Jose Charles Martin (@sscharles) header
Jose Charles Martin (@sscharles) profile picture

MLA-Kamaraj Nagar,Puducherry President-Latchiya Jananayaka Katchi @ljk_puducherry|@ljktamilnadu_ Let’s build a glorious TN & Puducherry!

Chennai
Joined July 2009
Photo by Jose Charles Martin (@sscharles)Photo by Jose Charles Martin (@sscharles)Photo by Jose Charles Martin (@sscharles)Photo by Jose Charles Martin (@sscharles)Photo by Jose Charles Martin (@sscharles)Photo by Jose Charles Martin (@sscharles)Photo by Jose Charles Martin (@sscharles)Photo by Jose Charles Martin (@sscharles)Photo by Jose Charles Martin (@sscharles)Photo by Jose Charles Martin (@sscharles)
சென்னை கொரட்டூர் ஏரிக்கு 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வந்துள்ள நம் அழகிய பூநாரைகளின் வருகை பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. இருப்பினும், தொழிற்சாலை எண்ணெய் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளால் ஏரி நீர் மாசடைந்து வருவது கவலை அளிக்கிறது. பூநாரைகள் உள்ளிட்ட வலசைப் பறவைகளின் வாழ்விடங்களைப் பாதுகாக்கவும், கொரட்டூர் ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளை மாசுபாட்டிலிருந்து காக்கவும் தமிழக அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். #jcm #ljk #puducherry #wetlandconservation #birdprotection
1
104
மூளைக் கட்டியால் பாதிக்கப்பட்ட ஆறு மாதக் குழந்தையின் உயிரைக் காக்க, சவாலான மருத்துவச் சிகிச்சையை அதிநவீன மருத்துவத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் வெற்றிகரமாக மேற்கொண்டு, அந்தக் குழந்தைக்கு மறுவாழ்வு அளித்த புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். #jcm #ljk #puducherry #jipmer #medicalexcellence
2
6
196
தேடப்பட்டு வரும் செஞ்சி சிறுமி குறித்து துப்புக்கொடுத்த நாமக்கல் சத்துணவுக்கூட அமைப்பாளர் பவானி அவர்கள் மீது விசாரணை என்ற பெயரில் கடுமையாக நடந்துகொண்ட சிபிசிஐடி காவலர் முத்துக்குமாரின் செயல்பாட்டை வன்மையாகக் கண்டிக்கிறேன். துப்புக்கொடுத்தவர்களிடம் கடுமையாக நடந்துகொண்டால், உண்மை தெரிந்த யாராவது இனி தகவலை சொல்ல முன்வருவார்களோ? இவர்களைப் போன்ற சிலரால் ஒட்டுமொத்த காவல் துறைக்கும் அவப்பெயர்.. காவல் துறையினர் எதேச்சதிகாரத்துடன் நடந்துகொள்ளும் போக்கை நிறுத்திக்கொள்ள வேண்டும்! #jcm #ljk #cmotamilnadu #WitnessProtection #CBCID
2
7
18
1,418
Wishing the undisputed King of Cricket, Virat Kohli, a very Happy Birthday. May you be blessed with a long life, good health, and continued success. My heartfelt wishes for many more remarkable achievements, historic milestones, and victories in the years ahead #viratkohli #HappyBirthdayViratKohli #KingKohli #CricketLegend #birthdaywishes
10
72
685
புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள மகாத்மா காந்தி அரசு பல் மருத்துவக் கல்லூரியின் வங்கிக் கணக்கை மர்ம நபர்கள் ஹேக் செய்து, கோடிக்கணக்கான ரூபாயைத் திருடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஊழியர்களின் ஊதியத்திற்காக வைக்கப்பட்டிருந்த இந்தப் பணம் பறிபோனதால் பாதிக்கப்பட்டுள்ள ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, இச்சம்பவத்தில் தொடர்புடையவர்களைப் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் உடனடியாகக் கண்டறிந்து, பணத்தை மீட்கவும் உரிய நடவடிக்கை எடுக்கவும் வேண்டுகோள் விடுக்கிறேன். #jcm #ljk #puducherry #cybercrime #financialsecurity
1
3
177
2000 ஆண்டுகளுக்கு முன்பே கல்லணை மூலம் உலகிற்கே அணைகட்டுவதைக் கற்றுக்கொடுத்தவர்கள், தமிழர்கள். மொழி,நாகரிகம், வானியல் அறிவியல் எல்லாவற்றிலும் ஒரு காலத்தில் முன்னோடியாக இருந்த நாம் அப்பெருமைகளை இழந்துவிட்டு தேடிக்கொண்டு இருக்கிறோம். மீண்டும் தமிழர்களுடைய மாண்பை மீட்டெடுக்கணும் என லட்சிய ஜனநாயக கட்சியின் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினேன். #jcm #ljk #tamilnadu #tamilheritage #TamilCivilization
