
@actorvijay ✨|| #SpreadVIJAYism ❤️|| Belongs to #TVK || Software Engineer 🥂 Tweets are my personal 🤓
Sholinganallur, India
Joined August 2016
- Tweets56.9K
- Following1.4K
- Followers1.6K
- Likes32.1K
Vishwa retweeted
மண், மொழி, மானம் காத்தவர்களே நாங்கள்தான்; தமிழ் மொழியைக் கண்டுபிடித்ததே நாங்கள்தான்; தமிழ் மொழியியலின் மூளையே நாங்கள்தான்; தமிழ் இலக்கியக் கடலை எங்கள் சட்டைப் பையில் அடக்கி வைத்திருக்கும் அதிகாரம் பெற்றவர்களே நாங்கள்தான்; தமிழே நாங்கள்தான் என்று ஊரை ஏமாற்றுவதற்காக உரக்கக் கூவும் கூட்டமே எப்போதும் ஊழல் கூட்டமாக இருக்கும் என்பதற்கு உதாரணம், ஊழலின் ஊற்றுக்கண்ணான தி.மு.க.தான் என்பது ஊரறிய வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட புதிய நூலகங்களுக்கான நூல் பரிந்துரைக் குழு அமைக்கப்பட்டு, கடந்த தி.மு.க. ஆட்சியில் 5.11.2025 தேதியிட்ட அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. அக்குழுவில்
நவீன இலக்கியங்கள் மற்றும் திறனாய்வு நூல்களைப் பரிந்துரைக்கும் குழுவில் இடம்பெற்றிருந்த பேராசிரியர் திரு.பெருமாள் முருகன் அவர்களே, பெரியார் அறிவுலகத்திற்கு நூல் கொள்முதல் செய்யப்பட்டதில் ஊழல் நடந்துள்ளதை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளார். ஊழலின் ஊற்றுக்கண்ணைக் கண்டறிந்துள்ள அவரைப் பாராட்டியே ஆக வேண்டும்.
நாம் அரசியலுக்கு வந்தபோதே பெரியார் பெயரை வைத்துக் கொள்ளை அடித்து வருவது தி.மு.க.தான் என்று பகிரங்கமாக நமது மாநாட்டிலேயே அறிவித்தோம். ஊழலின் ஊற்றுக்கண்ணே தி.மு.க.தான் என்பதையும் இன்று வரை நாம் மட்டுமே சமரசமின்றிச் சொல்லி வருகிறோம். எப்போதும் தி.மு.க. பற்றி நாம் சொல்வது உண்மைதான் என்பதைத் தி.மு.க.வே மெய்ப்பித்து உள்ளது. அதற்கான இப்போதைய உதாரணமாக, கோவை பெரியார் அறிவுலகத்தில் நடந்துள்ள புத்தகக் கொள்முதல் ஊழலே சாட்சியாகி உள்ளது.
தி.மு.க. கொஞ்சம் வித்தியாசமாக ஊழல் செய்து, கோவை பெரியார் அறிவுலகத்தையே ஊழல் உலகமாக மாற்றியிருக்கிறது. ஊழல் இலக்கியம் படைப்பதில் தி.மு.க. உயர் ரகம்தான் என்பதும் தெரிய வந்துள்ளது.
பெரியார் அறிவுலகத்தைப் பார்த்துப் பார்த்துக் கட்டியதாகத் தம்பட்டம் அடித்துக்கொண்ட தி.மு.க. தலைமை, இப்படி நூல்கள் கொள்முதல் செய்வதிலும் பார்த்துப் பார்த்து, தரமற்ற நூல்களாகப் பரிந்துரை செய்து ஊழல் செய்துள்ளதை உலகமே பார்த்துக் கைகொட்டிச் சிரிக்கிறது.
கடந்த தி.மு.க. ஆட்சியில்தான் எத்தனை எத்தனை ஊழல்கள் நடந்துள்ளன! நகராட்சித் துறையில் ஊழல்! டாஸ்மாக்கில் ஊழல்! டெண்டர்களில் ஊழல்! ஒவ்வொரு துறையிலும் ஊழலோ ஊழல் எனத் தங்களுக்காக ஒரு மிகப் பெரிய ஊழல் உலகத்தையே உருவாக்கியதுதான் தி.மு.க. என்பது அடுத்தடுத்து அம்பலமாகி வருகிறது.
இந்த ஊழல்களின் வரிசையில், நம் வீட்டுப் பிள்ளைகள் மற்றும் மாணவர்களின் நலன் சார்ந்த பள்ளிக் கல்வித் துறையில் ஊழல் நடந்துள்ளதும் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதும் உலகறிந்த செய்தியே. ஆனால், அதன் தொடர்ச்சியாக இப்போது நம் பிள்ளைகளும் மாணவர்களும் பயன்படுத்தக் கட்டப்பட்ட அறிவுலக நூலகம் சார்ந்தும் ஊழலா?
தி.மு.க.வின் வரலாறு தெரிந்தவர்களுக்கு இது ஒன்றும் அதிர்ச்சிக்கு உரியதன்று. ஆனால், அனைத்தும் மக்கள் பணம் என்பதால்தான் நம் மனம் பதைபதைக்கிறது.
