Pinned Tweet
My primary member of @BJP4India (7000409463)
She is Nisha Kumari Bhagat, a strong voice for Tribal rights in Jharkhand.
She openly opposed religious conversions among Tribal communities in Jharkhand. She supported the demand for the delisting of tribals who had converted.
She also spoke against the influence of missionary activities in tribal areas and raised concerns about the protection of Tribal culture and traditions.
She also raised serious concerns about land grabbing, harassment, the erosion of Tribal culture, and the functioning of the Hemant Soren govt.
On 6th November, she went live on Facebook, expressing her distress and making serious allegations against the system. Hours later, she was found dead at her residence in Ranchi.
Some media outlets have already started calling Nisha Bhagat's death a suicide. This is unacceptable. The media cannot determine the circumstances of her death before a proper investigation.
There must be a thorough investigation to establish the truth.
We need answers. We need accountability. We need justice for Nisha Bhagat.
#LKA100 Pranaams
The BJP will celebrate veteran leader and former deputy prime minister LK Advani’s 99th birthday at its national headquarters on Sunday, with a hawan and prayers for his long life and good health.
Advani, born on November 8, 1927, will enter his 100th year. BJP president Nitin Nabin and Union minister Piyush Goyal will address the gathering in the presence of his daughter, Pratibha Advani.
#LKAdvani #BJP | @piyush_mi
Read More: intdy.in/5mxfuh
S V PALANISAMY retweeted
போதைப்பொருள் புழக்கத்தை ஒழிப்போம் என்று தொடர்ந்து முழக்கமிட்டு வரும் தமிழ்நாடு அரசும், காவல்துறையும், அதே போதைப்பொருளைப் பயன்படுத்தி ஒரு சாதாரண குடிமகனுக்கு எதிராக வெட்கங்கெட்ட நாடகத்தை அரங்கேற்றியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கது மட்டுமல்ல, பொதுமக்களுக்கு எதிராக இழைக்கப்படும் துரோச் செயலாகும். மாற்றுக்கருத்து கொண்டவர்களை ஒடுக்குவதற்காக அரசு இயந்திரமே குற்றங்களைச் செயற்கையாக உருவாக்கும் நிலைக்குத் தரம் தாழ்ந்துவிட்டது என்பதற்கான வெளிப்படையான உதாரணமாகும்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூருக்கு அருகிலுள்ள திருக்கலாப்பட்டியில், அரசு நடத்தி வரும் மதுக்கடையை (டாஸ்மாக்) அகற்றக் கோரி உள்ளூர் மக்கள் நடத்திய போராட்டங்களுக்குத் தலைமை தாங்கிய மளிகைக் கடை உரிமையாளர் ராஜ்குமார், இந்தச் சம்பவத்தில் குறி வைத்து பழிவாங்கப்பட்டுள்ளார். போராட்டத்திற்கு தலைமை தாங்கிய குற்றத்திற்காக(!), டாஸ்மாக் ஊழியர்கள் முதலில் கஞ்சா மற்றும் புகையிலைப் பொட்டலங்களை ராஜ்குமாரின் கடைப் படிக்கட்டுகளுக்கு அடியில் மறைத்து வைத்துள்ளனர். சில நிமிடங்களுக்குப் பிறகு, காவல் துறை என்று குறிக்கப்பட்ட ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாகனத்தில் வந்த சிலர், தங்களை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவலர்கள் என்று கூறிக்கொண்டு, அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த பொட்டலங்களைக் ‘கண்டெடுத்ததாக’ நாடகமாடி, அவரை மிரட்டியுள்ளனர். பாதிக்கப்பட்டவரின் புகாரின்படியும், ஊடகங்களில் வெளியான சிசிடிவி (CCTV) காட்சிகளின்படியும், இந்தச் சதிக்கு டாஸ்மாக் மதுக்கூட உரிமையாளரே தூண்டுதலாக இருந்தார் என்று ராஜ்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
மதுக்கடையை எதிர்த்தார் என்ற ஒரே காரணத்திற்காக, ஒரு நபர் மீது பொய் வழக்குப் புனைய, சட்டத்தை அமல்படுத்த வேண்டிய காவல் துறையோ அல்லது அதன் பெயரில் செயல்படும் நபர்களோ, சில சுயநலக் கும்பல்களுடன் கைகோர்த்துக் கொண்டு மிரட்டல் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. போதைப்பொருளுக்கு எதிராகப் போராடுவதாகக் கூறும் அரசே, போதைப்பொருளைப் பயன்படுத்தி இத்தகைய சதிச் செயலில் ஈடுபடுமானால், அது மக்களின் பாதுகாவலராக இருக்க முடியாது என்பதோடு அது யாரைக் கட்டுப்படுத்த வேண்டுமோ, அவர்களுக்கே உதவும் ஒரு கருவியாகச் செயல்படுகிறது என்றே அர்த்தம்.
இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து அதிகாரிகள் மற்றும் நபர்களை உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்து, அவர்கள் மீது சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும். சிசிடிவி காட்சிகளை தடயவியல் பரிசோதனைக்கு உட்படுத்தி, அதன் முடிவு வெளிப்படையாக அறிவிக்கப்பட வேண்டும். ஆதாரங்களைச் செயற்கையாக உருவாக்கியவர்கள் மற்றும் காவல் துறையின் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியவர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும், இந்த அநீதிக்கு எதிராகக் குரல் கொடுத்த ராஜ்குமாருக்கும், அப்பகுதி மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.
போராடுவதற்கான உரிமையை, புனையப்பட்ட பொய் வழக்குகளைக் கொண்டு நசுக்க முடியாது. போதைப்பொருளுக்கு எதிராக அரசு பிரச்சாரம் செய்யும் அதே வேளையில், அரசை சார்ந்தவர்களே இதுபோன்ற நாடகத்தை அரங்கேற்ற அதே போதைப்பொருளைப் பயன்படுத்தும் இரட்டை வேடம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளரும், @svgsocialmedia தமிழ்நாடு காவல் துறையின் உயர் அதிகாரிகளும், எந்தத் தாமதமும் இன்றி, உண்மையை மறைக்க முயற்சிக்காமல், உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இதற்கு சற்றேனும் குறைவான எந்தவொரு நடவடிக்கையும், போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு எதிரான போராட்டம் வெறும் காகித அளவில் மட்டுமே நடப்பதையும், அதே சமயம் உண்மையான அச்சுறுத்தல் காவல்துறையின் உடந்தையுடன் செயல்படுவதையும் வெளிப்படுத்தும் என்பதை காவல்துறை உணர்ந்து தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாராயணன் திருப்பதி,
தலைமை செய்தி தொடர்பாளர்,
பாரதிய ஜனதா கட்சி.
Based on evidence provided by ED,as well as additional material submitted by 'Arappor Iyakkam' alleging the illegal extraction of approximately 2.3 million units of sand,DVAC conducted searches targeting former water resources minister duraimurugan. during these raid, DVAC seized 825 documents,11 electronic devices and 3 bank locker keys that substantiate the allegations.
S V PALANISAMY retweeted
Yesterday CM @TVKVijayHQ attended the wedding of YS Anil Reddy’s daughter in Chennai.
The same Anil Reddy is named in Andhra’s ₹4,000 crore liquor scam (SIT reports say kickbacks were routed through him).
Nine Tamil Nadu fishermen from Kasimedu fishing hamlet died in the cyclone off Andhra. Their families & others in village are fighting for Govt’s immediate intervention and support.
Neither CM nor fisheries minister found time to meet them — but found time for the wedding.
This from a CM who promised a scam-free government.
What’s cooking?
S V PALANISAMY retweeted
Firefighters were caught using the Vahanam as a ladder while washing the temple premises, says the news.
DMK or TVK, both are the same when it comes to using temple funds and showing respect to God.💀
S V PALANISAMY retweeted
மாணிக்கம் தாகூர் @manickamtagore சொல்வது வெளிப்படையான பொய் பிரச்சாரம். மக்களை ஏமாற்றும் நோக்கத்துடன் தனக்கு சாதகமாக, இந்தியாவிற்கு பாதகமாக குறிப்பிட்ட தேர்ந்தெடுத்த தரவுகளை மட்டும் எடுத்து ‘இந்திய பல்கலைக்கழகங்கள் சரிந்துவிட்டன’ என்று கூறுகிறார்.
