ஒளி நிறைந்த தீபத் திருநாளில் உங்கள் உள்ளமும் இல்லமும் அன்பால் நிறையட்டும். என்றும் மகிழ்ச்சியுடன் வாழ இனிய கார்த்திகை தீப நல்வாழ்த்துகள்
இன்று கோவை விமான நிலையம் வருகை தந்த மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் அண்ணன் @EPSTamilNadu அவர்களை வரவேற்ற தருணம்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 55ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு இன்று கோவை புறநகர் வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். உடன் கழக நிர்வாகிகள்
பேரறிஞர் அண்ணாவின் 118வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் கோவை புறநகர் வடக்கு மாவட்டம், கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட துடியலூர் பேருந்து நிலையத்தில் கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் திரு PRG. அருண்குமார் Ex MLA அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, கோவை புறநகர் வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.
சமத்துவமும், சமூகநீதியும் இவர் உயிர்மூச்சு!
சுயமரியாதை இவரது அடிப்படை,
அடக்குமுறை எதிர்ப்பு இவரது பிறவி குணம்,
அதிரடி பேச்சு இவரின் பெரும் ஆயுதம்,
எதிரிகளும் போற்றும் அறிவார்ந்த தலைவர் அண்ணா.
உலகம் என்பது தந்தையும் தாயும் என்று, உலகிற்கு உணர்த்திய முதற்கடவுள் நீ, இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்
ஆசிரியர்கள்
என் ஆறாம் அறிவிற்கு
கல்வி புகட்டி
கூர்மை சேர்த்தவர்கள்.
நாளைய சமுதாயத்திற்கு
நல்லஎண்ணம் போதிப்பவர்கள்.
உலகே வாழ்த்துகிறது
உங்களை நான் வணங்குகிறேன்!
கிருஷ்ணர் அனைவரதும் வாழ்க்கையிலும் அன்பையும் மகிழ்ச்சியும் மன நிம்மதியும் இந்நாளிலிருந்து அளிப்பார். கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்
கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க, இதய தெய்வம் மாளிகையில் கோவை ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
































