Senthil Arumugam (@sentharu) header
Senthil Arumugam (@sentharu) profile picture

State secretary - Head Quarters, MAIAM

Joined September 2013
மக்கள் நீதி மய்யம் தலைவர், மாநிலங்களவை உறுப்பினர் திரு.கமல் ஹாசன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். @ikamalhaasan #KamalHaasan #HBDKamalHaasan #CelebratingKamalHaasan #MNM_KamalHaasan #மய்யம்_கமல்ஹாசன்
11
94
3
205
3,510
Senthil Arumugam retweeted
தமிழுக்கு இதைவிடப் பெரிய அவமானம் இல்லை. இத்தகைய போலியான நூல்கள் நீண்ட கால அடிப்படையில் மாபெரும் தீங்குகளை விளைவிக்கும். இவற்றை வாசித்து, குறிப்பெடுத்து, அவை பேச்சிலும் எழுத்திலும் ஆய்விலும் இடம்பெற்றால் தமிழின் மானம் கப்பலேறிவிடும். இந்தக் காரியத்தை எவர் செய்திருந்தாலும் அவர்கள் தமிழுக்குத் துரோகம் இழைத்தவர்கள். இந்தப் போலி நூல்கள், அனைத்து நூலகங்களில் இருந்தும் உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டு வீதியில் கொட்டி எரிக்கப்பட வேண்டும். மோசடி செய்த பதிப்பகங்கள் சீல் வைக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன். இந்த மோசடியை அம்பலப்படுத்தியதற்காக எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். sindhai.com/essays/perumal-m…
440
2,385
140
9,973
948,678
மக்கள் நீதி மய்யம் - நிர்வாகக் குழு & செயற்குழு கூட்டம் ஊடகக் குறிப்பு (22-10-2026) தலைவர் திரு.கமல்ஹாசன் @ikamalhaasan அவர்களின் அறிவுறுத்தலின்படி, இன்று 22.10.2026 காலை 11 மணியளவில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டமானது பொதுச்செயலாளர் திரு. ஆ. அருணாச்சலம் @Arunachalam_Adv, துணைத்தலைவர்கள் திரு.A.G.மெளரியா I.P.S(Rtd) @MouryaMNM, திரு.R.தங்கவேலு @Thangavelukovai ஆகியோர் முன்னிலையில் காணொலி வாயிலாக நடத்தப்பட்டது. கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டவை: 1. உள்ளாட்சித் தேர்தல் : வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. குறிப்பாக, வார்டு வாரியாக மக்களைச் சந்தித்து நீண்டகாலமாக நிலுவையில் உள்ள அடிப்படைப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான களப்பணிகளை அனைத்து நிர்வாகிகளும் தீவிரமாக முன்னெடுக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. 2. ஏரியா சபைக் கூட்டங்கள்: கிராமசபைகள் மேம்படவும் நகரங்களில் ஏரியாசபை கூட்டங்கள் முறையாக நடத்தப்படுவதற்கும் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். கடந்த செப்டம்பர் 15 அன்று நடந்திருக்கவேண்டிய ஏரியா சபைகள் கூட்டங்கள் நடத்தப்படவில்லை. இது மிகுந்த கண்டனத்திற்குரியது. அடுத்து, டிசம்பர் 10 அன்று நடத்தப்பட வேண்டிய ஏரியாசபைக் கூட்டங்களை முறையான முன்னறிவிப்போடு நடத்திட தமிழக அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. மேலும், டிசம்பர் 10 அன்று நடைபெறவுள்ள ஏரியா சபைக் கூட்டங்களில் நமது நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டு அவரவர் வார்டு பிரச்னைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. 