Tamil nationalist•இலக்கு ஒன்றே இனத்தின் விடுதலை , #genZ_Tigers .. "resilience cannot be perfect"
Eelam 24
Joined October 2020
- Tweets51.4K
- Following2.4K
- Followers1.1K
- Likes144K
Pinned Tweet
நாங்கள் சுதந்திரமாக வாழத்தான் போராடினோம்.
யாரையும் அடிமையாக்க அல்ல!
- அண்ணன் சு.ப தமிழ்ச்செல்வன்
#TamilGenocideRemembranceMonth
செய்சத் (ஆ) retweeted
“சீமானின் வெற்றி தமிழ்நாட்டின் வெற்றி“
#சட்டமன்றத்தில்_நாம்தமிழர்
செய்சத் (ஆ) retweeted
My privileges as perpetrator of discrimination is affected by a budget airline!!
Srilankans complaining about discrimination whilst committing genocide against Tamils and bigotry against Muslims!!
Has anyone experienced discriminatory gate personnel @Ryanair in Dublin ? I with my family just did and it was shocking. The tone of address and the mishandling of procedure and threatening behavior. Unacceptable for any passenger. First bad experience in Dublin
செய்சத் (ஆ) retweeted
வெற்றி போதைப்பொருள் கடத்தல் பிரிவு
வெற்றி பாலியல் வன்கொடுமை பிரிவுகளை தொடர்ந்து வெற்றி குழந்தை கடத்தல் பிரிவும் இருந்திருக்கு போல
ராணிப்பேட்டையில் காணாமல் போன குழந்தையை கடந்தியது தவெக நிர்வாகி !
அரசியல் கட்சியா ? அக்யூஸ்ட் கட்சியா ?
விடுதலைப் புலிகள் மீதான தடையை கனடா முதலில் நீக்கி, ஏனைய நாடுகளும் தடைகளை நீக்குவதற்கு வழிகாட்ட வேண்டும்..!
கனேடிய எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களிடம் சிவஞானம் சிறீதரன் MP அவர்கள் கோரிக்கை
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீது கனடா விதித்துள்ள தடையை நீக்குவதற்கான நடவடிக்கைகளை அந்நாடு முதலில் முன்னெடுத்து, ஏனைய நாடுகளும் தமது தடைகளை நீக்குவதற்கு முன்னுதாரணமாகவும் வழிகாட்டியாகவும் செயற்பட வேண்டுமென இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சிவஞானம் சிறீதரன் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.
கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் நேற்று (27.10.2026) அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகப் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இக்கோரிக்கையை முன்வைத்தார்.
இச்சந்திப்பில் கல்கரி ஹெரிடேஜ் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், கன்சர்வேட்டிவ் கட்சியின் இலங்கைத் தமிழர் விவகாரங்களுக்குப் பொறுப்பானவரும், சர்வதேச மனித உரிமைகள் தொடர்பான நாடாளுமன்ற உபகுழுவின் உபதலைவருமான சுவலோய் மஜும்தார் (Shuvaloy Majumdar MP), ஒன்ராறியோ மாகாணத்தின் அரோரா–ஓக் ரிட்ஜஸ்–ரிச்மண்ட் ஹில் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கொஸ்டாஸ் மெனெகாகிஸ் (Costas Menegakis MP) மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலக வெளித்தொடர்புப் பிரிவைச் சேர்ந்த டரினா ஒஸ்ட்ரோவ்ஸ்கா (Daryna Ostrovska) ஆகியோர் கலந்துகொண்டனர்.
இலங்கையில் ஆயுதப் போர் முடிவடைந்து 17 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையைத் தொடர்ந்து பேணுவதற்கான அவசியத்தை கனடா மறுபரிசீலனை செய்ய வேண்டுமென சிறீதரன் MP அவர்கள் வலியுறுத்தினார்.
குறிப்பாக, கனடா இவ்விடயத்தில் முதற்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து தடையை நீக்குவதுடன், ஏனைய நாடுகளும் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான வழியை ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைக்கு சர்வதேச தடயவியல் உதவி கோரிக்கை
இச்சந்திப்பில் இரண்டாவது முக்கிய விடயமாக, யாழ்ப்பாணம் செம்மணியில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பான விசாரணைகளுக்கு சர்வதேச தரத்திலான தடயவியல் தொழில்நுட்ப உதவிகளையும் நவீன ஆய்வு உபகரணங்களையும் பெற்றுக்கொடுப்பது குறித்து கலந்துரையாடப்பட்டது.
