KOLAPPAN (@skthandesh) header
KOLAPPAN (@skthandesh) profile picture

M-a-s-t-e-r-in-g Law ⚖️ தமிழ்//சட்டம்//பிரமிள்//மார்க்ஸ்//திமுக// Climate-change enthusiast.

CHENNAI
Joined April 2012
Photo by KOLAPPAN (@skthandesh)Photo by KOLAPPAN (@skthandesh)Photo by KOLAPPAN (@skthandesh)Photo by KOLAPPAN (@skthandesh)Photo by KOLAPPAN (@skthandesh)Photo by KOLAPPAN (@skthandesh)Photo by KOLAPPAN (@skthandesh)Photo by KOLAPPAN (@skthandesh)Photo by KOLAPPAN (@skthandesh)Photo by KOLAPPAN (@skthandesh)
I got a visa to India and was supposed to leave this morning to attend the Bharat Summit in Hyderabad. I had been invited as a panelist and speaker on the future of media and press freedom. But «orders from above» in the Ministry of Home Affairs have cancelled my visa. Here is my message for @AmitShah
3,305
7,250
873
30,001
1,200,046
அட முட்டாப் பயலே...! இது உனக்கில்லடா... ஊடகங்களுக்காகவேப் போட்டது...😜 nitter.gq/DMKITwing/status/21203…
!தீபாவளி ஒரே நாளில் 17 பேர் படுகொலை! எதிர்க்கட்சிகள் கேள்வியால் கொதித்த முதல்வர் விஜய் - தலைமைச் செயலகத்தில் அதிரடி! டிஜிபி மகேஷ்குமார் அகர்வால், உளவுத்துறை ஐ.ஜி. அஸ்ரா கார்க் உடன் 2-வது நாளாக பரபரப்பு ஆலோசனை! உளவுத்துறை படுதோல்வி, இன்ஃபார்மர் சிஸ்டம் காலி, செயல்படாத அதிகாரிகளுக்கு சீட்டு கிழியப்போகுது - முதல்வர் விஜய் மாஸ் ஆக்சன் ரெடி! முதல்வர் விஜய் பதவியேற்ற பிறகு தமிழக சட்டம் ஒழுங்கு மிக முக்கியமான சவாலாக மாறியுள்ளது. இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகமே தமிழக அரசுக்கு சட்டம் ஒழுங்கு குறித்து கடிதம் எழுதும் அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு காரணம், கடந்த தீபாவளி பண்டிகையின் போது ஒரே நாளில் மாநிலம் முழுவதும் 17 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இதை வைத்து எதிர்க்கட்சிகள் சட்டசபையிலும், வெளியிலும் கடுமையாக கேள்வி எழுப்பி, "தமிழகத்தில் போலீஸ் இருக்கா? இல்லையா?" என்று விமர்சித்தன. இந்த நெருக்கடியை உணர்ந்த முதல்வர் விஜய், நேற்று தலைமைச் செயலாளர் மற்றும் மூத்த போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து இன்று, மிக முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக, *தமிழக டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் மற்றும் உளவுத்துறை ஐ.ஜி. அஸ்ரா கார்க்* ஆகியோரை தனியாக அழைத்து கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தியுள்ளார். ஆலோசனையில் பேசப்பட்ட முக்கிய விஷயங்கள் என்ன? கூட்டத்தில் இருந்த உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்த தகவல் படி, முதல்வர் மிகவும் கடுமையாக பேசியுள்ளார். முக்கிய குற்றச்சாட்டு *உளவுத்துறை முன்கூட்டியே கணிக்க தவறியது* தான். 1. இன்ஃபார்மர் சிஸ்டம் மொத்தமாக காலி: முன்பெல்லாம் உளவுத்துறை ஒவ்வொரு ஏரியாவிலும், ஒவ்வொரு தெருவிலும் இன்ஃபார்மர்களை வைத்திருக்கும். அந்த ஏரியாவில் ஒரு ரவுடி என்ன பண்றான், என்ன பிரச்சனை வரப்போகுது, எங்க தகராறு நடக்கப்போகுதுன்னு எல்லாமே உளவுத்துறைக்கு *Finger Tip-ல்* இருக்கும். அதே போல ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனிலும் லோக்கல் இன்ஃபார்மர் இருப்பார்கள். சின்ன பிரச்சனை வந்தாலே உடனே தகவல் வந்துவிடும். ஆனால் இப்போது அந்த சிஸ்டத்தை போலீஸ் துறை முற்றிலும் பயன்படுத்துவதே இல்லை. இன்ஃபார்மர்களுக்கு தேவையானதை செய்து கொடுத்து தக்க வைக்கும் பழக்கம் போய்விட்டது. 2. கடந்த 10-15 வருட சீரழிவு - இது இந்த ஆட்சியின் பிரச்சனை மட்டும் இல்லை: இந்த நிலைமை இன்று நேற்று ஏற்பட்டதல்ல. கடந்த ஆட்சி, அதற்கு முந்தைய ஆட்சி என கடந்த 10-15 வருடமாக போலீஸ் துறையில் நிறைய மாற்றங்கள் வந்துவிட்டன. பல மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு தமிழகத்தின் உள்ளூர் அரசியல், ஜாதிய பின்னணி, ரவுடிகளின் பின்னணி தெரிவதில்லை. உள்ளூர் அதிகாரிகள் தான் இதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அவர்களும் முன்பு போல செயல்படுவதில்லை. 3. முதல்வரின் அடுத்த அதிரடி என்ன? இந்த கூட்டத்தில், போலீஸ் துறையை முழுமையாக *மறுசீரமைப்பு செய்ய வேண்டும்* என்று முதல்வர் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. - செயல்படாத அதிகாரிகளை தூக்க வேண்டும். - நன்றாக வேலை பார்ப்பவர்களை, எந்த ஆட்சிக்கும் விசுவாசமாக வேலை பார்க்கும் நேர்மையான ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகளை முக்கிய பதவிகளில் போட வேண்டும். - குறிப்பாக, எதிர்க்கட்சிகளுடன் தொடர்பில் இருந்து கொண்டு அரசாங்கத்தின் ரகசியங்களை கசிய விடும் சில ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் குறித்தும் பேசப்பட்டுள்ளது. அந்த ஓட்டைகளை அடைக்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. விரைவில் தமிழக காவல்துறையில் மிகப்பெரிய மாற்றம், இடமாற்றம், அதிரடி நடவடிக்கைகளை எதிர்பார்க்கலாம் என்று கோட்டை வட்டாரம் பரபரப்பாக பேசுகிறது.
50
Whoa...!