2014-ல் மொத்தம் 17 இந்திய நிறுவனங்கள் மட்டுமே பட்டியலில் இருந்தன. இப்போது அந்த எண்ணிக்கை 300-க்கு மேல் உயர்ந்துள்ளது. இதை முழுமையாக மறைத்துவிட்டு, சில நிறுவனங்களின் இடங்கள் கீழே போயிருப்பதை மட்டும் பெரிதாக்கிக் காட்டுவது வெளிப்படையான ஏமாற்று வேலை. பல இந்திய நிறுவனங்களின் மதிப்பெண்கள் உயர்ந்துள்ளன என்று QS நிறுவனமே கூறியுள்ள நிலையில், இது ‘சரிவு’ அல்ல. இதை ‘பாஜக ஆட்சியில் சரிந்தது’ என்று சித்தரிப்பது முழுப் பொய்.
தேசிய அளவில் கல்வி ஒதுக்கீடு ஏறக்குறைய இரட்டிப்பாகியுள்ளது. 2014ல் கல்வி ஒதுக்கீட்டுக்கு 68,000 கோடி மட்டுமே ஒதுக்கியிருந்த நிலையில், தற்போது 2027ல் 1.39 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என்பது மாணிக்கம் தாகூருக்கு தெரியவில்லையா? கல்விக் கட்டமைப்பில் மூலதன செலவுகளை அதிகரித்ததால் தான் உயர்கல்வி சேர்க்கை 3.4 கோடியிலிருந்து 4.5 கோடியாக உயர்ந்துள்ளது. இவற்றையெல்லாம் மறைத்து, ஒரு தரவரிசையின் ஒரு பகுதியை மட்டும் எடுத்து மக்களைத் தவறாக வழிநடத்துவது பொறுப்பற்ற அரசியல்.
மேலும், QS தரவரிசையானது பட்டியல் சர்வேக்களை அதிகம் சார்ந்திருப்பது, வணிகரீதியான முரண்பாடுகளை கொண்டது என்பதோடு ஒரு சில நிறுவனங்களுக்கு அடிபணிந்து செல்வது, ஆங்கில வழிக் கல்வி நிறுவனங்களையே ஊக்குவிப்பது போன்ற பல்வேறு விமர்சனங்களுக்கும், குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகியுள்ளதால் பல்வேறு நிறுவனங்கள் இந்த தரவரிசையை முறையானதாக ஏற்றுக்கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட தரவரிசையை வைத்து இந்தியாவின் ‘கல்வித் தரம் சரிந்துவிட்டது’ என்று கூறுவது அறியாமையோ அல்லது வேண்டுமென்றே மக்களை ஏமாற்றும் முயற்சியோ ஆகும்.
உண்மை என்னவென்றால், இந்திய உயர்கல்வி அமைப்பு அளவிலும், ஆற்றலிலும், கண்டுபிடிப்புகளிலும், ஆய்வுகளிலும் பெருமளவு வளர்ந்திருக்கிறது. சில முன்னணி நிறுவனங்களின் இடம் போட்டி அதிகரித்ததால் மாறியிருக்கலாம். இதை ‘சரிவு’ என்று பொய்யாகக் கூறுவது மக்களைத் தவறாக வழிநடத்தும் காங்கிரஸ் கட்சியின் @INCIndia வழக்கமான அரசியல் மோசடி.
நாராயணன் திருப்பதி,
தலைமை செய்தித் தொடர்பாளர்,
பாஜக, தமிழ்நாடு.
@narendramodi @JoshiPralhad @rammadhav_ @blsanthosh
ஒன்றிய பாஜக அரசின் ‘விஸ்வகுரு’ வெற்று முழக்கங்களின் உண்மையான முகத்திரையைச் சர்வதேச QS Asia பல்கலைக்கழகத் தரவரிசை முற்றிலுமாகத் தோலுரித்துக் காட்டியுள்ளது. உலக அரங்கில் இந்தியக் கல்வித்துறை வரலாறு காணாத அளவில் முன்னேறி வருகிறது என்று பிரதமர் மோடியும் ஒன்றிய அமைச்சர் @JoshiPralhad பரப்பி வந்த கட்டற்ற பொய்ப் பிரச்சாரங்களை இந்த அதிகாரப்பூர்வ சர்வதேச அறிக்கை தகர்த்தெறிந்துள்ளது.
தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக ஆசியாவின் முதல் 50 இடங்களுக்குள் இந்தியாவின் ஒரு கல்வி நிறுவனம் கூட இடம்பெற முடியாமல் போனது நமது ஒட்டுமொத்த கல்வித்துறைக்கும், இந்நாட்டு மாணவர்களுக்கும் பாஜக அரசு ஏற்படுத்தியுள்ள மாபெரும் அவமானமாகும். இத்தரவரிசையில் பங்கேற்ற இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் 71% நிறுவனங்கள் படுதோல்வியடைந்து பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளன. நாட்டின் தலைசிறந்த பெருமைமிகு அடையாளங்களாக விளங்கி வந்த முதன்மை நிறுவனங்களின் தரத்தை பாஜகவின் தொலைநோக்கற்ற நிர்வாகக் குளறுபடிகள் அதலபாதாளத்திற்குத் தள்ளியுள்ளன.
முன்னணி நிறுவனமான ஐஐடி டெல்லி 59-வது இடத்திலிருந்து 66-வது இடத்திற்கும், ஐஐஎஸ்சி பெங்களூரு 64-வது இடத்திலிருந்து 79-வது இடத்திற்கும் மிகக் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன. ஐஐடி பம்பாய் 83-வது இடத்திற்கும், ஐஐடி மெட்ராஸ் 85-வது இடத்திற்கும், ஐஐடி காரக்பூர் 90-வது இடத்திற்கும் சரிந்துள்ளன. ஐஐடி கான்பூர் 20 இடங்கள் சரிந்து 97-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்தியாவின் முதன்மைப் பல்கலைக்கழகங்களில் ஒன்றான டெல்லி பல்கலைக்கழகம் 106-வது இடத்திற்குப் பின்தள்ளப்பட்டு முதல் 100 இடங்களிலிருந்தே முற்றிலுமாக வெளியேற்றப்பட்டுள்ளது.
இந்த சரிவுக்கு ஒன்றிய பாஜக அரசின் பாராமுகமும் நிதி ஒதுக்கீட்டில் செய்த துரோகமுமே முதன்மைக் காரணமாகும். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் மொத்த ஒன்றிய செலவினத்தில் கல்வி அமைச்சகத்திற்கான நிதி ஒதுக்கீடு 4.6% ஆக இருந்தது. ஆனால், மோடி ஆட்சியின் பத்தாண்டுகளில் கல்விக்கான நிதிப் பங்கு தொடர்ந்து படிப்படியாகக் குறைக்கப்பட்டு, தற்போது வெறும் 2.5% என்ற மிக மோசமான வீழ்ச்சியைத் தொட்டுள்ளது. கல்விக்கான நிதிப் பங்கை கிட்டத்தட்ட பாதியாகக் குறைத்துவிட்டு, சர்வதேசத் தரம் வாய்ந்த கல்வியையும் ஆராய்ச்சியையும் எவ்வாறு உருவாக்க முடியும்? நிதிப் பற்றாக்குறையின் விளைவாக, சர்வதேச ஆய்வுக் கட்டுரைகளின் தாக்கத்தில் முதல் 50 இடங்களுக்குள் வெறும் 3 இந்திய நிறுவனங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன; வெளிநாட்டுப் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களை ஈர்ப்பதில் 85% பல்கலைக்கழகங்கள் சரிந்து நிற்கின்றன.
முன்னாள் கல்வி அமைச்சர் @dpradhanbjp தொடங்கி, தற்போதைய கல்வி அமைச்சர் @JoshiPralhad வரை, பாஜக அமைச்சர்கள் கல்வி நிறுவனங்களின் தன்னாட்சியைப் பறித்து சித்தாந்தத் திணிப்பை மட்டுமே கொள்கையாகக் கொண்டு செயல்பட்டனர். தகுதிவாய்ந்த பேராசிரியர்களுக்குப் பதிலாக RSS சார்ந்த சித்தாந்த விசுவாசிகளை நிர்வாகப் பொறுப்புகளில் திணித்ததே இந்த ஒட்டுமொத்த கல்வித்துறை சீரழிவுக்கு நேரடிக் காரணம். ஆசிரியர் பற்றாக்குறையையோ, உள்கட்டமைப்பு மற்றும் ஆய்வகப் பற்றாக்குறையையோ தீர்க்க எந்த ஆக்கப்பூர்வ நடவடிக்கையும் எடுக்காமல், வெறும் விளம்பர அரசியலால் இந்திய மாணவர்களின் எதிர்காலத்தைப் பாழ்படுத்தியதற்கு ஒன்றிய பாஜக அரசும் பிரதமர் மோடியும் தலைகுனிய வேண்டும்.