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகள் நம்பகத்தன்மையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் முன்னெடுக்கப்படுவதற்கு சர்வதேச நிபுணர்களின் பங்களிப்பும், மனித எச்சங்களை விஞ்ஞான ரீதியாகப் பரிசோதிப்பதற்குத் தேவையான நவீன தடயவியல் கருவிகளும் அவசியமானவை எனச் சுட்டிக்காட்டப்பட்டது.
இதற்காக கனடா உரிய தொழில்நுட்ப உதவிகளையும் சர்வதேச தடயவியல் நிபுணத்துவத்தையும் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்குவதற்கான நடவடிக்கைகள் மற்றும் செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்கான சர்வதேச தடயவியல் உதவிகள் ஆகிய இரண்டு முக்கிய கோரிக்கைகளை மையமாகக் கொண்டு இச்சந்திப்பு நடைபெற்றது.
விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவது தொடர்பாக கட்சித் தலைமையுடன் ஆலோசித்து சாதகமான முடிவை எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் உறுதியளித்தனர்.
இச்சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுடன் கனடாவைச் சேர்ந்த தமிழ் தேசிய செயற்பாட்டாளர் திரு. அமலிதனும் அவரது குழுவினரும் கலந்துகொண்டனர்.
@ImShritharan
#ஈழத்தின்குரல்
செய்சத் (ஆ) retweeted
வயதில் எவ்வளவு முதிர்ந்தவராக இருந்தாலும், எடுத்த எடுப்பிலேயே 'அவன்', 'இவன்' எனப் பேசி எளிய மக்கள் மீது அதிகாரத்திமிரைக் காட்டுகிற காவல்துறை அதிகாரிகள், சேகர் பாபுவிடம் பம்முவது ஏன்?
'யோவ்' என ஒரு சாதாரண மகன் இதேபோல் காவல்துறையை நோக்கி ஒருமையில் பேசினால் சும்மா விட்டுவிடுவார்களா? அடித்தட்டு மக்களென்றால், சட்டையைப் பிடித்து தரதரவென இழுத்துக் கைதுசெய்யும் வீரம் (!) எல்லாம் எங்கே போனது?
எளிய மக்களுக்கு ஒரு நீதி! சேகர் பாபுவுக்கு ஒரு நீதியா?
போலீஸாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சேகர்பாபு..
#Chennai | #Hospital | #DMK | #AnbilMaheshPoyyamozhi | #SekarBabu | #PolimerNews
இந்தியாவில் நீண்டகாலப் போராட்டத்தின் பின்னர் இலங்கை திரும்பிய கிருஷ்ணகுமாருக்கு மீண்டும் தடுப்பாணையா? உடனடியாக விடுதலை செய்யுங்கள்!
இந்தியாவில் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவித்த பின்னரும், திருச்சி சிறப்பு முகாமில் பல ஆண்டுகளாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த கிருஷ்ணகுமார் கந்தசாமி, நீண்டகால சட்டப் போராட்டத்தின் பின்னர் 2026 ஒக்டோபர் 26ஆம் திகதி இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்.
ஆனால், நேற்று மாலை சுமார் 5.45 மணியளவில் கொழும்பு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் (TID) அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இன்று என்னுடன் தொலைபேசியில் உரையாடிய பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு அதிகாரி ஒருவர், கிருஷ்ணகுமாருக்கு எதிராகத் PTAயின் கீழ் தடுப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் (இன்னும் உறுதிப்படுத்தவில்லை) தெரிவித்தார்.
ஏற்கனவே தனது வாழ்க்கையின் பல ஆண்டுகளைச் சிறையிலும் தடுப்பு முகாமிலும் கழித்த ஒருவர், மீண்டும் தனது வாழ்க்கையை ஆரம்பிக்க முயற்சிக்கும் நிலையில், இவ்வாறான தடுப்பாணை பிறப்பிக்கப்பட்டிருப்பது மிகவும் கவலையளிக்கின்றது.
அவரது மனைவியும் பிள்ளைகளும் பல ஆண்டுகளாக அவரைப் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், மீண்டும் அவரைத் தடுத்து வைப்பது அவரது வாழ்க்கையையும் குடும்பத்தின் எதிர்காலத்தையும் மேலும் பாதிக்கும் செயலாகும்.