#Kallakurichi: Villupuram range DIG A Arularasu on Tuesday told the TNIE that the TVK MLA Arul Vignesh had indeed made some inappropriate comments about the collector in the past. A senior police official also said that the CM office was informed about the issue and the MLA had been severely warned by the CMO and other senior ministers. Read: newindianexpress.com/states/… @xpresstn
1
61
டைட்டானிக் கப்பல் விபத்துல உயிர் பிழைக்கிறது எவ்வளவு பெரிய அதிர்ஷ்டம் தெரியுமா? ஆனா, அப்படி உயிர் பிழைச்ச ஒரே காரணத்துக்காக ஒரு நாடே அவரை வெறுத்துச்சுன்னா நம்புவீங்களா? அதுமட்டுமில்ல, தன்னோட வாழ்நாள் முழுவதையும் அவமானத்துலயே கழிச்ச ஒரு மனிதர் இருக்காரு. அவர்தான் மசாபுமி ஹோசோனோ (Masabumi Hosono). இவர் டைட்டானிக் கப்பல்ல பயணம் செஞ்ச ஒரே ஒரு ஜப்பானியர். 1912-ஆம் ஆண்டு கப்பல் மூழ்கும்போது, பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் முதல்ல முன்னுரிமை கொடுத்தாங்க. விபத்து நடந்த அந்த இருட்டான நேரத்துல, ஒரு உயிர்காக்கும் படகுல இடம் காலியா இருக்கிறதைப் பார்த்த இவர், அதுல ஏறி தன்னோட உயிரைக் காப்பாத்திக்கிட்டாரு. எப்படியோ உயிர் பிழைச்சு பத்திரமா ஜப்பானுக்குத் திரும்பி வந்தவருக்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்துச்சு. அவரை ஒட்டுமொத்த நாடுமே ஒரு கோழைன்னு முத்திரை குத்துச்சு. ஏன்னா, ஜப்பானியக் கலாசாரத்தின்படி, மற்றவங்க உயிரிழக்கும்போது ஒரு ஆண் மட்டும் உயிர் பிழைச்சு வர்றது மிகப்பெரிய அவமானமா பார்க்கப்பட்டது. கப்பலோட அவரும் சேர்ந்து மூழ்கியிருக்கணும்னு பலரும் நினைச்சாங்க. இதனால அவரோட அரசாங்க வேலையே பறிபோச்சு. பத்திரிகைகள்ல அவரைப் பத்தி ரொம்பக் கேவலமா எழுதினாங்க. ஏன், பள்ளிப் பாடப்புத்தகங்கள்லகூட அவரைக் கோழைக்கு உதாரணமா சொல்ல ஆரம்பிச்சாங்க. இப்படி தன்னோட வாழ்நாள் முழுவதையும் அவமானத்திலும் மனவேதனையிலும் கழிச்ச அவர், 1939-ஆம் ஆண்டு இறந்து போனாரு. உயிரைக் காப்பாத்திக்கிட்டதுக்காக ஒரு மனிதர் தன்னோட வாழ்நாள் முழுவதும் தண்டனையை அனுபவிச்சிருக்காரு. கடல்ல மூழ்காம உயிர் பிழைச்சாலும், சமூகத்தோட வெறுப்புல மூழ்கிப்போன ஒரு பரிதாபமான மனிதர்தான் மசாபுமி ஹோசோனோ. நம்மூர்லயும் ராத்திரி நேரத்துல இதுபோல ஒரு விபத்து நடந்துச்சு. அதுல இருந்து முக்கியமான ஒருத்தன் தப்பிச்சு ஓடுனான். அந்தக்கோழையை பத்திரிக்கைகள் இப்போவும் வீரன்னு கொண்டாடுது. அவனுடைய வாழ்க்கை வரலாறை மாணவர்களுக்கு பாடமா வைக்கிறாங்க. அந்தக் கோழையை வீரன்னு நெனச்சு பெரிய பதவியையே தூக்கி குடுத்துருக்காங்க. ஒரு கோழையை விரட்டி அடிச்ச ஜப்பான் உருப்படுமா? அவனைவிடக் கேவலமான ஒரு டம்மியை தூக்கிவச்சு கொண்டாடுற தமிழ்நாடு உருப்படுமா?...
36
562
17
1,438
46,018
🔸காவல்துறை அதிகாரி உள்பட ஒரே நாளில் 15 கொலைகள்! 🔸பதில் சொல்ல வேண்டிய முதலமைச்சர் ‘சைலண்ட் மோடில்’ இருக்கிறார்! 🔸அமைச்சரோ கொலைகள் நடப்பது ‘சகஜம்’ என்கிறார்! 🔸தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு முழுவதும் சீர்குலைந்துகிடக்கிறது! தமிழ்நாட்டின் சட்டம் – ஒழுங்கு சொல்லும் தரத்திலில்லை. கொலைச் செய்திகள் அன்றாடம் வருவதும், தலைவர்கள் கண்டனம் தெரிவிப்பதும் அன்றாடச் செய்திகளின் ஒரு பகுதியாகிவிட்டது. வெளியில் செல்லும் மக்கள் வீடு திரும்பினால் தான் வாழ்க்கை உறுதி என்னும் கொடுஞ் சூழலுக்குள் தமிழ்நாடு சிக்கித் தவிக்கிறது. 🔸ஒரே நாளில் 15 கொலைகளா? கடந்த இரு நாட்களுக்கு முன்னால் தீபாவளி அன்று மட்டும் 15 கொலைகள் தமிழ்நாட்டில் நடைபெற்றிருக்கின்றன. தேனி மாவட்டம், பழனிசெட்டிப்பட்டியில் செந்தில்குமார் (57); திருச்சி மாவட்டம், இனாம் சமயபுரத்தில் விஷால் (17), ராகுல் (17), புறத்தாக்குடியில் கிறிஸ்டோபர் (20); பெரம்பலூர் மாவட்டம், நொச்சியத்தில் ரவி (50); கடலூர் மாவட்டம், பெரியகாட்டுப்பாளையத்தில் பிருத்விராஜன் (26); கள்ளக்குறிச்சி மாவட்டம், நின்னையூரில் பாலசுப்பிரமணியன் (70); சென்னை மாவட்டம், வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரில் தனுஷ் (19), திருவொற்றியூரில் பவித்திரன் (32); காஞ்சிபுரம் மாவட்டம், திருக்காலிமேடு நேதாஜி நகரில் பார்த்திபன் (32); சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தெற்குத் தெருவில் தங்கச்சாமி என்ற நவீன் (26), மானாமதுரை அருகே வேலூர் முருகபாஞ்சானில் விக்னேஷ் (24); திண்டுக்கல் மாவட்டம், எரியோடு பாண்டியன் நகரில் சுவேதா (26); விருதுநகர் மாவட்டம், வடக்குப்பட்டியில் அன்புச்செல்வம் (25); திருவள்ளூர் மாவட்டம், சென்றான்பாளையம் அருகே மேகலா (24) உள்பட 15 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் காவல்துறையினருக்கே பாதுகாப்பில்லை என்னும் நிலை அசாதாரணமானது. தேனியில் கொல்லப்பட்ட செந்தில்குமார், காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றியவர். நடுச் சாலையில் பட்டாசு வெடித்து அட்டூழியம் செய்து கொண்டிருந்த போதையாளர்களைத் தடுக்கச் சென்றபோது கொலை செய்யப்பட்டுள்ளார். 