சகோதரி காளியம்மாளும் தான்
நாம் தமிழர் கட்சியை விட்டு வெளியே
போனார்..இந்த நொடிவரை
அண்ணன் சீமான் அவர்களைப்பற்றி
ஒரு வார்த்தை..தவறாகவோ..
விமர்சித்தோ பேசியதே இல்லை.!!!!
இந்த ஈனப்பிறவிகள்..
ஜெகதீஸ் பாண்டியன்..
தென்னகம் விஸ்ணு..
ஏகலைவன் ..போன்ற
இன்னும் சில ஆண்கள்..
திமுக..அதிமுக..ஏன் காங்கிரஸ்
பாஜக..கட்சிகள் கூட, அட
தவெக தலைவர்,முதல்வர்
விஜய் அவர்கள் கூட இவ்வளவு
தரம் இறங்கும் வேலையைச்
சீமானுக்கு எதிராகச் செய்ததில்லை..!!!!
ஒரு கட்சியில் பயணித்து விட்டு
பிடிக்காமல் வெளியேறினால் அத்துடன் நாகரீகமாய் ஒதுங்கி கொள்ள வேண்டும்..கட்சி என்பது
ஒரு குடும்பம் போல,அப்பாவுடன்
கருத்து முரண் ஏற்பட்டால்,
என் அப்பன் கெட்டவன் என்று
இல்லாததையும்..பொல்லாததையும்
ஊரில் பேசி திரிபவன் உண்மையில்
நல்ல மகனா..? அது அப்பாவை மட்டுல்ல குடும்பத்தையே (கட்சி)
பாதிக்கும் என்று உணராதவன்..
எப்படி அந்த கட்சியில் இருந்த
நேரம் உண்மையானவனாக
இருந்திருப்பான் ..?
இவர்கள் எல்லாம்..நாஞ்சில் சம்பத்
சவுக்கு சங்கர்..பாரிசாலன்
போன்றவர்களை விடவும்
மோசமான பிறவிகள்..!!!!
ஆண்களான..இவர்கள்
பெண்ணான சகோதரி காளியம்மாளிடம்,இந்த ஒரு நட்பண்பை கற்றுக் கொள்ள வேண்டும்..
என்ன காரணமிருந்தாலும்..
பேசி சரி செய்யாமல்
காளியம்மாள் போன்றவர்களை
தக்கவைத்துக் கொள்ளாதது
குறித்து சீமான் அண்ணன் மீது
இப்போது வருத்தமுண்டு..
புரணிப் பேசி பிழைப்பு நடத்துவதற்கு
என்றே பிறப்பெடுத்த இழி பிறவிகள்..
#jegatheespandian #thennakam #vishnu #seeman #ntk #kaaliyammal #admk #dmk #tvk #bjp #Congress #eakalaivan. #savukusangar #paarisaalan #NanjilSampath #cmvijaisir
ஐயா பெ. மணியரசன் அவர்களின் விமர்சனங்களை வைத்து நாம் தமிழர் கட்சிக்குள் பிளவை ஏற்படுத்தலாம் என்று அரசியல் எதிரிகள் கனவு காண வேண்டாம்.
தேர்தல் அரசியலைப் புறக்கணித்த கொள்கைப் பின்னணியிலிருந்து வந்த ஐயா அவர்கள், நாம் தமிழர் கட்சிக்காக வாக்குச் சேகரித்து, நமக்கே வாக்களித்தவர். எங்களின் கடினமான காலங்களில் தோள்நின்று வழிகாட்டியவர்.
அவர் எங்களை விமர்சிப்பது எதிர்ப்பால் அல்ல; எங்கள் மீதான அக்கறையால். அவரது விமர்சனங்களை ஆக்கப்பூர்வமாக ஏற்று, எங்களை நாங்களே சீர்தூக்கிப் பார்ப்போம்.
ஐயா பெ. மணியரசன் அவர்கள் எங்களுக்கு வெறும் அரசியல் விமர்சகர் அல்ல; எங்கள் பெருந்தகப்பன், அறிவுலக வழிகாட்டி.
அவரது விமர்சனங்களை மதிப்போம்; அவரது உறவைப் பாதுகாப்போம்.
இந்த உறவு அரசியல் சந்தர்ப்பவாதத்தால் உருவானதல்ல; தமிழ் தேசியக் கொள்கையால் உருவானது. அதை அவதூறுகளாலும், ஊடகப் பிரச்சாரங்களாலும் ஒருபோதும் சிதைக்க முடியாது!
நாம் தமிழர்! ❤️
19 ஆம் ஆண்டு நினைவுடன்
எம் தேசத்தின் அடையாளம்
எமது இனத்தின் தன்மானச் சின்னம்
எனது அரசியல் வழிகாட்டி
மண்டியிடா வீரம்
தமிழர் தேசத்தின் தலைசிறந்த இராஜதந்திரி
அண்ணனே
உனகனவு ஒருநாள் நனவாகும்.