3. மழை நிவாரணப்பணிகள் : கஜா புயல், சென்னை பெருவெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் நேரடியாக மக்களைச் சந்தித்து நிவாரணப்பணிகளை மேற்கொண்டார். தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, வடகிழக்குப் பருவமழை மற்றும் எல்நினோ விளைவுகளால் மக்கள் பாதிப்புக்குள்ளாகும்போது நமது நிர்வாகிகள் உடனடியாக நிவாரணப்பணிகளில் ஈடுபடவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. 4. தலைவர் திரு.கமல்ஹாசன் பிறந்தநாள்: மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர். திரு. கமல்ஹாசன் M. P.. அவர்கள் பிறந்தநாளான நவம்பர் 7 அன்று தமிழகமெங்கும் இரத்த தானம், உடல்தானம், மரம் நடுதல், கல்விசார் பணிகள் உள்ளிட்ட மக்கள் நலப்பணிகள் செய்து கொண்டாடுவது என்று தீர்மானிக்கப்பட்டது. மேலும், பொதுமக்களைப் பாதிக்கும் பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டன. மேற்குறிப்பிட்ட தீர்மானங்களை தலைவர் அவர்களின் வழிகாட்டுதலோடு சிறப்பாகச் செயல்படுத்திடவும் தீர்மானிக்கப்பட்டது. நன்றி, ஊடகப் பிரிவு #KamalHaasan #KamalHaasan_MP #MakkalNeedhiMaiam
2
70
5
151
4,776
திரு. மஸ்க் @elonmusk அவர்களே, ஆம், எந்த ஒரு கோடீஸ்வரரும் ஒரு நாட்டின் கொள்கையைத் தீர்மானிக்கக் கூடாது. அவர் இந்தியராக இருந்தாலும் சரி, அமெரிக்கராக இருந்தாலும் சரி. செயற்கைக்கோள் இணையச் சேவையில் போட்டியை இந்தியா வரவேற்க வேண்டும். இந்திய நிறுவனமோ வெளிநாட்டு நிறுவனமோ, தொலைதூரப் பகுதிகளில் வாழும் கடைக்கோடி மக்களும் பயனடையும் வகையில் நடைமுறைக்கு ஏற்ற, கட்டுப்படியான விலையில் சேவை தருபவர் யாரோ, அவர்களுக்கு இடம் இருக்க வேண்டும். தனிநபர் வருமானம் குறைவாக உள்ள நாடுகளில் செயற்கைக்கோள் இணைய வசதியும் மலிவாகக் கிடைக்க வேண்டும். அதிகச் சந்தாக் கட்டணமும் கருவிகளின் விலையும், சாதாரணக் குடும்பங்களுக்கு இதை எட்டாக்கனியாக்கிவிடும் அபாயம் உண்டு. இண்டர்நெட் இணைப்பு டிஜிட்டல் இடைவெளியைக் குறைக்க வேண்டும். புதிய இடைவெளியை உருவாக்கக் கூடாது. எங்கள் நெட்வொர்க்குகளும் அலைக்கற்றையும் (spectrum) வெறும் வணிகச் சொத்துகள் அல்ல. அவை தொலைநோக்குப் பார்வையுடன் உருவாக்கப்பட்ட உத்திசார் கட்டமைப்புகள் என்பது இந்தியாவுக்குத் தெரியும். இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு விஷயத்தில் எந்தச் சமரசத்துக்கும் இடமில்லை. ஒவ்வொரு நாடும் தன் சொந்த நலனை வைத்தே முடிவுகளை எடுக்கிறது. மேற்கத்திய நாடுகள் தங்கள் நாட்டில் பாதுகாப்புவாதத்தைக் கடைப்பிடித்துக்கொண்டு, மற்றவர்களுக்குத் தடையற்ற சந்தை பற்றிப் போதிக்க முடியாது. இந்தியா தன் உள்நாட்டு உற்பத்தியாளர்களைக் காக்க நடவடிக்கை எடுப்பது போலவே, அமெரிக்காவும் தன் உள்நாட்டுத் தொழிலைக் காக்க சீன மின்சார வாகனங்களுக்கு 100% வரி விதித்தது. பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்தியாவும் அமெரிக்காவும் ஹுவாவே நிறுவனத்துக்குக் கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. தனக்கு வசதியாக இருக்கும்போது மட்டும் மற்றவர்களிடம் சமவாய்ப்பைக் கோர முடியாது. ஒரு ஜனநாயக நாடாக, எங்கள் பலங்களையும் குறைகளையும் இந்தியர்களாகிய நாங்களே எங்களுக்குள் விவாதிப்போம், கேள்வி கேட்போம், சரிசெய்வோம். கிராம அளவிலான உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிராட்பேண்ட் இணைப்பைக் கொண்டுசேர்க்கும் இந்தியாவின் பாரத்நெட் (BharatNet) திட்டத்தையே எடுத்துக்கொள்ளுங்கள். சிஏஜி-யின் 