Dr.அழியாநாச்சியார் (@DrMahima3) header
Dr.அழியாநாச்சியார் (@DrMahima3) profile picture

shamboo mahadeva🙏 பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார்🙏

Tamil Nadu, India
Joined March 2019
Photo by Dr.அழியாநாச்சியார் (@DrMahima3)Photo by Dr.அழியாநாச்சியார் (@DrMahima3)Photo by Dr.அழியாநாச்சியார் (@DrMahima3)Photo by Dr.அழியாநாச்சியார் (@DrMahima3)Photo by Dr.அழியாநாச்சியார் (@DrMahima3)Photo by Dr.அழியாநாச்சியார் (@DrMahima3)Photo by Dr.அழியாநாச்சியார் (@DrMahima3)Photo by Dr.அழியாநாச்சியார் (@DrMahima3)Photo by Dr.அழியாநாச்சியார் (@DrMahima3)Photo by Dr.அழியாநாச்சியார் (@DrMahima3)
Dr.அழியாநாச்சியார் retweeted
வேலும் மயிலும் துணை நிற்கட்டும். அனைவருக்கும் இனிய கார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துகள்!
9
131
1
1,102
6,289
Dr.அழியாநாச்சியார் retweeted
ஒரு மாநில முதல்வர் அரசியல் சாசனம் தரும் உரிமையில் ஆட்சி நடத்துபவர். நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் மாபெரும் தூண்களாக இங்கே நிற்கின்றன. நீதிமன்ற தீர்ப்புகளை ஒரு அரசானது தன் விருப்பு வெறுப்புக்கு உட்படுத்தாமல், அதை நேர்மையாக செயல்படுத்தும் போதுதான் அங்கே நீதியெனும் சமநிலை நிலவ முடியும். தற்போது திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்புகளை துச்சமாக நினைத்து தான்தோன்றித்தனமாக நடந்துகொண்டுள்ளது தவெக அரசு. நிச்சயமாக இதன் விளைவுகள் எவ்வளவு விபரீதமானது என்பதை சாமானியனாக என்னாலே தெளிவாக உணர முடிகிறது. ஆனால், ஆளும் அரசாங்கத்திற்கு இது புரியவில்லை என்பது ஆச்சர்யமாக உள்ளது. உண்மையிலேயே, தமிழக முதல்வர் திரு விஜய் அவர்களை சுற்றியுள்ளவர்கள் அவரை தவறாக வழிநடத்துவதோடு அவரைச் சுற்றி மாயக்கோட்டை ஒன்றை கட்டியிருப்பதாகத் தெரிகிறது. இதை உடைக்கவில்லை என்றால் நஷ்டம் திரு விஜய் அவர்களுக்கே. அரசியல், அறியாமை, கூட்டணி அழுத்தம் என்று என்ன காரணத்தைக் கூறினாலும் அரசியல் சாசன சட்டத்திற்கு உட்பட்டு ஆட்சியை நடத்துவோம் என உறுதியெடுத்த தவெக அரசாங்கம் அழிக்கவே முடியாத வரலாற்றுப் பிழையை இன்று நிகழ்த்திவிட்டது.
896
3,520
191
12,492
254,001
Dr.அழியாநாச்சியார் retweeted
Punishment must be meted out to government servants and elected representatives who disobey the courts. If there is no punishment, this errant behaviour will continue.
23
186
5
627
11,009
Dr.அழியாநாச்சியார் retweeted
Dear Chief Justice Of India, please impose President rule in Tamilnadu. What's the use of a govt if they are not able to lit a deepam on #Thiruparankundram even after Supreme court ruling.
90
715
23
3,120
42,960
Dr.அழியாநாச்சியார் retweeted
Dev Deepavali aur Guru Purab ki hardik Shubhkamnayen. Iniya Karthigai Nalvazhthukkal. Karthika Deepam Subhakankshalu/Subhashayagalu.
14
338
3
4,236
35,538
Dr.அழியாநாச்சியார் retweeted
தமிழக மக்கள் அனைவருக்கும், இனிய கார்த்திகை தீபத் திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இனிய திருக்கார்த்திகை நன்னாளில், தீபத்தின் ஒளி நம் இல்லங்களில் வெளிச்சத்தை நிரப்பட்டும். அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சியும், வளமும் பெருகட்டும். ஒவ்வொருவரின் உள்ளத்திலும் அன்பு, அமைதி, நம்பிக்கை, நற்சிந்தனைகள் நிறையட்டும். இனிய திருக்கார்த்திகை தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்.
95
766
17
3,583
38,596
Dr.அழியாநாச்சியார் retweeted
Karthigai Pournami Today Darshanam of Muruga on this auspicious day of Karthigai Deepam. Karthigai Deepam / Trikarthikai comes on the tamil month Karthigai on Pournami day. Prayers to Muruga to bless us all 🙏
122
582
19
4,800
40,714
Dr.அழியாநாச்சியார் retweeted
அனைவருக்கும் கார்த்திகை தீபம் நல்வாழ்த்துக்கள். அண்ணாமலை அரோகரா 🙏🏻🔥🪔🪷🌿😇
23
12
112
828
Dr.அழியாநாச்சியார் retweeted
தேவி உண்ணாமுலை சமேத அண்ணாமலையாருக்கே அரோஹரா!🙏🙏 அண்ணுதல் என்றால் நெருங்குதல் என்று பொருள். (அண்மை-நெருக்கம்) வராகமாக மாறிய திருமாலும், அன்னப்பறவை ரூபமாக பிரமனும் முறையே ஈசனுடைய அடியையும் முடியையும் தேடி, நெருங்க முடியாததால் அவர் அண்ணாமலையார் ஆனார். நன்றி: ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்
6
12
37
393
Dr.அழியாநாச்சியார் retweeted
நாளை தீப தூனில் தீபம் ஏற்றவில்லை என்றால் தவேக அரசின் அழிவு ஆரம்பம் ஆகும் நாள் நாளை…
7
27
179
1,314
Dr.அழியாநாச்சியார் retweeted
Important:!!RT
5
216
4
318
4,444
Dr.அழியாநாச்சியார் retweeted
The wait is over! Thiruparankundram Deepathoon is geared up for tomorrow's Karthigai Deepam festival. 🪔✨ History proves it time and again...no force can stand against Lord Murugan. ❤️‍🔥 Praying that He vanquishes all negativity and blesses us all with strength and joy. 🚩🛐 #Thiruparankundram #KarthigaiDeepam #VetrivelMurugan
54
1,074
18
5,288
197,184
Dr.அழியாநாச்சியார் retweeted
Lord Murugan will win . TVK will finish . Mark it .
