமுதாயமும் அவரவர் சமுதாய அடையாளங்களை ஆவணப்படுத்துவதும், கொண்டாடுவதும் இக்காலத்தின் தேவை ஆகும். அந்தவகையில் – ஆந்திர மாநில வன்னியர் வரலாற்று தலைவர்களான பினபோத்து கஜேந்துருடு, மல்லாடி சத்தியலிங்க நாயகர், கோபநாதி கிருஷ்ணம வர்மா, பொன்னமண்டா லட்சுமணசாமி வர்மா உள்ளிட்ட வரலாற்று நாயகர்களை போற்றுவோம், #Vanniyars # AgnikulaKshatriya
1
41
101
5,434
“சென்னை ரேடார் செயல்படவில்லை: திருப்புகழ் குழு அறிக்கையை வெளியிடுமா தவெக அரசு?” ------------ ஒவ்வொரு மழைக்காலத்திலும் தமிழ்நாட்டில் ரேடார் செயல்படவில்லை என்பது வழக்கமான கதையாக உள்ளது. ஆட்சியாளர்கள் தொடர்ந்து ஒரே தவறையே செய்துகொண்டிருக்கிறார்கள்! சென்னை துறைமுகத்தில் உள்ள ரேடார் 2002 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட, 24 ஆண்டு பழைய ரேடார் ஆகும் (S-band Doppler Weather Radar). அது முறையாக செயல்படவில்லை. இதனை புதிதாக மாற்றுவதற்கான கருவிகளை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்வதாக மத்திய அரசின் IMD கூறியது. ஆனால், இந்த ஆண்டு 2026 ஜூலைக்கு பதிலாக, அடுத்த ஆண்டு 2027 ஜூலை மாதம் தான் ரேடார் கருவிகள் வந்து சேரும் என கைவிரித்துவிட்டார்கள். அதாவது, மழை, வெள்ளம் குறித்த முறையான முன்னறிவிப்புகளுக்கு வழி இல்லை என்பது தமிழ்நாடு அரசுக்கு ஏற்கெனவே தெரிந்த செய்திதான். காலநிலை குறித்த துல்லியமான முன்னறிவிப்பு அனைவருக்கும் (early warning for all) கிடைக்க வேண்டும் என ஐநா அவை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் மழை, புயல், வெள்ளம், வெப்பம் குறித்து துல்லியமான முன்னறிவிப்பு (Early Warning) கட்டமைப்புகள் அமைக்கப்படுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும். இந்திய அளவில் வானிலை துறை இருப்பது போன்றே தமிழ்நாட்டுக்கான வானிலை துறையை உருவாக்கவும், மாநிலத்துக்கான ரேடார் கருவிகள் உள்ளிட்ட முன்னறிவிப்பு கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தவும் வேண்டும். 2021 சென்னை பெருநகர வெள்ள பேரிடர் தடுப்பு மற்றும் மேலாண்மைக்கான ஆலோசனைக் குழு (திருப்புகழ் குழு) அறிக்கை 2023 மார்ச் மாதம் முதலமைச்சரிடம் தாக்கல் செய்யப்பட்டது. திமுக அரசு ஒளித்து வைத்த இந்த அறிக்கையை தவெக அரசு இனியாவது வெளியிட வேண்டும். சென்னைப் பெருநகருக்கான தகவமைப்பு மற்றும் பேரிடர் சமாளிப்பு திட்டங்களை (Adaptation and Resilience Action Plan) வெளிப்படையாகவும் முழுமையான மக்கள் பங்கேற்புடனும் செயலாக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும். #ChennaiRains #ChennaiRadar #ChennaiFloods #ThiruppugazhPanel
