Cyber Investigator | Personal :@stitchitupp | Tech & Cyber Support : [email protected] | Support For Our Work : https://xitter.cf/t.co/N9ZZF1eM0b |

UNIVERSE
Joined October 2012
5
32
4
275
59,196
MLM மோசடிகள், Crypto Scams, Telegram Scams, Digital Arrest Scams, Trading Scams எனப் பல்வேறு நிதி மோசடிகளால் பணத்தை இழந்து, கடனில் சிக்கி, குடும்பங்களை இழந்து, மன உளைச்சலுக்கு ஆளாகி, இறுதியில் தற்கொ* செய்துகொண்டவர்கள் ஏராளம். இவை இன்று நம் சமூகத்தில் அன்றாடம் எதிர்கொள்ளும் அவலங்களாகிவிட்டன. MyV3Ads மோசடியை எடுத்துக்கொள்ளுங்கள். இந்தத் திட்டத்தில் பணத்தை இழந்த ஒரு இளைஞர் நேரலையில் விஷமருந்தித் தற்கொ* செய்துகொண்ட சம்பவம் எத்தகைய அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பது அனைவருக்கும் தெரியும். இந்த நிறுவனத்தை விளம்பரப்படுத்திய இன்ஃப்ளுயன்சர்கள், சின்னத்திரை நடிகர்கள் உள்ளிட்டோரின் விளம்பர வீடியோக்கள் இன்றும் இணையத்தில் இருக்கின்றன. மக்கள் இவர்களை நம்பித்தானே ஒரு திட்டத்தைப் பற்றி முடிவெடுக்கிறார்கள்? பிரபலங்கள் விளம்பரப்படுத்துகிறார்கள் என்பதற்காகவே ஒரு திட்டம் நம்பகமானதாகிவிடுமா? இந்தத் திட்டத்தில் பணத்தை இழந்த பலர் தங்கள் சேமிப்பை மீட்க முடியாமல் தவிக்கின்றனர். கடன், குடும்பப் பிரச்சினைகள், மன உளைச்சல் எனப் பல பாதிப்புகளைச் சந்தித்துள்ளனர். அவர்களின் பணத்தை மீட்டுக் கொடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைத்துவிட்டதா? இந்தத் திட்டத்தை விளம்பரப்படுத்தியவர்களின் பொறுப்பு என்ன? சென்னையில் செயல்பட்ட Infiniti Futures என்ற கிரிப்டோ MLM திட்டத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நிலைமையையும் பாருங்கள். ஆடம்பரமான நிகழ்ச்சிகள், இன்ஃப்ளுயன்சர் விளம்பரங்கள், விர்ச்சுவல் மீட்டிங்குகள் என ஒரு பெரிய வணிக சாம்ராஜ்யம் போலக் காட்டப்பட்ட திட்டம். இந்த விவகாரத்துடன் தொடர்புடைய இரண்டு தற்கொ* சம்பவங்கள் குறித்தும் தகவல்கள் உள்ளன. பாதிக்கப்பட்ட மக்கள் EOW அலுவலகங்களுக்கும் சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளுக்கும் சென்று நியாயம் கேட்டு அலைந்து கொண்டிருக்கின்றனர். ஒரு திட்டம் உண்மையானதா, அதன் வருமான ஆதாரம் என்ன, முதலீட்டாளர்களுக்குப் பணம் எப்படிச் செலுத்தப்படுகிறது, புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதன் மூலம்தான் வருமானம் உருவாகிறதா என்ற கேள்விகளைக் கேட்பது தவறா? மருத்துவ அவசரத்திற்காகப் பணம் தேவைப்பட்ட நேரத்தில், Instagram-ல் பார்த்த Instant End Cash, Door-to-Door Service போன்ற விளம்பரங்களை நம்பி அணுகிய ஒருவர், அதன் விளைவாக ₹1.5 லட்சம் கிரெடிட் கார்டு மோசடியை எதிர்கொண்டார். அவருக்காக நான் புகார் அளித்தேன். ஒரு மாதம் அலைந்தேன். மோசடியில் தொடர்புடைய நபர்களைக் கண்டறிந்து, கிடைத்த தகவல்களை முழுமையாகக் காவல்துறையிடம் வழங்கினேன். ஆனால், பணம் திரும்பக் கிடைக்கவில்லை. எல்லாப் பக்கங்களிலிருந்தும் கிடைத்த பதில் என்ன தெரியுமா? கார்டைப் பயன்படுத்தியதே தவறு என்பதுதான்! தற்போது அதே நபர் ₹50 லட்சம் கிரெடிட் கார்ட் மோசடியில் தேடபட்டுவருகிறார்..! 