#RSS
#TNCongress
S V PALANISAMY retweeted
மத்திய அரசு கடந்த 2023ம் ஆண்டு கொண்டு வந்த விஸ்வகர்மா - சுய தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் இதுவரை 29,94,705 பேர் பயனைடைந்து உள்ளனர், அவர்களுக்கு தொழிற்பயிற்சியுடன் ஊக்கதொகை, கடன் உதவி தொகையாக ₹5,316 கோடியை வழங்கி இருக்கிறது மத்திய அரசு.
இந்த திட்டத்திற்காக 2026-27 நிதியாண்டில் மட்டும் ₹13,000 கோடியை ஒதுக்கி இருக்கிறது மத்திய அரசு.
கடந்த காலங்களில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக அரசு இந்த திட்டத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்தாமல் இருந்து வந்தது, இருந்தாலும் திட்டம் அறிவித்த ஆறே மாதத்தில் தமிழ்நாட்டில் 8,53,395 பேர் இந்த திட்டத்தில் விண்ணப்பம் பதிவு செய்து இருந்தார்கள், அவர்களில் ஒருவருக்கு கூட இதுவரை இந்த திட்டத்தின் பயன் கிடைக்கவில்லை - காரணம் திமுக.
அதே சமயம் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் அண்டை மாநிலங்களில் பயனாளிகள் எண்ணிக்கை -
கர்நாடகா - 5,71,637 (இந்தியாவிலேயே அதிகம், ஒட்டுமொத்த பயனாளிகளில் சுமார் 20% கர்நாடகாவில் இருந்து மட்டும்)
தெலுங்கானா - 88,730 பேர்
கேரளா - 22,300 பேர்
ஆந்திராவில் 2,22,939 பேர்
ஆகவே, இனிமேலும் காலம் தாழ்த்தாமல் @TVKVijayHQ முதல்வர் தலையிட்டு இந்த திட்டத்தை தமிழ்நாட்டிலும் செயல்படுத்த அனுமதி அளிக்க வேண்டும்.
அனுமதி அளிக்கும் பட்சத்தில் குறைந்தபட்சம் 5.0 லட்சம் பேர் நிச்சயமாக பயனடைவார்கள்.
S V PALANISAMY retweeted
What a wonderful news to celebrate this Diwali! 🙏🪔🚩
In July, the newly sworn-in @TVKVijayHQ government attempted to register 3,085 acres of land that belonged four ancient Lord Shiva temples in Karur district, valued at a staggering ₹25,000 crore to its encroachers, many of the encroachers belong to other religions too.
This attempt was timed just before CM’s first visit to Karur, to boost TVK’s winning chances in karur assembly by election.’
🔱 Sri Kalyana Pasupatheeswarar Temple, Karur – 214.29 acres
🔱 Sri Balasubramania Swamy Temple, Pugalimalai – 204.52 acres
🔱 Sri Raveeswarar Swamy Temple, Kuppuchipalayam – 132.49 acres
🔱 Sri Vikrutheeswarar Temple, Venjamangudalur – 2,533.65 acres
All political parties in Tamilnadu supported Govt’s move. But
Annan @NainarBJP stood firmly with devotees and temple activists, fiercely opposed the TVK government’s anti-hindu move.
And now, a major legal victory for lord shiva devotees 🚩
⚖️ The Madurai Bench of the Madras High Court has directed the Registration Department NOT to register these lands!
A victory for those fighting to protect our sacred temple properties!
Om Namah Shivaya! 🙏🚩
🤖 Made with AI
ED, Kochi has conducted search operations across 12 premises on 04.11.2026 in Kerala and Chennai under the PMLA, 2002 in connection with Bharath Lajhna Multi State Housing Co-operative Society Ltd (BLMSHCS) and founder R. Premkumar over the misappropriation and laundering of public funds to acquire personal and family assets. During the search, assets worth Rs. 103 Crore were seized/frozen.
