ஜீவன் retweeted
வச்சி செதுக்கிட்டான் மனுஷன் 🔥🔥.
இதைக் கேட்டால் + மானம் இருந்தால் !
பயபுள்ள மருந்து குடிச்சிடுவான்!
ஜீவன் retweeted
என் (அப்பாவழி)தாத்தாவிற்கு ஒரு தங்கை இருந்தார். பெயர் பொட்டு. எங்களுக்கு பொட்டுப்பாட்டி. அவர் திருமண பந்தத்தில் இருந்து ஆரம்பத்திலேயே விலகி (குழந்தையின்மையால் இருக்கலாம்) பிறந்த வீட்டிற்கே வந்துவிட்டார்.
ஜீவன் retweeted
ஒரு மாணவன் 34 மார்க் பெற்று ஃபெயில் ஆனால் பாஸாகும் ஒரு மார்க்கையும் அடுத்த முறை அவனே பொறுப்பாக படித்து நன்கு எழுதி அவன் தான் 35 மதிப்பெண்கள் பெற்று வேண்டும். மாணவன் எழுதாமல் அந்த ஒரு மார்க்கை கூடுதலாக அந்த வாத்தியார் போட்டால் என்றால் அவர் தவறானவர் என்று அர்த்தம். வாத்தியார் மார்க் போட்டு பாஸ் செய்த ஒரு மாணவனோடு சமீபத்தில் கூட்டணி அமைத்து இருப்பதால் அண்ணன் குழம்பிவிட்டார் போலும்!
ஜீவன் retweeted
இன்றைக்கு பிஜேபில மந்திரியாவும் எம் பி யாகவும் கட்சிப் பொறுப்புகளிலும் இருந்து கொண்டு அராஜகம் செய்யும் முக்கால்வாசி பேர்கள் முன்னாள் காங்கிரஸ்காரர்கள்!!! காங்கிரஸ் எனும் சாஃப்ட் சங்கி கட்சியில் இருந்து பிஜேபி போயி முழு நேர சங்கியானவர்கள் ஒர்ஜினல் பிஜேபிகாரனை விட மிக மோசமான நடத்தை உடையவர்கள். யார் யார்னு லிஸ்ட் சொல்லவா மேடம்? இதெல்லாம் ஒரு பொழப்பு….
குத்துவிளக்கை நீங்களே ஏற்றுங்கள் என்று மெழுகுவர்த்தியை கொடுத்த காங்கிரஸ் ராஜ்ய சபா MP கிறிஸ்டோபர் திலக் அவர்கள் பற்றியும் அதை அநாகரிகமாக தட்டிவிட்ட முன்னாள் திமுககாரர் நவல்பட்டு MLA விஜி பற்றியும் Protocol பற்றியும் பேசியே ஆக வேண்டும்.
சமீபத்தில் ஒரு சம்பவம்.
வருடாவருடம் தலித் மாணவர்கள் வெளிநாட்டில் படிக்க மத்திய மாநில அரசுகள் மானியம் தருவது வழக்கம். சமீபத்தில் கல்வி உதவி கிடைத்த 25 மாணவர்களுக்கு இங்கிலாந்தில் Bristol University இல் போய் படிக்க தேவையான கடிதத்தை ஒன்றிய அரசு தராமல் காலம் தாழ்த்தி கொண்டு இருந்தது. அந்த கடிதம் இல்லாமல் விசா போன்ற எதையும் நகர்த்த முடியாமல் தில்லியில் சம்பந்தப்பட்ட அமைச்சகத்தின் வாசலில் வாரக்கணக்கில் கதியாய் கிடந்தனர் அந்த 25 மாணவர்களும். மத்தியில் சம்பந்தப்பட்ட துறை செயலாளரோ கடிதம் தராதது மட்டுமல்ல இந்த மாணவர்களுக்கு எந்த மரியாதையும் தராமல் நடத்தி இருக்கிறார்.