110
750
20
5,838
42,441
Dr.அழியாநாச்சியார் retweeted
இன்றைய அருமையான பதிலடி பேட்டி..
3
40
192
1,876
Dr.அழியாநாச்சியார் retweeted
மாணவர்களின் கல்லூரி கனவு.. அண்ணன் அண்ணாமலை கலந்து கொள்கிறார்.. வாருங்கள் இளைஞர்களே மாற்றம் நம்மிடம் இருந்து தொடங்கட்டும் 🙏 #We_The_Leaders
3
86
1
301
3,783
Dr.அழியாநாச்சியார் retweeted
தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளியில் நேரிட்ட விபத்தில் உயிரிழந்தவர்கள் குறித்து மிகுந்த வேதனையடைந்தேன். அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும்: பிரதமர் @narendramodi
111
533
14
3,844
2,349,309
Dr.அழியாநாச்சியார் retweeted
#தமிழ்நாட்டின்_புகழ்பெற்ற_28_சிவன்_கோயில்கள் இந்தியாவில் இருக்கும் சிவன் கோயில்களில் பாதிக்கு மேற்பட்ட கோயில்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளன. அதாவது தமிழ்நாட்டில் மட்டும் 2500-க்கும் அதிகமான சிவாலயங்கள் கட்டப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலான வரலாற்றுச் சிறப்பு மிக்க கோயில்கள் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டவையாகும். அதேபோல மற்ற பேரரசுகளின் காலத்திலும் கணிசமான அளவு சிவன் கோயில்கள் தமிழ்நாட்டில் எழுப்பப்பட்டுள்ளன. இப்படியாக கட்டப்பட்ட சிவன் கோயில்களில் சில சிவன் கோயில்கள் வரலாற்று மற்றும் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. அதாவது சைவ சமயத்தில் கூறப்படும் 28 ஆகமங்களின் அடிப்படையில் முக்கியமான 28 சிவன் கோயில்களைப் பற்றி இங்கே காண்போம். 1 திருவதிகை வீரட்டானேசுவரர் கோயில் கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டியிலிருந்து 2 கிமீ தொலைவில் திருவதிகை வீரட்டானேசுவரர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் தமிழ்நாட்டில் உள்ள எட்டு வீர சைவக் கோவில்களுள் ஒன்றாகும். இத்திருக்கோயிலின் கர்ப்பகிரக விமானத்தை பார்த்து இராஜ இராஜ சோழன் பிற்காலத்தில் தஞ்சையில் பெரிய கோயிலைக் கட்டியதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். அதேபோல பெரிய கோயில் விமான நிழல் கீழே விழாது என்ற நம்பிக்கை இருப்பது போல், திருவதிகை கோயிலின் நிழலும் தரையில் விழாதபடி கணித சாஸ்திர முறையுடன் பல்லவர்களால் இதை கட்டியதாக சொல்லப்படுகிறது. 2 நெல்லையப்பர் ஆலயம், திருநெல்வேலி திருநெல்வேலியிலுள்ள நெல்லையப்பர் ஆலயமானது, தமிழகத்திலேயே மிகப்பெரிய சிவாலயமாகும். இது பாண்டிய மன்னர்களால் கி.பி. 700 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. சிவபெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் தனித்தனியே கட்டப்பட்ட இரண்டு கோயில்களை உள்ளடக்கிய பிரம்மாண்டமான கோயில் இது. இரண்டு கோயில்களும், 17-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சங்கிலி மண்டபம் என்னும் மண்டபத்தால் இணைக்கப்பட்டுள்ளன. இக்கோவிலின் கோபுரங்களும் 17-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டவையாகும். 3 தியாகராஜர் கோயில், திருவொற்றியூர் சென்னையிலிருந்து 16 கி.மீ தொலைவில் உள்ள திருவொற்றியூரில் தியாகராஜர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் பல்லவ மன்னர்களால் 7-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. எனினும் அதற்கு பிறகு 11-ஆம் நூற்றாண்டில் சோழர்களால் பெரிதாக புதுப்பித்து கட்டப்பட்டுள்ளது. இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிவபெருமானின் விக்கிரகமும், திருவாரூர் தியாகராஜசுவாமி திருகோயிலில் உள்ள சிவன் சிலையும் ஓரே மாதிரியான தோற்றத்தை கொண்டவை. 4 ஸ்ரீ மாயூரநாதசுவாமி கோவில், மயிலாடுதுறை மயிலாடுதுறையின் மிகபெரிய கோயிலாக ஸ்ரீ மாயூரநாத சுவாமி கோவில் திகழ்கிறது. இந்தக் கோயில் சுவர்களிலுள்ள மிகப் பழமையான பதிவுகளாக குலோத்துங்க சோழரின் பதிவுகள் உள்ளன. அதன் ஆரம்ப கட்டுமானத்திற்கு பிறகு, சற்றே புனரமைக்கப்பட்ட இந்த கோயில் சோழர்களின் கட்டிடக்கலைக்கு சான்றாக இன்னமும் விளங்குகிறது. இக்கோயிலின் நடராஜ பெருமானுக்காக ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் மாயூரா நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி எண்ணற்றவர்களை இக்கோவிலை நோக்கி ஈர்த்துவிடும். இந்த திருவிழாவை, சிதம்பரம் நாட்டியாஞ்சலி திருவிழா நடக்கும் வேளைகளில் மகா சிவராத்திரியையொட்டி சப்தஸ்வரங்கள் டிரஸ்ட் என்ற அமைப்பு நடத்தி வருகிறது. 