Excellent order passed by Hon'ble Division Bench of the Madras High Court on 04.11.2026 - to protect the extremely valuable lands of Sri Agastheeswarar Sri Prasana Venkatesa Perumal temple in Nungambakkam, in the centre of Chennai City (and just half a kilometer from the headquarters of @tnhrcedept)
The total properties of the temple is said to be worth Rs.5000/- Crores and they have been under encroachment for decades with the useless @tnhrcedept doing nothing to recover/protect them.
However - the @tnhrcedept shamelessly used the proximity of the temple and its funds to:
a. buy news papers, magazines for every section in the Department headquarters (they have more than 20 sections) (about Rs. 1.20 to 1.5 lakhs per annum)
b. frequently order meals, tiffin, water cans, etc. for the Department
c. Photocopying expenses, A4, Legal size paper supply to the Department's legal wing
d. Mosquito bats, dinner plates, plastic wares, etc. for the department
and so on
Instead of ensuring that the properties of this temple were never encroached or alienated and instead of making sure the due annual income of not less Rs. 60.00 crores is always realized for this temple -
the shameless officials of the @tnhrcedept looted this impoverished temple.... again and again!
MBBS சீட்டுகளுக்கு வந்தது 'Clearance Sale'! 40% வரை கல்விக்கட்டணத்தைக் குறைக்கும் தனியார் மருத்துவக்கல்லூரிகள்!
மருத்துவக் கல்லூரிகளில் ஆயிரக்கணக்கான MBBS இடங்கள் காலியாக உள்ளன.அதிகப்படியான கல்விக் கட்டணமே இதற்கு முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது.
இந்தியாவில் மருத்துவக் கல்விக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்த ஆண்டு MBBS சேர்க்கையில் ஒரு வித்தியாசமான சூழல் உருவாகியுள்ளது.மூன்றாவது சுற்று மருத்துவக் கலந்தாய்வு முடிந்த பிறகும் நாடு முழுவதும் சுமார் 3,426 MBBS இடங்கள் காலியாக உள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.இதனால் சில தனியார் மருத்துவக் கல்லூரிகள் மாணவர்களைச் சேர்ப்பதற்காக கல்விக் கட்டணத்தில் 40 சதவீதம் வரை தள்ளுபடி வழங்க முன்வந்துள்ளன.மருத்துவக் கல்வியில் இதுவரை இல்லாத வகையில்,மாணவர்களைத் தேடி கல்லூரிகளே கட்டணத்தைக் குறைத்து பேச்சுவார்த்தை நடத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.அதிகரிக்கும் மருத்துவக் கல்லூரிகள்;எட்ட முடியாத கல்விக் கட்டணம்!
கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையும் MBBS இடங்களும் வேகமாக அதிகரித்து வருகின்றன.இந்த ஆண்டு மட்டும் புதிதாக 13,836 மருத்துவப் படிப்பு இடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.ஆனால்,இந்தப் புதிய இடங்களில் பெரும்பாலானவை தனியார் மருத்துவக் கல்லூரிகளிலேயே உருவாக்கப்பட்டுள்ளன.ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் MBBS படிப்பதற்கான கட்டணம் மட்டுமல்லாமல்,Hostel,Mess மற்றும் இதர செலவுகளையும் சேர்த்துப் பார்த்தால் ஆண்டுக்கு சுமார் 25 முதல் 35 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது.முழுமையான மருத்துவப் படிப்பை முடிப்பதற்கு சுமார் ரூ.1.25 கோடி வரை செலவாகும் சூழல் உள்ளது.
இதனால் Lower Middle Class மற்றும் Middle Class குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களால் மருத்துவக் கல்வியைத் தொடர்வது பெரும் பொருளாதாரச் சுமையாக மாறியுள்ளது.40% கட்டணக் குறைப்பு:மாணவர்களுக்காகவா,காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்காகவா?