எனவே, கிருஷ்ணகுமாருக்கு எதிரான தடுப்பாணையை மீள்பரிசீலனை செய்து, அவரை உடனடியாக விடுதலை செய்யுமாறு இலங்கை அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கின்றோம்.
நீண்டகாலமாகப் பாதிக்கப்பட்ட ஒரு மனிதருக்கு மீண்டும் ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ்வதற்கான வாய்ப்பை வழங்குங்கள்.
மனிதாபிமானத்துடனும் நீதியுடனும் இந்த விடயத்தை அணுகுங்கள்!
#ஈழத்தின்குரல்
NEW REPORT: The Battle of Ananthapuram.
ITJP’s new report, available in English and Tamil, documents survivor accounts, examines the last major battle of the war and points to an alleged massacre of more than 300 severely wounded Tamil fighters by the Sri Lankan Army in April 2009. Around 800 LTTE cadres, many already seriously wounded, were trapped and cut off from ammunition, medical supplies, food and water. Approximately 150 escaped. Hundreds of wounded fighters left behind have never been seen again.
Read full report: itjpsl.com/reports/battle-of…
இரவோடு இரவாக பாரியகற்கள் போட்டு
மூடப்படும் செம்மணிசந்தி மனித புதைகுழி
செம்மணி மனிதப்புதைகுழிகளின் பிரதான சாட்சியாகிய லாண்ஸ் கோப்பரல் சோமாரத்தன ராஜபக்சாவை மீண்டும் விசாரணை செய்ய யாழ்ப்பாண நீதிமன்றம் அனுமதியளித்த நிலையில் செம்மணி சந்தியில் பிரதான இராணுவ முகாம் இருந்த இடம் இரவோடு இரவாக பாரிய கற்கள் போடப்பட்டு மூடப்படுகிறது.
இதற்கு அனுமதி கொடுத்தது யார் ?
#செம்மணி
#ஈழத்தின்குரல்
நீங்கள் சந்திரிகா அரசாங்கத்துடன் அங்கமான ஒரு கட்சியாகவும் இருந்தீர்கள். மேலும் சந்திரிகா அரசாங்கம் செம்மணி மனிதப் புதைகுழிகள் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட தரப்பாகும். மனிதப் புதைகுழிகள் முதல் முறையாக 2000 ஆம் ஆண்டில் வெளிவந்தது. 1996 அல்லது 1997 ஆம் ஆண்டுகளில் இருந்தது.. பின்னர் 15 உடல்களை பற்றியே விசாரணைகளில் வெளிவந்தன. கிருசாந்தி குமாரசுவாமி வழக்கில் எனது தந்தையார் கிருசாந்தி குமாரசுவாமி குடும்பத்தின் நலன்களைக் கவனித்த வழக்கறிஞர் என்பதால் இதை நான் அறிவேன். கிருசாந்தி குமாரசுவாமி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரது ஆவண அறிக்கையில்- செம்மணி பகுதியில் 500 முதல் 600 க்கும் மேற்பட்ட உடல்கள் புதைக்கப்பட்டிருந்ததாகக் கூறியிருந்தாலும்- 15 மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டன. தற்போது கண்டுபிடிக்கப்பட்ட செம்மணி மனித புதைகுழியானது அந்த இடத்திலிருந்து சில மீட்டர்கள் தொலைவில் உள்ளன.
எனவே- குற்றம் சாட்டப்பட்ட ஒரு தரப்பாக இருந்த அரசு - அப்போது கவலைப்படவே இல்லை. குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் விவரங்களை வழங்கி தற்போதைய புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்ட இடங்களிலிருந்து சுமார் 100 யார் தொலைவில் உள்ளதாக- அந்த இடங்களின் விவரங்களைக் கொடுத்த போதிலும் கவலைப்படவே இல்லை. அரசே குற்றம் சாட்டப்பட்ட தரப்பாக இருக்கும்போது இப்படிதான் நடக்கும்.
பாராளுமன்றத்தில் குரல் எழுப்பிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள்
@GGPonnambalam
#செம்மணி
#ஈழத்தின்குரல்
India must give an option of obtaining citizenship for the Eelam Tamils still in camps
You can't deport them to die in the hands of SL terrorists! And you can't give us the choice to take that risk!
