
Tamil nationalist, NTK #BelongsToTamilianStock
Joined May 2014
- Tweets82.9K
- Following1.5K
- Followers3.8K
- Likes256K
மோகன் retweeted
"தவெக எம்எல்ஏ மீது முன்கூட்டியே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.. அரசு அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லையெனில் சாமானிய மக்களுக்கு எப்படி இருக்கும்.." - நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
#Seeman | #NTK | #TVK | #Mla | #Arulvignesh | #PuthiyathalaimuraiTV
மோகன் retweeted
பூதாகரமாகும் துணை சபாநாயகர் விவகாரம்.. அரசுக்கு கோர்ட் அதிரடி உத்தரவு
#Court #TNGovt #TVK #DySpeaker #Ravishankar
மோகன் retweeted
தமிழீழத் தேசியக் கொடியை அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் ஏற்றினார்.
#மாவீரர்நாள்_2026
மோகன் retweeted
நினைவில் நிறைந்த தாயகக் கனவு!
நீதிக்காகத் தொடரும் தமிழினத்தின் பயணம்!
மாவீரர் நாள் – 27.11.2026
உலகப் பெருநிலமெங்கும் பரந்து வாழ்கின்ற என்னுயிர்த் தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் என் அன்பு வணக்கம்!
இன்று மாவீரர் நாள்!
தாய் மண்ணைக் காக்க தன்னுயிர் தந்த குல சாமிகளைப் போற்றுகின்ற புனித நாள்.
மண்ணின் விடுதலைக்காக வீர சமர் புரிந்து விண்ணில் ஏறிய வீரர்களின் நினைவு நாள்.
காரிருள் சூழ்ந்த போதும், கடும் புகை மூண்ட போதும், மரணம் விழிகளுக்கு முன்னால் நிழலாடிய போதும் ஒருபோதும் அசராமல் களமாடி நின்ற மாவீரர்களின் மகத்தான நாள்.
இந்த கார்த்திகை மாதத்தில் காந்தள் மலர் சூட்டி மக்களைக் காக்க மண்ணை மீட்க இன்முகத்துடன் இன்னுயிர் ஈந்த நம் உடன் பிறந்தாரை உள்ளம் முழுக்க நிறைந்த வலியோடு கண்ணீர் திரை மறைக்க நெகிழ்வுடன் நினைவு கூர்கிறோம்.
யார் மாவீரர்கள்..?
நம்மைப் போல ரத்தமும் சதையும் கொண்டு கனவுகளும் ஆசைகளும் நிறைந்து வாழ்வாங்கு வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் பிறந்து
மண்ணின் விடுதலை என்று வந்தபோது துளியும் தயங்காமல் உயிரை தந்த பெருமக்கள்.
தன்னிகரற்ற தலைவனின் விழி அசைந்த திசையில் பகை முடிக்க வெடித்து சிதறி உடலெங்கும் வெந்தணல் பூசிக் கொண்ட உத்தமர்கள்.
இந்த பூமிப் பந்தில் இறுதித் தமிழன் இருக்கும் வரை கால நதியின் ஓட்டத்தில் சளைக்காமல் தழைத்தோங்கும் தமிழின் இறுதி மூச்சு உள்ளவரை மாவீரர்களின் வீரமும் புகழும் உச்சரிக்கப்பட்டு கொண்டே இருக்கும்.
மனித குல வரலாற்றில் எத்தனையோ இனங்கள் தோன்றியிருக்கின்றன. காலத்தின் ஓட்டத்தில் காணாமல் போயிருக்கின்றன. ஆனாலும் சில தேசிய இனங்கள் மட்டும் இது நாள் வரை உயிர்ப்புடன் இருப்பதற்கு மிக முக்கிய காரணம் அதன் தனித்துவமான செம்மொழி. அப்படிப்பட்ட செம்மொழி தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டு ஒரு தேசிய இனமாக மலர்ந்து உலகத்திற்கு நாகரீகம் பண்பாடு கலை இலக்கியம் வீரம் அறம் கொடை அறிவியல் என பல பங்களிப்புகளை செய்த தமிழர் என்ற தேசிய இனத்திற்கு இறையாண்மை மிக்க நிலமோ அரசோ இல்லை என்பது தான் இத்தனை ஆண்டு காலம் வரலாறு செய்த வஞ்சகம்.