மாணவர் சேர்க்கை குறைந்து காலியாக இருக்கும் இடங்களை நிரப்புவதற்காக சில தனியார் மருத்துவக் கல்லூரிகள் கட்டணத்தைக் குறைக்கத் தொடங்கியுள்ளன.தமிழ்நாட்டில் உள்ள ஒரு Deemed University-யில் ஆண்டுக் கட்டணம் 25 லட்சம் ரூபாயிலிருந்து 15 லட்சம் ரூபாயாகக் குறைக்கப்பட்டதாகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது சுமார் 40 சதவீதக் குறைப்பாகும்.இதன் மூலம் நான்கரை ஆண்டுகளுக்கான கல்விக் கட்டணம் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருந்த நிலையில், 80 லட்சம் ரூபாய்க்குக் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.சில கல்லூரிகள் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்காக Admission Agents மற்றும் Counselling நிறுவனங்களின் உதவியையும் நாட தொடங்கியுள்ளன.இருப்பினும்,Undergraduate Medical Education-க்காகவே பெரிய அளவில் வங்கிக் கடன் வாங்க குடும்பங்கள் தயங்குகின்றன.ஏனெனில் MBBS முடித்த பிறகு PG Medical Education-க்கும் மிகப்பெரிய தொகையைச் செலவிட வேண்டியிருக்கிறது.அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடங்கள் நிரம்புகின்றன;தனியார் கல்லூரிகளில்தான் காலியிடங்கள்!
இந்தச் செய்தியில் குறிப்பிடப்படும் முக்கியமான விஷயம் என்னவென்றால்,அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்கள் பெரும்பாலும் நிரம்பிவிட்டன.காலியாக இருக்கும் இடங்களில் பெரும்பாலானவை தனியார் மருத்துவக் கல்லூரிகளைச் சேர்ந்தவை.இதனால் மருத்துவக் கல்விக்கான கட்டண நிர்ணய முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.NEET தேர்வில் தகுதி பெறுவதற்கான Cut-off மதிப்பெண்ணைக் குறைப்பது மட்டுமே இந்தப் பிரச்சினைக்குத் தீர்வாகாது. ஏற்கெனவே லட்சக்கணக்கான மாணவர்கள் NEET தேர்வில் தகுதி பெறும் நிலையில் இருக்கிறார்கள். ஆனால்,அவர்களால் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கட்டணத்தைச் செலுத்த முடியவில்லை என்பதுதான் உண்மையான பிரச்சினை.
கர்நாடகாவிலும் இதே நிலை!
கர்நாடக மாநிலத்தில் 78 மருத்துவக்கல்லூரிகள் உள்ளன. அவற்றில் 25 அரசு மருத்துவக் கல்லூரிகளும், 61 தனியார் மருத்துவக் கல்லூரிகளும் இடம்பெற்றுள்ளதாகச் செய்தி குறிப்பிடுகிறது.மொத்தம் 15,746 MBBS இடங்கள் உள்ள நிலையில்,191 இடங்கள் காலியாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் முதல்முறையாக இத்தகைய காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன.
கர்நாடகாவில் இந்த ஆண்டு மருத்துவக் கலந்தாய்வு ஏழு சுற்றுகளாக நடத்தப்பட்டுள்ளது. இத்தனை சுற்றுகளாகக் கலந்தாய்வு நடத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்க மாற்றமாகப் பார்க்கப்படுகிறது.Management Quota கட்டணம்: சாதாரண குடும்பங்களால் எட்ட முடியாத உயரம்!
அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் உள்ள கட்டணங்களுக்கு இடையே மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது.