5 ஜம்புகேசுவரர் கோயில், திருவானைக்காவல் திருவானைக்காவல் கோயிலின் மூலவரான ஜம்புகேஸ்வரர் 5-ஆம் உள் பிரகாரத்தில் சுயம்புவான அப்புலிங்கமாக எழுந்தருளியுள்ளார். அதாவது வடமொழியில் 'அப்பு' என்பதன் பொருள் நீர் என்பதாகும். இந்த லிங்கம் இருக்குமிடம் தரைமட்டத்திற்க்குக் கீழே இருப்பதால் எப்போதும் தண்ணீர் கசிவு இருந்துகொண்டே இருக்கும். முற்றிய கோடையில், காவேரி வறண்டிருக்கும் நேரங்களிலும், இந்நீர்க்கசிவு வற்றுவதில்லை என்று சொல்லப்படுகிறது. 18 ஏக்கர் பரப்பளவை கொண்ட இந்த கோயில் ஆரம்ப கால சோழ மன்னர்களில் ஒருவரான கோச்செங்க சோழநாள் கட்டப்பட்டதாகும். இங்கு அம்மன் அகிலாண்டேஸ்வரியின் தனி சன்னதி நான்காம் பிரகாரத்தில் உள்ளது. 6 பிரகதீஸ்வரர் கோயில், தஞ்சாவூர் தமிழ்நாட்டில் ஆயிரம் ஆண்டுகளுக்கு கட்டப்பட்ட கோயில்கள் எத்தனை இருந்தாலும் தஞ்சை பெரிய கோயிலுக்கு ஈடு இணை ஏதுமில்லை. வட நாடெங்கும் பயணித்து பல வெற்றிகளை சுமந்து வந்த ராஜராஜ சோழன் தான் வழியில் கண்ட பல்வேறு சிற்பக்கலை மரபுகளைச் சேர்ந்த கோயில்களின் தோற்றத்தில் கவரப்பட்டு அவற்றினும் சிறந்த ஒரு உன்னத கலைப்படைப்பை தனது ராஜ்ஜியத்தில் நிர்மாணிக்க விரும்பி மிகுந்த முனைப்புடன் இந்தக் கோயிலை உருவாக்கியிருக்க வேண்டும் என்பது சில வரலாற்று ஆசிரியர்களின் கருத்து. வார்த்தைகளில் விவரிக்க முடியாத நுண்ணிய வடிவமைப்பு, கற்பனா சக்தி, மேலாண்மை துல்லியம், பொறியியல் நுணுக்கங்கள், அப்பழுக்கற்ற ஒழுங்கு, துளியும் பிசகாத கணக்கீடுகள் போன்ற அறிவியல் பூர்வமான நுட்பங்கள் இந்த ஒட்டுமொத்த கோயிலின் உருவாக்கத்தில் நிரம்பியுள்ளன என்றால் அது மிகையில்லை. 7 தில்லை நடராஜர் கோயில், சிதம்பரம் மனிதனின் உடம்பும் கோயில் என்பதனை விளக்கும் வகையில் சிதம்பரம் நடராஜர் கோயில் அமைந்துள்ளது. மனித உடலானது அன்னமயம், பிராணமயம், மனோமயம், விஞ்ஞானமயம், ஆனந்தமயம் என்னும் ஐந்து சுற்றுகளை கொண்டது. அதன் அடிப்படையில் நடராஜர் கோயிலில் ஐந்து திருச்சுற்றுகள் என்னும் பிரகாரங்கள் உள்ளன. அதேவேளை மனிதனுக்கு இதயம் (ஆகாயம்) இடப்புறம் அமைந்திருப்பது போல் மூலவர் இருக்கும் கருவறை கோயிலின் இடதுபுறமாக சற்று நகர்ந்து இருக்கிறது. அதோடு சராசரியாக ஒரு மனிதன் ஒரு நாளைக்கு 21,600 முறை இதயத்தின் உதவியால் மூச்சுவிடுகிறான் என்பதை குறிக்கும் விதமாக கருவறையின் மீதுள்ள கூரை 21600 ஓடுகளால் வேயப்பட்டு இருக்கிறது. 8 மருந்தீஸ்வரர் கோயில், சென்னை சோழ நாட்டை பல்லவம் ஆந்திரம் போன்ற ராஜ்ஜியங்களுடன் இணைத்த வடப்பெருவழி எனும் முக்கிய சாலையில் இந்த கோயில் இருந்ததை வரலாற்றுச்சான்றுகள் சுட்டிக்காட்டுகின்றன. அந்த பாதைதான் இன்றைய ஈ.சி.ஆர் எனும் கிழக்குக்கடற்கரைச்சாலையாக உருமாறியுள்ளது. பரபரப்பான சென்னையின் நடுவே திருவான்மியூரில் அமைதி தவழும் ஆன்மீகச்சுழலை கொண்டுள்ள மருந்தீஸ்வரர் கோயில் சென்னைக்கு வரும் பயணிகள் அவசியம் விஜயம் செய்ய வேண்டிய புராதன ஆன்மீகத்தலமாகும். 9 ஸ்ரீ இராமநாதசுவாமி கோவில், ராமேஸ்வரம் 12 ஜோதிர்லிங்க கோயில்களில் தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஒரே ஜோதிர்லிங்க ஆலயமாக இராமேஸ்வரத்தில் உள்ள ஸ்ரீ இராமநாதசுவாமி கோவில் புகழ்பெற்றுள்ளது. மேலும் இராமேஸ்வரம் என்ற பெயர் வரக்காரணமாக ஸ்ரீ இராமநாதசுவாமி கோவிலை குறிப்பிடலாம். அதாவது இராவணனை கொன்ற பாவத்தினை நீங்க இராமன் மணல்களால் ஆன லிங்கத்தை இங்கு பிரதிஷ்டை செய்து வழிபட்டார் என்று நம்பப்படுகிறது. இதன் காரணமாக இராமன் ஈஸ்வரனை வணங்கிய இடம் என்ற பொருளில் 'இராம+ஈஸ்வரம்' இராமேஸ்வரம் ஆனது 10 அண்ணாமலையார் கோயில், திருவண்ணாமலை எட்டு திக்கிலும் அஷ்டலிங்கங்களை கொண்ட எண்கோண அமைப்பில் அமைந்திருக்கும் திருவண்ணாமலை நகரில் பஞ்சபூத ஸ்தலங்களின் நெருப்புக்கான ஸ்தலமாக அண்ணாமலையார் கோயில் அறியப்படுகிறது. இக்கோவில் அக்னியை வெளிப்படுத்துவதாகவும், சிவபெருமான் இங்கு அக்னி லிங்கமாகவும் வணங்கப்படுகிறார். அதோடு உண்ணாமலையம்மனாக சிவபெருமானின் துணைவியாரான பார்வதி தேவியும் இங்கு வழிபடப்படுகின்றார். 