2026 தணிக்கை அறிக்கை சுட்டிக்காட்டியபடி, இந்தத் திட்டம் தன் அசல் நோக்கங்களை அடைய ஏன் தடுமாறுகிறது என்று நாங்கள் கேள்வி கேட்போம். ₹39,888 கோடி செலவழித்த பிறகும், சேவைக்குத் தயாரான கிராமப் பஞ்சாயத்துகளில் 33.2% மட்டுமே ஏன் செயல்பட்டன? அதே நேரத்தில், இணையத் தரவை உலகிலேயே மிக மலிவான ஒன்றாக்கி, கோடிக்கணக்கானவர்களை இண்டர்நெட் சேவைக்குள் கொண்டுவந்த எங்கள் தொலைத்தொடர்புத் துறையையும் அதன் ஒழுங்குமுறைகளையும் பாராட்டவும் எங்களுக்குத் தெரியும். இந்தியா ஒரு ஜனநாயக நாடு. யாருடைய காலனியும் அல்ல. நாங்கள் உலகை வரவேற்கிறோம். ஆனால் எங்கள் எதிர்காலத்தை இந்திய மக்களாகிய நாங்களே தீர்மானிப்போம். மேற்கத்திய சுயநலச் சக்திகளோ, அவர்களின் இரட்டை நிலைப்பாடுகளோ, எந்தக் கோடீஸ்வரருமோ அதைத் தீர்மானிக்க முடியாது. அவர் இந்தியராக இருந்தாலும் சரி, அமெரிக்கராக இருந்தாலும் சரி. @ikamalhaasan #KamalHaasan #MakkalNeedhiMaiam #KamalHaasan_MP #elon_musk
Mr. Musk, yes, no billionaire should dictate a nation’s policy - Indian or American. India must welcome competition in satellite internet, from Indian and global providers, whoever offers the most practical and affordable last-mile solution for those in remote regions. In countries with lower per-capita incomes, satellite internet must be affordable too. High subscription fees and equipment costs risk putting it beyond the reach of ordinary households. Connectivity must bridge the digital divide, not create a new one. India knows our networks and spectrum are strategic infrastructure, not merely commercial assets. India’s national security safeguards are non-negotiable. Every country makes choices based on its own interests. Those in the West cannot preach free markets while practicing protectionism at home. USA imposed 100% tariffs on Chinese EVs to protect its domestic industry, just as India takes measures to protect its own domestic manufacturers. Both India and the US have restricted Huawei over security concerns. One cannot demand a level playing field from others only when it suits its own agenda. Indians will internally debate, question and address our strengths and shortcomings as a democratic country. Take BharatNet, India’s programme to bring broadband to village-level local bodies. We will question why, as the CAG’s 2026 audit report found, the programme is struggling to meet its original objectives. Why were only 33.2% of service-ready Gram Panchayats operational, despite ₹39,888 crore being spent? At the same time, we know to appreciate our telecom sector and regulations, which has made internet data among the world’s most affordable, bringing millions online. India is a democracy, not a colony. We welcome the world, but we, the Indian people, will decide our own future - not Western vested interests, their double standards or any billionaire - Indian or American.