1
3
13
279
கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத வகையில், மத்திய ரிசர்வ் காவல் படை வரலாற்றில்,தொடர்ந்து 12 மாதங்கள் எந்தவொரு உயிரிழப்பும் ஏற்படாமல் புதிய மைல்கல் எட்டப்பட்டுள்ளது. இத்தகைய பெருமையைச் சாத்தியப்படுத்திய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமைக்கும்; மத்திய ரிசர்வ் காவல் படைக்கும் எனது மனம் நிறைந்த வாழ்த்துகள்! #jcm #ljk #puducherry #crpfachievement #nationalsecurity
1
6
236
குமரகுரு கல்வி நிறுவனத்தின் உரிமையாளர் திரு. சங்கர் வாணவராயர் அவர்களின் தாயார் மறைவையொட்டி, அவரை நேரில் சந்தித்து எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டேன். அப்போது, அவரது தாயாரின் புத்தகம் ஒன்றை அன்பளிப்பாகப் பெற்றுக்கொண்டு, எனது கனவுத் திட்டமான ‘Rising Puducherry’ வரலாற்றுப் புத்தகத்தை அவருக்கு வழங்கினேன். மேலும், விதைப்பந்துகள் தயாரித்தல் மற்றும் நடுதல், கல்லூரி மாணவர்களுடன் இணைந்து மேற்கொள்ளக்கூடிய எதிர்காலத் திட்டங்கள் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு குறித்தும் ஆக்கப்பூர்வமாகக் கலந்துரையாடினேன். #jcm #ljk #puducherry #risingpuducherry #environmentalinitiatives
7
43
5,470
இந்தியாவின் முன்னணி பொருளாதார மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்ந்த தமிழ்நாடு, தவெக ஆட்சியில் GST வருவாய் வளர்ச்சியில் அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடும்போது பின்தங்கியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மாநிலத்தின் சொந்த உற்பத்தி வளர்ச்சியைப் பெருக்கி, தொழில் முதலீடுகளை ஈர்த்து, வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளைத் தவெக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன். #jcm #ljk #cmotamilnadu #economicgrowth #jobcreation
1
1
3
229
நமது லட்சிய ஜனநாயக கட்சி தனது சொந்த பலத்தை வளர்த்துக்கொண்டு, எந்தச் சூழலிலும் தனித்துப் போட்டியிடும் அளவுக்குத் தொண்டர்களும் நிர்வாகிகளும் தயாராக இருக்க வேண்டும். பிறரைச் சார்ந்திராமல் கட்சியின் கட்டமைப்பையும் மக்கள் ஆதரவையும் வலுப்படுத்த வேண்டும். கிடைத்துள்ள வாய்ப்புகளைப் பயன்படுத்தி, மக்களுக்கான நல்லாட்சியை உருவாக்கும் நோக்கில் தொடர்ந்து செயல்பட வேண்டும் எனத் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினேன். #jcm #ljk #tamilnadu #PartyGrowth #PartyBuilding
3
304
பண்ணையில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டு, மிகக் கொடூரமான கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்ட சிறுமிகளுக்கு நீதி கிடைக்க அயராது போராடிய சீனியர் SP திவ்யா IPS அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். தடயவியல் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்களுடன் துல்லியமாகப் புலனாய்வு செய்து, குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை பெற்றுத் தந்த இவரது அர்ப்பணிப்பும் நேர்மையும் மிகுந்த பாராட்டுக்குரியவை. இவரது சிறப்பான பணியைப் பாராட்டி மத்திய அரசு வழங்கியுள்ள (Kendriya Grihmantri Dakshata Padak - 2026) இவரது நேர்மைக்கும் அர்ப்பணிப்புக்கும் கிடைத்த மிகச்சிறந்த அங்கீகாரம். #jcm #ljk #puducherry #womenandchildsafety #IPSOfficer
1
1
22
523
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க, அங்குள்ள குடியிருப்புகளை இடிக்க டெண்டர் கோரியிருக்கிறது, தமிழக அரசு. இடநெருக்கடி, மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும் எனும் சூழலில் சென்னைக்கு அருகில் ஒரு துணைநகரத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்பட வேண்டும். அதுதான் வளர்ச்சிக்கான அனைவருக்குமான தீர்வாக அமையும். இதற்கு மக்கள் எதிர்ப்பு, அரசியல் கட்சிகளின் போராட்டம் எனப் பல பிரச்னைகள் இருந்தும், இவ்விடத்தையே தமிழக அரசு குறிவைப்பது ஏன்? #jcm #ljk #tamilnadu #fisherfolkrights #cmotamilnadu
