Hi @ThuglakD @sgurumurthy ji 🙏
நேரா பேட்டி எடுக்க வக்கில்லைன்னா, நீங்களே கற்பனை பண்ணி கேள்வி கேட்டு நீங்களே பதில் எழுதிட்டுத் திரிய வேண்டியதுதான்! @ThuglakD
#Thuglak #Annamalai
JB retweeted
“என் உயிர் அத்திக்கடவு..!”
அத்திக்கடவு–அவிநாசி திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்தவும், விடுபட்டுள்ள குளம், குட்டைகளை இணைத்து அத்திக்கடவு–அவிநாசி திட்டம் – 2 திட்டப் பணிகளைத் தொடங்கவும், பாண்டியாறு–பவானியாறு இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்தவும் வலியுறுத்தி, குன்னத்தூரில் பெயர்ப்பலகை திறப்பு விழா, பேரணி மற்றும் விழிப்புணர்வுப் கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் 2,500-க்கும் மேற்பட்ட விவசாயிகள், பொதுமக்கள், போராட்டக் குழுவினர், பெண்கள் மற்றும் குழந்தைகள் எனப் பலரும் திரளாகக் கலந்துகொண்டனர்.
சுற்றுச்சூழலைப் பாதுகாத்த முன்னுதாரண நிகழ்வு!
பங்கேற்ற அனைவருக்கும் குடிநீர், நீர்மோர், கம்பங்கூழ் மற்றும் மதிய உணவு உள்ளிட்டவை பல்வேறு இடங்களில் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் எங்கும் பேப்பர் கப்புகளோ பிளாஸ்டிக் பொருட்களோ பயன்படுத்தப்படாமல், சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது.
💧 நீரைச் சேமிப்போம்!
🌱 சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம்!
🌾 விவசாயத்தைக் காப்போம்!
#Water
#environment
@annamalai_k
@praba711
JB retweeted
ஆன்மீகமும், தேசிய உணர்வும் சமூகப் பற்றும் ஒருங்கே கொண்ட தெய்வத் திருமகனார் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் குருபூஜை தினம் இன்று.
சுதந்திரப் போராட்ட வீரராகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்த மக்கள் தலைவராகவும் விளங்கியவர் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்.
தன்னலமற்ற பொதுவாழ்வு, அஞ்சாத நெஞ்சம், உறுதியான கொள்கைப்பற்று, தெய்வ பக்தி ஆகியவற்றின் அடையாளமாகத் திகழ்ந்த தேவர் பெருமகனாரின் வாழ்க்கை வருங்காலத் தலைமுறையினருக்கு என்றும் வழிகாட்டியாக இருக்கும்.
JB retweeted
சாமனிய மக்களுக்கும் அரசியல் பற்றிய புரிதலை உண்டாக்கும் நோக்கில் நமது We The Leaders அமைப்பின் Dr.A.P.J. Abdul Kalam Centre for Ethics and Politics மையமானது பயிற்சிகளை வழங்கி வருகிறது.
நமது மையம் வழங்கும் பயிற்சியானது மக்கள் பிரச்சினைகளைப் புரிந்துகொள்வது, களத்தில் செயல்படுவது, குழுக்களை உருவாக்கி வழிநடத்துவது, தேர்தலில் போட்டியிடத் தயாராவது எனப் பொதுவாழ்வில் ஒவ்வொருவரும் தங்களுக்கான அடுத்தகட்டத்தை நோக்கி முன்னேற உதவுவதோடு தலைமைத்துவத்தைச் சமூகத் தாக்கமாகவும் மாற்றுவதற்கான வாய்ப்புகளை வழங்குகிறது.
தமிழ் மற்றும் ஆங்கிலத்தில், அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படும் இந்தப் பயிற்சிகள் மூலம், பொறுப்புணர்வுடன் மக்களுக்காகச் செயல்படத் தயாரான புதிய தலைவர்களை உருவாக்குவதே நமது நோக்கம்.
