அநியாயம்
Nellai இன்ஸ்டாவில் சமூக பிரச்சினையை பேசும் இளம்பெண் கோரமாக கொ*ல - நெல்லை மண்ணில் பயங்கரம்
#nellai #crime #murdernews
Naadhas retweeted
The committee had 3 members. Kurien Joseph ( who is a good man ) , Ashok Vardhan Shetty ( dmk mouth piece ) , M . Naganathan ( Stalin family sidekick ).
Each were being paid salary of 5 lakhs per month apart from other perks. For what joy , I don’t understand. But Naganathan resigns on the day the results came. Kurien Joseph is disinterested. Why should the govt pay 5 lakhs per month to Ashok Vardhan Shetty ? The govt has now moved that assignment to the law commission which can do a better job without the expense of a committee. The shift to the law commission was made in August , what was Stalin and co doing from September to November ? Now that the books scam has happened. DMK is trying to bring in some stupid claims to try and divert the attention of the public. This is not going to help them.
Try something better please.
Naadhas retweeted
இதை செய்த காவல்துறை அதிகாரிகள் மீது உடனடியாக கஞ்சா கடத்தல் வழக்கு போட்டு சிறையில் அடைக்கப்பட வேண்டும்!
CCTV இருந்ததால் இங்கே மளிகை கடை வைத்திருப்பவர் தப்பித்தார். இல்லை என்றால் என்ன ஆகி இருக்கும். பல ஆண்டு காலம் சிறையில் இருந்திருக்க வேண்டும்.
சிறையில் இருக்கும் கைதிகளில் எத்தனை பேர் உண்மையான கஞ்சா வழக்கில் இருக்கின்றனர் என்றும் எத்தனை பேர் இதுபோன்று பொய்யான வழக்கில் உள்ளே தள்ளப்பட்டு இருக்கின்றனர் என்றும் இந்த சம்பவம் கேள்வி எழுப்புகிறது.
அப்படி அந்த காவல்துறை அதிகாரி மீது கஞ்சா கடத்தல் வழக்கு போட்டு சிறையில் அடைக்காவிட்டால் மேலும் பல காவல் துறை அதிகாரிகள் இதைத்தொடர்ந்து செய்து கொண்டே இருப்பார்கள். இது போன்ற சம்பவங்கள் காவல்துறையின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை அதீதமாக குறைக்கும்.
அவரை டிரான்ஸ்ஃபர் அல்லது பணியிடை நீக்கம் மட்டும் செய்வது என்பது காவல்துறை அதிகாரிகள் கஞ்சா கடத்துவது அவ்வளவு பெரிய பிரச்சனை இல்லை என்றும் சகஜமாக காவல்துறையில் செய்யும் ஒன்றே என்பதை தான் குறிக்கும். அவரை சிறையில் அடைப்பதன் மூலம் மற்ற காவல் துறை அதிகாரிகளுக்கு அது ஒரு முக்கியமான செய்தியாகவும் இருக்கும். மக்களுக்கும் காவல்துறை அதிகாரி தவறு செய்தால் காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை வர துவங்கும்.
மேலும் டாஸ்மாக் பார் நபரிடம் அந்த காவல்துறை அதிகாரி வாங்கிய லஞ்சத்தை பற்றியும் வழக்கு விசாரணை செய்ய வேண்டும்.
அனைத்தையும் விட மன உளைச்சலுக்கு ஆளான பாதிக்கப்பட்ட நபருக்கு நியாயம் கிடைக்க வேண்டும். அந்தக் காவல் அதிகாரியை கஞ்சா கடத்தல் வழக்கில் சிறையில் அடைப்பது தான் குறைந்தபட்ச பொறுப்புடைமையாகும்!
@tnpoliceoffl
இவங்களே வெப்பாங்களாம்... இவங்களே எடுப்பாங்களாம்... டாஸ்மாக் பாருக்கு எதிராக போராடியவரை சிக்க வைக்க இப்படி ஒரு பிளானா? மண்டையில் இருந்த கொண்டையை மறந்து சிக்கிக்கொண்ட லுங்கியில் வந்த மஃப்டி போலீஸ்.!
➤சிங்கம்புணரி, சிவகங்கை
#Sivaganga | #Ganja | #Police | #PolimerNews
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் .. க்ரேசி மோகன் சார் இல்லதான்.ஆனா அவர் ஸ்டைலில் ஒரு படம் செய்யனும் நீங்க.