மத்திய அரசிடம் அழுத்தம் கொடுத்து அந்த கடிதத்தை வாங்கி தர யாரும் முன்வரவில்லை. சில MPக்கள் ஆதரவு கடிதம் மட்டும் கொடுத்தனர். ஆனால் அது மட்டும் போதவில்லை. மத்திய அரசிடம் சண்டையிட்டு அதை வாங்கி தர தேவை இருந்தது. அந்த 25 தலித் மாணவர்களில் இரண்டு பேர் தமிழர்கள். அவர்கள் சமூக செயல்பாட்டாளர் புளியந்தோப்பு மோகன் அவர்களை அணுக, அவர் திரு. கிறிஸ்டோபர் திலக் அவர்களை அணுக கூறினேன். அந்த மாணவர்களுக்கு பல வாரங்கள் அலைந்து இறுதியில் வெறும் 13 நாட்கள் தான் இருந்தது இங்கிலாந்து Bristol பல்கலைக்கழகத்தில் படிப்பு தொடங்குவதற்கு.
கிறிஸ்டோபர் திலக் MP அவர்களிடம் சொன்ன மாத்திரத்தில் தில்லியில் சம்பந்தப்பட்டவர்களிடம் பேசி அழுத்தம் கொடுக்க துவங்கினார். துறை செயலாளர் இந்த மாணவர்களை அதன் பிறகு தான் மதித்து பேச துவங்கினார். தீவிரமாக ஒன்றிய அரசின் தலையில் அமர்ந்து பல வாரங்களாக நடக்காத வேலையை இரண்டே நாட்களில் முடித்து கொடுத்தார் கிறிஸ்டோபர் திலக் அவர்கள். இப்போது அந்த 25 மாணவர்களும் இங்கிலாந்து போய் நல்லபடியாக கல்வியில் சேர்ந்து விட்டார்கள். இந்தியா முழுவதும் 25 மாணவர்களும் இந்தியா முழுவதும் பல MPக்களிடம் கேட்டனர். அவர்கள் யாரும் செய்யாத ஒரு விஷயத்தை பாஜக அரசுடன் சண்டையிட்டு திரு. கிறிஸ்டோபர் திலக் MP அவர்கள் வாங்கி தந்தது சாதாரண விஷயம் அல்ல, தமிழகத்துக்கே பெருமையான விஷயம்.
34 எம் எல் ஏக்கள் வாக்களித்தால் தான் ஒரு மாநிலங்களவையின் எம் பி(Rajya Sabha MP) ஆக முடியும். அதிகாரத்திலும் பொறுப்பிலும் அனுபவத்திலும் கல்வியிலும் மிக மிக முக்கியமாக மக்கள் பணியிலும் நவல்பட்டு விஜியை விட பல மடங்கு சீனியர் திரு திலக் அவர்கள்.
திமுக என்றாலே அநாகரிகம் தான் அயோக்கியத்தனம் தான். திமிரும் அகம்பாவமும் தான் அவர்களின் அடையாளம். அந்த வழியில் வந்தவர் தான் இந்த நவல்பட்டு விஜி. கடந்த தேர்தலில் திமுகவில் இருந்து விலகி இப்போது த.வெ.க வில் இணைந்து இப்போது திருவெறும்பூர் எம்.எல்.ஏவாக இருக்கும் இந்த நவல்பட்டு விஜி கொஞ்சம் கூட அடிப்படை அரசியல் நாகரிகம் இல்லாமல் மாநிலங்களவை உறுப்பினராகவும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராகவும் பல வடகிழக்கு மாநிலங்களின் காங்கிரஸ் கமிட்டிகளின் பொறுப்பாளராகவும் இருந்து செயல்பட்டு வரும் திரு கிறிஸ்டோபர் திலக் அவர்களை குத்துவிளக்கு ஏற்ற விடாமல் தடுத்து மெழுகுவர்த்தியை தட்டிவிட்டது அநாகரீகத்தின் உச்சம்.