1.5Lலில் தவறவிட்டு தற்போது 50Lலில் தேடுகிறார்கள்..! இதை விளம்பரபடுத்திய இன்ஃப்ளுயன்சர் அடுத்த collab,promotion என சென்றுவிட்டனர்... இங்கே என் கேள்வி ஒன்றுதான்: சமூக வலைத்தள விளம்பரங்களை நம்பி மக்கள் பணத்தை இழந்தால், அவர்களுக்கான பொறுப்புக்கூறல் எங்கே? ஆன்லைன் ரம்மி மற்றும் சூதாட்ட விளம்பரங்கள் குறித்தும் கேள்விகள் கேட்கப்பட வேண்டும். பணத்தை இழந்து கடனில் சிக்கியவர்கள் இருக்கிறார்கள். குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. தற்கொ* களும் நிகழ்ந்திருக்கின்றன. இத்தகைய தளங்களை விளம்பரப்படுத்திய நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், இன்ஃப்ளுயன்சர்கள் ஆகியோரின் பொறுப்பு என்ன? விளம்பரத்தின் மூலம் வருமானம் பெற்றுவிட்டு, அந்த விளம்பரத்தை நம்பிய ஒருவர் தனது சேமிப்பை இழந்தால், விளம்பரப்படுத்தியவருக்கு எந்தப் பொறுப்பும் இல்லையா? Herbalife உள்ளிட்ட நிறுவனங்களின் பொருட்களை விளம்பரப்படுத்தும்போது, அவற்றின் மருத்துவப் பலன்கள் குறித்த கூற்றுகளுக்கு என்ன ஆதாரம் இருக்கிறது? அவற்றை மருந்தாகவோ, நோயைக் குணப்படுத்தும் தீர்வாகவோ மக்களிடம் முன்வைக்கிறார்களா? தயாரிப்புகளின் பாதுகாப்பு குறித்த தகவல்கள் வெளிப்படையாக வழங்கப்படுகின்றனவா? ஒரு பொருளைப் பரிந்துரைப்பவரின் பொறுப்பு என்ன? தவறான விளம்பரங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பது எப்படி? FQL, Forex Trading Scams, Ruby Royals, Bitzgurukkal, QNet, ஈமு கோழி முதலீட்டுத் திட்டங்கள் எனப் பல்வேறு சர்ச்சைகளும் புகார்களும் நம் சமூகத்தில் எழுந்துள்ளன. ஒவ்வொரு திட்டத்துக்கும் தனித்தனி ஆதாரங்களும் விசாரணை நிலைகளும் இருக்கின்றன. ஆனால், இத்தகைய திட்டங்களால் மக்கள் பாதிக்கப்படும்போது, அவர்களின் பிரச்சினைகளைப் பற்றிப் பேசுவது யார்? 1/2 #JusticeForVictims #FinancialScams #InfluencerAccountability #CyberBullying #ConsumerAwareness
6
119
4
253
12,211
முதலீட்டாளர்களின் பணம் எங்கே போனது? புகார்களின் நிலை என்ன? பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு கிடைத்ததா? விளம்பரப்படுத்தியவர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்தார்களா? சாமானியன் ஏமாந்தால் அவன் வாழ்க்கையை இழக்கலாம். குடும்பத்தை இழக்கலாம். கடனில் மூழ்கலாம். சில நேரங்களில் உயிரையே இழக்கலாம். அவன் வாழ்க்கை சிதைந்த பிறகு அவனுக்காக யார் நிற்கிறார்கள்? அவனுடைய பணத்தை மீட்டுக் கொடுக்க யார் போராடுகிறார்கள்? அவனை நம்பவைத்த விளம்பரங்களின் பின்னணியை யார் ஆராய்கிறார்கள்? அவனுடைய புகாருக்கு விரைவான தீர்வு கிடைக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது? பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையங்களுக்கும் அரசு