🔸காவல்துறையினருக்கே பாதுகாப்பில்லை! இதேபோல, தாழையூத்து காவல்நிலையத்துக்குட்பட்ட பகுதியில் தகராறு செய்த இளைஞர்களைத் தடுத்த காவலர்கள் மீது தாக்குதல், கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் பகுதியில் தகராறில் ஈடுபட்ட இளைஞர்களைத் தடுக்கச் சென்ற காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளர், காவலர் ஆகிய மூவர் மீது தாக்குதல், அரியலூர் மாவட்டம் செந்துறை அருகில் நள்ளிரவில் மது அருந்தி கலாட்டாவில் ஈடுபட்டவர்களைத் தட்டிக்கேட்ட தளவாய் காவல்நிலையக் காவலர், ஊர்க்காவல் படை வீரர் உள்ளிட்டோர் மீது தாக்குதல் - இதில் ஊர்க்காவல் படை வீரர் உயிரிழப்பு. மக்கள் பாதுகாப்புக்காக உழைக்கும் காவல்துறையினரின் உயிருக்கே பாதுகாப்பில்லை என்னும் செய்தி, வன்முறையில், அட்டூழியங்களில் ஈடுபடுவோருக்கு இன்னும் தைரியம் அளிக்காதா? இதன் விளைவு என்னவாகும்? காவல்துறையினருக்கு ‘நமக்கேன் வம்பு – நம்மைக் காப்பாற்றிக் கொள்வோம்’ என்ற எண்ணம் வந்தால், அதன் விளைவு? கடமை உணர்ச்சியே பட்டுப் போகுமே! 🔸காவல்துறையினராலும் பாதுகாப்பில்லை! இது ஒரு புறம் என்றால், இன்னொருபுறம், காவல்துறையினரால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகும் நிகழ்வுகளின் பட்டியலும் செய்திகளில் வருகிறது. சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி திருக்காணாப்பட்டியில் உள்ள டாஸ்மாக் பாருக்கு எதிராக ராஜ்குமார் என்ற இளைஞர் மற்றும் சில அமைப்புகளுடன் இணைந்து போராட்டம் நடத்தியதால் ஆத்திரமடைந்த எதிர் தரப்பினர், அந்த இளைஞரை போதைப்பொருள் வழக்கில் சிக்க வைக்கத் திட்டமிட்டுள்ளனர், அதற்குக் காவல்துறை உடந்தையாக இருந்தது சிசிடிவி காணொலி மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 🔸சட்டப்பேரவை துணைத் தலைவரின் அநாகரிகச் செயல்! தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத் தலைவர் ரவிசங்கரைச் சந்தித்து, தனது பகுதி அடிப்படை வசதிகள் குறித்துப் புகாரளிக்கச் சென்றவரைத் சட்டப்பேரவை துணைத் தலைவரே தாக்கிய காணொலி வெளிவந்ததும், தாக்கப்பட்டவர் அதற்கு மறுப்பு தெரிவிப்பதாக ஒரு காணொலி வெளியிடப்பட்டது. ஆனால், அது காவலர்களும் சட்டப்பேரவை துணைத் தலைவரும் தன்னை மிரட்டி எடுத்த காணொலி என்று அடுத்து அவர் வெளிப்படுத்திவிட்டார். வெட்கமாக இல்லையா? சென்னையில் புயலில் சிக்கி மீனவர்கள் இறப்பதற்குக் காரணம் யார் என்று கேள்வி எழுப்பியவரைக் காவல் அலுவலர் மிரட்டும் காணொலி வெளிவருகிறது. 🔸சீரழிந்து கிடக்கும் இளைய தலைமுறை கேட்கும் செய்திகளில், கொடுமையினும் கொடுமையாகக் கொலை செய்யப்பட்டோர், கொலை செய்தோர், வன்முறையில் ஈடுபட்டோரில் பெரும்பாலோர் 18 வயது கூட நிரம்பாதவர்கள். அதிகபட்சம் 20 - 25 வயதினர். மதுவும், கஞ்சா - மருந்து போதைகளும், திரைப்படங்கள் தரும் மிதமிஞ்சிய வன்முறை போதையும், கட்டுப்படுத்த ஆளில்லை என்னும் போக்கில் அவர்களை நினைக்க வைத்திருக்கும் அரசும் தானே இதற்குக் காரணம்? இளைய சமுதாயம் இப்படிச் சீரழிந்து போயிருப்பதைக் கண்டு நம் நெஞ்சம் குமுறுகிறது. 🔸பொறுப்பேற்க வேண்டிய முதலமைச்சரின் அமைதி! இத்தகைய கொடுமைகள், சட்டம் – ஒழுங்குச் சீர்கேடுகளைத் தடுக்க வேண்டிய பொறுப்புமிக்க அத் துறையின் அமைச்சரும், முதலமைச்சருமான ஜோசப் விஜய் அவர்கள் இது குறித்து எந்தக் கருத்தும் கூறாமல், எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல், கண்டும் காணாமல் இருப்பது நியாயமா? பொறுப்பேற்க வேண்டியவர் வாய்திறக்காமல் இருப்பது பொறுப்பற்ற செயல் அல்லவா? எதற்கெடுத்தாலும் தி.மு.க. மீது பழி போட்டு, திசை திருப்புகின்ற பணிகள் சில ஊடகங்களின் உதவியோடு நடத்தப்படுகிறது. ஆட்சி என்பது காட்சி அல்ல என்பதைத் திரும்பத் திரும்ப முதலமைச்சருக்கு நினைவூட்ட வேண்டியிருக்கிறது. பொது மக்கள் உயிரச்சத்தில் இருக்கிறார்கள். 🔸அமைச்சரின் பொறுப்பற்ற பதில் ஊடகங்களுக்குப் பதில் அளிக்கும் அமைச்சர் ஒருவர், ஏதோ தீபாவளி என்றால் பட்டாசு வெடிப்பது இயல்புதான் என்பதைப் போல “தீபாவளி என்றால் சில கொலைகள் நடப்பது வழமைதான்!” என்று அளிக்கும் பதில், வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுகிறது. பொறுப்பற்ற, ஆளுமையற்றவர்களின் கைகளில் தமிழ்நாடு சிக்கிக் கொண்டு படாத பாடு படுகிறது. தி.மு.க. ஆட்சியில் இருந்த நிலைமை என்ன? இப்போதிருக்கும் நிலைமை என்ன? திடீரென மக்கள் இப்படி மாறிவிட்டார்களா? காவல்துறையும், பாதுகாப்பும் அரசின் கட்டுப்பாட்டில் இருந்த காரணத்தால் சட்டம் – ஒழுங்கும் கட்டுப்பாட்டில் இருந்தது. 