தமிழன் வாழாத நாடில்லை ஆனால் அவனுக்கென்று உள்ளங்கை அளவிற்கு நாடில்லை என்பது காலம் காலமாய் தமிழர் மீது எழுதப்பட்ட அநீதி.
இந்தக் களங்கத்திலிருந்து மீண்டு வர வேண்டும், அடிமைத்தளையில் இருந்து அன்னைத் தமிழினம் விடுதலை அடைய வேண்டும் என்கின்ற புனித லட்சியத்திற்காக தலையே விலை ஆனாலும் தந்து விட்டுப் பார்ப்போமே என்று களத்தில் புகுந்தான் கரிகாலன் என்ற எங்கள் தலைவர் பிரபாகரன்.
அவர் வழியில் லட்சக்கணக்கான இளைஞர்களும் இளம் பெண்களும் ஒரு தேசிய இனத்தின் விடுதலைக்காக காலாட் படையாக, கடற்படையாக, வான் படையாக முப்படையாக தொடங்கி ஆறுபடையாக விரிந்து விண்ணையும் வீரத்தால் முத்தமிட்ட வரலாறு இந்த மண் காணாத மகத்துவம்.
அப்படிப்பட்ட தலைவனையும் வீரம் செறிந்த ஒரு தலைமுறையையும் நினைவு கூறுகின்ற இந்த கார்த்திகை மாதம் பிறக்கின்றபோதெல்லாம் உலகத் தமிழர்களின் உள்ளங்களில் சொல்லிவிட முடியாத பெருந்துயரும், காலத்தால் கரைத்துவிட முடியாத நினைவுகளும் சூழ்ந்துகொள்கின்றன.
கடல் கடந்து வாழ்ந்தாலும், கண்டங்கள் கடந்து வாழ்ந்தாலும், தலைமுறைகள் கடந்து வாழ்ந்தாலும் தாய்மண்ணின் நினைவுகளைத் தங்கள் நெஞ்சங்களில் சுமந்து வாழ்கிற தமிழர்களுக்கு இந்த நாள் வெறும் நாட்காட்டியின் ஒரு நாள் அல்ல; நம் இனத்தின் வரலாற்றையும், துயரத்தையும், தாயகக் கனவையும் நினைவுகூர்கின்ற உணர்வுப்பூர்வமான நாள்.
பிழைப்புக்காக குடியேறிய சிங்களன் நமது வரலாறு மறைத்து தாய்மண் பறித்து மொழியை மறைத்து அதிகாரத்தைக் கொண்டு மக்களை அழித்த காட்சியினை உலகம் மரத்துப் போன மனதோடு வேடிக்கை பார்த்தது. எல்லோராலும் கைவிடப்பட்ட ஒரு தேசிய இனமாக தமிழர் என்ற தேசிய இனம் தலை குனிந்து நிற்கும் போது முப்பாட்டன் முருகன் தூக்கிய வீரத்தோடு, கடல் கடந்து சோழன் ஆண்ட தீரத்தோடு, தன் சொந்த மக்களையே படையாகக் கட்டி நிமிர்ந்து நின்றார் நம் தலைவர் பிரபாகரன்.
அவர் கனவு கண்ட நாட்டை உலக வல்லாதிக்கங்கள் ஒன்று சேர சூழ்ந்து வேட்டையாடி அழித்து தடை செய்யப்பட்ட ஆயுதங்களை கொத்து குண்டுகளை வீசி இனப்படுகொலையை சிங்கள வல்லாதிக்கம் கருணை இல்லாமல் செய்தபோது, எட்டு கோடி தமிழர்கள் வாக்கு செலுத்தி வரி செலுத்தி வாழவைத்த இந்திய பெருந்தேசமும் துணை நின்றது தான் கொடுமையிலும் கொடுமை.
தாயகத்தை இழந்த இனமாக ஈழத் தமிழினம் உலகம் முழுக்க அலைந்து ஓடி திரிகையில் உடன் பிறந்தார் என்ற முறையில் நம்மால் உதவ முடியாமல் அதிகாரம் அற்ற அடிமை இனமாக திரைப்பட மோகத்திலும் மது மயக்கத்திலும் தாயகத் தமிழகத்தில் வீழ்ந்து கிடப்பது இனப்படுகொலைக்கு நிகரான பேரழிவு.