16
145
5
583
19,535
Senthil Arumugam retweeted
Some lives leave you deeply moved. Navi Pillay’s is one such life. From a family whose roots in South Africa began with her grandparents’ indentured labour, she rose to become a pioneering jurist who stood against apartheid and helped establish rape and systemic sexual violence as acts of genocide under international law. What an extraordinary journey. The Nobel Peace Prize recognises the remarkable contribution of this South African jurist of Tamil origin to human rights and justice. A moment of immense pride for Tamils everywhere. சில மனிதர்களின் வாழ்க்கை நம் மனதை ஆழமாகத் தொட்டுவிடும். நவநீதம் நவி பிள்ளையின் வாழ்க்கையும் அப்படிப்பட்ட ஒன்றுதான். அவரது தாத்தா பாட்டி ஒப்பந்தத் தொழிலாளர்களாகச் சென்ற தென்னாப்பிரிக்க மண்ணில், ஒரு எளிய குடும்பத்தில் பிறந்த நவநீதம் பிள்ளை, இனவெறிக்கு எதிராக உறுதியுடன் போராடியதோடு, சர்வதேசச் சட்டத்தில் பாலியல் வன்முறை மற்றும் பாலியல் அத்துமீறல்களை 'இனப்படுகொலை' குற்றங்களாக அறிவிக்கச் செய்த ஒரு முன்னோடிச் சட்ட வல்லுநராக உயர்ந்தார். என்னவொரு பிரமிக்கத்தக்கப் பயணம்! தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த இந்தத் தென்னாப்பிரிக்கச் சட்ட வல்லுநர், மனித உரிமைகளுக்கும் நீதிக்கும் ஆற்றிய ஈடு இணையற்ற பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இது உலகெங்கிலும் வாழும் தமிழர்களுக்குப் பெருமிதமான தருணம்!
45
370
9
2,144
96,969
Senthil Arumugam retweeted
Mr. Musk, yes, no billionaire should dictate a nation’s policy - Indian or American. India must welcome competition in satellite internet, from Indian and global providers, whoever offers the most practical and affordable last-mile solution for those in remote regions. In countries with lower per-capita incomes, satellite internet must be affordable too. High subscription fees and equipment costs risk putting it beyond the reach of ordinary households. Connectivity must bridge the digital divide, not create a new one. India knows our networks and spectrum are strategic infrastructure, not merely commercial assets. India’s national security safeguards are non-negotiable. Every country makes choices based on its own interests. Those in the West cannot preach free markets while practicing protectionism at home. USA imposed 100% tariffs on Chinese EVs to protect its domestic industry, just as India takes measures to protect its own domestic manufacturers. Both India and the US have restricted Huawei over security concerns. One cannot demand a level playing field from others only when it suits its own agenda. Indians will internally debate, question and address our strengths and shortcomings as a democratic country. Take BharatNet, India’s programme to bring broadband to village-level local bodies. We will question why, as the CAG’s 2026 audit report found, the programme is struggling to meet its original objectives. Why were only 33.2% of service-ready Gram Panchayats operational, despite ₹39,888 crore being spent? At the same time, we know to appreciate our telecom sector and regulations, which has made internet data among the world’s most affordable, bringing millions online. India is a democracy, not a colony. We welcome the world, but we, the Indian people, will decide our own future - not Western vested interests, their double standards or any billionaire - Indian or American.
Starlink is licensed in over 165 countries and has spent five years complying with every single law and requirement of the government of India, so why still no license? Is Ambani the real boss of India?
4,625
23,602
2,626
113,387
7,779,205
Senthil Arumugam retweeted
I have written to the Chief Election Commissioner urging him to meet Opposition MPs at Samvidhan Bhavan in Parliament. @ECISVEEP The Election Commission is the guardian of every Indian’s right to vote. When that trust is under strain, the CEC must meet elected representatives, address their concerns and reaffirm the Commission’s independence and impartiality. The time for dialogue and corrective action is now.