9
13
488
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் சுற்றுச்சூழல் முக்கியத்துவம், அதன் பாதுகாப்பின் அவசியம் மற்றும் அதனைப் பாதுகாப்பதில் நமக்குள்ள சமூகப் பொறுப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உரையாற்றியபோது.! #SavePallikaranaiWetland #Pallikaranai #ChennaiRains #AnbumaniRamadoss #sowmiyaanbumani #PMK
2
32
1
113
2,454
"சேலம் குப்பை எரிஉலை (Incinerator) திட்டத்தை முனைவர் சௌமியா அன்புமணி MLA எதிர்ப்பது ஏன்? ----------- விரிவான விளக்கம் ----------- வட சென்னை, தென் சென்னை, கீரப்பாக்கம் (கேளாம்பாக்கம்), சேலம், கோவை, மதுரை, திருநெல்வேலி ஆகிய ஊர்களில் குப்பையை எரித்து மின்சாரம் உற்பத்தி செய்வதாக (waste-to-energy) கூறி, ஆண்டுக்கு பல லட்சம் டன்கள் பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகளை எரிக்கும் incinerator நாசகார திட்டங்களை அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இவற்றில், சேலம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் குப்பை எரிஉலை திட்டமிடப்பட்டுள்ள பகுதியை இன்று பசுமைத் தாயகம் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி MLA அவர்கள் பார்வையிட்டு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். குப்பைகளை எரிக்கும் incinerator நாசகார திட்டங்கள் அனைத்தும் மிக மிக ஆபத்தானவை ஆகும். காற்று மாசுபாடு, உடல்நலக் கேடுகள், புவிவெப்பமடைய காரணமான பசுங்குடில் வாயுக்களை வெளியேற்றுதல், பொருளாதார இழப்பு என பல கேடுகளுக்கு வழிவகுக்கும் இத்திட்டங்களை முற்றிலுமாக கைவிட வேண்டும். "தமிழ்நாட்டில் குப்பை Incinerator வரும் இடங்கள்" தமிழ்நாட்டில் (1) சேலம், ஈரோடு, கரூர், நாமக்கல், தருமபுரி குப்பைகளை, சேலம் - ஜாகிர் அம்மாபாளையத்திலும், (2) வடசென்னை குப்பைகளை கொடுங்கையூரிலும், (3) தென் சென்னை குப்பைகளை பெருங்குடியிலும், (4) தாம்பரம், ஆவடி மற்றும் 6 நகராட்சி குப்பைகளை - வண்டலூர் கேளாம்பாகம் நெடுஞ்சாலை அருகில் உள்ள கீரப்பாக்கத்திலும், (5) கோவை, திருப்பூர் குப்பைகளை கோவை - வெள்ளலூரிலும் (6) மதுரை மாநகர குப்பைகளை வெள்ளக்கல் பகுதியிலும், (7) மற்றும் திருநெல்வேலியிலும் குப்பை எரிஉலை (Incinerator) திட்டங்களை அமைக்கும் பணிகளை தமிழ்நாடு அரசு முன்னெடுத்துள்ளது. ----------- "குப்பை எரிஉலை = மாபெரும் மாசுபாடு" குப்பை எரிஉலையால் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் விஷக் காற்று