Protocol படி MP க்கு கீழே தானே MLA வருவார்? 6 MLA தொகுதி சேர்ந்தால் ஒரு MP. 34 MLA சேர்ந்தால் தான் ஒரு ராஜ்ய சபா MP. எப்படி Protocol படி ஒரு MLA, ராஜ்ய சபா MPக்கு முன்னால் வருவதாக பேட்டி கொடுக்கிறார் என்று புரியவில்லை.
பல ஆண்டுகளாக முதல்வர் விஜய் அவர்களுடனும் அவரது கட்சியுடனும் இணைந்து செயல்பட்டு வரும் சொந்த கட்சி உறுப்பினர்களை கூட அவதூறாக பேசி வருகிறார் இந்த முன்னாள் திமுககாரர்.
இவரின் இந்த செயல்பாடு திமுகவின் அராஜக கலாச்சாரத்தைத்தான் பிரதிபலிக்கிறது.
எம்.எல். ஏ விஜியின் செயலை வன்மையாக கண்டிக்கிறேன். இந்த விஷயத்தில் மிகவும் கண்ணியமாக நடந்து கொண்ட காங்கிரஸ் MP அவர்கள் மீது மரியாதை கூடுகிறது.
இதில் ஊடகங்கள் சொல்வது போல் தவெக காங்கிரஸ் இடையே எந்த பிரச்சனையும் இல்லை. திமுகவின் கேவலமான கலாச்சாரத்தின் எச்சம் தலைதூக்கி இருக்கிறது. அவ்வளவு தான்.
மாண்புமிகு முதல்வர் அவர்கள் நவல்பட்டு விஜியை கண்டிக்க வேண்டும். இது போன்ற மாற்றுக் கட்சி ஆட்கள் பழைய கலாச்சாரத்தை கொண்டு வருவார்கள் என்பதை உணர வேண்டும்.
@CMOTamilnadu @christilak
#ஜெய்காங்கிரஸ்
ஜீவன் retweeted
பொட்டு மாமா அடிமை மாணிக்கத்திடம் நிருபர் கேட்டானே ஒரு கேள்வி..
பெப்பே..பெப்பே என்று பம்முறானே..
ஜீவன் retweeted
MLA Shopping-இல் மும்முரமாக இருக்கும் முதலமைச்சருக்கு, மக்கள் மளிகைக் கடையில் கூட shopping செய்ய முடியாமல் கஷ்டத்தில் தவிப்பது தெரியுமா?
தாராபுரத்தில் பரப்புரைக்கு இடையே மளிகைக் கடை ஒன்றில் விலைவாசி உயர்வு குறித்து கேட்டேன். 4 மாதம் முன்பிருந்த விலையில் இருந்து அத்தியாவசியப் பொருட்களின் விலை பெருமளவுக்கு உயர்ந்துள்ளது.
அன்றாடச் சமையலுக்கே வீடுகள் விழிபிதுங்கி நிற்கின்றன. ரீல்ஸ் பார்த்தால் மக்களின் வயிறு நிறையுமா?
இந்தியா முழுவதும் பொருளாதார வளர்ச்சி இறங்குமுகத்தில் இருந்தபோது கூட, #DravidianModel ஆட்சியில் தமிழ்நாடு ஏறுமுகத்தில் இருந்தது.
ஆனால் இன்றைய நிலை என்ன?
இந்தியா முழுவதும் GST வருவாய் உயர்ந்த நிலையில் கூட, கடந்த மூன்று மாதங்களாகத் தமிழ்நாடு சரிவைச் சந்தித்து வருகிறது.
இந்த ஆட்சி வேலைக்கு ஆகாத Waste ஆட்சி என முடிவெடுத்து, தமிழ்நாடு அரசின் முதலீட்டு ஊக்குவிப்பு முகமையான Guidance TN-இல் இருந்தும் அனுபவமிக்க வல்லுநர்கள் வேறு மாநிலங்களுக்குச் செல்வதாகச் செய்திகள் வருகின்றன.
பொருளாதாரம், விலைவாசி, மின்சாரம், தொழில்துறை, சட்டம் ஒழுங்கு, மருத்துவம், பால்வளம் என எல்லாவற்றிலும் தமிழ்நாடு வீழ்ச்சியை நோக்கி வேகமாகச் சென்றுகொண்டிருக்கிறது.