🔸மக்களை வாட்டும் அரசு விலைவாசி உயர்வு ஒரு பக்கம் மக்களை வாட்டுகிறது; கொலைவாசி உயர்வு ஒரு பக்கம் மிரட்டுகிறது. ஆட்சி நடத்துவது என்றால் என்னவென்று அறியாதவர்களின் அறியாமை காரணமாகத் தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய முதலீடுகள் பறிபோகின்றன. இதுகுறித்தெல்லாம் கவலைப்படாமல், தடுப்பதற்கான உரிய நடவடிக்கைகளில் இறங்காமல், வேறு வேறு பிரச்சினைகளுக்கு மடைமாற்றிக் கொண்டும், ஊடகங்களுக்குச் செய்தி கொடுத்துக் கொண்டுமே காலத்தை ஓட்டிவிடலாம் என்று கருதுகிறார்களா த.வெ.க. அரசும் அதனை ஆட்டுவிப்போரும்? வாக்களித்த மக்களை என்னவென்று கருதுகிறார்கள்? பிரபலம், மாய்மாலப் பேச்சுகள், தங்களை எப்போதும் பாதிக்கப்பட்டவர்களாகவே காட்டி ‘விக்டிம் கார்டு’ (Victim Card) நாடகமாடும் போக்கு இவற்றால், தமிழ்நாட்டு மக்களில் ஒரு பகுதியினர் ஏமாந்து போனதன் விளைவை ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் அனுபவித்துக் கொண்டிருக்கிறது. 🔸ஏமாற்றியே காலந்தள்ள முடியாது! திரைப்படங்களிலும், செல்பேசி ஊடகங்களிலும் மூழ்கடித்து மக்களை ஏமாற்றிவிடலாம் என்று இனியும் கருதாதீர்கள். மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்துகொண்டிருந்த தமிழ்நாட்டை, இப்படிப் பார்க்க ஒரு போதும் மக்கள் விரும்பவில்லை. தமிழ்நாடு அரசு இதனை ஓர் எச்சரிக்கைக் காலமாக எடுத்துக் கொண்டு உடனடியாகச் செயலில் இறங்கவேண்டும். தாழ்ந்த தமிழ்நாடு, வீழ்ந்த தமிழ்நாடு ஆகிவிடக் கூடாது! - கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம் சென்னை 10.11.2026
36
144
9
315
7,070
Justices G.R. Swaminathan and M.D. Sumathi of #MadrasHighCourt direct Tamil Nadu Government to suspend government officials responsible for procurement of AI generated books for public libraries in the State. Bharathiyar can only turn in his grave, they say and add that they are reminded of his immortal condemnatory phrase நெஞ்சு பொறுக்குதில்லையே
16
192
19
566
48,245
'கமலை காந்தியச் சார்புள்ள, மார்க்சிய அனுதாபம் கொண்ட பெரியாரிஸ்ட் என்று புரிந்துகொள்ளலாமா?' என்றால் 'அப்படி உறுதியாகச் சொல்ல முடியாது' என்பதுதான் பதிலாக இருக்கும். 'அன்பே சிவம்' படத்தில் கம்யூனிச ஆதரவு பேசிய கமல்தான், 'குருதிப்புனல்' படத்தில் நக்சல்பாரி போராளிகளை வெறுமனே வன்முறையாளர்களாகவும் போலீஸ் வீட்டுக் குழந்தைகளிடமும் காமுறும் பெண் பித்தர்களாகவும் காட்டியிருப்பார். உலகம் முழுக்க ராணுவமும் போலீஸும் பாலியல் அத்துமீறல்களை நடத்திக்கொண்டிருக்க, நக்சல்பாரிகள் போலீஸ் குடும்பப் பெண்கள்மீது பாலியல்மீறல்களை நிகழ்த்துபவர்களாகக் காட்டுவது என்ன கருத்தியல் நியாயம்? கமலை ஒரு பார்ப்பனியவாதியாகவோ, இந்துத்துவ ஆதரவாளராகவோ அடையாளப்படுத்திவிட முடியாது. அவர் தன் திரைப்படங்களில் சுயசாதி விமர்சனத்தை முன்வைத்தவர். பெரியாரிய, கம்யூனிச அடையாளத்தால் எந்த வணிகவெற்றியும் கிடைக்காத காலகட்டங்களில் அந்த அடையாளங்களுடன் தன்னைக் காட்ட முயன்றவர். எனவே முரண்பாடுகளுடனே கமல்ஹாசனின் பங்களிப்புகளையும் இணைத்தே மதிப்பிட வேண்டும். puthiyathalaimurai.com/featu…
21
29
4
222
8,326
எளிய பின்னணி கொண்டவர்கள் ஆயிரக்கணக்கான பேருக்கு தீபாவளி பரிசு கொடுக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளனர்.
49
547
24
1,269
37,806
KOLAPPAN retweeted
#BREAKING | ”புத்தக கொள்முதலில் ஈடுபட்ட அதிகாரிகளின் பட்டியல் நாளை தாக்கல் செய்ய வேண்டும்; முறைகேட்டில் ஈடுபட்டோர் தண்டிக்கப்பட்டால்தான் திருந்துவார்கள்” நூலகங்களுக்கு புத்தகங்கள் கொள்வது தொடர்பாக உயர் நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுகள் பின்பற்றப்படவில்லை என தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உயர் நீதிமன்றக் கிளை நீதிபதிகள் பல உத்தரவுகளை அரசுக்கு பிறப்பித்துள்ளனர் #SunNews | #Books | #Library | #TNGovt | #MadrasHC
14
184
5
514
31,028
So far, TVK in Tamil Nadu has been blaming the DMK for their failures in these six months, and now they start blaming the bureaucracy also. When will they take responsibility and accountability for their actions and inactions? In democracy, the buck stops at political leadership. Tamil Nadu deserves better. Shared my concerns on @ndtv @mkstalin @Udhaystalin @arivalayam
#TheSouthernView with @vasudha156 | Tamil Nadu News | 10 Murders, Rising Questions: Is Tamil Nadu Facing A Law & Order Crisis? On panel: @TVKSathyaKuma, @KBalamuruganPhD and @sumanthraman
1
50
2
153
3,565
😋🤩
மழைக்காலம்.வின்டு ப்ளோ கம்மியாக இருக்கும் இதன் காரணமாக ஏர் குவாலிட்டி டம்ப் ஆகிவிட்டது கார்பன் எமிசனும் காரணம். விழா காலங்கள் முடிந்து நிறைய பேர் உள்ளே வருவதும் காரணமாக இருக்கலாம் வடசென்னை காற்று மாசு அதிகமாக உள்ளது தொடர்பான கேள்விக்கு அமைச்சர் ராஜீவ் பதில் @Saislakshmanan @SundarrajanG
73
டமார்...! டுமார்...!