அலுவலகங்களுக்கும் நீதியைத் தேடி அலைகிறார்கள். சிலர் தங்கள் பணத்தை மீட்க முடியாமல் ஆண்டுக்கணக்கில் காத்திருக்கிறார்கள். ஆனால், இதையெல்லாம் வெளிச்சத்துக்குக் கொண்டுவர முயற்சி செய்தால் மட்டும் பிரச்சினை உருவாகிறது! மோசடிகளைச் சுட்டிக்காட்டுபவர்கள்தான் குற்றவாளிகளா? அல்லது மக்களின் நம்பிக்கையைப் பயன்படுத்தி அவர்களை ஏமாற்றுபவர்களிடம் கேள்வி கேட்பதுதான் குற்றமா? ஹரிஷின் மரணம் மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது. உயிரிழந்த ஒருவரின் மரணத்தைச் சுற்றியுள்ள விவாதங்கள் பொறுப்புடன் கையாளப்பட வேண்டும். அவரது குடும்பத்தினரின் குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட வேண்டும். ஜேசன் சாமுவேலின் விளக்கங்களும் உரிய ஆதாரங்களின் அடிப்படையில் ஆராயப்பட வேண்டும். ஆனால், இந்த விவகாரத்தை வைத்து நிதி ஆலோசகர்களின் தகுதிகள், ஒழுங்குமுறை அங்கீகாரங்கள், பொதுமக்களுக்கு வழங்கப்படும் நிதி ஆலோசனைகள் மற்றும் இணையத் துன்புறுத்தல் குறித்து எழும் கேள்விகளை முற்றிலுமாகப் புறக்கணிக்க முடியாது. நான் ஜேசன் சாமுவேலை அறிவேன். அவர் பல்வேறு மோசடிகளைத் தோண்டி எடுத்து, பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகச் செயல்பட்டவர் என்பதை அறிவேன். அவர் எழுப்பும் ஒவ்வொரு கேள்வியும் தானாகவே சரி என்று நான் கூறவில்லை. யார் சொன்னாலும், எந்தக் குற்றச்சாட்டாக இருந்தாலும், ஆதாரத்தின் அடிப்படையில் ஆராயப்பட வேண்டும் என்பதுதான் எனது நிலைப்பாடு. ஆனால், மோசடிகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவர முயற்சி செய்பவர்களை விமர்சனங்களால் மௌனமாக்குவதோ, அவர்களுக்கு எதிராக இணையத்தில் ஒருங்கிணைந்த தாக்குதல்களை நடத்துவதோ நடந்தால், அதைப் பற்றியும் பேசப்பட வேண்டும். உண்மையான Cyber Bullying யாருக்கு நடக்கிறது என்பதை உங்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்! பிரியாணிமேன் விவகாரத்திலும், A2D CD-key விவகாரத்திலும் சமூக வலைத்தளங்களில் வெளியான வீடியோக்கள், எதிர்வினைகள், காட்சியமைப்புகள், எடிட்டிங் மற்றும் பல்வேறு குற்றச்சாட்டுகள் குறித்து ஏராளமான விவாதங்கள் நடந்துள்ளன. இங்கு நடப்பது Influencer Marketing மட்டுமல்ல; சில சூழல்களில் அது Influencer Manipulation Marketing ஆகவும் மாறுகிறது! மக்களின் நம்பிக்கையைப் பயன்படுத்தி ஒரு திட்டத்தை விளம்பரப்படுத்துவது எளிது. அந்த விளம்பரத்தை நம்பி மக்கள் பணத்தை இழந்த பிறகு, அவர்களின் கேள்விகளுக்குப் பதிலளிப்பதுதான் உண்மையான பொறுப்பு. ஒரு இன்ஃப்ளுயன்சருக்கு லட்சக்கணக்கான பின்தொடர்பவர்கள் இருக்கலாம். அவருடைய ஒரு வீடியோ ஆயிரக்கணக்கான மக்களின் முடிவுகளைப் பாதிக்கலாம். அப்படியானால், அவருடைய சமூகப் பொறுப்பு என்ன? விளம்பர வருமானம் மட்டும் முக்கியமா? அந்த விளம்பரத்தை நம்பியவர்களின் இழப்புக்கு மதிப்பே இல்லையா? இன்று சமூக