திருச்சி முகாமிலிருந்த ஈழத்தமிழர் தம்பி கிருஷ்ணகுமாரை இலங்கைக்கு நாடுகடத்தி இனவெறி அச்சுறுத்தலுக்கு தள்ளுவதா? தம்பி சுபாஸ்கரனையும் நாடுகடத்த முயல்வது கொடுங்கோன்மை!
2016ஆம் ஆண்டு முதல் கடந்த 10 ஆண்டுகளாக திருச்சி முகாமில் அடைக்கப்பட்டிருந்த ஈழத்தமிழர் கிருஷ்ணகுமாரை, இந்தி ஒன்றிய – தமிழ்நாடு அரசுகள் வலுக்கட்டாயமாக இலங்கைக்கு நாடுகடத்தியுள்ளது சிறிதும் மனச்சான்றற்ற கொடுங்கோன்மையாகும். மற்றொரு தம்பி சுபாஸ்கரனையும் வலுக்கட்டாயமாக இலங்கைக்கு நாடுகடத்த இந்திய ஒன்றிய அரசு முயல்வதும், அதற்கு தமிழ்நாடு அரசு துணைநிற்பதும் வன்மையான கண்டனத்துக்குரியது.
இலங்கையை ஆளும் சிங்கள இனவாத அரசின் கோர இன அழிப்புக்கு ஆளாகி, இனப்படுகொலையை எதிர்கொண்டு, அளவில்லா அழிவுகளுக்கும், இழப்புகளுக்கும் முகங்கொடுத்து வீட்டை இழந்து, நாட்டை இழந்து, உறவுகளைப் பறிகொடுத்து, உரிமைகளும், உடைமைகளும் அற்றுப்போய் நிர்கதியற்ற நிலையில் இப்பூமிப்பந்தில் உயிர்வாழ்வதற்கு ஒரு இடம் கிடைக்காதா? என ஏக்கத்தோடும், தவிப்போடும் பத்து கோடி தமிழ் மக்களின் தாயகமாக விளங்கும் தாய்த்தமிழகத்தை நாடிவந்த ஈழச்சொந்தங்களை, இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசும், தமிழ்நாட்டை ஆளும் தவெக அரசும் மனிதநேயம் சிறிதுமின்றி வலுக்கட்டாயமாக இலங்கைக்குத் திருப்பி அனுப்புவது வன்மையான கண்டனத்துக்குரியது.
அடிப்படை உரிமைகள், வாழ்விட வசதிகள் என ஏதும் வழங்காமல் அடிமைகள் போலத் திறந்தவெளி சிறைச்சாலைகளான முகாம்களில் அடைத்துவைத்த போதிலும் உயிர்ப்பாதுகாப்பு என்ற ஒன்றாவது இருந்தது. தற்போது அதனையும் பறிக்கும் விதமாக ஈவு இரக்கமற்று இனவாத நாடான இலங்கைக்கு அனுப்புவது கொலைக்களத்திற்கு அனுப்புவதற்கு ஒப்பாகும்.
தமிழினத்திற்கு யாதொரு தொடர்புமில்லாத பிரிட்டன், பிரான்சு, ஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளும், கனடா, ஆஸ்திரேலியா போன்ற மேலை நாடுகளும் தம்மை நாடிவந்த தமிழ் மக்களுக்கு அடைக்கலமளித்து, அரவணைத்து, ஆதரித்து அனைத்துவித அடிப்படை உரிமைகளையும் உறுதி செய்து வாழ்வளிக்கின்றன. அந்நாட்டின் விளையாட்டு வீரர்களாக, அரசியல் பிரதிநிதிகளாக வாய்ப்பு வழங்கப்பட்டு மிகுந்த மரியாதையுடன் வாழ்விக்கப்படுகின்றனர். அரபு நாடுகளும் திறமை வாய்ந்த விளையாட்டு வீரர்களுக்குச் சிறப்பு குடியுரிமை வழங்கி பெருமைபடுத்துகின்றன. ஆனால்,. பத்து கோடி தமிழர்கள் தனித்த பெரும் தேசிய இனமாக, நிலைத்து நீடித்து வாழும் இந்நாட்டில், எங்கள் தொப்புள்கொடி உறவுகளான ஈழச்சொந்தங்கள், கல்வி - விளையாட்டில் சிறந்து விளங்கினாலும் அவர்களுக்கான உரிய அங்கீகாரத்தைத் தராமல் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் என விரட்டுவது தமிழ்த்தேசிய இனத்தையே அவமதிப்பதாகும்.