11 கபாலீசுவரர் கோயில், சென்னை சென்னையின் பழமையான மைலாப்பூர் பகுதியில் இந்த கபாலீசுவரர் கோயில் வீற்றுள்ளது. இந்த கோயில் சிவபெருமான் மற்றும் அவரது துணைவியார் பார்வதி தேவிக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இன்று சாந்தோம் சர்ச் உள்ள இடத்தில் வீற்றிருந்த கபாலீசுவரர் கோயிலின் ஆதி அமைப்பு போர்த்துகீசியர்களால் சிதைக்கப்பட்ட பிறகு தற்போது நாம் காணும் கோயில் விஜயநகர மன்னர்களால் 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 12 ஏகாம்பரநாதர் கோயில், காஞ்சிபுரம் 600 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இக்கோயில், காஞ்சிபுரத்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோயில் சிவபெருமானுக்கான பஞ்சபூத கோயில்களுள், நிலத்தை குறிக்கும் பஞ்ச பூத ஸ்தலமாகும். இக்கோயிலின் வட்டக் கோபுரம் 59 அடி உயரத்தில் அமைந்திருப்பதோடு இந்தியாவின் உயரமான கட்டுமானங்களுள் ஒன்றாக விளங்குகிறது. 13 வேதகிரீஸ்வரர் கோயில், திருக்கழுக்குன்றம் சென்னையிலிருந்து 67 கி.மீ தொலைவில் உள்ள திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ள வேதகிரீஸ்வரர் கோயில் 1400 ஆண்டுகள் பழமையானது. இங்கு காணப்படும் ஒரு கல் மண்டபம் முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் (கி.பி. 610-640) காலத்தில் கட்டப்பட்ட சிவனுக்குரிய குடைக்கூளி என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். அதுமட்டுமல்லாமல் 7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர், சோழர், பாண்டியர், ராஷ்டிரகூடர் காலத்திய கல்வெட்டுக்களும் இங்கே கிடைத்துள்ளன. 14 தியாகராஜஸ்வாமி திருக்கோயில், திருவாரூர் சோழ மன்னர்களால் கட்டப்பட்டு தமிழ்நாட்டின் மிகப் பழமையான கோயில்களுள் ஒன்றாக திகழ்ந்து வரும் தியாகராஜஸ்வாமி திருக்கோயில் 1-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.இக்கோயிலின் மூலஸ்தானத்தை இரண்டாகப் பிரித்து, ஒரு பகுதியை "வன்மிகிநாதர்" என்ற பெயரில் வழங்கப்படும் சிவபெருமானுக்கும், மற்றொரு பகுதியை தியாகராஜருக்கும் அர்ப்பணித்துள்ளனர். வன்மிகிநாதருக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள பகுதியானது, தியாகராஜருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள பகுதியைக் காட்டிலும் பழமை வாய்ந்ததாகும். வன்மிகிநாதரின் சந்நிதியில், வழக்கமான லிங்கத்துக்கு பதிலாக, ஒரு புற்று நிறுவப்பட்டுள்ளது. 15 ஸ்ரீ கும்பேஸ்வரர் ஆலயம், கும்பகோணம் கும்பகோணத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கும்பேஸ்வரர் ஆலயம் ஒரு சிவாலயமாகும். இக்கோவிலில் தான் ஆண்டுதோறும் மாசிமக விழாவும், 12 ஆண்டுகளுக்கொருமுறை மகாமகப் பெருவிழாவும் கொண்டாடப்படுகின்றன. இக்கோவில் 1300 ஆண்டுகள் பழமையானதென நம்பப்படுகிறது. இடைக்காலச் சோழர்கள் இந்நகரத்தை ஆண்டபொழுதிலிருந்து இக்கோவில் உள்ளது. இக்கோவிலில் சிவபெருமான் ஆதி கும்பேஸ்வரர் என்னும் பெயருடன் வழிபடப்படுகிறார். 16 ஸ்வேதாரண்யேஸ்வரர் கோயில், திருவெண்காடு தமிழ்நாட்டிலுள்ள ஒன்பது நவக்கிரக ஸ்தலங்களுள், இது நான்காவது ஸ்தலமாகும். இந்தக் கோயில் 1000 முதல் 2000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இக்கோயிலில், நவக்கிரகங்களுள் ஒருவரும், பக்தர்களுக்கு அறிவும், செல்வமும் வழங்கக்கூடியவருமான புதன் பகவானுக்கு தனி சந்நிதி அமைத்து வணங்கி வருகின்றனர். இங்கு சிவபெருமான், "ஸ்வேதாரண்யேஸ்வரர்" என்ற திருப்பெயருடன், மூலவராக இருந்து அருள் பாலிக்கிறார். பார்வதி தேவி, "பிரம்மவித்யாநாயகி" என்ற பெயரில் வழிபடப்படுகிறார். 17 ஸ்ரீ கம்பஹரேஸ்வரர் ஆலயம், கும்பகோணம் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருபுவனம் என்னும் கிராமத்தில் ஸ்ரீ கம்பஹரேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. 13-ஆம் நூற்றாண்டில் ஆட்சிசெய்த மன்னன் குலோத்துங்கனால் இக்கோவிலின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. அவருக்குப் பிறகு வந்த சேர, சோழ, பாண்டிய வம்சத்தைச் சேர்ந்த மன்னர்கள் அப்பணியைத்தொடர்ந்து கட்டி முடித்தனர். சோழர்களால் புதுப்பிக்கப்பட்ட கடைசிக்கோவில் இதுவென வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். 