காலம் எத்தனையோ காயங்களை ஆற்றிவிடலாம். ஆனால், ஒரு தேசிய இனத்தின் நெஞ்சில் பதிந்துவிட்ட தாயக இழப்பின் வலியை எந்தக் காலத்தாலும் ஆற்றிவிட முடியாது. பெற்ற பிள்ளைகளைப் பறிகொடுத்த தாயின் கண்ணீரையும், தந்தையைத் தேடி வளர்ந்த பிள்ளையின் ஏக்கத்தையும், உடன்பிறந்த உறவுகளை இழந்து தவிக்கின்றவர்களின் துயரத்தையும் எந்தச் சொற்களாலும் முழுமையாக விவரித்துவிட முடியாது.
தமிழீழ மண்ணில் போர் முடிவுற்றுப் பதினேழு ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், எம் மக்களின் துயரம் முடிவுக்கு வந்துவிட்டதா? பறிக்கப்பட்ட நிலங்கள் முழுமையாகத் திரும்பக் கிடைத்துவிட்டதா? காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகள் குறித்த உண்மை வெளிப்பட்டுவிட்டதா? போர்க்காலக் கொடுமைகளுக்கான நீதி கிடைத்துவிட்டதா? தமிழர்கள் தங்களுக்கான அரசியல் எதிர்காலத்தைத் தாங்களே தீர்மானிக்கின்ற உரிமையைப் பெற்றுவிட்டார்களா?
இல்லையே ..!
போர் முடியட்டும் ! தீர்வுகளை நாங்கள் தருகிறோம் என்று வாக்குறுதி கொடுத்த உலகத் தலைவர்கள் இன்று தங்களது மௌனத்தால் இனப்படுகொலையை அங்கீகரிக்கின்ற அட்டூழியம் இவ்வுலகில் தானே நடக்கிறது..??
போர்ச்சூழலில் காணாமல் அடிக்கப்பட்டவர்களும் வெள்ளை வேனில் வைத்து கடத்தப்பட்டவர்களும் எங்கே எங்கே என இதுவரை எங்களது தாய்மார்களும் சகோதரிகளும் கதறும் கதறல்கள் இதுநாள் வரை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. தமிழர்களின் தாயக நிலத்தில் சிங்கள குடியேற்றங்களும் பண்பாடு கலாச்சார ஊடுருவல்களும் நிகழ்ந்து தமிழீழ மண்ணின் தனித்துவம் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இருந்து மீளுவதற்கு தமிழர்கள் இதுவரை கொண்டிருந்த அரசியல் நிலைப்பாடுகளில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும்.
மாறிவருகின்ற உலக அரசியல் சூழலில் நமது சிந்தனைகளும் செயல்திட்டங்களும் காலத்திற்கேற்ப மாற்றியமைக்கப்பட வேண்டிய தேவையிருக்கிறது. கடந்தகால வரலாற்றிலிருந்து படிப்பினைகளைப் பெற்றுக்கொண்டு, நிகழ்கால அரசியல் வாய்ப்புகளைப் பயன்படுத்தி, எதிர்காலத் தலைமுறைகளுக்கான பாதுகாப்பான வாழ்வை உருவாக்கிட வேண்டும்.
உலகத்தின் ஒழுங்கு மாறிவிட்டது. அரசியல் போக்குகள் அதன் திசைவழிகள் முற்றிலுமாக திசை திரும்பி இருக்கின்றன. உலகம் முழுக்க சர்வாதிகாரங்களுக்கு எதிரான சத்திய குரல்கள் எழும்பத் தொடங்கி இருக்கின்றன. இலங்கையிலேயே வெகுமக்கள் புரட்சி நடந்து மனித கொடுங்கோலன் ராஜபக்சே குடும்பம் கூட்டமாக விரட்டியடிக்கப்பட்ட காட்சிகளை நாம் பார்த்தோம்.