@ikamalhaasan
அவர் பிறந்தது கப்பலூர் அருகில் உள்ள கூத்தியார்குண்டு கிராமம் என்பது குறிப்பிடத்தக்கது
For some time now I had stopped giving interviews in social media and YouTube channels. Awareness among Hindus lead to NOTHING.
I wish to remain focussed on filing cases to protect our temples, their heritage and their properties. I wish I had more time and materials to pursue such cases.
After the recent judgment of the Hon'ble Division Bench of Madras High Court appointing a Board to oversee the administration of Chidambaram Temple - many reached out to me to know how there could be another judgment on Chidambaram Temple administration from the High Court after the 2014 Judgment of the Hon'ble Supreme Court.
Again, many wanted me to speak about the Special Leave Petitions filed by the Dikshitars and myself and the Stay Order of the Hon'ble Supreme Court and about the arguments made by Senior Counsels.
I am not for giving detailed interviews - at the same time I wanted to tell devotees - what happened - in spite of the 2014 Supreme Court Judgment. So I prepared an easy to decipher Charts which I am enclosing here for those who are interested. Its a 2 page chart mainly on the timeline of the Chidambaram Temple cases.
Siva Chidambaram !!!
🙏🙏🙏
Naadhas retweeted
#PeriyarArivulagam #PeriyarLibrary
மொத்த நூல்களும் திமுக ஆட்சியில் ஆர்டர் செய்யப்பட்டு உள்ளது
அகல் விளக்கு பதிப்பகத்திற்கு Order கொடுத்தது - 14.02.26
அகல் விளக்கு புத்தகங்களை பெரியார் நூலகத்திற்கு வழங்கிய தேதி 26.02.26
47 Box களில் 1700 புத்தகங்களை அகல்விளக்கு பதிப்பகம் 25.2.26 அன்று வழங்கியுள்ளது.
Box பிரிக்கப்படவில்லை. அனைவரும் தேர்தல் பணிக்காக சென்று விட்டனர்
ஜூன் மாதம் Box பிரிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது
Total Publisher எண்ணிக்கை 405, அதில் தமிழ் பதிப்பாளர்கள் 298, ஆங்கிலப் பதிப்பாளர்கள் 107
மொத்த தொகை 19.19 கோடி
மொத்தப் புத்தகங்கள் எண்ணிக்கை 60,268
அதில் தமிழ் 25,425, ஆங்கிலம் 34,841
அகல் விளக்கு, பீனிக்ஸ் ஆகிய இரண்டுக்கும் ஒரே உரிமையாளர்
விண்ணப்பிக்கும்போது கொடவாசல் முகவரியும், புத்தகம் வழங்கும் போது மடிப்பாக்கம் முகவரியும் பதிப்பாளர் குறிப்பிடுகிறார்.
கொடவாசல் முகவரியில் RVR Press இயங்கி வந்தது. அது அகல்விளக்கு உரிமையாளரின் மைத்துனருடையது. அதை அகல்விளக்கு உரிமையாளர் விலைக்கு வாங்கிவிட்டார்.
டிஸ்மிஸ் மற்றும் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய வேண்டும்
#JustNow || சிங்கம்புணரி திருக்காளப்பட்டியில் டாஸ்மாக் பாருக்கு எதிராக போராடி வரும் இளைஞரை சிக்க வைக்க அவரது மளிகை கடையில் கஞ்சா வைத்த சம்பவம்..
காவலர்களைக் காட்டிக் கொடுத்த சிசிடிவி..
#Sivaganga | #Police | #PolimerNews
Naadhas retweeted
கோயம்புத்தூர் பெரியார் அறிவுலகம் நூலகத்தில், புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன.
நூலகம் என்பது வெறும் கட்டிடம் அல்ல. வீட்டில் புத்தகங்கள் வாங்கிப் படிக்கப் பொருளாதார வசதியில்லாத மாணவர்களுக்கும், TNPSC உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கும் அறிவையும், வாய்ப்புகளையும் சமமாகப் பகிர்ந்தளிக்கும் ஓர் உன்னதமான பொதுச் சொத்து. அத்தகைய ஒரு நூலகத்திற்காக ஒதுக்கப்படும் மக்கள் வரிப்பணத்தில் முறைகேடு நடந்திருக்குமானால், அது ஒரு நிதி முறைகேடு மட்டுமல்ல அடுத்த தலைமுறையின் கல்வி மற்றும் அறிவு வளர்ச்சிக்குச் செய்யப்படும் துரோகம்.