வெளியாகும். டையாக்சின், சல்பர் டையாக்சைடு, கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் டையாக்சைடு, பாதரசம், காட்மியம், காரீயம், கரியமில வாயு, டையாக்சைடு மற்றும் ஃபியூரன் உள்ளிட்ட நச்சுக்கள் வெளியாகும். "குடிநீர் & உணவில் நச்சு சாம்பல்" குப்பை எரிஉலையிலிருந்து வெளியாகும் சாம்பல் நுண்துகள்கள் காற்றில் பல கிலோமீட்டர் தொலைவுக்கு பரவும். குளம், ஏரி நீரில் நச்சு சாம்பல் கலக்கும். நிலம் விஷமாகும். உணவுப்பொருட்களில் கூட விஷச் சாம்பல் படியும். குப்பை எரிஉலையில் உருவாகும் நச்சு சாம்பல் கொட்டிவைக்கப்படும் பகுதிகளில் நிலத்தடி நீர் நஞ்சாக மாறும். "உயிரைக் கொல்லும்" குப்பை எரிஉலையிலிருந்து வெளியாகும் நச்சு ரசாயனங்களால் புற்றுநோய், இருதய நோய்கள், மூச்சுக்குழல் நோய்கள், ஆண்மைக் குறைவு உள்ளிட்ட ஏராளமான பதிப்புகள் ஏற்படும். தோல்நோய், ஈரல் பாதிப்பு, ஆஸ்துமா என பலக்கேடுகளுக்கு குப்பை எரிப்பு வழிவகுக்கும். குழந்தைகளும் வயதானவர்களும் அதிகம் பாதிக்கப்படுவார்கள். ----------- "சமூகநீதிக்கு எதிரான சுற்றுச்சூழல் இனவாதம்" குப்பை எரி உலைகள் அமைக்கப்படும் பகுதிகளில் பகுதிகளில் ஏழைகள், நடுத்தர பிரிவினர், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பினரே அதிகம் வசிக்கின்றனர். இவை உயர் வகுப்பினர் வசிக்கும் பகுதிகளில் அமைக்கப்படுவது இல்லை. மக்களின் உடல் நலனை கடுமையாக பாதிக்கும் திட்டங்களை இதுபோன்ற பின்தள்ளப்பட்ட வகுப்பினர் வசிக்கும் பகுதிகளில் அமைப்பது சுற்றுச்சூழல் இனவாதம் (Environmental racism) ஆகும். இது சமூகநீதிக்கு எதிரானது. "காலநிலை மாற்றத்தை அதிகமாக்கும்" மின்சார உற்பத்தி தொழில்நுட்பங்களில் மிகவும் மாசுபடுத்தக்கூடியது எரிஉலைதான். நிலக்கரி அனல்மின் நிலையத்தை விட 28 மடங்கு அதிக டையாக்சின், 3 மடங்கு அதிக நைட்ரஜன் ஆக்சைடு, 14 மடங்கு அதிக பாதரசம், 6 மடங்கு அதிக சல்பர் டையாக்சைடு, இரண்டரை மடங்கு அதிக கரியமிலவாயு ஆகிய மாசுக்கள் குப்பை எரிஉலையில் இருந்து வெளியாகிறது. "பொருளாதார ரீதியில் பேரிழப்பு" குப்பையை வகை பிரிப்பது, மக்கும் கழிவுகளை மக்க வைப்பது, மறுசுழற்சி கழிவுகளை மறு சுழற்சிக்கு அனுப்புவது, கழித்துக்கட்டும் கழிவுகளை நிலநிரப்புவது போன்றவற்றுக்கு ஆகும் செலவுகளை விட, குப்பை எரிஉலை மிக அதிக செலவு பிடிக்கக் கூடியது ஆகும். இதனால் மாநகராட்சிகள் பெரும் பொருளாதார இழப்பினை சந்திக்கும். "தொழில்நுட்ப ரீதியில் சாத்தியமில்லாதது" இந்தியாவில் உருவாகும் குப்பை எரிஉலைகளுக்கு ஏற்றதாக இல்லாததால் லக்னோ, புனே, கான்பூர் உள்ளிட்ட பல இடங்களில் தொடங்கப்பட்ட எரிஉலைத் திட்டங்கள் படுதோல்வியடைந்தன. அவை நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டன. தமிழ்நாட்டின் குப்பையில் மிக அதிக அளவு காய்கறிக் கழிவுகளும் உணவுக் கழிவுகளும் உள்ளன. இவை ஈரமாகவும் (higher moisture content) எரிப்பதற்கான கலோரி மதிப்பு குறைவாகவும் (low calorific value), மண், புழுதி கலந்ததாகவும் இருக்கின்றன. இவற்றைக் கொண்டு குப்பை எரிஉலையை (incinerator) இயக்குவது நடைமுறையில் சாத்தியமில்லை. "மேலை நாடுகளில் மூடப்படும் திட்டம்" மேலை நாடுகளின் மக்கள் குப்பை எரிஉலைகளை கடுமையாக எதிர்க்கின்றனர். அமெரிக்க நாட்டில் 1991 ஆம் ஆண்டில் 187 எரிஉலைகள் இருந்தன. ஆனால், இது 2024 ஆம் ஆண்டில் வெறும் 63 எரிஉலைகளாக குறைந்தது. 124 எரிஉலைகள் மூடப்பட்டன. மக்களின் எதிர்ப்புக்கு பணிந்து கடந்த 30 ஆண்டுகளில் அமெரிக்க நாட்டில் ஒரு குப்பை எரிஉலைக் கூட புதிதாக திறக்கப்படவில்லை. ஐரோப்பிய ஒன்றியமும் ஐரோப்பிய நாடாளுமன்றமும் அதன் உறுப்பு நாடுகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், 'ஐரோப்பிய நாடுகள் குப்பை எரிஉலை திட்டங்களுக்கு மானியம் வழங்கக் கூடாது' என அறிவுறுத்தியுள்ளது. "இந்தியாவில் படுதோல்வியடைந்த திட்டம்" இந்தியாவில் முதன்முறையாக 1987ஆம் ஆண்டில் பெரும் பொருட்செலவில் புதுதில்லியில் ஓக்லா குப்பை எரிஉலை தொடங்கப்பட்டது. அந்த திட்டம் படுதோல்வியில் முடிந்து, இழுத்து மூடப்பட்டது. அதன்பின்னர் தொடங்கப்பட்ட பெரும்பாலான திட்டங்கள் இழுத்து மூடப்பட்டன. எஞ்சியிருக்கும் ஒருசில திட்டங்களும் அப்பகுதி மக்களுக்கு ஏற்படும் கடுமையான உடல்நலக்கேடுகள் காரணமாக மக்களால் எதிர்க்கப்படுகின்றன. "தமிழ்நாடு அரசு எரிஉலை திட்டங்களை கைவிட வேண்டும்' காற்று மாசுபாடு, உடல்நலக் கேடுகள், புவிவெப்படையும் வாயுக்களை வெளியேற்றுதல், பொருளாதார இழப்பு என பல கேடுகளுக்கு வழிவகுக்கும் குப்பை எரிஉலை திட்டங்களை தமிழ்நாடு அரசு முற்றிலுமாக கைவிட வேண்டும். இந்திய அரசின் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 உள்ளிட்ட குப்பை மேலாண்மைக்கான விதிகளை முழுமையாக பின்பற்றி குப்பை பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். பூஜ்ய குப்பை எனப்படும் (Zero Waste) கோட்பாட்டை தமிழ்நாடு அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும். #ZeroWaste #incineration #sowmiyaanbumani #PasumaiThaayagam
2
12
31
608