20
விபத்து நடந்த அடுத்த நொடியே "ஸ்பாட்டுக்கு" வந்த "ஆம்புலன்ஸ்...!" யாருக்கும் காயம் இல்லாததால் திரும்பிச் சென்றது...! (கட்டைக் குரலில் நியூஸ் சேனலில் வாசிக்கிற அளவிற்கான ஒரு நிகழ்வு...) 😅😂
அந்த பெண் Mind voice 😱 நான் சிவனேனு சும்மா தானடி உக்காந்துட்டு இருந்த 😂😂
41
Mr. Vanchinathan's post Before / After. The G.O. dissolving the High-Level Committee on Union-State Relations reached us on Friday evening, on the eve of Diwali. Today, the first working day after the festival, the Committee's boards were already gone before office hours had even begun. That speed was nowhere to be seen when we repeatedly sought extensions for the Committee's essential staff: the office assistants, the accountant, the translator, research officers. We were kept waiting for more than three months. Removing a signboard takes less than a morning. Work on how much say Tamil Nadu should have over its own affairs deserved at least a fraction of that urgency. #Justicekurianjosephcommittee #StateRights #Federalism in question under #TVKVijay‌HQ
14
47
2,191
போலீசுக்கு பாதுகாப்பளிக்க... விரைவில்... "வெற்றி போலீஸ் பாதுகாப்புப் படை !" மேலதிகத் தகவல்களுக்கு இணைந்திருங்கள்... தற்குறிகளின் அரசாங்கத்தோடு...
சட்டம் ஒழுங்கு லட்சணம் பாருங்க... தளபதி நாளை புதிய அறிவிப்பு .. "வெற்றி போலீஸ் பாதுகாப்பு காவல்படை" அமைப்பாரா ?? வெயிட்டுவோம் ..
29
தமிழ் நாட்டின் மாநில சுயாட்சிக்கு முக்கிய திட்டக் கொள்கைகளை வழங்க வேலை செய்து வந்த நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையிலான உயர்மட்டக் குழுவை #TvkGovt கலைத்தது ஏனென்று கேள்வி கேளுங்கள்! சும்மா DNA நோண்டுறது, ஆபாசமா திட்டுறது you guys can't escape by this! TN's State rights is at stake! All media should publish this researcher's questions! மாநில சுயாட்சியை கைவிடத் துணை போகும் தவெக அரசை கேள்வி கேளுங்கள்! அல்லுசில்லுத்தனமா எல்லாரையும் திமுக திமுக கொத்தூஸ்னு தற்குறிகள் காலத்தை ஓட்டினால் நீங்களும் சேர்ந்து ஒட்டு மொத்தமாக பாஜகவால் கொத்து பரோட்டா போடப்பட்டு.. டீக்கடை நடத்தக் கூட வழி இல்லாத நிலைக்கு கூடிய விரைவில் ஆளாவீர்கள். இந்த கேள்விகளை எழுப்பும் இந்த ஆய்வாளர் பாதுகாக்கப்பட வேண்டும். அவர் அரசியல் ரீதியாக எந்த பழிவாங்கலுக்கும் ஆளாகாமல் பாதுகாப்பது நமது கடமை.
8
72
5
175
31,392
KOLAPPAN retweeted
வணக்கம் அன்பர்களே. கோவை பெரியார் அறிவுலகத்திற்கான நூல் கொள்முதலில் நடந்துள்ள முறைகேட்டின் மீது நடவடிக்கை கோரும் இந்தக் கூட்டறிக்கையில் தங்களது பெயரை இணைத்துக்கொள்ள விரும்புவோர், இந்த அறிக்கையை அப்படியே நகலெடுத்து தமது பெயரையும் இணைத்து சமூக ஊடகப்பக்கங்களில் பகிரவும். *** கோவை பெரியார் அறிவுலகத்திற்கான நூல் கொள்முதலில் முறைகேடு - உடனடி நடவடிக்கை கோரி கூட்டறிக்கை – 2026 நவம்பர் 9 சமீபத்தில் பயன்பாட்டுக்கு வந்துள்ள கோவை பெரியார் அறிவுலகத்தில் உண்மைத்தன்மையும், அறிவுப்பெறுமதியும் இல்லாத போலியான பல நூல்கள் இடம் பெற்றிருப்பதற்கு எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், வாசகர்களாகிய நாங்கள் எங்களது கண்டனத்தையும் எதிர்ப்பையும் இந்தக் கூட்டறிக்கையின் வாயிலாக வெளிப்படுத்துகிறோம். சமூகத்தில் அறிவுப்பரவலுக்கான சீரிய வழியென நூலகத்தைக் கருதி 1948ஆம் ஆண்டு பொது நூலகச் சட்டத்தை இயற்றிய, 1972ஆம் ஆண்டு பொது நூலக இயக்ககத்தை உருவாக்கிய முன்னோடி மாநிலம் தமிழ்நாடு. தமிழ்நாடு அரசின் பொது நூலக இயக்ககத்தின் கீழ் மாநிலம் முழுவதும் மாவட்ட மைய நூலகங்கள், கினள நூலகங்கள், ஊர்ப்புற நூலகங்கள், நடமாடும் நூலகங்கள், பகுதிநேர நூலகங்கள், சிறப்புப் பகுதிநேர நூலகங்கள் என 4,755 நூலகங்கள் இயங்கிவருகின்றன. இவற்றுக்கான நூல்கள் மற்றும் மின்நூல்கள் கொள்முதல் செய்வதில் குளறுபடிகளோ முறைகேடுகளோ இருக்கக்கூடாது என்று எழுத்தாளர்களும் பதிப்பாளர்களும் வலியுறுத்திவந்த நிலையில், “வெளிப்படைத் தன்மையான நூல்கள் கொள்முதல் கொள்கை 2024” வெளியிடப்பட்டது. அப்போதிருந்து செயல்முறையிலிருக்கிற இந்தக் கொள்கைக்குட்பட்டே கோவை பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட சிறப்பு நூலகங்களுக்கும் புதிதாக உருவாக்கப்பட்ட ஆறு மாவட்டங்களின் மைய நூலகங்களுக்கும் நூல்கள் மற்றும் மின்நூல்கள் கொள்முதல் செய்வதற்கான அரசாணை 2025 நவம்பர் 05 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த அரசாணையின்படி, புனைவு மற்றும் பொதுநூல்களைப் பரிந்துரை செய்வதற்காக எழுத்தாளர்கள், விமர்சகர்கள், கல்வியாளர்கள், வாசகர்கள் உள்ளிட்ட 137 பேர் கொண்ட வல்லுனர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக்குழுவினரால் பரிந்துரைக்கப்படும் ஆயிரக்கணக்கான நூல்களிலிருந்து கொள்முதலுக்கான பட்டியலை இறுதிப்படுத்துகிறது 13 பேர் கொண்ட தேர்வுக்குழு. தேர்வுக்குழு இறுதிப்படுத்தும் பட்டியலிலுள்ள நூல்களைக் கொள்முதல் செய்வதற்கு அவற்றினை வெளியிட்டுள்ள பதிப்பகத்தாருடன் பேசி விலையை நிர்ணயிக்கிறது 5 பேர்கொண்ட நூல்விலை பேச்சுவார்த்தைக்குழு. இம்மூன்றுக் குழுக்களின் பரிந்துரைகளையும் கூராய்ந்து ஒப்புதல் வழங்குகிறது 5 பேர் கொண்ட உயராய்வுக்குழு. இவ்வளவு சீரான பரிசீலனைகளின் நிறைவிலேயே நூல்கள் கொள்முதல் செய்யப்படுவதாக நாம் நம்பியிருந்த நிலையில், எழுத்தாளர் பாலசுப்ரமணியன் பொன்ராஜ் 2026 அக்டோபர் 17 அன்றும், ஓவியர் சுந்தரன் முருகேசன் 2026 அக்டோபர் 24 அன்றும் முகநூலில் எழுதிய பதிவுகளும், எழுத்தாளர் பெருமாள் முருகன் இணைய இதழொன்றில் 2026 நவம்பர் 6 அன்று எழுதிய கட்டுரையும் கோவை பெரியார் அறிவுலகத்தில் இடம் பெற்றுள்ள நூல்களில் ஒருபகுதி போலியானவை என்கிற அறிவுலகமே அதிர்ந்துபோகிற தகவலை வெளிக்கொணர்ந்துள்ளன. இதன்படி, ‘அகல் விளக்கு’ என்கிற பதிப்பகத்திடமிருந்தும் அந்தப் பதிப்பகத்தின் முகவரியிலேயே இயங்குகின்ற பீனிக்ஸ் பப்ளிகேஷன் என்கிற மற்றொரு பதிப்பகத்திடமிருந்தும் கொள்முதல் செய்யப்படுள்ள 1800 முதல் 2000 நூல்கள் போலியானவை என்று முதற்கட்டமாக கண்டறியப்பட்டுள்ளன. இவ்விரண்டு பதிப்பகங்களும் இணையவெளியில் கொட்டிக்கிடக்கும் பல்துறை சார்ந்த தரவுகளைத் திரட்டி அவற்றை போலியான எழுத்தாளர்களின் பெயரில் தப்பும் தவறுமாக வெளியிட்டுள்ளன. மட்டுமன்றி போலியான இந்நூல்களுக்கு கொடுக்கப்பட்ட விலையோ பொதுவாக இதேயளவு நூல்களுக்கு கொடுக்கப்படுவதை விடவும் பன்மடங்கு அதிகம். போலியான எழுத்தாளர்களை களமிறக்கியுள்ள இந்த முறைகேட்டினால் மெய்யான எழுத்தாளர்களின் ஆய்வாளர்களின் நூல்கள் புறக்கணிக்கப் பட்டுள்ளன. மேலும் இது, அவர்களது பங்களிப்புகளை இருட்டடிப்புச் செய்து பொதுவெளியிலிருந்து அவர்களை அகற்றுவதற்கொப்பானதொரு தீங்குமாகும். உண்மையினை கற்றுணர்வதற்கு வாசகர்களுக்கும் போட்டித்தேர்வர்களுக்கும் வருங்கால தலைமுறையினருக்கும் உள்ள உரிமை, இந்தப் போலியான நூல்களில் மலிந்துள்ள பிழையான தகவல்கள் மூலம் பறிக்கப்பட்டுள்ளது. போலியான ஆயிரக்கணக்கான நூல்கள் வாங்கப்பட்டதன் மூலம் பதிப்புத்துறையில் அர்ப்பணிப்புடன் இயங்கிவரும் பதிப்பகங்களும் அவற்றின் ஊழியர்களும் வஞ்சிக்கப்பட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியில், மாநிலத்தின் வேறுபல நூலகங்களிலும் இந்தப் பதிப்பகங்களின் போலி நூல்கள் இடம் பெற்றுள்ளதாகவும், இதேபோல வேறுபல பதிப்பகங்களும் இருப்பதாகவும், ஆங்கில நூல்களின் உண்மைத்தன்மையும் சந்தேகத்திற்குரியவையே என்றும் தகவல்கள் வருகின்றன. இந்நிலையில் அறிவுச்சேகரமான நூலகங்களைப் பாதுகாக்கவும், நூலகங்களுக்குள் அதற்கிசைவான நூல்கள் மட்டுமே இருப்பதை உறுதிசெய்வதற்கு பொது நூலக இயக்ககமும் தமிழ்நாடு அரசும் முன்வரவேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம். இதன்பொருட்டு, நூலகத்துறையில் நடைபெற்றுள்ள இந்த முறைகேட்டை வழக்கமான நிதிசார் கையாடல் என்பதாக குறுக்கிவிடாமல் தமிழ்ச்சமூகத்தின் அறிவுச்செயல்பாட்டை முடக்கும் தேசவிரோதச் செயலாக கருதி தண்டிக்க வேண்டும். அதனிமித்தம் இந்த முறைகேட்டை விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் விசாரணை ஆணையம் உடனடியாக அமைக்கப்பட வேண்டும். அகல்விளக்கு மற்றும் பீனிக்ஸ் பப்ளிகேஷன் வெளியிட்டுள்ள போலியான நூல்களை கோவை பெரியார் அறிவுலகத்திற்குப் பரிந்துரை செய்தவர்கள், தேர்வு செய்தவர்கள், தொகை விடுவித்தவர்கள் பற்றிய விவரங்களை பொதுவெளியில் வெளியிடுவதுடன் அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மோசடி