இவற்றில் கவனம் செலுத்தாமல், விளக்குமாத்துக்குப் பட்டுக் குஞ்சம் என்பது போல எல்லாவற்றிலும் 'வெற்றி' என Sticker ஒட்டினால் போதும் என நினைக்கும் அரசிடம் மாட்டிக்கொண்டு மக்கள் தவிக்கின்றனர்.
#VoteForDMK #Dharapuram
ஜீவன் retweeted
இவனுங்க கிட்ட ஃபோன் பண்ணி அரசியலாக்க வேண்டாம் இது விபத்துதான்னு சொல்லிட்டே, அடுத்த ஃபோன் தலைவருக்கு அடிச்சு விஜயை கைது பண்ண சொல்லி இருக்கான் சுப்ரமண்யபுரம் சமுத்திரக்கனி...
#WATCH | "கரூர் சம்பவத்தில் இது ஒரு விபத்துதான்.. அரசியலாக்க வேண்டாம் என்றேன்" -திருமாவளவன்
#SunNews | #Vijay | #KarurStampede | #Thirumavalavan
ஜீவன் retweeted
May 13 அன்று சட்டமன்றத்தில் 25 அதிமுகவினர் எம்.எல்.ஏவாக இருந்தபோதே தவெக அரசுக்கு கட்சி மாறி வாக்களித்தனர்.
இதை நாடே பார்த்தது! சட்டமன்ற ஆவணங்களிலும் உள்ளது.
வாயிலே விரல் வச்சா கடிக்கவே தெரியாத பாப்பா போல மேடையில் அப்பாவி வேடம் போடுறதாலேதான் இதை டிராமா கவர்ன்மெண்ட் என்கிறோம்.
#WATCH | “MLA-வா இருந்துட்டு கட்சித் தாவல.. முறையா Resign பண்ணிட்டுதான்..”
தாராபுரம் பரப்புரை கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் ஓபன் டாக்
#SunNews | #TVKVijay | #Dharapuram | #HorseTrading
ஜீவன் retweeted
இந்தா எடுத்துக்கோங்க..
முதல்வர் விஜய் உறுதியளித்த வெளிப்படையான அரசை..
Come on, Take it.
#BREAKING | சட்டம் ஒழுங்கு பிரிவு இனி RTI சட்டத்தில் வராது! -தவெக அரசு புதிய உத்தரவு
#SunNews | #RTIAct | #TVKVijay | #சட்டம்ஒழுங்கு
ஜீவன் retweeted
ஒட்டுமொத்த TVK Eco System மும், paid media வும் பார்த்து பார்த்து கட்டிய elevation பிம்பத்தை ஒரே இடியில் மொத்தமாக தரைமட்டமாக ஆக்கிட்டார்.
பாவம்...
ஜீவன் retweeted
பலூன்காரர்.
மெரினாவில் மாலை ஆறு மணிக்கு ஒரு மனிதர் இருபத்தேழு பலூன்களைத் தூக்கிக்கொண்டு நடக்கிறார்.
காற்றில் அவை ஒரு பக்கம் சாய்கின்றன. அவர் அதை ஈடுகட்ட உடலை மறுபக்கம் சாய்த்து நடக்கிறார். தூரத்தில் இருந்து பார்த்தால் அவர் பலூன்களைத் தூக்கிச் செல்வது போல் அல்ல; பலூன்கள் அவரை இழுத்துச் செல்வது போல் இருக்கிறது.
பெயர் மணி. முப்பத்து நான்கு வயது. ஒன்பது வருடங்களாக இதே கடற்கரை.
ஒரு பலூன் இருபது ரூபாய். சிறப்பு வடிவம் — முயல், நட்சத்திரம், கார்ட்டூன் — நாற்பது. வாங்கும் விலை ஏழு. ஹீலியம் சிலிண்டர் வாடகை நாளொன்றுக்கு முன்னூறு.
"நாளைக்கு எத்தன விக்கும்?"