நமக்குள் இருக்கும் தலைமைத்துவத் திறனை வளர்த்துக்கொகொண்டு, நமது சமூகத்திற்கு தேவையான மாற்றங்களை உருவாக்குவோம்.
JB retweeted
நமது We The Leaders அமைப்பின் சார்பில், முதன்மைச் சேவகர் திரு. அண்ணாமலை அவர்களின் அறிவுறுத்தலின்படி, சிவகங்கை மாவட்டத்தின் முக்கிய நீராதாரமான தேனாற்றைத் தூய்மைப்படுத்தும் பணி கடந்த 10 நாட்களாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதுவரை 8 கி.மீ. தொலைவுக்கு ஆறு தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 40 கி.மீ. தொலைவும் அடுத்த 60 நாட்களுக்குள் தூய்மைப்படுத்தப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட உள்ளது. இப்பணியின் மூலம் 90,000 ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலங்கள் பயன்பெறும்.
மேலும், ஆற்றைத் தூய்மைப்படுத்தி, நீரோட்டத்திற்குத் தடையாக உள்ள சீமைக்கருவேல மரங்கள் மற்றும் கழிவுகளை அகற்றுவதன் மூலம், மழைக்காலங்களில் வெள்ளநீர் சீராகச் செல்வதற்கு வழிவகுப்பதுடன், வெள்ளப் பாதிப்புகள் குறைகிறது.
இயற்கையைப் பாதுகாக்கும் நோக்கில், பல்வேறு மாவட்டங்களிலும் நமது தலைவர்கள் நீர்நிலைகளைத் தூய்மைப்படுத்துதல், மரக்கன்றுகளை நடுதல் உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த சுற்றுச்சூழல் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர். இவர்களின் இத்தகைய முயற்சிகள், எதிர்காலத் தலைமுறையினருக்குத் தூய்மையான சுற்றுச்சூழலையும் வளமான நீர்வளத்தையும் உறுதிசெய்யும்.
JB retweeted
As directed by our beloved Thalaivar K Annamalai, paid homage at the Memorial place of the Great kings,MARUDHUPANDIAR with the leaders of WE THE LEADER.
@WTLFoundation
JB retweeted
பள்ளிக் கல்வித்துறை தொடர்பான முறைகேடு குற்றச்சாட்டின் அடிப்படையில், முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டுள்ள நடவடிக்கையை வரவேற்கிறோம். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
கடந்த 2023 ஆம் ஆண்டு, நாங்கள் DMK Files வெளியிட்டபோது, தமிழ்நாட்டில் நோபல் ஸ்டீல் நிறுவனத்தின் ₹1,000 கோடி முதலீடு தொடர்பாக நாம் எழுப்பிய கேள்விகளுக்கு அன்றைய திமுக அரசு உரிய விளக்கம் அளிக்கவில்லை. அந்த முதலீடும் தமிழகத்துக்கு வரவில்லை, முறைகேடான முதலீடு என்ற எங்கள் குற்றச்சாட்டுக்கும் இன்றுவரை பதில் இல்லை.
திரு. அன்பில் மகேஷ் தொடர்பான உதயநிதி ஸ்டாலின் பெயரிலான அறக்கட்டளை, நோபல் குழுமத்தின் மற்றொரு நிறுவனமான நோபல் பிரிக்ஸ் நிறுவனம் இயங்கி வந்த அதே முகவரியில் இயங்கி வந்ததாகக் கூறப்பட்ட தகவலுக்கும் இன்று வரை பதில் இல்லை. நோபல் பிரிக்ஸ் நிறுவனத்திற்கும் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கும் இடையே என்ன தொடர்பு? அந்த நிறுவனத்தின் ₹1,000 கோடி முதலீடு தொடர்பான கேள்விகளுக்கு என்ன பதில்?