167
690
25
3,778
219,872
Senthil Arumugam retweeted
The secret of getting ahead is getting started - Mark Twain My congratulations to the entire Indian contingent on a magnificent Asian Games campaign. Now, the next journey begins. 🇮🇳
23
359
7
2,060
121,625
Senthil Arumugam retweeted
சிங்கீதம் காரு தன் சித்தப்படி இளமையில், இளமையுடன் உயிர் நீத்தார். அவர் இளமை பலருக்கும் தொற்றாது. அந்த குணம் தொற்றவேண்டும் என்ற ஆசையில் அவர் கை பற்றி நடந்த நண்பர்களுள் சீடர்களுள் நானும் உளேன். - கமல் ஹாசன் Dying young need not be a tragedy. It can be glorious. Singeetham Srinivasa Rao is a great example. I have admired him since I knew him. Now I aspire to live like he did. - Kamal Haasan
107
1,391
49
12,332
375,376
Senthil Arumugam retweeted
Gandhi’s great challenge to independent India was never “follow me.” It was: think for yourself. In today's modern age of political polarisation, instant opinions and viral outrage, what does Gandhi mean to India? Perhaps, more than ever, it means this: never surrender your political conscience to any party, ideology, crowd, influencer or algorithm. Happy Gandhi Jayanti!
97
649
27
3,457
202,705
கிராம சபையில் பங்கேற்போம்! நமது தலைவர் திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்கள் உள்ளாட்சிகளின் முக்கியத்துவம் குறித்து தொடர்ந்து வலியுறுத்தி வருவதை கவனத்தில் கொண்டு கடந்த 8 ஆண்டுகளாக ஒவ்வொரு முறையும் கிராமசபைக் கூட்டங்கள் நடக்கும்போதும் மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகளான நாம் அவரவர் பகுதிகளில் நடக்கும் கிராமசபைக் கூட்டங்களில் தொடர்ந்து பங்கேற்று வருகிறோம். வருகிற அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியன்று (02.10.2026) தமிழகமெங்கும் கிராமசபைக் கூட்டங்கள் நடைபெறவுள்ள நிலையில், நமது கட்சியின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவரும் வழக்கம்போல் கிராமசபைக் கூட்டங்களில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும் நம்முடன், கிராமப் பொதுமக்களையும் கூட்டத்தில் பங்கேற்கச் செய்து பங்கேற்பு ஜனநாயகத்தினை வலுப்படுத்திட வேண்டும். கூட்டத்தில், கிராம மக்கள் முன்வைக்கும் நியாயமான கோரிக்கைகளானது கிராமசபைத் தீர்மானங்களாக நிறைவேற்றப்படுவதற்குத் துணைநிற்க வேண்டியது நமது கடமையாகும். மேலும், கடந்த காலங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செயல்பாட்டுக்கு வருவதற்கும் நாம் உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். தலைவர் நமக்கு வகுத்தளித்துள்ள இந்த அணுகுமுறையில் நாம் அனைவரும் கிராமசபைக் கூட்டங்களில் பங்கேற்று மக்களின் அடிப்படைத் தேவைகள், பிரச்னைகளைத் தீர்ப்பதற்குத் துணைநிற்போம். நன்றி! நாளை நமதே! @Arunachalam_Adv #KamalHaasan #MakkalNeedhiMaiam #KamalHaasan_MP #GramaSabha
2
69
1
132
3,873
Senthil Arumugam retweeted
பிரமுகர் போர்வையில் அலையும் இழிந்தோரின் செயல் எதுவரைக்கும் செல்லும் என்று ஜெம் கிரானைட்ஸ் வீரமணி வழக்கு காட்டியிருக்கிறது. பண பலத்துக்கு அஞ்சாமல் இதை வெளிக்கொண்டுவந்தவர்கள் நன்றிக்குரியவர்கள். இந்த விவகாரத்தில் தொடர்புடையோர் மீது அறத்தின் கரங்கள் இரக்கமின்றி நீளவேண்டும். இனியொரு சம்பவம் இதுபோல் நடக்கலாகாது.