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் இந்த நூலகத்திற்குப் புத்தகங்களைப் பரிந்துரைக்க அமைக்கப்பட்ட குழு பரிந்துரைத்த புத்தகங்களின் முழுமையான பட்டியல் என்ன? அந்தப் பட்டியலில் இடம்பெற்ற அனைத்து புத்தகங்களும் உண்மையில் கொள்முதல் செய்யப்பட்டனவா? கொள்முதல் செய்யப்பட்ட புத்தகங்களின் எண்ணிக்கை, ISBN எண்கள், கொள்முதல் செய்யப்பட்ட தேதி, நூலகத்தை வந்தடைந்த தேதி ஆகியவற்றைச் சரிபார்த்தவர்கள் யார்? புத்தகங்களின் தரம், உள்ளடக்கம் மற்றும் விலை ஆகியவற்றை ஆய்வு செய்த நடைமுறை என்ன? இந்தக் கேள்விகளுக்கு ஆவணப்பூர்வமான பதில்கள் அளிக்கப்பட வேண்டும்.
புத்தகக் கொள்முதல் தொடர்பான பரிந்துரைக் குழுவின் அறிக்கை, பரிந்துரைக்கப்பட்ட புத்தகங்களின் பட்டியல், கொள்முதல் ஆணைகள், விலைப்பட்டியல், விநியோக ஆவணங்கள், சரிபார்ப்புக் குழுவின் அறிக்கை என அனைத்தும் பொதுவெளியில் வெளியிடப்பட வேண்டும். ஒவ்வொரு புத்தகமும் உரிய விலைக்கு வாங்கப்பட்டதா, வாங்கப்பட்ட புத்தகங்கள் அனைத்தும் நூலகத்தைச் சென்றடைந்தனவா என்பது குறித்து சுதந்திரமான, முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
அறிவைப் பகிர வேண்டிய நூலகத்தையே, ஊழலுக்கான கூடாரமாக மாற்றியிருந்தால், அது வெறும் மக்கள் வரிப்பணக் கொள்ளை அல்ல அறிவுக் கொள்ளை. இதற்குப் பொறுப்பானவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிச்சயமாக நிறுத்தப்பட வேண்டும்.
So இது திமுகவோட ஊழலா? அல்லது பெ.மு. காட்டிக் கொடுத்துருக்காரா? (அவர் தேர்வுக்குழுல இருந்தார் என்கிறார் முதல்வர்)
மண், மொழி, மானம் காத்தவர்களே நாங்கள்தான்; தமிழ் மொழியைக் கண்டுபிடித்ததே நாங்கள்தான்; தமிழ் மொழியியலின் மூளையே நாங்கள்தான்; தமிழ் இலக்கியக் கடலை எங்கள் சட்டைப் பையில் அடக்கி வைத்திருக்கும் அதிகாரம் பெற்றவர்களே நாங்கள்தான்; தமிழே நாங்கள்தான் என்று ஊரை ஏமாற்றுவதற்காக உரக்கக் கூவும் கூட்டமே எப்போதும் ஊழல் கூட்டமாக இருக்கும் என்பதற்கு உதாரணம், ஊழலின் ஊற்றுக்கண்ணான தி.மு.க.தான் என்பது ஊரறிய வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட புதிய நூலகங்களுக்கான நூல் பரிந்துரைக் குழு அமைக்கப்பட்டு, கடந்த தி.மு.க. ஆட்சியில் 5.11.2025 தேதியிட்ட அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. அக்குழுவில்
நவீன இலக்கியங்கள் மற்றும் திறனாய்வு நூல்களைப் பரிந்துரைக்கும் குழுவில் இடம்பெற்றிருந்த பேராசிரியர் திரு.பெருமாள் முருகன் அவர்களே, பெரியார் அறிவுலகத்திற்கு நூல் கொள்முதல் செய்யப்பட்டதில் ஊழல் நடந்துள்ளதை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளார். ஊழலின் ஊற்றுக்கண்ணைக் கண்டறிந்துள்ள அவரைப் பாராட்டியே ஆக வேண்டும்.