இலங்கையிலிருந்து வந்த ஈழச்சொந்தங்கள் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களா? பாகிஸ்தான், பங்களாதேசிலிருந்து அகதிகளாக வந்த இந்துக்களைச் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களென இந்நாடு கருதுமா? சீனாவிலிருந்து அகதிகளாக வரும் திபெத்திய மக்களை அவ்வாறு கூறி துரத்துமா? திபெத்தியர்களுக்கு இந்நாடு அளிக்கும் வசதிகள், சலுகைகள் என்னென்ன? அவர்களிடம் காட்டும் அக்கறை, பரிவு, பற்றில் நூற்றில் ஒரு பங்குகூட, நாட்டுக்குப் பெருத்த பொருளாதாரப் பங்களிப்புகளைச் செய்யும் தமிழ்ப்பேரினத்தின் தொப்புள்கொடி உறவுகளான ஈழத்தமிழர்களிடம் காட்ட மறுப்பதேன்? அவர்கள் தமிழர்கள் என்பதற்காக இந்த நாடு எந்தக் கூடுதல் சலுகையும் அளிக்காவிட்டாலும், குறைந்தபட்சம் நம்மைப் போன்ற இரத்தமும் சதையும் கொண்ட சக மனிதர்கள் என்ற அடிப்படையிலாவது அவர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கி இருக்கலாமே?
இனவெறி நாடான இலங்கைக்குத் துணைநின்று ஈழத்தாயகத்தை முற்றாகச் சிதைத்தழித்து, தமிழர்களை நாடற்றவர்களாக்கி, அவர்கள் ஏதிலியாக காரணமான இந்திய அரசு, இன்றைக்கு தஞ்சம் கேட்டு நிற்கையில், அவர்கள் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் எனக்கூறி துரத்துவது எவ்வகையில் நியாயமாகும்? குறைந்தபட்சம் அவர்கள் செல்ல விரும்பும் நாட்டிற்காவது செல்ல அனுமதிக்கலாமே? அதைக்கூட மறுப்பது எவ்வகையில் நியாயம்? இந்திய ஒன்றிய அரசின் செயலை தமிழ்நாட்டை ஆளும் தவெக அரசு தடுக்கத்தவறி வேடிக்கைப்பார்ப்பது தமிழினத்திற்கு செய்கின்ற துரோகமாகும். இதுதான் தவெக அரசு தமிழர்களை பாதுகாக்கும் முறையா? பெருங்கொடுமை!
ஆகவே, ஈழத்தமிழர் கிருஷ்ணகுமாரை இனவாத நாடான இலங்கைக்கு நாடுகடத்தி இனவெறி அச்சுறுத்தலுக்குள் தள்ளியதுபோல, தம்பி சுபாஷ்கரனையும் திருப்பி அனுப்பும் முடிவை இந்திய ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் உடனடியாகக் கைவிட வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

கருப்பன் இறங்கிட்டான் களத்தில் 💥💥💥
உண்மையான எதிர்கட்சியை இனிமேல் தமிழ்நாடு பார்க்கும் 😈😈😈
செய்சத் (ஆ) retweeted
Dehati is a mindset than a class which even privileged Indians who can afford to immigrate to the West carry with them. A scam they all pull, documented in dozens of videos by the locals, is agreeing to a price for a service or product and when they receive it they walk back on the agreement and beg for a discount while lying about being short on cash. Saw one family in the US even beg for free service. There’s no respect for blue-collar labour. Indian customers have a universal bad reputation among tradesmen throughout the West.
Self-awareness is needed instead of blaming it all on the poor. But the wealthy especially are delusional. One Indian Tamil (OBC) multimillionaire in Canada who has fuelled wignat racism against other minorities he hates like Eelam Tamils and Sikhs is now crying about the same wignats coming after the “model minority” Indians like him. 😭
செய்சத் (ஆ) retweeted
More than 55 Tamils including young children, women & the elderly who were killed 39 years ago by Indian 'peacekeeping' forces stormed the Kokkuvil Hindu College in Jaffna, are being commemorated with flowers and oil lamps; justice for these victims has yet to be served.
Where's the Hindu factions ? @BJP4TamilNadu
செய்சத் (ஆ) retweeted
Encroaching Sinhala settlers kill and destroy the cattle belonging to farmers in #Mayilathamadu