அண்ணனே உன்நினைவுகளுடன் நாம் பயணிக்கிறோம்.
தோல்வியடைவார் என்று முன்கூட்டியே முடிவு செய்வதைவிட, வெற்றி பெறுவதற்கான வாய்ப்பைக் கொடுத்துப் பாருங்கள்.
மற்றவர்களுக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்புக் கொடுக்கும் மக்கள், சீமானுக்கு ஒருமுறை வாய்ப்புக் கொடுத்துப் பார்க்கத் தயங்குவது ஏன்?
தமிழ்ச்சுடர் retweeted
செந்தமிழன் சீமான் வெற்றி பெற்றால் தமிழ்நாடே வெற்றி பெற்றதற்கு சமம் 👌
வாழ்த்துக்கள் சகோதரி 🙏
ஆட்சி அதிகாரத்தில் அமர்வதற்கு முன்பே தீர்ப்பளிக்காதீர்கள். ஒருமுறை வாய்ப்புக் கொடுத்து, அவரது செயல்பாடுகளைப் பார்த்துவிட்டு பேசுங்கள்.
சீமானுக்கு ஒரு வாய்ப்பைக்கூட வழங்காமல், முன்கூட்டியே அவதூறுகளையும் விமர்சனங்களையும் அள்ளி வீசுவதைவிட, அவருக்கு ஒரு வாய்ப்பைக் கொடுத்துப் பாருங்கள்.
அவர் என்ன செய்யப்போகிறார், மக்களுக்காக என்ன மாற்றங்களைக் கொண்டுவரப் போகிறார் என்பதைச் செயல்பாட்டின் மூலம் மதிப்பிடுங்கள். அதன் பிறகு விமர்சியுங்கள்.
வாய்ப்பே கொடுக்காமல் தீர்ப்பளிப்பது எந்த வகையிலும் நியாயமல்ல!
சீமான் அவர்கள் தனித்து நின்று திமுக அதிமுக பாஜக காங்கிரஸ் கட்சிகளை கடுமையாக எதிர்த்த பொழுது யாரை விமர்சனம் பண்ணின?
~சீமானைத்தான்!
சீமான் யாரோடும் கூட்டணிக்கு போக மாட்டேன் என்று 15 வருசமா நின்றபோது யாரை விமர்சனம் பண்ணின!?
~சீமானைத்தான்!!
சீமான் கொள்கை ரீதியாக விஜய்யை எதிர்த்தபோது யாரை விமர்சனம் பண்ணின?
~சீமானைத்தான்!!!
சீமான், கூட்டணிக்கு போறேன் என்று இப்போவரைக்கும் சொல்லவில்லை இப்போ யாரை விமர்சனம் பண்ணுற?
~சீமானைத்தான்!!!!
நாளைக்கு, தனியா நின்று கொள்கை பேசி இத்தனை ஆண்டுகள் அரசியல் செய்தும் இந்த மக்கள் திருந்தவில்லை என்பதை உணர்ந்து கூட்டணிக்கு போனால் யாரை விமர்சனம் பண்ணுவ?
~சீமானைத்தான்!!!!!
அரசியலே வேண்டாம் என்று ஒரு வேளை சீமான் ஒதுங்கிக் கொண்டால் அப்போது என்ன பண்ணுவ? யாரை விமர்சனம் பண்ணுவ?
~சீமானைத்தான்....
இப்படித்தான் பல பைத்தியங்கள் அலைகின்றன. இந்த கேடு கெட்ட மக்களுக்காக அரசியல் பண்ணாத அண்ணா. இந்த மக்கள் எக்கேடு கெட்டு நாசமா போனாலும் பரவாயில்லை.
50 வருடமாக மக்களை சுறண்டிப்பிழைத்த DMK ,ADMK இடம் ஏமாந்ததை உணர்ந்த மக்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த நினைத்து ஏமாந்த கதை
சக்திமான் காப்பாற்றுவார் என்று ஏமாந்தது 90's கிட்ஸ்,
விஜய் மாமா காப்பாற்றுவார் என்று ஏமாந்தது 2K கிட்ஸ்
#போராட்டத்தை காட்டிக் கொடுத்தவன் பிஸ்னஸ் கிளாஸ் ரிக்கெட் எடுத்து உள்ளாசமாக போகிறான்......
அது மட்டுமா இலங்கையின் #Top பணக்காரர் பட்டியலிலும் உள்ளான்...... விசுவாசத்துடன் போராடிய போராளிகள் பலர் இன்று #பிச்சை எடுக்கும் நிலையில் உள்ளனர்..... கடவுளுக்கும் கண் இல்லை என்பதை விட கடவுளே #இல்லை என்றே தோன்றுகின்றது.......