இந்த விவகாரத்திலும் தவெக அரசு வெளிப்படையான விசாரணை நடத்தி, உண்மைகளை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
JB retweeted
அறிவிப்பு
வரும் அக்டோபர் 27ஆம் தேதி சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் நடைபெற உள்ள மாவீரர்கள் மருது பாண்டியர்களின் 225 ஆவது குருபூஜை விழாவில், நமது We The Leaders அமைப்பின் சார்பில் கலந்து கொள்ள,
1. திரு. தரணி முருகேசன்,
2. திரு. நாச்சியப்பன்,
3. திரு. பாண்டுரங்கன்,
4. திரு. மகா சுசீந்திரன்,
5. திரு. சோழன் பழனிசாமி,
6. டாக்டர் ஆனந்த்,
7. திரு ராமேஸ்வரன்
ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாவீரர்கள் மருது பாண்டியர்கள் புகழ் ஓங்குக!
JB retweeted
அறிவிப்பு
தெய்வத்திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் குருபூஜையை முன்னிட்டு, வரும் அக்டோபர் 30ஆம் தேதி, மதுரை கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருவுருவச் சிலைக்கு, நமது We The Leaders அமைப்பின் சார்பில், நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவினராக
திரு. கண்ணன்,
திரு. ஆனந்த ஜெயம்,
திரு. M. பாண்டியராஜன்,
திரு. காசி ராஜபாண்டி,
திரு. TPA சிவகுமார்,
திரு. A.R. விஸ்வநாதன்,
திரு. M. சிவகுமார்,
திரு. N. பால்பாண்டி தளபதி,
திரு. தினகரன் மற்றும்
திரு. பாண்டித்துரை
ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேசியத்தையும், தெய்வீகத்தையும் தமது இரு கண்களாகக் கொண்டு வாழ்ந்த தேவர் திருமகனாரின் தியாகத்தையும், கொள்கைகளையும் போற்றி வணங்குவோம்.
JB retweeted
We The Leaders & Curis Hospital இணைந்து நடத்தும் மாபெரும் இலவச மருத்துவ முகாம்!
இடம்: யாவரும் கேளிர் முதியோர் இல்லம், அக்கரை செங்கப்பள்ளி, அன்னூர் வட்டம், கோவை மாவட்டம்.
நாள்: 31.10.2026 — சனிக்கிழமை
நேரம்: காலை 9.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை.
பொதுமக்கள் அனைவரும் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, மருத்துவ முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
மேலும் விவரங்களுக்கு:
S. பானு ரமேஷ்
77089 30457 | 98422 04474
#WTLAnnur #Weloveuannur #Medicalcamp #Annur
JB retweeted
For the alliance with ADMK, BJP put Annamalai’s sweat and blood in dustbin and they lost the 2026 election. Even after he left the party, they throw mudsling on him through frauds and called him anti national. Ask your conscience-He joined BJP although he could have joined 2/3
JB retweeted
தேச விடுதலைக்காகத் தங்கள் உயிரையும் துச்சமெனக் கருதி, வீரத்துடன் போராடிய மாவீரர்கள் மருது சகோதரர்கள் நினைவு தினம் இன்று.
ஆங்கிலேயர்களுக்கு எதிராக அவர்கள் வெளியிட்ட ஜம்புத்தீவு பிரகடனம், அவர்களின் வீரத்திற்கும் விடுதலை வேட்கைக்கும் சான்றாகத் திகழ்கிறது. சிவகங்கைச் சீமையை மீட்டு, வீரமங்கை ராணி வேலு நாச்சியாரை மீண்டும் அரியணையில் அமர்த்தியதில் அவர்களின் பங்கு மகத்தானது.
காளையார் கோவில், மானாமதுரை, திருமோகூர், குன்றக்குடி உள்ளிட்ட திருத்தலங்களின் ஆன்மீகப் பணிகளிலும் சிறந்து விளங்கிய மாவீரர்கள் மருது சகோதரர்களின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறோம்.