வலைத்தளங்களில் உண்மையை வெளிக்கொணர்வதற்குப் பதிலாக, ஒருவரின் பெயரையும் புகழையும் காப்பாற்றுவதற்காக விவாதங்கள் திசைதிருப்பப்படுகின்றனவா என்பதையும் நாம் ஆராய வேண்டும். ஒருவரின் தவறை ஆதாரத்துடன் சுட்டிக்காட்டுவது Cyber Bullying-ஆ? மக்கள் பணத்தை இழந்து தவிக்கும்போது அமைதியாக இருப்பதும், அந்த மக்களுக்காகக் குரல் கொடுப்பவர்களை மௌனமாக்க முயற்சி செய்வதும் எத்தகைய மனநிலை என நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள். இங்கு தவறைத் தவறு என்று சொல்வதே தவறாகிவிட்டதா? 2/2 #JusticeForVictims #FinancialScams #InfluencerAccountability #CyberBullying #ConsumerAwareness
2
21
1
65
1,362
மொதல்ல தவெக விட்டு வெளிய வந்தா விசிக (a) ஆசிக திருமாவளவன் கூட வருமானு பாருங்க.. அப்புறம் மத்தத பேசலாம்..!
NO, .... திமுக மீண்டும் விசிக கூட்டணிக்கு வந்தால் ஏற்றுக்கொள்ளமாட்டோம்🤗
1
21
179
2,993
அரெஸ்ட் ஆனா நியூஸ் வரும்.. அப்டி இல்லனா நீ ஐஸ்பாய் இப்டி வெளாடுவனு தெரியும் அதான் யாரும் தேடல...
இந்த பக்கம் வரலைனா நம்மல தேட கூட ஆள் இல்ல 🥹🚶
1
21
1,187
ரெண்டு பார்சல் பிரியாணி, 3000 காசு, 2 புது சட்டை, 3 நாள் ஸ்டுடியோல உக்காந்து மூச்சு விடாம பேசுவார்... கூடவே மூட் ஸ்விங் வேற.. செல்லவா வேணும்....
Mood swing ஆயிடுச்சு பொளக்குறார் மணி 😂🔥
2
30
241
7,186
இப்ப என்ன "தவெக கூட்டனி கட்சிகள துரத்திவிட்டா கூட சேத்துக்கனும்.. போக வேற இடம் இல்ல...தனியா விட்டுடாதிங்க.. " இதைதானே இவ்வளவு சுத்தி எழுதி இருக்கீங்க..?
தமிழ்நாட்டில் மும்முனை போட்டி நிலவுகிறது என கடந்த பொதுத் தேர்தலில் நிரூபணமான பிறகு, நாம் சந்தித்த முதல் தேர்தல் இது. வாக்குகள் மூன்றாக பிரிந்தாலும், திமுக இரண்டாம் இடத்திற்கு வர முடிந்ததற்கு அதிமுகவின் சரிவே காரணம். மற்றபடி கூட்டணி இல்லாமல் திமுகவுக்கு வெற்றி என்பது இல்லை என்பது இந்த இடைத் தேர்தலிலும் மீண்டும் நிரூபணம் ஆகி இருக்கிறது. விடுதலைச் சிறுத்தைகள் ,காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் இல்லாமல் திமுக தேர்தலை சந்தித்து இரண்டாம் இடம் வந்திருப்பதால், எதிர்காலத்தில் திமுக தனித்து போட்டியிட்டு வெற்றியை அடையலாம் என்று நிறைய பேர் ஆருடம் சொல்கிறார்கள், தற்போது பெற்ற இந்த இரண்டாம் இடத்தை திமுக கணக்கில் எழுதுகிறார்கள். திமுக அதிக வாக்குகள் பெறுகிற கட்சியாக இருந்தாலும், வெற்றியை தீர்மானிக்கும் வாக்குகள் கூட்டணி கட்சியிடம் தான் இன்று வரை இருக்கிறது. இந்த இடைத்தேர்தலில் மதுராந்தகத்தில் தேமுதிக, மல்லை சத்யாவுக்கு இருக்கும் செல்வாக்கின் மூலம் திமுகவுக்கு சேர்ந்திருக்கிற வாக்குகள் குறைந்தபட்சமாக வைத்துக் கொண்டாலும் ஐயாயிரம் இருக்கும். 2006 ஆம் ஆண்டு தேமுதிக தனித்து நின்று மதுராந்தகத்தில் 9,885 வாக்குகள் பெற்றிருக்கிறது. 