இந்த சூழ்நிலையை தமிழர் தேசிய இனம் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு செம்மணி உள்ளிட்ட மனிதப் புதைகுழிகள் குறித்த உண்மைகள் முழுமையாக வெளிக்கொண்டுவர போராட்ட ஆயத்தங்களுக்கு முன் வர வேண்டும். மண்ணுக்குள் புதைக்கப்பட்டிருப்பது வெறும் மனித எலும்புக்கூடுகள் அல்ல; விடை தெரியாத ஆயிரக்கணக்கான கேள்விகள்! நீதி மறுக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வியல் சாட்சியங்கள்!
அவற்றை முறையாக ஆராய்ந்து உண்மைகளை வெளிக்கொண்டுவரவும், போர்க்கால மனித உரிமை மீறல்களுக்கும் இனப்படுகொலைக் குற்றச்சாட்டுகளுக்கும் பன்னாட்டு நீதிப் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யவும் உலக நாடுகளும் ஐக்கிய நாடுகள் மன்றமும் முன்வர தமிழர் தங்கள் ஓர்மையை, தமிழ்த் தேசிய அரசியலின் வலிமையை உறுதிப்படுத்த வேண்டும்.
தமிழீழத் தாயகம் என்பது தமிழர்களுக்கு வெறும் நிலப்பரப்பு அல்ல. அது எம் முன்னோர்களின் வாழ்விடம்; எம் மொழியின் வேர்கள் பதிந்திருக்கும் மண்; எம் பண்பாட்டின் தொடர்ச்சி; எம் எதிர்காலத் தலைமுறைகளின் வாழ்வுரிமையோடு பின்னிப்பிணைந்த நிலம்.
ஈழத்தமிழர்களின் பூர்வீக நிலங்கள் பாதுகாக்கப்படுவதற்கும், இராணுவமயமாக்கல் முடிவுக்குக் கொண்டுவரப்படுவதற்கும், பண்பாட்டு அடையாளங்கள் சிதைக்கப்படாமல் இருப்பதற்கும், தமிழர்கள் சமத்துவத்தோடும் கண்ணியத்தோடும் வாழ்வதற்குமான அரசியல் சூழல் உருவாக்கப்பட வேண்டும்.
தாயகத் தமிழகத்திலும் ஏற்பட்டிருக்கிற இந்த அரசியல் பேரிடரில் இருந்து மீண்டெழுவதற்கான பாய்ச்சலில் தமிழ்த் தேசிய இளையோர் அணியமாகி வருகின்றனர். தளராத நம்பிக்கையோடு ஓயாத அலைகளாய் சத்திய தலைவனின் பிள்ளைகள் மீண்டு வருவார்கள்.
தமிழீழ சோசலிச குடியரசு மலர்வதற்கான ஏதுவான அரசியல் மாற்றங்கள் தெற்காசிய பிராந்தியத்தில் நிகழ வேண்டுமானால் இந்திய பேரரசின் வெளியுறவு கொள்கைகள் மாற வேண்டும். அதற்கு தமிழகத்தில் இருந்து தமிழ்த் தேசிய அரசு ஒன்று உருவாகி அழுத்தங்களை தர வேண்டும். அதற்கான காலத்தை உருவாக்கத்தான் தளராமல் களத்திலே தமிழின இளையோர் நாம் தமிழர் என அணிவகுத்து நிற்கிறோம்.
உலகெங்கும் பரவி வாழ்கின்ற தமிழர்களிடம் அறிவாற்றல் இருக்கிறது; பொருளாதார வலிமை இருக்கிறது; தொழில்நுட்பத் திறன் இருக்கிறது; பன்னாட்டு அரசியல் தளங்களில் செயலாற்றக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன. இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து, அறவழியிலும் சனநாயக வழியிலும் தமிழர்களின் அரசியல் உரிமைகளுக்காகச் செயலாற்ற வேண்டிய காலமிது.
தனித்தனி அமைப்புகளாகப் பிரிந்து நிற்பதும், தன்முனைப்புகளுக்கு முதன்மையளிப்பதும், ஒருவரையொருவர் குறைகூறிக் கொள்வதும் நம் இனத்தின் அரசியல் வலிமையைச் சிதைத்துவிடும்.