176
876
47
4,664
293,233
Senthil Arumugam retweeted
வளைந்த தடி ஊன்றிய கிழவன் தமிழகத்தை தரணியில் தலைநிமிர செய்து பகுத்தறிவையும் பெண்ணியத்தையும் இம்மண்ணில் விதைத்த "தந்தை பெரியார்" பிறந்த தினத்தில் நினைவை போற்றுவோம். #MakkalNeedhiMaiam #KamalHaasan
2
27
1
50
535
Senthil Arumugam retweeted
தன் வாழ்நாள் முழுக்க தமிழ், தமிழர், தமிழ்நாடு என்றே சிந்தித்திருந்த பெருமனிதர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளில் அவரை நினைவுகொள்ளும் என் வாழ்த்துகள் சேர்க.
35
524
8
3,960
192,939
ஏரியா சபைக் கூட்டங்கள் எப்போது நடத்தப்படும்? முதலமைச்சர் வசமுள்ள நகராட்சித்துறையானது செப்டம்பர் 15 அன்று ஏரியாசபைக் கூட்டங்கள் நடத்த ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை? மக்கள் நீதி மய்யம் கேள்வி கிராம சபைகளைப் போல் மக்கள் பங்கேற்புள்ள ஜனநாயகத்தினை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில் உறுதிப்படுத்திடுவது ஏரியா சபைக் கூட்டங்களாகும். இக்கூட்டங்கள் அந்தந்த வார்டுக்கு உட்பட்ட பொதுமக்கள் - தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் அனைவரும் ஒன்றுசேர்ந்து பங்கேற்று குடிநீர், சாலைவசதி, பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட அந்தந்தப் பகுதிப் பிரச்னைகள் குறித்து விவாதித்து திட்டமிட-தீர்வு காண வழிவகுக்கிறது. பேரூராட்சிப் பகுதிகளில் ஒரு வார்டு என்பதை 3 ஏரியா சபையாகவும், நகராட்சிப் பகுதிகளில் ஒரு வார்டு என்பதை 4 ஏரியா சபையாகவும், மாநகராட்சிப் பகுதிகள் மக்கள் தொகைக்கு ஏற்பவும் பிரிக்கப்பட்டு கூட்டங்கள் நடத்தப்படவேண்டும். இக்கூட்டங்கள் ஜனவரி 25,ஏப்ரல் 14, செப்டம்பர் 15, டிசம்பர் 10 என ஆண்டிற்கு நான்குமுறை நடத்தப்படவேண்டுமென்று 22.05.2023 அன்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது(அரசாணை எண்:64). பின்னர், சென்னை போன்ற மாநகராட்சிகளில் ஒவ்வொரு வார்டும் 10 ஏரியாசபையாகப் பிரிக்கப்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு இக்கூட்டங்கள் மேற்குறிப்பிட்ட நாட்களில் தொடங்கி 15 நாட்களுக்குள் நடத்தப்படவேண்டும் என்று விளக்கமளிக்கப்பட்டது(அரசாணை எண்: 9016). இந்த அடிப்படையில் வருகிற செப்டம்பர் 15 அன்று தொடங்கி ஒவ்வொரு வார்டிலும் நடத்தப்படவேண்டிய ஏரியா சபைக் கூட்டங்கள் குறித்த அறிவிப்பானது இதுவரை வெளியிடப்படாதது வருத்தமளிக்கிறது. மாண்புமிகு முதலமைச்சர் வசமுள்ள நகராட்சி மற்றும் குடிநீர்வழங்கல் துறையானது விரைந்து நடவடிக்கை எடுத்து செப்டம்பர் 15 அன்று தொடங்கி ஒவ்வொரு வார்டிலும் ஏரியா சபைக் கூட்டங்கள் நடத்தப்படுவதை உறுதிசெய்யவேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது. மேலும், இக்கூட்டங்கள் குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்தி மக்கள் பங்கேற்பை அதிகரிக்கச் செய்யவேண்டும். கிராம சபை, ஏரியா சபைகளுக்காக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் தொடர்ந்து குரல்கொடுத்துவருவதை தமிழகம் நன்கறியும். குறிப்பாக 2022ல் தலைமைச் செயலகத்தில் அப்போதைய தலைமைச் செயலாளர் திரு.