சீமான் அதிமுக,திமுகவின் உதவியுடன் தான் அம்பாசமுத்திரம்
இடைத்தேர்தலில் நிற்கபோகிறார்..
என்றும்..திராவிடத்திடம்
தமிழ் தேசியத்தை அடகு வைத்து
விட்டார் என்றும்...இப்போதே
குரைக்க தொடங்கிவிட்டார்கள்
தற்குறிகள்..!!!!!
சரி..கடந்த பதினாறு வருடமாக
திராவிடத்திற்கு எதிராக
சீமான் தமிழ் தேசியம் பேசிக் கொண்டிருந்த போது,
இன்று விமர்சிக்கும் தற்குறிகள்
சீமானுக்கு வாக்கு செலுத்தி
முதல்வராக அமர வைத்தீர்களா..?
ஏன் அதைச் செய்யவில்லை..?
சீமான் தான் முட்டையாச்சே..
தொடர்ந்து தோற்பவராச்சே...
அப்புறம் ஏன் இப்பவே சீமானுக்கு
எதிராக ஒப்பாரி வைக்க
தொடங்கிவிட்டீர்கள்..?
ஒரு வேளை வென்று விட்டால்..
என்கிற பயம்..அது தானே
உங்கள் பிரச்சினை.
திராவிடத்திடம் மண்டியிட்ட
தமிழ் தேசியம் என்று..குரைக்கும்
இதே கோஸ்டி..சீமான் திமுக..அதிமுகவிற்கு எதிராக பேசிய
அத்தனை காணொளிகளையும்
தூசு தட்டி..தூக்கிக் கொண்டு
வருவார்கள்...இவர்கள் கழுதைகள்
போல..முன்னாடி போனால் கடிப்பார்கள்..பின்னாடி போனால்
உதைப்பார்கள்...!!!!!
#குறிப்பு..நான் தற்குறி என்று யாரையும் பெயர் சொல்லி குறிப்பிடவில்லை. ஆனால் இந்த பதிவில் யார் வந்து
சீமானையும் என்னையும் கடிக்கிறார்களோ..அவர்கள் தான் தற்குறி..
#ntk #seemanism #seeman #ambasamuththiram #ByElection2026 #dmk #admk #tvk #tamilnadupolitics
பார்பனிய ஆட்சிக்கு நேர் எதிரான ஆட்சி முறை இராவணன் ஆட்சி முறை.. வரலாற்று சான்று உள்ளது...
இராவணனின் ஆட்சி சிறப்பு
கடவுளின் ஆட்சியை பூமியில் கொடுத்தவர்...
ஏழைகள் கண்ணீர் அறியாது வாழ்ந்தார்கள்...ஏழை வீட்டில் பொன் தட்டு..
ராவணன் ஆட்சியில் ஏழைகள்
இதிகாசங்கள் மற்றும் தமிழ் இலக்கிய மரபுகளின்படி, இராவணனின் ஆட்சியில் இலங்கையில் ஏழைகளே இல்லை என்றும், நாடு வறுமையற்ற செல்வச் செழிப்புடன் திகழ்ந்தது என்றும் விவரிக்கப்படுகிறது. கம்பராமாயணம் மற்றும் ஈழத்து நாட்டுப்புறக் கதைகளின்படி, அவனது நாட்டின் பொருளாதார நிலை மற்றும் மக்களின் வாழ்வாதாரம் பின்வருமாறு விவரிக்கப்பட்டுள்ளது:
• பொன்னகரம்: இராவணன் ஆண்ட இலங்கை 'பொன்னகரம்' என்று அழைக்கப்பட்டது. குபேரனிடமிருந்து அவன் கைப்பற்றிய நாட்டின் மாளிகைகள் முதல் சாதாரண மக்களின் வீடுகள் வரை தங்கம் மற்றும் விலைமதிப்பற்ற மணிகளால் கட்டப்பட்டிருந்ததாக இதிகாசங்கள் கூறுகின்றன.
• வர்க்கப் பாகுபாடற்ற நிலை: இராவணனின் ஆட்சியில் சமூக வர்க்கப் பாகுபாடுகள் மிகக் குறைவாக இருந்தன. மக்கள் தங்களின் அன்றாடத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடத்திற்கு எவ்விதப் பஞ்சமுமின்றி வாழ்ந்தனர்.
• வறுமையின்மை: கம்பர் தனது ராமாயணத்தில், இலங்கையில் பிச்சை எடுப்பவர்களோ அல்லது வறுமையால் வாடுபவர்களோ இல்லை என்று குறிப்பிடுகிறார். வறுமை இல்லாததால், அங்கு கொடை கொடுப்பவர்களுக்கும் தேவையிருக்கவில்லை.