எட்டு கோடிக்கும் அதிகமான தமிழர்கள் வாழ்கின்ற இந்திய ஒன்றியத்திற்கும் ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய பெரும் பொறுப்பிருக்கிறது. இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கையில் ஈழத்தமிழர்களின் பாதுகாப்பும், அவர்களது அரசியல் எதிர்காலமும் உரிய முதன்மையைப் பெற வேண்டும்.
ஈழத்தமிழர்கள் தங்களது அரசியல் எதிர்காலத்தைத் தாங்களே தீர்மானிக்க ஏதுவாக, பன்னாட்டுக் கண்காணிப்புடன் கூடிய பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை உலக அரங்கில் தொடர்ந்து முன்வைக்க வேண்டும். அதற்கான ஆதரவை உலக நாடுகளிடமும் பன்னாட்டு அமைப்புகளிடமும் சனநாயக வழியில் திரட்டிட வேண்டும்.
தாயகத் தமிழகமும், ஈழத்தமிழர்களும், புலம்பெயர்ந்து வாழ்கின்ற உலகத் தமிழர்களும் அறிவாலும், அன்பாலும், ஒற்றுமையாலும் இணைந்து நிற்க வேண்டிய வரலாற்றுத் தேவையை இந்த நாள் நமக்கு உணர்த்துகிறது.
மாவீரர்கள் எந்தக் கனவிற்காக தங்கள் உள்ளங்கையில் தாய் மண்ணைப் பிடித்துக் கொண்டு தன்னுயிரை தந்தார்களோ அந்தக் கனவை நிறைவேற்ற தமிழராய் பிறந்தவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்குள்ளே உறுதியேற்று நிமிருவோம்.
நமது உள்ளத்து உறுதியிலும், நம் ஒவ்வொரு அசைவிலும் மாவீரர் தெய்வங்கள் நமக்கு வழிகாட்டடும் !
தாயகக் கனவினில் சாவினை தழுவிய மாவீரர்களுக்கு...
வீர வணக்கம்! வீர வணக்கம்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
மோகன் retweeted
உலகம் காணாத மாவீரனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💥💥💥
நீ இருந்தால் தலைவன்.
இல்லையேல் இறைவன் 🙏
மோகன் retweeted
#JustNow || நான் பொதுவேட்பாளரா? யார் சொன்னது?..
கடைசி 6 பந்துகள் தான் இருக்கின்றன; அனைத்து பந்துகளையும் சிக்சர்களாக விளாசி வெற்றி பெற வேண்டும் - சீமான்
#Seeman | #ByElection | #NTK | #PolimerNews
மோகன் retweeted
திமுக ஆட்சியில் இருக்கும்போதே எதிர்த்து நின்று ஒரே நாளில் 100 வழக்குகளைச் சந்தித்த எனக்கு, நம் இனத்தை அழித்த காங்கிரஸோடு கூட்டணி வைத்தவர்கள் திமுக எதிர்ப்பைப் பற்றிப் பாடம் எடுக்கத் தேவையில்லை. எத்தனை எண்களைப் போட்டாலும் பக்கத்தில் பூஜ்ஜியம் இருந்தால்தான் மதிப்பு என்பதைப் போல, என்னைத் 'தோற்றவன், பூஜ்ஜியம்' என்று விமர்சிப்பவர்களுக்கு என்னைப் பேசாமல் அரசியலே இல்லை; உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவுமே நான் நெஞ்சு வெடிக்கக் கத்திக்கொண்டிருக்கிறேன்!
- தலைவர் பிறந்த நாள் விழாவில் அண்ணன் செந்தமிழன் சீமான்
மோகன் retweeted
இன்று அறிவு அரசியலாக இல்லாமல் அபிமானமும் அவதூறுமே அரசியலாக மாறியிருக்கிறது; இந்த ஆபத்தான போக்கை பிரபாகரனின் பிள்ளைகளால் மட்டுமே சரிசெய்ய முடியும். ஐந்து பேருடன் ஒரு இத்துப்போன துப்பாக்கியை ஏந்திக் காட்டுக்குள் சென்ற மாவீரன் பிரபாகரன், சேர, சோழ, பாண்டியர் முதல் வேலுநாச்சியார் வரையிலான நம் முன்னோர்களின் மொத்த வீரத்தையும் ஒற்றை உருவமாகத் தாங்கி நின்று 50,000 மாவீரர்களைக் களத்தில் கண்டார்; 'தமிழன் என்றால் மலிவான கூலி' என்று அகராதியில் எழுதி வைத்திருந்த உலகத்தை, 'தமிழன் என்றால் புலி' என மாற்றி எழுத வைத்ததே என் தலைவனின் தன்னிகரற்ற வீரம் !