JB retweeted
கரூர் தாதம்பாளையம் ஏரியை மீட்டெடுக்காமல் ஓய மாட்டோம் !!
இன்று நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் தலைவர்களுடன் கலந்து கொண்ட அருமையான தருணம் ..
"மாற்றம் நம்மில் இருந்து தொடங்கட்டும்"
மாறுவோம் மாற்றுவோம் !!
@WTLFoundation @annamalai_k @experienceluv
#WeTheLeaders #Annamalai #karur
JB retweeted
அன்புள்ள மாமா அண்ணாமலை அவர்களுக்கு..! பெண்களுக்கான வளர்ச்சி மாநாட்டில் கவனத்தை ஈர்த்த சிறுமியின் பதாகை..
#Krishnagiri | #WeTheLeaders | #Annamalai | #PolimerNews
JB retweeted
I have views of my own on Annamalai's views! However, he is raising a few very valid issues, as below:
"2. டெல்லி காவல்துறையின் உதவி ஆணையர் (ACP) ஒருவருக்குச் சிறப்பு நிர்வாக நீதிபதியாக அதிகாரம் வழங்கி, ஒருவரைத் தடுப்புக் காவலில் தொடர்ந்து வைத்திருக்க வேண்டுமா என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை வழங்கும் இந்த நடைமுறை இன்னும் எத்தனை காலம் தொடரும்? டெல்லி காவல்துறையே புகாரளிப்பவராக இருக்கும் CJP வழக்கில், அதே டெல்லி காவல்துறையைச் சேர்ந்த ACP ஒருவர், குற்றம் சாட்டப்பட்டவர்களைத் தடுப்புக் காவலில் வைத்திருக்க வேண்டுமா என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் பெற்றவராக இருக்கிறார். அப்படியானால், தீர்ப்பு எந்தத் திசையில் செல்லும் என்பதை இப்போது நீங்கள் புரிந்துகொள்ளலாம்!"
The idea of a Police Officer being appointed as a Special Executive Magistrate (SEM) is flawed. There was this provision in CrPC and now the BNSS, so it is not illegal as per the current laws, but it is clearly immoral,. This provision should be revised and should be removed.
There is a good article in LiveLaw covering this: livelaw.in/articles/when-pol…
I don't like CJP or its abusive protests. However, CJP should be handled through a better law & order and legal process. We should revisit the 'peace bond-surety' as well. Questions raised by Annamalai are sensible. It should not be taken as against the state, or against Modi, or against BJP. Tomorrow, the same process can be used by local state government against some random protestors, against you and me. Do everything above board and decisively. But in a morally acceptable manner.
JB retweeted
LIVE NOW: Women’s Development Conference 🌟
We are live! Join us right now as leader Shri. Annamalai address the innovators, and changemakers come together to discuss empowerment, leadership, and the future of women's development.
Don't miss out on these powerful conversations and insights. Click the link below to tune in and be part of the change!
👇 Watch the Live Stream Here: 👇
பெண்கள் வளர்ச்சி மாநாடு கிருஷ்ணகிரி
Women’s Development Conference, Krishnagiri
youtube.com/live/SH2z3ewJjpw… via @YouTube
@annamalai_k @WTLFoundation
#Annamalai #LeadTheChange
#TamilNaduPolitics #YouthPoliticsTN
JB retweeted
இன்றைய தினம், கிருஷ்ணகிரியில் நமது @WTLFoundation சார்பில் நடைபெறும் பெண்கள் வளர்ச்சி மாநாட்டில் பங்கேற்பதிலும், மாற்றத்தின் சக்திகளான நமது சகோதரிகளை, சகோதரர்களை சந்திப்பதற்காகவும் ஆவலோடு காத்திருக்கிறேன்.
பெண்களின் முன்னேற்றம் என்பது சமூகத்தின் முன்னேற்றம். நமது சகோதரிகளை ஒன்றிணைத்து, புதிய மாற்றத்திற்கான பாதையை உருவாக்குவோம்.