"பருத்தி முட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்" - திமுக அரசின் அநீதியை தொடரும் தவெக அரசு! ————- சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக உலக வங்கியிடம் 21 கோடி ரூபாய் கடன் வாங்கி, அந்த நிதியில் பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை அழிக்கும் தடுப்புச் சுவரை கட்டியது தமிழ்நாடு அரசு! இப்போது பெய்த மழையால் அங்கே தேங்கிய தண்ணீரை - மோட்டார் வைத்து வெளியேற்றிக் கொண்டிருக்கிறார்கள். இயற்கையாக ஓடும் தண்ணீரை தடுத்து சுவர் கட்டிவிட்டு, அந்த தண்ணீரை இப்போது மோட்டார் வைத்து வெளியேற்றும் வெட்டிவேலையை தவெக அரசு எதற்காக செய்ய வேண்டும்? மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களது அறிவுரையை ஏற்று, பள்ளிக்கரணை சதுப்புநிலத்தின் உள்ளே கட்டப்படும் சுவரை உடனடியாக இடிக்க வேண்டும். #SavePallikaranaiWetland #Pallikaranai #ChennaiRains #AnbumaniRamadoss
29
2
50
1,484
"இன்றும் வாழும் இராஜராஜ சோழனின் உறவினர்கள்!" ----------- தென் இந்தியாவில் ஆட்சி செய்த மன்னர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டனர். அதே நேரத்தில், பெரும்பாலும் சத்திரிய வம்சம் என்கிற அடிப்படையில் திருமண உறவிலும் இருந்தனர். மாமன்னன் ராஜராஜ சோழனின் 1,041வது சதய விழா கொண்டாடப்படும் இந்த தருணத்தில், சோழர்கள் வழி வந்தவர்கள், சோழர்களுடன் திருமண பந்தந்ததில் இருந்த மரபினர் இப்போதும் தமிழ்நாட்டில் வாழ்ந்து வருகின்றனர் என்பதையும் நாம் கொண்டாட வேண்டும். அவற்றில் ஒரு எடுத்துக்காட்டாக, சோழர்களுக்கும் கீழை சாளுக்கியர்களுக்கும் இடையிலான திருமண உறவின் வழிவந்த சமூகத்தினர் வரலாற்றை காண்போம். கீழே படத்தில் இருப்பது – தஞ்சையில் உள்ள முதலாம் இராஜராஜ சோழன் சிலையும், ஆந்திராவின் இராஜமுந்திரி எனப்படும் இராஜமகேந்திரவரம் இரயில் நிலையத்தில் உள்ள இராஜராஜ நரேந்திரன் சிற்பமும் ஆகும். இவர்களில் இராஜராஜன் தாத்தா; இராஜராஜ நரேந்திரன் பேரன் ஆகும். கூடவே, இவர் முதலாம் இராஜேந்திர சோழனின் மருமகனும், முதலாம் குலோத்துங்க சோழனின் தந்தையும் ஆவார். ----------- “முதலாம் குலோத்துங்க சோழன் வரலாறு” புகழ்பெற்ற சோழ அரசன் முதலாம் குலோத்துங்கன் தந்தை வழியில் சோழ அரசனாக முடிசூடவில்லை. மாறாக, தாய் வழியில்தான் சோழ அரசனாக முடிசூடினார். அவர் சோழ அரசனாக பதவி ஏற்கும் முன்பாக, கிருஷ்ணா – கோதாவரி ஆறுகளுக்கு இடையே உள்ள கீழை சாளுக்கிய வேங்கி நாட்டின் அரசராக இருந்தார். அங்கு அவருடைய பட்டப்பெயர் ஏழாம் விஷ்ணுவர்தனன். (1044ஆம் ஆண்டு கங்கைகொண்ட சோழபுரத்தில் பிறந்த அவரது இயற்பெயர் இராஜேந்திரன்). “பின்னணி வரலாறு” சோழர்களில் மிகவும் புகழ்பெற்ற முதலாம் இராஜராஜ சோழன் வேங்கி நாட்டின் மீது படையெடுத்து வெற்றி கொண்டு அந்நாட்டு இளவரசன் விமலாதித்தியனை கைது செய்தார். பின்னர் அவனுக்கே தனது மகள் குந்தவையை மணமுடித்து வேங்கி நாட்டின் அரசனாக்கினார். விமலாதித்தனுக்கும் குந்தவைக்கும் பிறந்த இராராஜ நரேந்திரன் (கி.