18 பழமலைநாதர் கோயில், விருத்தாச்சலம் கடலூர் மாவட்டத்திலுள்ள விருத்தாசலத்தில் அமைந்துள்ள பழமலைநாதர் கோயில் சைவத் திருத்தலங்களில் முக்கியமானதாகும். இந்தக் கோயிலில் 5 கோபுரம், 5 நந்தி, 5 தேர், 5 கொடிமரம் என எல்லாமே ஐந்து ஐந்தாக அமைந்துள்ளது. இத்தலம் காசியை விட வீசம் (தமிழ் அளவு : 1/16) புண்ணியம் அதிகம் கொண்டதென நம்பப்படுகிறது. இதனால் விருத்தகாசி என்கிற சிறப்புப்பெயரும் இவ்வூருக்கு உண்டு 19 சோமேஸ்வரர் ஆலயம், கும்பகோணம் சோமேஸ்வரர் ஆலயம் கும்பகோணத்தில் அமைந்துள்ள ஒரு சிவாலயமாகும். இந்தக் கோயிலின் கட்டிட வடிவமைப்பை பார்க்கும் பொழுது 13-ஆம் நூற்றாண்டு திராவிடக் கட்டிடக் கலை உடனடியாக நினைவுக்கு வருகிறது. இக்காலத்தில்தான் பிற்காலச் சோழர்கள் கும்பகோணத்தை ஆண்டு வந்தனர். உண்மையில் இக்கோவில் சிவபெருமானையும் பார்வதிதேவியையும் வழிபட்டுவந்த சோழர்களால் அடிப்படையில் கட்டப்பட்டது. பிறகு வந்த மன்னர்கள் இக்கோவிலின் கட்டுமானத்தில் வெவ்வேறு வடிவமைப்பை சேர்த்துக் கொண்டனர். ஆயினும் அடிப்படை வடிவமைப்பு சோழர் கட்டிடக் கலையே ஆகும். 20 திருவாலீஸ்வரர் கோயில் சென்னையிலிருந்து 13 கி.மீ தூரத்தில் உள்ள பாடி என்ற பகுதியில் திருவாலீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் சிவபெருமான் திருவாலீஸ்வரர் வடிவத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இங்கு சிவன் சன்னதியை தவிர விநாயகர், பாலசுப்பிரமணியர், சூரிய பகவான் சன்னதிகளும் உள்ளன. அதோடு இங்குள்ள விநாயகர் சன்னதியில் விநாயகர் தொந்தி இல்லாமல் காட்சியளிக்கிறார். 21 ஐராவதீஸ்வரர் கோயில் கும்பகோணத்திலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தாராசுரத்தில் ஐராவதீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. கங்கைகொண்ட சோழபுரம் மற்றும் பிரகதீஸ்வரர் கோவில்களில் இருப்பதை விட சிறியதாக இருந்தாலும், மிகவும் நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்டதாக திகழ்கிறது ஐராவதம் கோவில் சிற்பங்கள். ஒரு தேரை, குதிரைகள் இழுத்துச் செல்வது போல அமைந்திருக்கும் ஐராவதீஸ்வரர் கோயில், நிச்சயமாக நாம் அனைவரும் பார்க்க வேண்டிய அருமையான திருக்கோவில் ஆகும். துர்வாச முனிவரின் சாபத்தினால் தன்னுடைய நிறத்தை இழந்த இந்திரனின் யானை ஐராவதம், இங்கு வந்து சிவனை வழிபட்டு, சாப விமோச்சனம் பெற்றதாம். அதனால், இந்த கோவிலுக்கு ஐராவதீஸ்வரர் கோயில் என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது. 22 காசி விஸ்வநாதர் கோயில் கும்பகோணம் மகாமகம் குளத்துக்கு அருகிலேயே சிவாலயமான காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் சிவன் சன்னதியை தவிர நவகன்னியர்களான கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, ,காவேரி, கிருஷ்ணா, கோதாவரி, துங்கபத்ரா, சரயு ஆகிய புனித நதிகளுக்கும் சன்னதிகள் உள்ளன. இக்கோயில் குறித்து தேவாரத்தில் பாடல் இடம்பெற்றிருப்பதுடன், இராமாயண காலத்திலேயே இராமரும், லக்ஷ்மணனும் இங்கு சிவனை வழிபட்டதாக நம்பப்படுகிறது. 23 கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், கரூர் சோழர்கள் ஆட்சிசெய்த காலத்தில் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் கட்டப்பட்டது. ஐந்து அடி உயரம் உடைய பசுபதீஸ்வரர் லிங்கத்திற்கு இக்கோவில் பெயர்பெற்றது. மேலும் இங்கே ஐந்து சிலைகளின் கூடுகை இருக்கிறது. ஒரு பசுவின் காம்பில் இருந்து வடியும் பாலில் குளிப்பதைப் போன்று லிங்கம் கர்ப்பக்கிரகத்தில் காட்சியளிக்கிறது. 24 கைலாசநாதர் கோயில், காஞ்சிபுரம் காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் 8-ஆம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் இராஜசிம்மனால் கட்டத் தொடங்கப்பட்டதெனினும், அவனுடைய மகனான 3-ஆம் மகேந்திரவர்மனே கட்டிடப் பணிகளை முடித்ததாக வரலாறு கூறுகிறது. அதன் பின்னர் 14-ஆம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசின் காலத்தில் சில பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. 