JB retweeted
#பெண்களின் எழுச்சிக்காக…
ஒரு #வரலாற்றுச் சிறப்புமிக்க
பெண்கள் வளர்ச்சி #மாநாடு!
நாள் அக்டோபர் 22 ஆம் தேதி வியாழக்கிழமை
இடம் வெங்கடேஸ்வரா மைதானம் - முருகன் இட்லி அருகில் - கிருஷ்ணகிரி - ஓசூர் நெடுஞ்சாலை 🤝
K.Annamalai Karuppaiah Nagarajan
We The Leaders Foundation
#பெண்கள்_வளர்ச்சி_மாநாடு
#We_The_Leaders
JB retweeted
2011-ஆம் ஆண்டு, அப்போதைய குஜராத் முதலமைச்சர் திரு. @narendramodi அவர்கள், தனது கைகள் கட்டப்படாமல் இருந்திருந்தால், டெல்லிக்குச் சென்று மத்திய அரசுக்கு எதிராக கிளர்ந்தெழுந்திருப்பேன் எனக்கூறினார். டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற ஊழலுக்கு எதிரான அமைதியான போராட்டத்தை காவல்துறை ஒடுக்கியதற்குப் பதிலளிக்கும் வகையில் அவர் இந்தக் கருத்தினை தெரிவித்திருந்தார்.
என்னைப் பொறுத்தவரையில், அப்போது மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் கூறியது முற்றிலும் சரியான கருத்தே. அதில் எந்த தவறும் இல்லை.
ஆனால் இன்றோ, ஒருவர் காலவரையின்றிச் சிறையில் அடைக்கப்படலாம்; அவர் அளிக்கும் பிணை உத்தரவாதங்கள் கூட நிராகரிக்கப்படலாம். அதைவிட வியப்பான விஷயம் என்னவென்றால், தடுப்பு நடவடிக்கைகளுக்கான பிணை வழக்குகளைக் கையாள அதிகாரம் வழங்கப்பட்டுள்ள சிறப்பு நிர்வாக நீதிபதி (Special Executive Magistrate), அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒருவரை எப்படியெல்லாம் அலைக்கழிக்க முடியும் என்கிற சூழ்நிலை வந்துள்ளது.
ஜனநாயக நாட்டில், சட்டத்தின் உரிய நடைமுறைகள் மீறப்படுவதை நீங்கள் கேள்வி கேட்டால், உங்களுக்குப் பல்வேறு பெயர்கள் சூட்டப்படுகிற அவல நிலை உருவாகியுள்ளது. "அந்நிய கைகூலி" என்று முத்திரை குத்துவது உட்பட பல்வேறு தாக்குதல்களையும் நீங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தின்போது, போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு மத்திய அரசிடம் நான் கேட்ட சமயத்திலிருந்து, தொடர்ந்து பல்வேறு விதமான தாக்குதல்களைச் சந்தித்து வருகிறேன். இருப்பினும், தமிழ்நாட்டில் களத்தினில் உள்ள பிரச்சினைகளில் அதிக கவனம் செலுத்துவது முக்கியம் என்று கருதியதால், அந்தத் தாக்குதல்களை நான் பொருட்படுத்தவில்லை.
ஒருவகையில், இந்தத் தாக்குதல்களை நான் ரசிக்கவும் செய்தேன் என்பதே உண்மை. ஏனெனில், நான் பாஜகவின் ‘பி-டீம்’ என்றும், ‘துரந்தர்’ படத்தில் வருவதைப் போல தமிழ்நாட்டிற்கு அனுப்பப்பட்டவன் என்றும் கூறப்பட்ட முத்திரையை மிக விரைவாக அகற்ற இவை உதவும் என்றே நினைத்தேன். 😍
நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, டெல்லியில் CJP அமைப்பின் போராட்டக்காரர்களைக் காவல்துறை கைது செய்து அழைத்துச் சென்ற விதம் குறித்து நான் சில கேள்விகளை எழுப்பினேன். எதிர்பார்த்தபடியே, நேற்றிலிருந்து மீண்டும் தாக்குதல்கள் தொடங்கியுள்ளன.