அரசு மருத்துவக்கல்லூரிகளில் ஒப்பீட்டளவில் குறைந்த கட்டணத்தில் மருத்துவக் கல்வியைப் பெற முடிகிறது. ஆனால் தனியார் கல்லூரிகளில் Management Quota மற்றும் NRI Quota இடங்களுக்கான கட்டணங்கள் ஆண்டுக்கு பல லட்சம் ரூபாயைத் தாண்டுகின்றன.சில தனியார் கல்லூரிகளில் Management Quota கட்டணம் ஆண்டுக்கு 30 முதல் 45 லட்சம் ரூபாய் வரை இருப்பதாகவும்,அரசு மருத்துவக் கல்லூரிகளில் விரிவாக்கப்பட்ட NRI Quota இடங்களுக்கான கட்டணம் சுமார் ரூ.25 லட்சம் வரை இருப்பதாகவும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.மருத்துவக் கல்விக்கான இடங்கள் அதிகரிப்பது வரவேற்கத்தக்கதுதான்.ஆனால் அந்த இடங்களைப் பெறுவதற்கான பொருளாதார வசதி இல்லாதபோது, இடங்கள் அதிகரிப்பதால் மட்டும் மருத்துவக்கல்வி அனைவருக்கும் கிடைத்துவிடாது.மருத்துவக் கல்வியில் இன்று எழுந்திருக்கும் மிகப்பெரிய கேள்வி இதுதான்:
தகுதியுள்ள மாணவர்கள் இல்லாததால் மருத்துவக் கல்லூரிகளில் இடங்கள் காலியாக இருக்கின்றனவா?அல்லது தகுதியுள்ள மாணவர்களிடம் அந்த இடங்களைப் பெறுவதற்கான பொருளாதார வசதி இல்லாததால் காலியாக இருக்கின்றனவா?
இந்த இரண்டுக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது.
S V PALANISAMY retweeted
VIDEO | Ahmedabad, Gujarat: In a major breakthrough against international drug trafficking, wanted drug trafficker Salim Ismail Dola has been arrested in Turkey with the assistance of Indian agencies.
A key accused in the Rs 438-crore drug seizure case near Vadodara, Dola allegedly supplied chemicals for drug production and took possession of the manufactured narcotics.
The arrest marks a significant step towards dismantling the international drug trafficking network.
S V PALANISAMY retweeted
பழைய ஊழல் மாடலின் ‘அப்டேட்டட் வெர்ஷன்’தானா தவெக?
"புதிய அரசியல்", "ஊழலற்ற நிர்வாகம்" என்று மேடைகளில் சினிமாப் பாணியில் வசனம் பேசி ஆட்சிக்கு வந்த திரு. @TVKVijayHQ தலைமையிலான தவெகவின் உண்மை முகம், ஆட்சி அமைந்த குறுகிய காலத்திலேயே தொடர்ந்து அம்பலமாகி வருகிறது. சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.20 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளுக்குத் தவெக பெண் எம்.எல்.ஏ. குழந்தை ராணி அவர்கள் 20% கமிஷன் கேட்டு ஒப்பந்ததாரர்களை மிரட்டுவதாகவும், அப்பணிகளைத் தவெக நிர்வாகிகளுக்கே தாரைவார்க்க முடிவெடுத்துள்ளதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. நியாயம் கேட்கச் சென்ற ஒப்பந்ததாரர்களை அவமானப்படுத்தி விரட்டியடித்துள்ள இந்த '20 சதவீதக் கமிஷன் மாடல்'தான் திரு. ஜோசப் விஜய் தமிழ்நாட்டு மக்களுக்குத் தரும் மாற்றமா?
உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாக இடைவெளியைப் பயன்படுத்தி, மற்ற ஒப்பந்ததாரர்களைப் புறக்கணித்துத் @TVKPartyHQ எம்.எல்.ஏ-க்களும் நிர்வாகிகளும் கமிஷன் வசூலில் ஈடுபடுவது அப்பட்டமான விதிமீறல். "ஊழலை ஒருபோதும் சகிக்க மாட்டோம்" என முழங்கிய திரு. ஜோசப் விஜய், சிவகங்கைத் தவெக பெண் எம்.எல்.ஏ. மீதான 20% கமிஷன் குற்றச்சாட்டுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்? அவரது தொடர் மௌனம் இந்தப் பகற்கொள்ளைக்குத் தலைமை தரும் சம்மதமா?
கிராமப்புற வளர்ச்சிக்கு மத்திய அரசு ஒதுக்கும் மக்களின் வரிப்பணத்தில் 20% கமிஷன் வசூலிக்கும் தவெக எம்.எல்.ஏ. மீது லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) உடனடியாக வழக்குப்பதிவு செய்து பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும். ஜனநாயக முறையில் டெண்டர் வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறுவதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். தவெக அரசு இத்தகைய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளாவிட்டால், வரும் காலங்களில் தமிழக மக்கள் அவர்களை முற்றிலும் புறக்கணிப்பார்கள்!
