25 பாடலீஸ்வரர் கோவில், திருப்பாதிரிப்புலியூர் கடலூர் நகரின் ஒரு பகுதியாக உள்ள திருப்பாதிரிப்புலியூரில் பாடலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக தோன்றியதாக நம்பப்படுகிறது. இந்தக் கோயில் சோழர்களால் கட்டப்பட்டதோடு, பல்லவ மன்னர்கள் மற்றும் பாண்டியர்கள் காலத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. சிவபெருமானுக்காக கட்டப்பட்டிருக்கும் பாடலீஸ்வரர் கோவில் மிகவும் புனிதமான சைவத் தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. 26 காசிவிஸ்வநாதர் கோவில், தென்காசி காசிவிஸ்வ நாதர் கோவில் குற்றாலத்திலிருந்து 8 கி. மீ தொலைவில் தென் காசியில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் கி.பி 1455-ஆம் ஆண்டு பராக்கிரம பாண்டியனால் கட்டப்பட்டது. புராணங்களின் படி இந்த மனனன் காசிக்கு செல்ல விரும்பியதாகவும், ஆனால் அந்நகரம் முஸ்லீம்களின் கட்டுப்பாட்டின் இருந்ததால் காசியில் உள்ள அதே அசல் கோவிலின் மாதிரியாக இந்தக் கோயிலை உருவாக்கியதாக சொல்லப்படுகிறது. 27 திருவாப்பனூர் ஆப்புடையார் கோயில், மதுரை மதுரை நகரின் ஒரு பகுதியான செல்லூர் என்ற இடத்தில் திருவாப்பனூர் ஆப்புடையார் கோயில் அமைந்துள்ளது. சோழாந்தகன் என்ற பாண்டிய மன்னன் வேட்டையாடச் சென்றபோது திருவாப்புடையாரை (சுயம்புலிங்கத்தைக்) கண்டு முதன்முதலில் தரிசனம் செய்துள்ளான். அப்பாண்டியனது மகன் சுகுணன், திருவாப்புடையாருக்குக் கோயில் எடுப்பித்தான் என்று சொல்லப்படுகிறது. 28 மாசில்லாமணீஸ்வரர் கோயில், திருமுல்லைவாயில் சென்னையின் அம்பத்தூர் பகுதியிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள திருமுல்லைவாயிலில் மாசில்லாமணீஸ்வரர் கோயில் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் உள்ள நந்தி சிலை வழக்கத்துக்கு மாறாக சிவபெருமானை நேராக நோக்காமல், கிழக்கு நோக்கி அமைந்திருக்கிறது. நிலப்பகுதிகளில் மட்டுமல்லாது கடற்கரைகள் பக்கத்திலும் பல சிறப்புக்கு வாய்ந்த கோவில்கள் உள்ளது அப்படி கடற்கரை அருகில் உள்ள 10 தமிழக கோவில்களை பற்றி தெரிந்து கொள்வோம் 29. அஷ்டலட்சுமி கோவில், சென்னை இந்த கோவிலானது சென்னை பெசன்ட் நகரில் எலியட்ஸ் கடற்கரையின் இறுதியில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மொத்தம் நான்கு தளங்கள் உள்ளன. முதல் தளத்தில் ஆதிலட்சுமி, தான்யலட்சுமி, வீரலட்சுமி ஆகிய தெய்வங்கள் அருள் புரிகின்றனர். இரண்டாவது தளத்தில் திருமால் திருமகளுடன் திருமணக் கோலத்தில் காட்சியளிக்கின்றனர். இவர்களை வழிபட்ட பின்பே ஏனைய தெய்வங்களை மக்கள் வழிபாடு செய்கின்றனர். மூன்றாவது தளத்தில் சந்தானலட்சுமி, விஜயலட்சுமி, வித்தியாலட்சுமி, கஜலட்சுமி ஆகிய தெய்வங்கள் அருள்புரிகின்றனர். நான்காவது தளத்தில் தனலட்சுமி அருள்பாலிக்கிறார். இக்கோவில் 1976-ல் சலவைக் கற்களால் கட்டப்பட்டது. இக்கோவிலின் கோபுரத்தின் நிழலானது தரையில் விழுவதில்லை. 30. மருந்தீஸ்வரர் கோவில், திருவான்மியூர் இந்த கோவிலானது சென்னையில் திருவான்மியூரில் அமைந்துள்ளது. இங்கு இறைவன் மருந்தீஸ்வரர், ஒளசதநாதர், பால்வண்ணநாதர் என்ற திருப்பெயரிலும், அம்மை திரிபுரசுந்தரி, சொக்கநாயகி என்ற திருப்பெயர்களிலும் அருள்புரிகின்றனர். இத்தலம் 2000 வருடங்கள் பழமையானது ஆகும். 31. காயாரோகனேஸ்வரர் கோவில், நாகபட்டினம் பழங்காலத்தில் இந்த கோவில் ‘நாகை காரோணம்’ என்றழைக்கப்பட்டது. இங்கு இறைவன் காயாரோகணேஸ்வரர் என்ற பெயரிலும், அம்மை நீலதாயாட்சி என்ற பெயரிலும் அருள்புரிகின்றனர். புண்டரீக மகரிஷிக்கு இத்தல இறைவன் கட்டித் தழுவி முக்தி கொடுத்தால் காயாரோகணேஸ்வரர் என்றழைக்கப்படுகிறார். 32. அமிர்தகடேஸ்வரர் கோவில் கோடியக்கரை இந்த கோவிலானது நாகை மாவட்டத்தில் வேதாரண்யத்தின் அருகில் அமைந்துள்ளது. இங்கு இறைவன் அமிர்தக்கடேஸ்வரர், திருக்கோடி குழகர் என்ற திருப்பெயர்களிலும், அம்மை அஞ்சனாட்சி, மைதடங்கண்ணி என்ற திருப்பெயர்களிலும் அருள்புரிகின்றனர். 33. திருமறைக்காடர் கோவில், வேதாரண்யம் வேத நூல்கள் வழிபட்ட தலமாதலால் திருமறைக்காடு என்று அழைக்கப்பட்டு வேதாரண்யம் என ஆனது. இங்கு இறைவன் திருமறைக்காடர் என்றும் அம்மை யாழைப்பழித்த மென்மொழியாள் என்றும் அழைக்கப்படுகின்றனர். 