செயல்படுத்தப்பட்ட காலக்கட்டம் பற்றிய உண்மைத் தகவலை வெளியிட வேண்டும். போலியான நூல்களை வெளியிட்டு அறிவுலகத்திற்கும் அரசுக்கும் நம்பிக்கைத் துரோகம் செய்துள்ள அகல் விளக்கு, பீனிக்ஸ் மற்றும் இதேபோன்று வேறு பதிப்பகங்கள் இருப்பின் அவற்றின் மீதும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசிடமிருந்து மோசடியாகப் பெற்றுள்ள தொகை உரிய வகையில் திரும்பப்பெற வேண்டும். இந்தப் பதிப்பகங்களின் போலிநூல்கள் அனைத்தும் கண்டறியப் பட்டு நூலகங்களிலிருந்து அகற்றுவதுடன் அவற்றை மேற்கொண்டு எங்கும் விற்றுவிடாத வகையில் பறிமுதல் செய்யவேண்டும். மாநிலம் முழுவதுமுள்ள அனைத்து நூலகங்களையும் குறிப்பிட்ட காலவரம்புக்குள் ஆய்வு செய்து அறிக்கை தரும் வகையில் நடுநிலையான வல்லுனர் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். நூலகத்துறைக்குள் வருங்காலத்தில் எவ்வகையான முறைகேடும் நடைபெறாவண்ணம் தடுப்பதற்குத் தேவையான திருத்தங்களுடன் “வெளிப்படைத்தன்மையான நூல்கள் கொள்முதல் கொள்கை 2024” வலுப்படுத்தப்பட வேண்டும். நூல் பரிந்துரைக்குழுவினர் தாங்கள் பரிந்துரைத்த பட்டியலிலிருந்தே நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளனவா என்பதை மறுவுறுதி செய்துகொள்ள ஏதுவாக இறுதிப்படுத்தப்பட்ட பட்டியல் அவர்களுக்கு அனுப்பப்படவேண்டும். இவண், து.அரிபரந்தாமன், சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி எஸ்.வி.ராஜதுரை, ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணன், ஆய்வாளர் பேரா.லெ.ஜவகர் நேசன், மேனாள் துணைவேந்தர் பேரா வீ.அரசு, ஆய்வாளர் பேரா அருணன், ஆய்வாளர் வண்ணதாசன், எழுத்தாளர் அறிவுமதி, கவிஞர் டிராட்ஸ்கி மருது, ஓவியர் பேரா கா.அ.மணிக்குமார், ஆய்வாளர் முனைவர் து.ரவிக்குமார், எழுத்தாளர், நாடாளுமன்ற உறுப்பினர் த.வி.வெங்கடேஸ்வரன், அறிவியலாளர் கோலப்பன், பத்திரிகையாளர், தி ஹிந்து நாளிதழ் பொன் தனசேகரன், பத்திரிகையாளர் ஜி.குப்புசாமி, மொழிபெயர்ப்பாளர் நிழல்வண்ணன், மொழிபெயர்ப்பாளர் மனுஷ்யபுத்திரன், எழுத்தாளர் ரோஹிணி, திரைக்கலைஞர் சத்யராஜ், திரைக்கலைஞர் பேரா மு.இராமசாமி, நாடகவியலாளர் பிரளயன், நாடகவியலாளர் அ.மங்கை, நாடகவியலாளர் ஞானராஜசேகரன், திரை இயக்குநர் எம்.சிவக்குமார், திரை இயக்குநர் எம்.மணிகண்டன், திரை இயக்குநர் டிஜெ ஞானவேல், திரை இயக்குநர் கமலக்கண்ணன், திரை இயக்குநர் கெளதம்ராஜ், திரை இயக்குநர் தீபக், திரை இயக்குநர் அதியன் ஆதிரை, திரை இயக்குநர் ஆர்.ஆர்.சீனிவாசன், ஆவணப்பட இயக்குநர் பேரா.சிவக்குமார், ஆய்வாளர் பேரா. இரா.காமராசு, ஆய்வாளர் கோ.ரகுபதி, ஆய்வாளர் நிருத்யா பி, நடனக்கலைஞர் கோவன், பாடகர் ச.தமிழ்ச்செல்வன், எழுத்தாளர் பெருமாள் முருகன், எழுத்தாளர் ச.பாலமுருகன், எழுத்தாளர் க.உதயசங்கர், எழுத்தாளர் குட்டி ரேவதி, எழுத்தாளர் இரா.நடராசன், எழுத்தாளர் பாஸ்கர் சக்தி, எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன், எழுத்தாளர் நா.சுகுமாரன், எழுத்தாளர் சுகிர்தராணி, எழுத்தாளர் என்.ஸ்ரீராம், எழுத்தாளர் சம்சுதீன் ஹீரா, எழுத்தாளர் ஈரோடு சர்மிளா, எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன், எழுத்தாளர் அ.வெண்ணிலா, எழுத்தாளர் நிவேதிதா லூயிஸ், எழுத்தாளர் பா.மகாலட்சுமி, எழுத்தாளர் நிகழ் அய்க்கண், எழுத்தாளர் யெஸ்.பாலபாரதி, எழுத்தாளர் இ.பா. சிந்தன், எழுத்தாளர் கெளதமன், எழுத்தாளர் நக்கீரன், எழுத்தாளர் பா.வெங்கடேசன், எழுத்தாளர் அழகியபெரியவன், எழுத்தாளர் கரிகாலன், எழுத்தாளர் சாம்ராஜ், எழுத்தாளர் அ,உமர் பாரூக், எழுத்தாளர் நீதிமணி, எழுத்தாளர் ம.கண்ணம்மாள், எழுத்தாளர் ம.மணிமாறன், எழுத்தாளர் யாழன் ஆதி, எழுத்தாளர் மு.ஆனந்தன், எழுத்தாளர் ஞா.சத்தீஸ்வரன், எழுத்தாளர் ம.காமுத்துரை, எழுத்தாளர் புலியூர் முருகேசன், எழுத்தாளர் அ.கரீம், எழுத்தாளர் ம.சுசித்ரா, மொழிபெயர்ப்பாளர் வேல்கண்ணன், எழுத்தாளர் முத்துவேல், எழுத்தாளர் பாலசுப்ரமணியன் பொன்ராஜ், எழுத்தாளர் முத்துவேல், எழுத்தாளர் இரா.தனிக்கொடி, பாடலாசிரியர் மீரான் மைதீன், எழுத்தாளர் லக்‌ஷ்மணசாமி ரங்கசாமி (ஒடியன்), எழுத்தாளர் ந.பெரியசாமி, எழுத்தாளர் ஜா.மாதவராஜ், எழுத்தாளர் ராஜசங்கீதன், எழுத்தாளர் நந்தன் கனகராஜ்,எழுத்தாளர் விழியன், எழுத்தாளர் முத்துநாகு, எழுத்தாளர் சக்திசூர்யா, எழுத்தாளர் ராஜுலா ரிஜ்வான், எழுத்தாளர் சித்ரா சிவன், எழுத்தாளர் பா.