"சனி ஞாயிறு நாப்பது ஐம்பது. மத்த நாள் பத்து பதினஞ்சு. மழைன்னா பூஜ்யம்."
"மழைல வர்றதே இல்லையா?"
"வருவேன். ஆனா யாரும் வாங்க மாட்டாங்க. குழந்தைங்க வர மாட்டாங்க."
அவரிடம் ஒரு திறமை இருக்கிறது. அது ஒன்பது வருடங்களில் வந்தது என்று சொன்னார்.
"நான் ஒரு குடும்பத்தைப் பாத்தா, யாரு வாங்குவாங்க யாரு வாங்க மாட்டாங்கன்னு சொல்லிடுவேன் சார்."
"நிஜமா?"
"பாருங்க."
அடுத்த அரை மணி நேரம் அவர் எனக்கு அதைச் செய்து காட்டினார்.
"அந்தக் குடும்பம் — வாங்குவாங்க. அப்பா கையில ஃபோன் இல்ல. புள்ளையப் பாத்துட்டே இருக்காரு."
வாங்கினார்கள்.
"அந்தம்மா — வாங்க மாட்டாங்க. ரெண்டு புள்ள. ரெண்டு பேரும் கேப்பாங்க. ரெண்டு பலூன் நாப்பது ரூபா. அவங்க பர்ஸ் பாத்தீங்களா?"
வாங்கவில்லை.
"அந்த ஜோடி — வாங்குவாங்க. புள்ள இல்ல. காதலிக்கு வாங்குவான். அது சுலபம்."
வாங்கினார்கள். நாற்பது ரூபாய் நட்சத்திரம்.
"இது எப்படி?" என்றேன்.
"ஒன்பது வருஷம் சார். வேற ஒண்ணும் இல்ல."
பிறகு அவர் ஒரு விஷயத்தைச் சொன்னார். அது என்னை அன்று இரவு முழுக்க விடவில்லை.
"கேக்குற புள்ளைக்குப் பிரச்சினை இல்ல சார். அது கேக்கும், அழும், உருளும். ஏதோ ஒண்ணு நடக்கும் — வாங்கிக் கொடுப்பாங்க, இல்லைன்னா தூக்கிட்டுப் போயிடுவாங்க."
"அப்ப பிரச்சினை என்ன?"
"கேக்காத புள்ள."
"கேக்காத புள்ளையா?"
"பாத்துட்டே வரும் சார். என் பக்கத்துல வரும். நின்னு பாக்கும். அப்பா கூப்பிட்டா உடனே நடக்கும். ஒரு தடவை கூடக் கேக்காது."
"ஏன்?"
"அந்தப் புள்ளைக்குத் தெரியும் சார். வூட்ல நிலைமை என்னன்னு அதுக்குத் தெரியும். கேட்டா அப்பா கஷ்டப்படுவாருன்னு தெரியும். நாலு வயசுல அது தெரிஞ்சுடுது."
அவர் ஒரு நொடி நிறுத்தினார்.
"அது பாக்குற பார்வை இருக்கே சார். அத நான் ஒன்பது வருஷமா பாக்குறேன். இன்னும் பழகல."
"அப்ப என்ன பண்ணுவீங்க?"
"ஒண்ணும் பண்ண மாட்டேன்."
"இலவசமா கொடுக்க மாட்டீங்களா?"
அவர் தலையை ஆட்டினார். வலுவாக.
"கொடுக்கக் கூடாது சார்."
"ஏன்?"
"அப்பா முன்னாடி கொடுத்தா, அவரு ஏழைன்னு நான் சொன்ன மாதிரி ஆயிடும். அந்த மனுஷன் அத மறக்கவே மாட்டாரு. புள்ளைக்கு ஒரு பலூன் கிடைக்கும். அப்பாவுக்கு ஒரு காயம் கிடைக்கும். எது பெருசு?"
நான் அதற்கு எதுவும் சொல்லவில்லை.