34. இராமநாதர் கோவில், இராமேஸ்வரம் இராமநாதர் ஆலயம் தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டத்தில் இராமேஸ்வரம் என்னும் ஊரில் வங்காள விரிகுடா கடற்கரையோரம் அமைந்துள்ளது. 35. சுப்பிரமணியசுவாமி கோவில், திருச்செந்தூர் இந்த கோவிலானது தூத்துக்குடி மாவட்டத்தில் வங்காள விரிகுடாக் கடலை ஒட்டி அமைந்துள்ளது. இவ்விடம் அறுபடைவீடுகளில் இரண்டாவது படைவீடாகும். 36. சுயம்புலிங்க சுவாமி, உவரி இந்த கோவிலானது திருநெல்வேலி மாவட்டத்தில் திருச்செந்தூர் கன்னியாகுமரி சாலையில் திருச்செந்தூரிலிருந்து 35கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. இங்கு இறைவன் சுயம்புவாகத் தோன்றியதால் சுயம்புலிங்கம் என்ற பெயரிலும், அம்மை பிரம்மசக்தியம்மன் என்ற பெயரிலும் அருள்புரிகின்றனர். 37. குமரிஅம்மன் கோவில், கன்னியாகுமரி இக்கோவில் முக்கடல்கள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமமான கன்னியாகுமரியில் அமைந்துள்ளது. இவ்விடம் தாட்சாயணியின் முதுகுப் பகுதி விழுந்த இடமாகக் கருதப்பட்டு சக்தி பீடங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இங்கு அன்னை துர்க்காதேவி, பகவதி, பாலசவுந்தரி, தியாகசவுந்தரி என்றெல்லாம் போற்றப்படுகிறாள். 38. மாமல்லபுரம் , காஞ்சிபுரம் மாமல்லபுரம் என்றாலே கடற்கரை கோவிலே அடையாளப்படுத்தப்படுகிறது. இவ்விடம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சென்னைக்கு அருகில் அமைந்துள்ளது. இக்கோவில் இரண்டாம் நரசிம்ம பல்லவ மன்னனால் கட்டப்பட்டது. இக்கோவிலின் விமானம் 60 அடி உயரம் உடையது. இக்கோவிலில் சிவபெருமான், உமையம்மை, குமரக்டவுள், விநாயகப் பெருமான் ஆகியோர் உள்ளனர். திருச்சிற்றம்பலம் சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏
3
31
101
3,583
Dr.அழியாநாச்சியார் retweeted
ஆன்மீகம் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம் டென்ஷன் ரிலீஸ் விதுரரை மகாபாரதப் போரிலிருந்து விலக்கிய கிருஷ்ணரின் தந்திரம்.... மகாபாரதத்தில் கிருஷ்ணர் ஒவ்வொரு செயலையும் ஆழ்ந்த சிந்தனையுடனும் தொலைநோக்குப் பார்வையுடனும் மேற்கொண்டார். குருக்ஷேத்திரப் போர் தொடங்குவதற்கு முன்பே, போரின் முடிவைத் தீர்மானிக்கக்கூடிய பல நிகழ்வுகளை அவர் தமது சாதுரியத்தால் கையாண்டார். அத்தகைய நிகழ்வுகளில் ஒன்றுதான், சிறந்த நீதிமானாகவும் வில்வித்தையில் வல்லவராகவும் விளங்கிய விதுரரைப் போரில் ஈடுபடாமல் தடுத்தது. ஒரு காலத்தில் மாண்டவ்யர் என்ற முனிவர் வாழ்ந்து வந்தார். அவர் சிறுவயதில் அறியாமையின் காரணமாக எறும்புகள் உள்ளிட்ட சிறிய உயிரினங்களைத் துன்புறுத்தி மகிழ்ந்ததாகக் கூறப்படுகிறது. காலப்போக்கில் உலகப் பற்றுகளைத் துறந்து, கடுமையான தவங்களையும் யோகங்களையும் மேற்கொண்டு சிறந்த முனிவராக உயர்ந்தார். ஒருநாள் அவர் தமது இருப்பிடத்தில் ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டிருந்தபோது, அந்நாட்டின் காவலர்கள் அவரைக் கைது செய்து அரசவைக்கு அழைத்துச் சென்றனர். அந்த நாட்டில் நடைபெற்ற ஒரு திருட்டுச் சம்பவத்துடன் மாண்டவ்ய முனிவருக்குத் தொடர்பு இருப்பதாகக் கருதிய மன்னன், முறையான விசாரணையின்றி அவருக்குக் கடுமையான தண்டனை வழங்க ஆணையிட்டான். அதன்படி, முனிவர் கழுவேற்றப்பட்டார். உடலில் கழு ஏற்றப்பட்ட நிலையிலும் தமது தவ வலிமையால் உயிர் துறக்காமல் இருந்த அவர், சிறிது நேரத்திற்குப் பிறகு விழிப்படைந்தார். தனக்கு இத்தகைய தண்டனை வழங்கப்பட்டதற்கான காரணத்தை அறிய விரும்பிய அவர், தமது தவச் சக்தியால் எமதர்மராஜனை அழைத்தார். அவரிடம், ''நான் செய்த குற்றம் என்ன? அதற்காக இத்தகைய கொடிய தண்டனையை அனுபவிக்க வேண்டிய காரணம் என்ன?'' என்று கேட்டார். அதற்கு எமதர்மராஜன், ''நீங்கள் சிறுவயதில் அறியாமையால் சிறிய உயிரினங்களைத் துன்புறுத்தியிருக்கிறீர்கள். அந்தச் செயல்களின் விளைவாகவே இப்போது இத்தகைய தண்டனையை அனுபவிக்கிறீர்கள்'' என்று பதிலளித்தார். இதைக் கேட்ட மாண்டவ்யர் கடும் கோபமடைந்தார். சிறுவயதில் அறியாமையால் செய்த செயலுக்கு இவ்வளவு கொடிய தண்டனை