16
6
3
36
6,832
Jose Charles Martin retweeted
கம்பி எண்ணும் அன்பில் மகேஷ்! கர்மா சும்மா விடாது சார்! | #anbilmagesh | #dmk | #arrest | #mahavishnu | #cmvijay | #tvk |
25
229
6
939
36,405
Jose Charles Martin retweeted
“எனக்கு பணம் காசுலாம் வேணாம்... Transfer மட்டும் கொடுங்க போதும்” தசைநார் சிதைவால் பாதிக்கப்பட்ட தன் மாற்றுத்திறனாளி மகனை கவனிக்க அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணிமாற்றம் கோரி கண்ணீருடன் கோரிக்கை வைத்த பெற்றோர்; "முதலமைச்சர் அலுவலகத்தில் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை" என வேதனை #TNTransport | #cmvijay | #handicap | #Puthiyathalaimuraitv | Puthiya thalaimurai @CMOTamilnadu | @TamilanParthib1 | @Farvace_Offl
95
593
140
1,796
290,949
சென்னையில் இருந்து மாமல்லபுரம் வழியாக புதுச்சேரிக்கு படகு சேவையை இயக்க, தனியார் படகு நிறுவனங்களிடம் விருப்பம் கோரப்பட்டதை வரவேற்கிறேன். ஏற்கெனவே, நான் இந்தத் திட்டத்தை வலியுறுத்தி வரும் நிலையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய இரு மாநிலங்களின் சுற்றுலா வருவாய் இதன்மூலம் இன்னும் கூடும். இதனால், பல ஏழை- நடுத்தர வியாபாரிகள் பயனடைவர் என நம்புகிறேன். #jcm #ljk #puducherry #tamilnadu #WaterTransport
1
5
243
ஊடகவியலாளர் பரத்குமார்(48) அவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் வேதனையையும் தருகிறது. சினிமா - விளையாட்டு ஆர்வலராகவும், அரசியல் விமர்சகராகவும் ஊடகங்களில் அவர் வெளிப்படுத்திய பன்முகத்தன்மை பலருக்கும் ஒரு பெரும்நம்பிக்கை.. அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும் சகப் பத்திரிகையாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்! #jcm #ljk #puducherry #journalisttribute #condolences
2
27
621
சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ராம்சார் ஈரநிலமாக அறிவிக்கப்பட்ட பள்ளிக்கரணை சதுப்புநிலப் பாதுகாப்பு தொடர்பாகத் தமிழக அரசுக்கு கோரிக்கைகளையும் வலியுறுத்தல்களையும் முன்வைக்கிறேன். #jcm #ljk #tamilnadu #cmotamilnadu #environmentprotection
3
221
ஆந்திரப் பிரதேச அரசுப் பள்ளியில் மாணவி மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. பெண் குழந்தைகளின் பாதுகாப்பு என்பது சமரசம் செய்துகொள்ள முடியாத ஒன்று. பள்ளிக்கூடங்களில்கூட மாணவிகளுக்குப் பாதுகாப்பு இல்லாத நிலை மிகுந்த கவலையளிக்கிறது. இச்சம்பவத்தில் தொடர்புடையவர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், மாநிலம் முழுவதும் பெண்கள் மற்றும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யத் தேவையான நடவடிக்கைகளை ஆந்திர அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். #jcm #ljk #justiceforthevictim #protectgirlchildren #childsafety
8
333
அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்த கூட்டுறவு அங்காடிகள் மூலம் ரூ.30-க்கு விற்பனை செய்யப்படும் சன்ன ரக அரிசி(பொன்னி) என்பது ரேஷன் கடைகளில், வழங்கப்படும் அரிசியை பாலிஷ் செய்து விற்பதாகப் புகார் எழுந்துள்ளது. எனவே, தமிழக அரசு அசல் தரமான சன்ன ரக அரிசியை வழங்க வலியுறுத்துகிறேன்! #jcm #ljk #tamilnadu #tamilnadupolitics #cmotamilnadu
1
13
450
தெலங்கானா மாநிலம், செகந்திராபாத்தில் நடைபெற்ற G.O. ஸ்னேஹா - S. விஷ்ணு வர்தன் அவர்களின் திருமண விழாவில், எனது அன்புள்ள குடும்பத்தினருடன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி, அவர்களின் இல்லற வாழ்க்கை அன்பும் மகிழ்ச்சியும் நிறைந்ததாக அமைய மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டேன். #WeddingCelebrations #HeartfeltWishes #BlessedCouple #NewBeginnings #WeddingMemories
9
108
22,145