"ஒரு வழி இருக்கு," என்றார். "பலூன் தானா காத்துல போற மாதிரி விட்டுடுவேன். புள்ளை ஓடிப் போய் புடிக்கும். அப்ப நான் 'பரவாயில்ல, வெச்சுக்கோ'ன்னு சொல்லுவேன். அது தர்மம் இல்ல. அது விபத்து. விபத்துக்கு யாரும் வெட்கப்பட மாட்டாங்க."
ஏழு மணி ஆனது. கடற்கரை நிரம்பியது.
அவர் ஒரு குழந்தையிடம் பேரம் பேசுவதை நான் பார்த்தேன். அந்தக் குழந்தைக்கு ஐந்து வயது இருக்கும். அவளுக்கு இரண்டு பலூன் வேண்டும். அப்பா ஒன்று மட்டும் என்கிறார்.
மணி குனிந்து அவளிடம் ஏதோ சொன்னார். அவள் ஒரு நொடி யோசித்தாள். பிறகு ஒரு பலூனை மட்டும் எடுத்துக்கொண்டு போனாள்.
"என்ன சொன்னீங்க?"
"'ரெண்டு புடிச்சா ரெண்டு கையும் ஃபுல். அப்ப ஐஸ்க்ரீம் எப்படிப் புடிப்ப?'ன்னு கேட்டேன்."
"அது சரி."
"அந்த அப்பா என்னைப் பாத்து ஒரு மாதிரி தலையாட்டினாரு. அது போதும் சார். அது ஒரு நன்றி."
பலூன் ஒரு விசித்திரமான பொருள். அதற்கு ஒரு நாள் ஆயுள். மறுநாள் காலை அது சுருங்கி, மேசைக்கு அடியில், நாற்காலிக்கு அடியில் கிடக்கும். இரண்டு நாளில் குப்பையில்.
இருபது ரூபாய் கொடுத்து ஒரு பெற்றோர் வாங்குவது என்ன?
பலூனை அல்ல. குழந்தை அதைப் பிடித்து ஓடும் நான்கு நிமிடங்களை.
அந்த நான்கு நிமிடங்களில் ஒரு அப்பா தான் நல்ல அப்பா என்று உணர்கிறார். அதற்குத்தான் விலை.
"நான் பலூன் விக்கல சார்," என்றார் மணி, நான் கிளம்பும்போது. "நான் பெத்தவங்களுக்கு ஒரு சான்றிதழ் விக்கிறேன். நாலு நிமிஷத்துக்கு."
இரவு ஒன்பது மணிக்கு அவர் மீதமிருந்த பலூன்களைக் கட்டி முடிச்சுப் போட்டார்.
ஒன்று கழன்று மேலே போனது. அவர் அதைப் பார்த்துக்கொண்டே நின்றார்.
"இதுக்குப் பேரு நஷ்டம் சார். ஆனா பாக்க நல்லா இருக்கு இல்ல?"
-எஸ்.பி. ஹோசிமின்
From FB. ❤👌
ஜீவன் retweeted
பாரதிதாசன் திமுக கைக்கூலினு கதறிட்டு இருக்க நீலசங்கிகளுக்கு ஒரு சம்பவம் நியாபகம் இருக்குமா தெரியல..போன திமுக ஆட்சிலயும் இதே மாதிரி பிரச்சனை பாரதிதாசனுக்கு வந்திருக்குஸ
இப்ப வன்னியரசு கணக்கு சொல்றாரே 1st yearக்கு 36 லட்சம் குடுத்திருக்குனுஸ அந்த 36 லட்சம் அவரு claim
ஜீவன் retweeted
முதலமைச்சர் அமலாக்கத்துறை
கடிதங்களை வாசிக்க காரணம், நீதிமன்றத்தின் தீர்ப்பை வாசித்தால் அவமானப்படுவது அவர்தான்..
ஜீவன் retweeted
அந்த அச்சம் இருக்கிற வரையில், அண்ணாதுரை தான் இந்த நாட்டை ஆள்கிறான் என்று பொருள்! 🌄
#RememberingAnna





