நாம் அரசியலுக்கு வந்தபோதே பெரியார் பெயரை வைத்துக் கொள்ளை அடித்து வருவது தி.மு.க.தான் என்று பகிரங்கமாக நமது மாநாட்டிலேயே அறிவித்தோம். ஊழலின் ஊற்றுக்கண்ணே தி.மு.க.தான் என்பதையும் இன்று வரை நாம் மட்டுமே சமரசமின்றிச் சொல்லி வருகிறோம். எப்போதும் தி.மு.க. பற்றி நாம் சொல்வது உண்மைதான் என்பதைத் தி.மு.க.வே மெய்ப்பித்து உள்ளது. அதற்கான இப்போதைய உதாரணமாக, கோவை பெரியார் அறிவுலகத்தில் நடந்துள்ள புத்தகக் கொள்முதல் ஊழலே சாட்சியாகி உள்ளது.
தி.மு.க. கொஞ்சம் வித்தியாசமாக ஊழல் செய்து, கோவை பெரியார் அறிவுலகத்தையே ஊழல் உலகமாக மாற்றியிருக்கிறது. ஊழல் இலக்கியம் படைப்பதில் தி.மு.க. உயர் ரகம்தான் என்பதும் தெரிய வந்துள்ளது.
பெரியார் அறிவுலகத்தைப் பார்த்துப் பார்த்துக் கட்டியதாகத் தம்பட்டம் அடித்துக்கொண்ட தி.மு.க. தலைமை, இப்படி நூல்கள் கொள்முதல் செய்வதிலும் பார்த்துப் பார்த்து, தரமற்ற நூல்களாகப் பரிந்துரை செய்து ஊழல் செய்துள்ளதை உலகமே பார்த்துக் கைகொட்டிச் சிரிக்கிறது.
கடந்த தி.மு.க. ஆட்சியில்தான் எத்தனை எத்தனை ஊழல்கள் நடந்துள்ளன! நகராட்சித் துறையில் ஊழல்! டாஸ்மாக்கில் ஊழல்! டெண்டர்களில் ஊழல்! ஒவ்வொரு துறையிலும் ஊழலோ ஊழல் எனத் தங்களுக்காக ஒரு மிகப் பெரிய ஊழல் உலகத்தையே உருவாக்கியதுதான் தி.மு.க. என்பது அடுத்தடுத்து அம்பலமாகி வருகிறது.
இந்த ஊழல்களின் வரிசையில், நம் வீட்டுப் பிள்ளைகள் மற்றும் மாணவர்களின் நலன் சார்ந்த பள்ளிக் கல்வித் துறையில் ஊழல் நடந்துள்ளதும் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதும் உலகறிந்த செய்தியே. ஆனால், அதன் தொடர்ச்சியாக இப்போது நம் பிள்ளைகளும் மாணவர்களும் பயன்படுத்தக் கட்டப்பட்ட அறிவுலக நூலகம் சார்ந்தும் ஊழலா?
தி.மு.க.வின் வரலாறு தெரிந்தவர்களுக்கு இது ஒன்றும் அதிர்ச்சிக்கு உரியதன்று. ஆனால், அனைத்தும் மக்கள் பணம் என்பதால்தான் நம் மனம் பதைபதைக்கிறது.
மக்களின் வாழ்வை நேரடியாகப் பாதிக்கின்ற வகையில் தொடர்ந்து ஊழல் செய்வதையே வழக்கமாகக் கொண்டுள்ள தி.மு.க.வைத் தமிழ்நாட்டின் வருங்காலத் தலைமுறையும் மன்னிக்கவே மன்னிக்காது. தமிழ்நாட்டுக் குடும்பங்களும் இனி தி.மு.க.வை அப்புறப்படுத்தாமல் விடமாட்டார்கள்.
பெரியார் பெயரை வைத்துக் கொள்ளை அடிப்பதையும் ஊழல் செய்வதையும் தமிழை வைத்துக் கொள்ளை அடிப்பதையும் ஊழல் செய்வதையும் ஒரு வரலாறாகவே நிகழ்த்தி வரும் தி.மு.க., மக்கள் மன்றத்தில் இனி நிமிரவே முடியாமல் நிரந்தரமாகத் தலைகுனிந்து நிற்கப் போவது உறுதி.



