பி. 1022 – 1063) அடுத்த வேங்கிநாட்டு அரசனார். அவரே இராஜமகேந்திரவரம் (இராஜமுந்திரி) நகரை புதிய தலைநகராக நிர்மாணித்தார். இராஜராஜ சோழனின் மகனான முதலாம் இராஜேந்திர சோழன் தனது மகள் அம்மங்கை தேவியை - இராஜராஜ நரேந்தரனுக்கு மணம் செய்துவைத்தார். (அதாவது, முதலாம் இராஜேந்திரன் தனது தங்கை மகனுக்கு தனது மகளை மணம் செய்து கொடுத்தார்) இராஜராஜ நரேந்திரனுக்கும், இராஜேந்திர சோழனின் மகள் அம்மங்கை தேவிக்கும் கங்கைகொண்ட சோழபுரத்தில் பிறந்தவர் முதலாம் குலோத்துங்கன். இவர் கி.பி. 1063ஆம் ஆண்டில், இராஜராஜ நரேந்திரனின் மறைவுக்கு பிறகு வேங்கி நாட்டின் அரசராக ‘ஏழாம் விஷ்ணுவர்தன்’ என்கிற பெயருடன் முடிசூடினார். பல்லவர்களின் கீழ் சிற்றரசர்களாக இருந்த சோழர்கள் கி.பி. 849 முதல் விஜயாலய சோழன் முதல் பிற்கால சோழப்பேரரசாக உருவெடுத்தார்கள். இவர்களின் தந்தைவழி சோழ மரபு 1070-இல் அதிராஜேந்திரன் காலத்துடன் முடிவுற்றது. அதிராஜேந்திரன் காலத்திற்கு பிறகு கி.பி.1070 ஆம் ஆண்டில் சோழப்பேரரசில் வாரிசு இல்லாத நிலை ஏற்பட்ட போது – தாய்வழி வழியில் முதலாம் குலோத்துங்கன் சோழ அரசனாக முடிசூடினார். இவர் புகழ்பெற்ற சோழப்பேரரசனாக விளங்கினார். சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக சோழநாட்டை சிறப்பாக ஆட்சி செய்தார். குலோத்துங்க சோழன் சோழநாட்டின் அரசனாக முடிசூடிய பின்னர், தனது மகன் வீரசோழனை வேங்கி நாட்டின் அரசனாக்கினார். ----------- “சோழர்களின் திருமண பந்தம்” பல்லவர் ஆட்சியில் சோழர்கள் சிற்றரசர்களாக இருந்தது போன்றே, சோழர்களின் கீழ் பல்லவ மரபில் வந்தவர்கள் சிற்றரசர்களாக இருந்தனர். அவர்கள் காடவராயர்கள், கச்சிராயர்கள், சம்புவராயர்கள் என்று அழைக்கப்பட்டனர். குலோத்துங்க சோழனுடைய பட்டத்து அரசியாக இருந்தவர் தியாகவல்லி. இவர் கடலூர் அருகே உள்ள திருச்சோழபுரம் பகுதியை சேர்ந்த காடவர்/கச்சிராயர் வம்சத்தை சேர்ந்தவர். 'பொன்னின்மாலை மலர்மாலை பணிமாறியுடனே புவனி காவலர்கள் தேவியர்கள் சூழ்புடைவரச்- சென்னி யாணையுடனாணையை நடத்துமுரிமை தியாகவல்லி நிறைசெல்வியுடன் சேர்ந்துவரவே’ என கலிங்கத்துப்பரணிப் பாடலில் இவர் புகழப்படுகிறார். இப்போது அந்த ஊர் தியாகவல்லி பெயரிலேயே உள்ளது. காஞ்சிபுரம், திருக்குவளை பிரம்மபுரீஸ்வரர் கோவில்களில் கண்டறியப்பட்ட கல்வெட்டுகளில் 'குலோத்துங்க சோழ கச்சிராயர்' என்ற பெயர்களில் இவரது குடும்பம் குறிப்பிடப்படுகிறது. தியாகவல்லி