வழங்குவது முறையற்றது என்று கருதிய மாண்டவ்யர், எமதர்மராஜனை நோக்கி, ''தர்மத்தின் நியதியை அறிந்த நீயே இத்தகைய அநீதியைச் செய்திருக்கிறாய். எனவே, நீ நூறு ஆண்டுகள் பூமியில் மனிதனாகப் பிறந்து வாழ்வாயாக!'' என்று சாபமிட்டார். அந்தச் சாபத்தின் விளைவாக எமதர்மராஜன், வியாசருக்கும் ஓர் அரண்மனைப் பணிப்பெண்ணுக்கும் மகனாகப் பிறந்தார். அவரே பின்னாளில் விதுரர் என்ற பெயரில் புகழ்பெற்றார். எமதர்மராஜனின் அம்சமாகப் பிறந்த விதுரர், சிறுவயது முதலே அறம், நீதி, ஒழுக்கம், அரசியல் அறிவு ஆகியவற்றில் சிறந்து விளங்கினார். திருதராஷ்டிரருக்கும் பாண்டுவுக்கும் தம்பியாக வளர்ந்த அவர், அஸ்தினாபுரத்தின் அரசவையில் மிகுந்த மதிப்பைப் பெற்றார். அரச குடும்பத்தில் பிறந்திருந்தாலும், எப்போதும் தர்மத்தின் பக்கமே நின்றார். தவறுகளைத் தட்டிக்கேட்கத் தயங்காதவராகவும், பாண்டவர்களிடம் மிகுந்த அன்பு கொண்டவராகவும் விளங்கினார். அவரது அறிவுரைகளைப் பலமுறை திருதராஷ்டிரர் புறக்கணித்தாலும், விதுரர் தர்மத்தை விட்டுக்கொடுக்கவில்லை. குருக்ஷேத்திரப் போர் தவிர்க்க முடியாத நிலையை அடைந்தபோது, பாண்டவர்களின் சார்பாகச் சமாதானத் தூதுவராக கிருஷ்ணர் அஸ்தினாபுரத்திற்குப் புறப்பட்டார். அப்போது அவர் அரச மாளிகையில் தங்காமல், எளிமையான வாழ்க்கை வாழ்ந்த விதுரரின் இல்லத்திற்குச் சென்றார். கிருஷ்ணர் தமது இல்லத்திற்கு வருகை தந்ததைக் கண்டு விதுரர் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தார். அன்புடன் அவரை வரவேற்று உபசரித்தார். ஆனால், கிருஷ்ணரின் இந்த வருகைக்குப் பின்னால் ஒரு முக்கியமான நோக்கம் இருந்ததாக இக்கதை எடுத்துரைக்கிறது. விதுரரிடம் விஷ்ணுவின் வில்லான கோதண்டம் இருந்ததாகவும், அது அவரைச் சிறந்த வில்லாளியாக விளங்கச் செய்ததாகவும் இக்கதை கூறுகிறது. அதேவேளையில் அர்ஜுனனிடம் பிரம்மனால் வழங்கப்பட்ட காண்டீபம் இருந்தது. விதுரர் கௌரவர்களின் பக்கம் நின்று போரிட்டால், அவரை எதிர்கொள்வது பாண்டவர்களுக்குப் பெரும் சவாலாக இருக்கும் என்பதை கிருஷ்ணர் நன்கு அறிந்திருந்தார். எனவே, விதுரர் போரில் பங்கேற்காமல் இருப்பதற்கான சூழலை உருவாக்க வேண்டும் என்று அவர் எண்ணினார். தொடர்ச்சியை படியுங்கள் – at Thiruvattaru, India
2
4
23
1,544
Dr.அழியாநாச்சியார் retweeted
#HRCE kindly get out of all Hindu Temples in TN. This will be the biggest Samaththuvam move. Dear Devotees,the money u put in the Hudials in TN Temples is used to fight against Hindu temples only. Kindly have this in mind when unr visiting temples.
94
589
21
2,104
50,994
Dr.அழியாநாச்சியார் retweeted
ஒயிலாட்டம் மற்றும் காவடியாட்டக் கலைஞரும், அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றியவருமான, திரு. கனகராஜ் அவர்கள் மறைந்த செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. இன்று அவரது இல்லத்திற்குச் சென்று, அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டேன். ஆசிரியர் பணியைத் தாண்டி, தமிழர்களின் தொன்மையான நாட்டுப்புறக் கலைகளான ஒயிலாட்டம், காவடியாட்டம் ஆகியவற்றின் மீது அளவற்ற பற்றுக் கொண்டிருந்தவர் திரு. கனகராஜ் அவர்கள். 'சங்கமம்' என்ற கலை அமைப்பை நிறுவி, கருமத்தம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் சென்று, பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் இளைஞர்களுக்குக் கட்டணமின்றி கலைப் பயிற்சி அளித்து, அழிந்து வரும் நமது பாரம்பரியக் கலைகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர். இதுவரை 120-க்கும் மேற்பட்ட கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றி, ஆயிரக்கணக்கான இளம் தலைமுறையினரை நாட்டுப்புறக் கலைஞர்களாக உருவாக்கியதோடு, வெளிநாடுகளிலும் தமிழர்களின் கலைப் பாரம்பரியத்தைப் பறைசாற்றியவர். ஒரு சிறந்த ஆசிரியராக மட்டுமல்லாமல், நமது மண்ணின் கலைகளைக் காக்கத் தன்னை முழுமையாக அர்ப்பணித்த கலைப் பண்பாட்டுப் பாதுகாவலராகவும் வாழ்ந்த அவரது பணி போற்றுதலுக்குரியது. திரு. கனகராஜ் அவர்களது மறைவு நாட்டுப்புறக் கலை உலகிற்குப் பேரிழப்பாகும்.
27
303
2
1,477
30,270