மக்களின் வாழ்வை நேரடியாகப் பாதிக்கின்ற வகையில் தொடர்ந்து ஊழல் செய்வதையே வழக்கமாகக் கொண்டுள்ள தி.மு.க.வைத் தமிழ்நாட்டின் வருங்காலத் தலைமுறையும் மன்னிக்கவே மன்னிக்காது. தமிழ்நாட்டுக் குடும்பங்களும் இனி தி.மு.க.வை அப்புறப்படுத்தாமல் விடமாட்டார்கள்.
பெரியார் பெயரை வைத்துக் கொள்ளை அடிப்பதையும் ஊழல் செய்வதையும் தமிழை வைத்துக் கொள்ளை அடிப்பதையும் ஊழல் செய்வதையும் ஒரு வரலாறாகவே நிகழ்த்தி வரும் தி.மு.க., மக்கள் மன்றத்தில் இனி நிமிரவே முடியாமல் நிரந்தரமாகத் தலைகுனிந்து நிற்கப் போவது உறுதி.
Vishwa retweeted
நல்லவேளை பேனா சிலை வைக்கல… வெச்சிருந்த Cap-ல ஊழல், Nib-ல முறைகேடு, Cartridge-ல கமிஷன், Ink-ல scam nu potti potti ah adichirupaanunga .
Vishwa retweeted
Replying to @niranjan2428
உறுதியாக சொல்லுங்கள் இது திமுகவின் ஊழல் தான் என்று.
இங்கே நாம் கவனிக்க வேண்டிய சில சில முக்கிய காரணங்கள்.
புதிய நூலகங்களுக்கான நூல் / மின்னூல் தேர்வு குழுவின் உறுப்பினராக இருந்தவர்களில் மிக முக்கியமானவர். திமுக ஆதரவாளர் ஜெயரஞ்சன்.
நூலக ஆணை குழு தலைவராக இருந்தவர் திமுகவைச் சேர்ந்த அப்துல் ஹமீது என்ற மனுஷ்ய புத்திரன்.
இந்த நூலகத்திற்கான நூல்கள் கொள்முதல் செய்வதற்கான அரசாணை வெளியிடப்பட்டது நவம்பர் 11 2025 ஆம் ஆண்டு. அப்போது ஆட்சி கட்டிலில் இருந்தது திமுக தான்.
எனவே இந்த ஊழலில் தவெக சம்பந்தப்பட்டு இருக்குமோ என்ற கேள்வியே அர்த்தமற்றது தேவையற்றதும் கூட.
Vishwa retweeted
One honest question to Seeman.
Let's consider everyone is wrong in this issue... The film that you are acting today, #Seyon.. Can you assure the film will not be screened at 6 AM anywhere in TN. Producers will issue KDM only by 11 AM in Tamilnadu.
can you assure @Seeman4TN ?!?
அன்பிற்கினிய தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் அண்ணன் சிவா மற்றும் ஐயா தனஞ்செயன் அவர்களுக்கு,
@tfapatn @TSivaAmma @Dhananjayang
வணக்கம்!
புதிய திரைப்படங்களுக்கு முதல் வாரத்தில் அதிகாலை 6 மணி முதல் காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டது தொடர்பாகத் தாங்கள் எழுதிய கடிதத்தைப் படித்தேன்.
வெளிமாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் தமிழ்த் திரைப்படங்கள் முன்னதாகவே வெளியாகும்போது, அவற்றைப் பற்றிய எதிர்மறைக் கருத்துகள் பரப்பப்படுவதால் ஏற்படும் பாதிப்புகளைத் தங்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். திரைப்பட உருவாக்கத்தின் பின்னாலுள்ள உழைப்பையும், தயாரிப்பாளர்கள் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிகளையும் திரைத்துறையைச் சேர்ந்தவனாக நானும் அறிவேன். தமிழ்த் திரையுலகம் நலிவடைய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஒருபோதும் இருந்ததில்லை; அது வளர வேண்டும் என்பதே எனது விருப்பமும். நாங்கள் அரசமைத்தால், ‘திரைக்கலை மேம்பாடு’ என்பதன் கீழ் தமிழ்த் திரையுலகம் மேம்படப் பல திட்டங்களையும் ஒழுங்குமுறைகளையும் கொண்டுவர விரும்பி தமிழில், தமிழ் மொழி, பண்பாடு மேம்பாட்டிற்குப் பங்களிக்கும் திரைப்படங்களுக்கு அரசு பொருளாதார உதவி வழங்குவதோடு, சிறந்த திரைப்படங்களை அரசே வாங்கி வெளியிடுவது; திரைப்படங்களை இணையத்தில் அத்துமீறி வெளியிடுவோருக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுப்பது; திரையரங்குக் கட்டணம், ஊர்தி நிறுத்தக் கட்டணம், உணவுப்பொருட்களின் விலையை முறைப்படுத்துவது உள்ளிட்ட திட்டங்களை எங்களது ஆட்சிச் செயற்பாட்டு வரைவில் முன்வைத்திருக்கிறோம்.