- தலைவர் பிறந்த நாள் விழாவில் அண்ணன் செந்தமிழன் சீமான்
மோகன் retweeted
தோற்போம் என்று தெரிந்தாலும் துணிந்து களத்தில் நிற்பவனே உண்மையான வீரன்; திரைக் கவர்ச்சி, சாதி, மதம், பணம் ஆகியவற்றைத் தாண்டி எங்களை நம்பி வாக்களித்த 20 லட்சம் மானமறவர்களுக்காகவே நான் களத்தில் நிற்கிறேன். 20 லட்சம் இரண்டு கோடியாக மாற அதிக நேரம் ஆகாது; வென்றவர்கள் என்ன சாதித்தார்கள் என்பது போகப்போகத்தான் மக்களுக்குத் தெரியும்!
- தலைவர் பிறந்த நாள் விழாவில் அண்ணன் செந்தமிழன் சீமான்
மோகன் retweeted
"காசு கொடுத்து ஓட்டு வாங்குற தேர்தலில்தான் தோற்றேன்; லட்சியத்தில் உறுதிகொண்டவர்களை வீழ்த்த முடியாது"
அம்பாசமுத்திரம் பொதுக்கூட்டத்தில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு
#Seeman #NTK #Ambasamudram #News18Tamilnadu | News18Tamil.com
மோகன் retweeted
நேற்று வரை கொண்டாடிய இயக்கத்தை, இன்று வெளியேறியதும் இழிவுபடுத்தும் சந்தர்ப்பவாதப் பித்தலாட்டம்!
அரசியல் தத்துவத்தின்படி, இயக்கத்தைத் திருத்துவதற்காக வைக்கப்படும் கொள்கை விமர்சனங்கள் 'நட்பு முரண்'. ஆனால், எதிரிகளின் கூடாரத்தில் தஞ்சம் புகுந்துகொண்டு, இயக்கத்தின் அஸ்திவாரத்தையே அசைக்கப் பார்ப்பதும், மாவீரர்களின் புனித நாட்களிலேயே வன்மத்தைக் கக்குவதும் அப்பட்டமான 'பகை முரண்' (கருணா முன்னெடுத்த செயல்வடிவம்) மற்றும் துரோகத்தின் உச்சம்!
ஒரு இயக்கத்தின் கொள்கைகளை விமர்சிப்பதும், திருத்தங்களைக் கோருவதும் ஜனநாயக அரசியலின் தவிர்க்க முடியாத அங்கம். அதேவேளையில், தமிழ்நாட்டில் தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுத்துச் செல்வதில் நாம் தமிழர் கட்சியின் களப் பங்களிப்பைத் தவிர்த்துவிட்டு ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது என்பதும் மறுக்க முடியாத அரசியல் யதார்த்தம்.
இந்த வஞ்சகச் சதியின் மிக ஆபத்தான இலக்கு என்னவென்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். மாவீரர்களின் தியாகங்களை நெஞ்சில் ஏந்தி வணங்கும் இந்தப் புனிதமான கார்த்திகை வாரத்தில், இவர்கள் திட்டமிட்டுப் பரப்பும் "மாவீரர் நாள் நிதி மோசடி", "உள்ளூர் தேர்தல் மேடை" போன்ற அவதூறுகளுக்குப் பின்னால் ஒரு மாபெரும் அரசியல் சூழ்ச்சி ஒளிந்துள்ளது.
கொள்கை விமர்சனம் வேறு; எதிரிகளின் கூடாரத்தில் தஞ்சம் புகுந்துகொண்டு, உள்ளிருந்தே குழிபறிக்கும் வஞ்சகச் சதி வேறு! நேற்று வரை கொண்டாடிய இயக்கத்தை, இன்று வெளியேறியதும் இழிவுபடுத்தும் சந்தர்ப்பவாதப் பித்தலாட்டம்!