நடுத்திட்டு பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற மங்களபுரீஸ்வரர் கோயிலுக்கு நிலதானங்களும் பல்வேறு திருப்பணிகளும் தியாவல்லியால் செய்யப்பட்டுள்ளன. ----------- “குலோத்துங்க சோழனுக்கு பின் வந்தவர்கள்” இராஜராஜ நரேந்திரனின் மகன் முதலாம் குலோத்துங்க சோழனுக்கு பின் அவன் மகன் விக்கிரம சோழன், அவன் மகன் இரண்டாம் குலோத்துங்கன், அவன் மகன் இரண்டாம் இராஜராஜன், அதன் பின் விக்கிரமசோழனின் மகள் வயிற்றுப் பேரன் இரண்டாம் இராஜாதிராஜன், அவனை அடுத்து மூன்றாம் குலோத்துங்கன், அவன் மகன் மூன்றாம் இராஜராஜன், அவன் மகன் மூன்றாம் இராஜேந்திரன் என எட்டு சோழ மன்னர்கள் ஆட்சி செய்தனர். “இரண்டாம் இராஜாதிராஜன் எனும் சம்புவராயர்” இவர்களில் விக்கிரமசோழனின் மகள் வயிற்றுப் பேரன் இரண்டாம் இராஜாதிராஜன், சம்புவரையர் மரபை சேர்ந்தவர் ஆகும். இவரது இயற்பெயர் எதிரிலிப் பெருமாள். (இவருக்கு முன்னர் இரண்டாம் இராஜராஜன் – பின்னர் மூன்றாம் குலோத்துங்கன் உள்ளிட்ட அனைவரும் தந்தைவழியில் சோழர்கள்). “கோப்பெருஞ்சிங்க காடவராயர்” காடவராய மன்னர்களில் புகழ்பெற்றவர் கோப்பெருஞ்சிங்கன் ஆகும். கோப்பெருஞ்சிங்கன் சோழ இளவரசியை தில்லையில் வைத்து மணம் புரிந்தார். அதே கோப்பெருஞ்சிங்க காடவராயன், கி.பி. 1216 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த தனது மைத்துனனான சோழ அரசன் மூன்றாம் இராசராச சோழனை கைது செய்து சேந்தமங்கலத்தில் சிறை வைத்தார். “கருணாகர தொண்டைமான்” குலோத்துங்க சோழன் வெற்றிகொண்ட மிக முக்கியமான போர், வட கலிங்கப் போர் ஆகும். கி.பி. 1112-ஆம் ஆண்டுக்கு முன்பு நடத்தப்பட்ட இந்த போர் கலிங்கத்துப் பரணியில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இதற்கு தலைமையேற்றவர் கருணாகர தொண்டைமான் ஆகும். கலிங்கத்துப் போரில் வெற்றி கொண்ட கருணாகரத் தொண்டைமானின் குலப் பெருமையை பற்றி கம்பர் பாடிய சிலை எழுபது கொண்டாடுகிறது. ----------- “இன்றும் வாழும் இராஜராஜ சோழனின் உறவினர்கள்!’ குலோத்துங்க சோழனின் பட்டத்து இளவரசியான தியாகவல்லியின் கச்சிராயர் வம்சத்தை சேர்ந்தவர்கள் இப்போதும் தியாகவல்லி, முகாசாபரூர் (விருதாசலம்), விளந்தை (ஆண்டிமடம்), திருக்கனங்கூர், ஓலையாம்புதூர் உள்ளிட்ட ஊர்களில் வாழ்கின்றனர். இராஜராஜ சோழன், குலோத்துங்க சோழன் என சோழ மன்னர்கள் அனைவரும் சிதம்பரம் நடராஜரை தமது குலதெய்வமாகக் கொண்டு அங்கு முடிசூடிக்கொண்டனர். அதே வழக்கத்தை இன்றும் பின்பற்றும் பிச்சாவரம் சோழகர்கள் இப்போது கச்சிராயர்களுக்கு உறவினர்களாக உள்ளனர். #RajarajaChola #CholaDynasty
1
41
3
102
14,239