இறையன்பு.ஐ.ஏ.எஸ் அவர்களை நேரில் சந்தித்து உரிய தரவுகளோடு ஏரியா சபைகளை வலுப்படுத்த வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது. மக்களை அதிகாரப்படுத்துவோம்; மக்களாட்சியை வலுப்படுத்துவோம். செந்தில் ஆறுமுகம், தலைமை நிலைய செயலாளர், மக்கள் நீதி மய்யம். 2022 TWEET LINK : nitter.gq/ikamalhaasan/sta… @TVKVijayHQ @CMOTamilnadu #KamalHaasan #KamalHaasan_MP #MakkalNeedhiMaiam
நகர்ப்புற உள்ளாட்சிகளில் மக்கள் பங்கேற்புடன் கூடிய மக்களாட்சி நிலைப்பெற ஏரியா சபை மற்றும் வார்டு கமிட்டி அமைப்புகளை நடைமுறைப்படுத்த மக்கள் நீதி மய்யம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தது. கடந்த பிப்ரவரி 21-ம் தேதி தமிழக தலைமைச் செயலாளரிடம் மனுகொடுத்தோம். (1/4)
6
70
2
108
5,705
Senthil Arumugam retweeted
தமிழ்நாடு, புரட்சி போன்ற சொற்களை, சொற்களாக அல்லாமல் கருத்துருவாக்கங்களாகத் தமிழருக்கு அறிமுகம் செய்த என் பிரியமாகவிஞன் பாரதிக்கு என் வணக்கங்கள். அவர்தம் நினைவு நாளில், காலத்தால் சோபையிழந்து போய்விடாத அவரது கவிதைகளை மனங்கொள்வோம்.
45
329
10
2,017
174,299
Senthil Arumugam retweeted
‘தான் பெற்ற செல்வம் பெறுக இவ்வையகம்’ என வாழும் ஆசிரியப் பெருமக்களை வணங்கி வாழ்த்துகிறேன். கற்றுக்கொள்ளவும், கற்றுக்கொடுக்கவும் ஒருபோதும் தயங்காதிருப்போம்.
43
353
14
1,738
142,762
Senthil Arumugam retweeted
We teach our kids one thing in school. We test them on another for college admissions! Government’s Vineet Joshi Committee has admitted this mismatch between school education and college entrance exams. For NEET, the first step must be abolition. Clear Tamil Nadu’s NEET Exemption Bill, still awaiting Presidential assent. Don’t reform an unfair system. End it. For other entrance exams, the Committee has made sensible suggestions: give Class 12 marks greater weightage, offer multiple attempts through the year, and cap coaching at 2–3 hours a day.
61
403
23
1,132
105,438
Maiam IT's — Movie Meet-Up with Gen Z பார்த்தோம் திரைப்படத்தை... பேசினோம் வரலாற்றை... பகிர்ந்தோம் சிந்தனைகளை... பழகினோம் அரசியலை ! தலைவர் திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்களின் 'ஹே ராம்' திரைப்படத்தின் மூலம் இளையோருடன் ஓர் அர்த்தமுள்ள சந்திப்பு. @MaiamOfficialIT #KamalHaasan #MaiamIT #HeyRam #Youth #GenZ #MaiamMovieMeetUp
6
84
8
169
18,731
Senthil Arumugam retweeted
பிறப்பினால் எவரும் எவருக்கும் தாழ்ந்தவரும் அல்ல உயர்ந்தவரும் அல்ல எனும் மானுட சமத்துவத்தை அரசியல் சித்தாந்தமாகக் கொண்டு களமாடும் என் உடன் பிறவாச் சகோதரர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர், எழுச்சித் தமிழர் திருமாவளவன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்து. @thirumaofficial
27
406
19
2,689
236,916