தமிழ்நாட்டில் தமிழ்த் தேசிய எழுச்சியைச் சிதைக்கவும், புனிதமான மாவீரர் நாள் நிகழ்வுகளை முடக்கவும், பிரிந்து சென்ற சிலரைப் பகடைக்காய்களாகப் பயன்படுத்தி நடத்தப்படும் துரோக அரசியலைத் தோலுரித்துக் காட்டும் 'எழுகதிர்' இதழின் பகுப்பாய்வு இது!
நேற்று வரை புனிதமாகத் தெரிந்த இயக்கம் இன்று கசப்பது ஏன்?
முழுமையாகப் படிக்க: 👇
[ பின்னூட்டல் இணைப்பு]
எழுகதிர் குழுமம்
#தமிழ்த்தேசியம் #மாவீரர்வாரம் #நாம்தமிழர் #துரோகஅரசியல் #எழுகதிர் #TamilNationalism #Elukathir
மோகன் retweeted
மாவட்ட ஆட்சியருக்கு தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரம்.. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை!
#SunNews | #ArulVignesh | #KallakurichiTVKMLA
மோகன் retweeted
#JUSTIN || அருள் விக்னேஷ் மீது மேலும் 3 கடுமையான பிரிவுகளில் வழக்கு | #KallakurichiMLA | #ArulVignesh | #PolimerNews
மோகன் retweeted
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும்!
@CMOTamilnadu @TVKVijayHQ
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் தனக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜா அவர்கள் புகார் தெரிவித்திருப்பது தறிகெட்டு நிற்கும் தவெக ஆட்சியின் மோசமான நிலைக்கான சான்றாகும்.
ஒரு மாவட்டத்தின் நிர்வாகத் தலைவராக இருக்கும் மாவட்ட ஆட்சியருக்கே தவெகவின் ஆட்சியில் பாதுகாப்பு இல்லை; அதுவும் தவெகவின் சட்டமன்ற உறுப்பினரே அத்துமீறி நடந்துகொள்ள முனைகிறார் என்றால், எளிய மக்களுக்கு இந்த ஆட்சியில் என்ன பாதுகாப்பு இருக்கும்?
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் சிறிதும் பொறுத்துக்கொள்ளாத (Zero Tolerance) கொள்கையைக் கடைப்பிடிப்போம் என்று மேடைகளில் வீராவேசமாக முழங்கிய முதல்வர் விஜய் அவர்கள், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்காது காப்பாற்றிவிட முனைந்தது எதற்காக? அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை என அமைச்சர்களைக் கொண்டு பேச வைத்தது ஏன்? அதிமுக்கியத்துவம் வாய்ந்த இவ்விவகாரத்தில் இப்போதுவரை முதல்வர் விஜய் ஏன் வாய்திறக்கவில்லை? அமைதியாக இருந்து எதை சாதிக்க நினைக்கிறார்?
கடந்த சூலை 31 அன்றே இந்த விவகாரம் அரசின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டு புகார் தெரிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், 115 நாட்களாக முதல்வர் விஜய் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? புகார் தெரிவிக்கப்பட்டப் பிறகும், அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை என அரசுத்தரப்பு எதற்காக சப்பைக்கட்டு கட்டியது? இது மோசடித்தனம் இல்லையா? குற்றவாளியைக் காப்பாற்றும் விதத்திலான முதல்வர் விஜய்யின் நிர்வாக அணுகுமுறை இழிவானது இல்லையா? கடும் கண்டனங்கள்!
பெண்களும், குழந்தைகளும் அச்சமின்றி, மரியாதையுடன் வாழும் சூழலை உருவாக்குவதே அரசின் முதன்மை நோக்கம் என்று கூறினீர்களே முதல்வரே! ஒரு மாவட்ட ஆட்சியரே, ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் மீது புகார் தெரிவித்து, நடவடிக்கை கோரி, நீதிமன்றத்தில் புகார்கூற வேண்டிய நிலை என்றால், எளிய பெண்கள் எந்த நம்பிக்கையில் காவல்துறையை அணுகுவார்கள்? பெண்களுக்கு அண்ணனாகத் துணை நிற்பேன் என்றும், இரு பெண்களைக் கொள்கைத் தலைவர்களாக ஏற்றிருக்கிறோம் என்றும் மேடைதோறும் பேசிய முதல்வர் விஜய், இந்தப் புகார் அரசின் கவனத்துக்கு வந்தபோது ஏன் மௌனம் காத்தார்? நடவடிக்கை எடுக்க மறுத்தார்? தனிக்கட்சிப் பெரும்பான்மை இல்லாத தனது ஆட்சியைத் தக்க வைக்க எந்த எல்லைக்கும் முதல்வர் விஜய் செல்வாரேன்றால், இது மாற்றமா? கொடும் துர்நாற்றமா?