2016 மக்கள் நலக் கூட்டணியில் இல் 11,773 பெற்று இருக்கிறது. தேமுதிக கட்சியின் வளர்ச்சி, வீழ்ச்சிக்கு ஏற்ப இவை மாறினாலும் இவற்றிலிருந்து சராசரியாக ஒரு எண்ணிக்கை நிலையாக இருக்கிறது. அதே போல தாராபுரத்தில் 2006 ஆம் ஆண்டு தேமுதிக 11,288 வாக்குகள் பெற்றிருக்கிறது. 2016 ல் மக்கள் நல கூட்டணியில் நாகை திருவள்ளுவன் 7029 வாக்குகள் பெற்று இருக்கிறார். மதுரங்கத்தில் தேமுதிக, மல்லை சத்யா போன்றவர்களின் வாக்குகள் தற்போது இருப்பதை போலவே, தாராபுரத்தில் தேமுதிக எஸ்.டி.பி.ஐ, மமக, மஜக, அருந்ததியர் அமைப்புகள், கொங்கு கட்சி உள்ளிட்டவர்களின் பங்கு இருக்கிறது. நான் மேலே குறிப்பிட்டது போல, இவை பெரிய அளவிலான வாக்குகள் இல்லையெனினும், திமுக இரண்டாம் இடத்தைப் பெறுவதற்கு இந்த வாக்குகள் முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த பொதுத் தேர்தலில் திமுக - த.வெ.கவோடு நேருக்கு நேர் நின்று வெற்றி பெற்ற ஐம்பது தொகுதிகளில், 5,000 வாக்குகளுக்கு குறைவான வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதிகள் 12. 5,000 முதல் 9,999 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதிகள் - 13 10,000 முதல் 14,999 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதிகள் - 9 15,000 முதல் 19,999 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதிகள் - 6 இதன் மூலம் வெற்றி பெறுவதற்கும், வெற்றியின் அருகில் சென்று தோல்வி அடைவதற்கு சராசரியாக 15,000 வாக்குகள் தான் தீர்மானிக்கிறது. இந்த வாக்குகள் கூட்டணியால் மட்டுமே திமுகவிற்கு சாத்தியப்படுபவை. இதனடிப்படையில் கடந்த பொதுத் தேர்தலில் விசிக காங்கிரஸ் கூட்டணி இல்லாமல் திமுக போட்டியிட்டு இருந்தால், 22-25 தொகுதிகளில் மட்டுமே திமுக வெற்றி பெற்று இருக்கும். மக்கள் நலக் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிட்டு தனித் தொகுதிகளில் பெற்ற சராசரி 13,642, அதே போல பொது தொகுதியில் சராசரி 12,148. 2016 தேர்தலுக்கு பின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனிப்பட்ட முறையில் கணிசமாக வளர்ந்திருக்கிறது என்பதை கருத்தில் கொண்டு பார்த்தால் இதன் எண்ணிக்கை கூடும். பொதுத் தேர்தலை விட மதுராந்தக இடைத்தேர்தலில் வெற்றி பெற த.வெ.க பெற்ற கூடுதல் வாக்குகள் 11,958, தாராபுரத்தில் கூடுதலாக பெற்ற வாக்குகள் 20,403. இதில் 12,000 - 15,000 வாக்குகளே வெற்றியை தீர்மானிக்கும் சராசரியாக இருப்பதை கவனிக்கலாம். அதிமுக இரண்டு தொகுதியிலும் கடுமையான வீழ்ச்சியை சந்தித்து இருக்கிறது, அதில் ஒரு பங்கு திமுகவிற்கு சேர்ந்திருக்கிறது. மற்றபடி கூட்டணி இல்லாமல், வெற்றிக்கு நெருக்கமான வாக்குகளை கூட தற்போதைக்கு திமுகவால் பெற முடிகிற சூழல் இல்லை. கூட்டணி, அதிமுக வீழ்ச்சி உள்ளிட்ட இவையெல்லாம் கழித்து விட்டு பார்த்தால், தனிப்பட்ட கட்சியாக தன் மொத்த சக்தியையும் திரட்டி தேர்தலை சந்தித்தும் இது திமுகவிற்கு பின்னடைவே. கூட்டணி இல்லாமல் வெற்றி பெரும் சூழல் தவெகவிற்கும் தற்போதைக்கு இல்லை என்பதே இந்த தேர்தல் கணக்குகள் நமக்குணர்த்துகிறது.