சமூகத்தின் மீதும், மக்களின் மீதும், எதிர்காலத் தலைமுறையின் மீதும் கொண்டுள்ள ஆழமான பற்றுதலும் அக்கறையுமே எனது எதிர்ப்பிற்குக் காரணம் என்பதைத் தாங்கள் புரிந்துகொள்ள வேண்டும். திரைப்படம் மகிழ்ச்சியையும் சிந்தனையையும் தரும் ஓர் உயர்ந்த கலை. அந்தக் கலையின் மீது எனக்கிருக்கும் நேசத்திற்கு இணையாக, அதைக் காணும் மக்களின் கல்வி, உழைப்பு, வாழ்வாதாரம், சமூகப் பொறுப்பு ஆகியவற்றின் மீதும் எனக்கு அக்கறை இருக்கிறது.
பண்டிகை நாட்களிலும் விடுமுறைக் காலங்களிலும் கூடுதல் காட்சிகள் திரையிடப்பட்டு வந்த நிலையில், ஒவ்வொரு புதிய திரைப்படத்தின் வெளியீட்டிற்கும் அதிகாலை 6 மணி முதல் ஆறு காட்சிகள் என்பது தேவையா என்ற கேள்வியைத்தான் முன்வைத்தேன்.
வாரந்தோறும் புதிய திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டே இருக்கும் போது அவற்றை அதிகாலையிலேயே காண்பதற்கு ஆண்டின் எல்லா நாட்களிலும் நம் வீட்டு இளந்தலைமுறைப் பிள்ளைகள் திரையரங்க வாயில்களில் காத்திருப்பதையும் அன்றாடப் பணிகளில் இருந்து விலகி கேளிக்கைகளில் திளைத்திருப்பதையும் எண்ணிப் பார்க்கவே மனம் வலிக்கிறது. இதுபோன்ற மிதமிஞ்சிய கேளிக்கைகளில் ஈடுபட மக்களைத் தொடர்ந்து ஊக்குவிப்பது எத்தகைய சமூகச் சூழலை உருவாக்கும் என்பதே என் பெருங்கவலை.
அறிவார்ந்த சமூகத்தைக் கட்டமைக்க வேண்டிய அரசின் முன்னுரிமைகள் குறித்தே எனது அறிக்கையில் கேள்வி எழுப்பினேன். ஆகவே, தங்கள் கோரிக்கையின் நோக்கத்தை அறியாமல் நான் கருத்துத் தெரிவித்ததாகக் கருத வேண்டாம். திரைத்துறையின் தேவையை மட்டும் தாங்கள் முன்வைப்பதுபோல, ஒட்டுமொத்தச் சமூகத்தின் நலனை முன்னிறுத்தி எனது கருத்தை முன்வைத்தேன்.
காலை 6 மணிக் காட்சிக்கு ஆதரவாகத் தாங்கள் கூறியுள்ள காரணங்களை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும், தங்கள் கோரிக்கையை முதலமைச்சர் ஏற்றுக்கொண்டு அனுமதி வழங்கியிருப்பதாகத் தெரிவித்துள்ளதால், இதுகுறித்து மேலும் ஏதும் கருத்துச் சொல்லாமல் மௌனமாகிறேன்.
தமிழ்த் திரையுலகமும், அதனை வாழவைக்கும் தமிழ் மக்களும் நலமுடன் வாழ வேண்டும் என்பதே எனது விருப்பம்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
விக்ரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெற்ற இடத்தில் சேதமடைந்த கல்வெட்டு, @Anthanan_Offl அவர்களின் புகாரைத் தொடர்ந்து உடனடியாகச் சீரமைக்கப்பட்டு, புதிய கல்வெட்டு நிறுவப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகப் பொதுச்செயலாளரும், மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சருமான திரு.@BussyAnand அவர்கள், இன்று நேரில் சென்று, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் திருவுருவப் படம் பொறிக்கப்பட்ட புதிய கல்வெட்டினை நிறுவினார்.
Vishwa retweeted
தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், வெற்றித் தலைவர் அவர்கள், 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவச் செல்வங்களை ஆண்டுதோறும் பாராட்டி, வாழ்த்தி, கௌரவித்து வருகிறார்.
இதன் முதல்கட்டமாக இன்று சென்னையில் நடைபெற்ற தளபதி விஜய் கல்வி விருது வழங்கும் விழாவில், அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவச் செல்வங்களை தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், வெற்றித் தலைவர் அவர்கள் பாராட்டி, பரிசு வழங்கி வாழ்த்திச் சிறப்பித்தார்.
(1/3)
Vishwa retweeted
Tamil Nadu CM Vijay urges students to stay away from drugs and corruption, saying, “I entered politics for your welfare too,” while addressing students.
#CMJosephVijay #TamilNadu #TVKVijay
Vishwa retweeted
It's extremely shocking to find our home robbed at KR Garden, Railway Feeder Road, Virudhunagar. We were out of town for 10 days and discovered the break-in yesterday (Nov 1) at 10:30 PM. The incident likely occurred around Oct 25.



