தாராபுரம் இடைத்தேர்தல் வழக்கில், என்னுடைய தங்கை கார்த்திகாவைக் கைது செய்ததில் காட்டிய அவசரமும், பயணத்தின் இடையே தம்பி இசை மதிவாணனைக் கைது செய்ததில் காட்டிய முனைப்பும், அரசை விமர்சித்துப் பேசிய தம்பி சாட்டை துரைமுருகன் மீது அடுத்தடுத்து வழக்குப் பதிவுசெய்ததில் காட்டிய வேகமும் ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் மீதான இந்தப் புகாரில் எங்கே போனது?
தாராபுரம் இடைத்தேர்தலில் சத்தியபாமா உருவக்கேலிக்கு ஆளானபோது கண்டனம் தெரிவித்த முதல்வர், மாவட்ட ஆட்சியர் பத்மஜாவின் புகார் குறித்து ஏன் வாய் திறக்கவில்லை? மாண்புமிகு நீதிபதி விக்டோரியா கௌரி அவர்கள் ஒரு நிகழ்ச்சியில் இவ்விவகாரம் குறித்துப் பேசியதைத் தொடர்ந்து, அவர் மீது தவெகவினர் பொழிந்த ஆபாச வசைகளையும், கீழ்த்தரமான விமர்சனங்களையும் முதல்வர் கண்டிக்காதது ஏன்? பெண்களை மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று தமது கட்சியினரிடம் சொல்லக்கூட முதல்வருக்குத் தயக்கமா?
ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பப்பட்ட சம்பவமே நடைபெறவில்லை என்று ஊடகச் சந்திப்பில் மறுத்த அமைச்சர் நிர்மல்குமார், எந்த அடிப்படையில் அவ்வாறு கூறினார்? புகாரை மூடி மறைக்கத் துணைபோன அமைச்சர்கள் உள்ளிட்ட தொடர்புடைய அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
தேசிய மகளிர் ஆணையம் உள்நுழைந்து, உயர் நீதிமன்றம் தலையிட்டு, மாவட்ட ஆட்சியர் புகார் அளிக்கும் வரை அரசு காத்திருந்தது ஏன்? தேசிய மகளிர் ஆணையமும், சென்னை உயர் நீதிமன்றமும் தலையிடும் நிலை வரும்வரை அரசின் நிர்வாகம் என்ன செய்துகொண்டிருந்தது? பெண்களின் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படை இந்த விவகாரத்தில் என்ன செய்தது? பெண்கள் துணிந்து புகார் அளிக்க வேண்டும் என்று சொல்லும் அரசே, ஒரு பெண் மாவட்ட ஆட்சியரின் புகாருக்குப் பதிலளிக்க இவ்வளவு காலம் எடுத்துக்கொண்டது பேரவலம் இல்லையா?
ஆகவே, சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்து, அவரை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டுமென தவெக அரசை நாம் தமிழர் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
மோகன் retweeted
#JUSTIN ஆட்சியர் ஜூலை 31 அன்றே அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்ற பிறகும் பல மாதங்களாக நடவடிக்கை எடுக்காதது ஏன்? - நீதிபதி
#KallakuruchiMLA #Collector #ChennaiHighCourt #News18Tamilnadu | News18Tamil.com
மோகன் retweeted
ஜூலை 31 அளித்த புகார்!
என்னங்க சார் உங்க சட்டம்!
என்னங்க சார் உங்க திட்டம்!
கேள்வி கேட்க ஆளில்லாமல் போடுறீங்க கொட்டம்!
@CMOTamilnadu
@TVKVijayHQ
நன்றி: @News18TamilNadu





















