
கரைந்தொழுகும் காலத்தில் கனவென்பது கானல்நீரே #weknowth_meme #குறள்_வெண்பா #weknowth_துளிப்பா #weknowth_clicks #weknowth_art
Joined October 2024
- Tweets9.6K
- Following100
- Followers651
- Likes862
Pinned Tweet
விழாவைத் தேடுகிறது
சலிப்புற்ற மனம்
இயல்போ திணிப்போ
கொண்டாட ஒருவழி
எல்லோருக்கும் தேவைப்படுகிறது
கடலுக்கு மட்டுமே
பழக்கப்பட்ட கப்பல்
அதன் அலைகளாலேயே
உடைக்கப்பட்டு மூழ்கடிக்கப்படுகிறது
உரியவரிடத்தில் உடைபடுதல்
மனிதர்களுக்கு மட்டுமே
சொந்தமானது அல்ல
எந்த திசையில்
பறப்பதென மனம்
தடுமாறி நிற்கிறது
தொலைதலில் இல்லை
இலக்கு தவறுவதுதான்
எனக்கிருக்கும் பெருங்கவலை
புரியாதவைகள் நாளுக்குநாள்
அதிகமாகிக் கொண்டிருக்கின்றன
புரிந்து கொண்டதென
நினைத்த எல்லாமும்
இப்போது மாறியிருக்கின்றன
இனி நான் புதிதாகத்தான்
வாழவேண்டும் போல
தான் ஏற்காத
ஒரு மனதிடமிருந்து வரும்
ஒரு பார்வையோ
ஒரு சிரிப்போ
ஒரு சொல்லோ
எப்போதுமே நெருடல்தானே
2
3
207