பாஜகவில் உள்ள சிலருக்கு ஒன்றைத் தெளிவாகக் கூற விரும்புகிறேன். உங்களது வசதிக்கேற்ப மறதியை தேர்ந்தெடுக்கும் பழக்கமிருந்தால், இதை இனி மறக்காதீர்கள், நான் 2026 ஜூன் 5-ஆம் தேதி பாஜகவிலிருந்து விலகிவிட்டேன்.
நேற்று நான் கூறியதைப் போல, CJP அமைப்பின் போராட்ட உத்திகளுடன் எனக்கு உடன்பாடு இல்லை என்பதோடு, அவர்களுடைய பல அணுகுமுறைகள் தவறாக வழிநடத்தப்பட்டவை என்றும் நான் கருதுகிறேன்.
ஆனால், அவர்கள் முக்கியமானதாகக் கருதும் ஒரு பிரச்சினையில் எதிர்ப்புத் தெரிவிக்கவோ, வாதிடவோ, போராடவோ அவர்களுக்கு உரிமை இருக்கிறதா என்று என்னிடம் கேட்டால்?
நிச்சயமாக ஆம் என்பேன்!
எனவே, சிலருக்கு அது சங்கடத்தை ஏற்படுத்தினாலும், மக்கள் மீண்டும் இந்தக் கேள்விகளைக் கேட்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதற்கு மத்திய அரசும் திசைதிருப்பும் அரசியல் வாதங்களை முன்வைப்பதற்குப் பதிலாக, இந்தக் கேள்விகளுக்குப் நியாயமாக பதிலளிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
1. போராட்டம் நடத்த அனுமதி கோரி CJP அமைப்பு கடிதம் அளித்த பிறகு, மத்திய உள்துறை அமைச்சகத்தின் நடைமுறையில் இருந்த உத்தரவின்படி, ஜந்தர் மந்தர் எவ்வாறு போராட்டத் தளமாக இருப்பதிலிருந்து நீக்கப்பட்டது?
2. டெல்லி காவல்துறையின் உதவி ஆணையர் (ACP) ஒருவருக்குச் சிறப்பு நிர்வாக நீதிபதியாக அதிகாரம் வழங்கி, ஒருவரைத் தடுப்புக் காவலில் தொடர்ந்து வைத்திருக்க வேண்டுமா என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை வழங்கும் இந்த நடைமுறை இன்னும் எத்தனை காலம் தொடரும்?
டெல்லி காவல்துறையே புகாரளிப்பவராக இருக்கும் CJP வழக்கில், அதே டெல்லி காவல்துறையைச் சேர்ந்த ACP ஒருவர், குற்றம் சாட்டப்பட்டவர்களைத் தடுப்புக் காவலில் வைத்திருக்க வேண்டுமா என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் பெற்றவராக இருக்கிறார்.
அப்படியானால், தீர்ப்பு எந்தத் திசையில் செல்லும் என்பதை இப்போது நீங்கள் புரிந்துகொள்ளலாம்!
3. அக்டோபர் 13-ஆம் தேதி ஜந்தர் மந்தரில் இருந்து கைது செய்யப்பட்டவர்களின் பிணை விசாரணையின்போது, அக்டோபர் 19-ஆம் தேதி, டெல்லி காவல்துறையின் ACP எனப்படும் சிறப்பு நிர்வாக நீதிபதி ஏன் வேண்டுமென்றே தாமதமாக வந்து, தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி அந்த விசாரணையிலிருந்து விலகிக்கொண்டார்?
இது என்ன மாதிரியான விளையாட்டு? (1/2)





