• அனைவருக்கும் கல்வி மற்றும் உரிமை: அவனது ஆட்சியில் சாதி, குலம், மதம் போன்ற பாகுபாடுகள் இன்றி அனைவருக்கும் கல்வி கற்கும் உரிமை திறந்திருந்தது. இது மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு முக்கியக் காரணமாக அமைந்தது.
இந்தியாவிலிருந்து இலங்கை திரும்பிய கிருஷ்ணகுமார் எங்கே? இலங்கை அரசு உடனடியாகப் பதிலளிக்க வேண்டும்!
2009ஆம் ஆண்டு நாட்டில் நிலவிய சூழ்நிலை காரணமாக இலங்கையை விட்டு வெளியேறிய கிருஷ்ணகுமார் அவர்கள், இந்தியாவின் திருச்சி தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
2015ஆம் ஆண்டளவில் இந்தியாவில் அவருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கொன்றில் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. அந்தத் தண்டனைக் காலம் நிறைவடைந்த பின்னரும் பல ஆண்டுகளாக அவர் தடுப்பில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், மீண்டும் இலங்கைக்குத் திரும்புவதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்த கிருஷ்ணகுமார் அவர்கள், நேற்று (26.10.2026) மாலை இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்.
நேற்று மாலை சுமார் 4 மணியளவில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இந்தியாவிலிருந்து புறப்பட்ட அவர், புறப்படுவதற்கு முன்னர் என்னைத் தொடர்புகொண்டு தான் இலங்கைக்கு வருவதாகத் தெரிவித்திருந்தார்.
மாலை சுமார் 5.45 முதல் 6 மணிக்குள் அவர் இலங்கையை வந்தடைந்திருக்க வேண்டும். ஆனால் அதன் பின்னர் அவரிடமிருந்து எந்தவிதமான தொடர்பும் கிடைக்கவில்லை. அவரது குடும்பத்தினருக்கும் அவர் எங்கிருக்கிறார் என்பது தொடர்பாக எந்தத் தகவலும் வழங்கப்படவில்லை.
அவர் இலங்கைக்கு வந்தவுடன் கைது செய்யப்பட்டிருக்கலாம் என்ற பலத்த சந்தேகம் எமக்கு எழுந்துள்ளது.
வெளிநாடுகளில், குறிப்பாக இந்தியாவில் அகதிகளாகவும் தடுப்பு முகாம்களிலும் வாழ்ந்துவரும் இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்குத் திரும்புமாறு இலங்கை அரசு பகிரங்கமாக அழைப்பு விடுத்திருந்தது.
ஆனால் அவ்வாறு நாடு திரும்புகின்ற ஒருவர், தனது குடும்பத்தினருக்கு ஒரு தொலைபேசி அழைப்பைக்கூட மேற்கொள்ள முடியாத நிலையில் காணாமல் போகின்ற சூழ்நிலை உருவாகுமானால், இந்தியாவில் வாழும் ஏனைய இலங்கை அகதிகள் எவ்வாறு நம்பிக்கையுடன் நாடு திரும்புவார்கள்?
கிருஷ்ணகுமார் அவர்கள் எங்கே? அவர் கைது செய்யப்பட்டுள்ளாரா? அவ்வாறாயின் எந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்? தற்போது எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்?
இந்தக் கேள்விகளுக்கு இலங்கை அரசாங்கமும் சம்பந்தப்பட்ட பாதுகாப்புத் தரப்பினரும் உடனடியாகத் தெளிவான பதிலை வழங்க வேண்டும்.
இந்த விடயத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள், மனித உரிமைப் பாதுகாவலர்கள் அனைவரும் உடனடியாகக் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
கிருஷ்ணகுமார் அவர்களின் இருப்பிடம் தொடர்பான உண்மையை உடனடியாக வெளிப்படுத்துங்கள்!
நன்றி.
ராஜ்குமார் ராஜீவ்காந்த்
எதற்கும் அஞ்சாத ஒரு தலைவன் எம் இனத்தில் இருந்திருக்கின்றான்..
பூஜ்ஜியத்திலிருந்து ஆரம்பித்து எவரின் கடுகளவு உதவியும் இல்லாமல் வெறும் 20 வருடங்களில் இலங்கைத்தீவில் 2002 இல் இராணுவமேலாண்மை கொண்டிருந்த தமிழர்படைகளை கட்டியமைத்தது எல்லாம் வெறும் கதையல்ல.
அது ஒரு புகழ்பூத்த வரலாறு.
தமிழர்தேசங்களில் எங்கெல்லாம் தமிழர்களின் கொடி பறக்கவேண்டுமோ அங்கெல்லாம் தமிழர்களின் கொடி பட்டொளி வீசிப்பறந்த கதையும் தமிழர்நெஞ்சங்களை நிறைக்கும் இனிய வரலாறு.

