ஜீவசுந்தரி, ஊடகவியலாளர் ஆ.காமராஜ், ஆசிரியர், மின்னம்பலம் இணைய இதழ் புனிதபாண்டியன், ஆசிரியர், தலித் முரசு முத்தையா, ஆசிரியர், காக்கைச் சிறகினிலே நாகராஜன், பாரதி புத்தகாலயம் நல்லு இரா.லிங்கம், நாற்கரம் பதிப்பகம் ஜீவ கரிகாலன், யாவரும் பதிப்பகம் சிவ செந்தில்நாதன், பரிசல் பதிப்பகம் சுதீர் செந்தில், ஆசிரியர், உயிரெழுத்து மு.ஹரிகிருஷ்ணன், ஆசிரியர், மணல்வீடு சாதிக், அடையாளம் பதிப்பகம் வாசுகி பாஸ்கர், ஆசிரியர், நீலம் இதழ் த.நீதிராஜன், முதன்மை ஆசிரியர், சவுத் விஷன் புக்ஸ் விஜயானந்த் சுப்புராஜ், பயணி வெளியீட்டகம் ஸ்ரீரசா, காலம் வெளியீடு அற்புதராஜ், எழுத்தாளர் கரன்கார்க்கி, எழுத்தாளர் புதியமாதவி, எழுத்தாளர் சரிதா ஜோ, எழுத்தாளர் எஸ்.ஏ.பெருமாள், ஆய்வாளர் ப.கு.ராஜன், ஆய்வாளர் கவின்மலர், ஊடகவியலாளர் கார்த்திக் புகழேந்தி, எழுத்தாளர் ஜமாலன், எழுத்தாளர் ஸ்டாலின் சரவணன், எழுத்தாளர் க.சரவணன், எழுத்தாளர் பாமரன், எழுத்தாளர் பவுத்த அய்யனார், எழுத்தாளர் வழ.தங்கராஜ், எழுத்தாளர் எஸ்.வி.வேணுகோபாலன், எழுத்தாளர் தமிழகன், எழுத்தாளர் மு.இக்பால் அகமது, எழுத்தாளர் எச்.பீர்முஹம்மது, எழுத்தாளர் இரா.மோகன்ராஜன், எழுத்தாளர் பேரா.என்.சிவராமன், மொழிபெயர்ப்பாளர் அமரந்தா, மொழிபெயர்ப்பாளர் கொளத்தூர் மணி, தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம் அ.அருள்மொழி, திராவிடர் கழகம் மதுக்கூர் ராமலிங்கம், தலைவர், தமுஎகச களப்பிரன், பொதுச்செயலாளர், தமுஎகச மரு.அறம், பொதுச்செயலாளர், தகஇபெம பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு, பொதுச்செயலாளர், பொதுப்பள்ளிக்கான மாநிலமேடை சே.வாஞ்சிநாதன், ஒருங்கிணைப்பாளர், அரசமைப்புச்சட்ட பாதுகாப்பு இயக்கம் அ.லியாகத் அலி, செயலர், அஞ்சுமன் நூற்றாண்டு நூலகம் செந்தலை ந.கவுதமன், சூலூர் பாவேந்தர் பேரவை ச.சிவக்குமார், மாநிலச்செயலாளர், அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் பேரா அ.கருணானந்தம், ஆய்வாளர் அ.ஜெகன்னாதன், ஆய்வாளர் அ.குமரேசன், ஊடகவியலாளர் சிகாமணி, ஊடகவியலாளர் விஸ்வம், ஓவியர் நட்ராஜ், ஓவியர் மணிவண்ணன், ஓவியர் சரண்ராஜ், ஓவியர் விநாயகமுருகன், எழுத்தாளர் ஓடை பொ.துரையரசன், இடது இதழாசிரியர் பேரா அரங்க மல்லிகா, எழுத்தாளர் மயிலை பாலு, எழுத்தாளர் ராஜன்குறை கிருஷ்ணன், ஆய்வாளர் கண.குறிஞ்சி, புதுமலர் இதழாசிரியர் நடராஜன், சந்தியா பதிப்பகம் முஹமது சிராஜுதீன், பாரதி புத்தகாலயம் நீலகண்டன், கருப்புப் பிரதிகள் ம.மதிவண்ணன், எழுத்தாளர் சித்ரன், எழுத்தாளர் சாலை செல்வம், எழுத்தாளர் லாவண்யா சுந்தரராஜன், எழுத்தாளர் ஜான்சிராணி, எழுத்தாளர் கவிதா முரளிதரன், ஊடகவியலாளர் ஜெ.தீபலட்சுமி, எழுத்தாளர் பொ.வேல்சாமி, ஆய்வாளர் பேரா பக்தவச்சல பாரதி, ஆய்வாளர் மால்கம், எழுத்தாளர் இளங்கோ கிருஷ்ணன், எழுத்தாளர் கிருஷ்ணமூர்த்தி, எழுத்தாளர் ஜெயராணி, ஊடகவியலாளர் ஆதவன் தீட்சண்யா, எழுத்தாளர்
3
16
4
44
6,402
🥺😳
திரு @tvkravisankar அவர்களே நீங்களாக துணை சபாநாயகர் மற்றும் மாவட்ட செயலாளர் பதவியை ராஜினனாமா செய்யுங்கள், அதுவே நீங்கள் தலைமைக்கு கொடுக்கும் மரியாதை & விசுவாசம். நாங்கள் எங்கள் அண்ணன் தவறு செய்தாலே அவரிடம் கோபப்படுகிறோம், விமர்சனம் செய்கிறோம். நீங்கள் எல்லாம் எங்களுக்கு ஒரு பொருட்டு அல்ல. நீங்கள் செய்யாவிடில் நாங்கள் (virtual Warriors) உங்களை ராஜினாமா செய்ய வைக்காமல் விடமாட்டோம். #ResignRaviSankar @TVKVijayHQ @BussyAnand
59
"6,7 டேக் எடுத்தாங்க.. என் மனசார கொடுக்கல..! உயிரோட போகணும்னா நான் சொல்ற மாதிரி பேசுன்னு வலுக்கட்டாயமா மிரட்டி வீடியோ பதிவு பண்ணாங்க.. இல்லைனா என் குடும்பத்தை கொ*ணுடுவேன்னு சொன்னாரு.." "நான் யார் தெரியுமா..? புஸ்ஸி ஆனந்த் கிட்ட கேளு.. அவரே நான் சொன்னா செய்வாருன்னு துணை சபாநாயகரே மிரட்டுனாரு.." - காலையில் துணை சபாநாயகர் ரவிசங்கர் அருகில் அமர்ந்து கொண்டு எதுவும் பிரச்சனை இல்லை என்பது போல் பேசிய நிலையில் கார்த்திக் என்பவர் வெளியிட்டுள்ள புதிய வீடியோ.. #Ravisankar | #Thuraiyur | #TVK | #PolimerNews
131
1,387
108
3,474
214,515
KOLAPPAN retweeted
என்னை துணை சபாநாயகர் மிரட்டி 6 வீடியோக்களை எடுத்துள்ளார்
53
1,281
112
2,312
151,344