4
70
1
277
6,695
இந்த FQL மோசடில முக்கியமான நபர்.. மதுரைல இதை நடத்தியவர்.. இவுங்க மேல இப்ப குண்டாஸ் போட்டு இருக்காங்க.. எதுக்கு இப்ப பொதுநல வழக்கை ரத்து பன்னனும்..!
#JUSTNOW | FQL நிதி மோடி விவகாரத்தில் பொதுநல வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என அரசுத் தரப்பு வாதம் தாமாக முன்வந்து விசாரிக்க நேரிடும் என உயர் நீதிமன்றக் கிளை எச்சரிக்கை #SunNews | #FQLScam | #MadrasHC
2
97
3
184
10,002
ஏன் தள்ளுபடி பன்னனுமாம்..? என்ன பன்னனுமாம்..?
#JUSTNOW | FQL நிதி மோடி விவகாரத்தில் பொதுநல வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என அரசுத் தரப்பு வாதம் தாமாக முன்வந்து விசாரிக்க நேரிடும் என உயர் நீதிமன்றக் கிளை எச்சரிக்கை #SunNews | #FQLScam | #MadrasHC
1
21
98
2,253
Beldex 🥳🥳
5
17
4,571
அதாவது இவன வச்சி TVKக்கு ப்ரமோசன் பன்னும்போது தெரியலயா..? எலக்சன் டைம்ல TVKக்கு எவ்வளவு வேலை பார்த்தான்.. தப்பா செய்திய போட்டுட்டு அப்புறம் அழிச்சிட்டு ஓடினான்..! SISMA கும்பல்ல ஒருத்தன் இவனும்.. எதாவது பிரச்சனைனா பிரச்சனை பத்தி பேசுங்க.. கட்சிய பத்திபேசினா.. இவன் TVKக்கு என்ன வேலை செஞ்சான்.. என்ன எல்லாம் ஆர்கனைஸ் பன்னி வேலை பாத்தானு எல்லாம் எடுத்து போட்டு அடிப்பாங்க...எதுக்கு மடைமாத்தனும் இப்ப.. எதாவது பிரச்சனைனா உடனே எங்க ஆளு இல்லைனு கதை சொல்ல ஆரம்பிச்சிடுறது..!
அது எப்டி பொம்பள கேஸ்ல மாட்றவன் பூராம் பெரியார் பேரன், பெமினிஸ்ட், உபிஸ் ஆவே இருக்கானுக 🤔
6
171
3
484
14,237
ஏன் பெயில் எடுக்குற வரைக்கும் வேற யாரும் ஹேண்டில் பன்னனுமா..?
15 நாட்களுக்கு இந்த ஐடிக்கு அட்டமின் தேவை Eligible : கலாய்க்க தெரிந்தால் போதும்
1
1
1
57
2,461
Replying to @_iRoBo_
Acc eppadi open panna mudiyathu - aathan VPN irruka
2
579
Justmarkets.com RBI Alert List-ல 2023ல இருந்தே இருக்கு..! Unauthorised Forex Trading லிஸ்ட்லயும் இருக்கு… JustMarkets அவங்களோட website-லேயே இந்தியாவுக்கு service இல்லனு (restricted jurisdiction) சொல்லி இருக்காங்க. மொத்த கும்பலும் FEMA Act-ல சிக்கப் போறாங்க..! அப்புறம் இவன் நிஜமான JustMarkets-தானா என்ற சந்தேகமும் இருக்கு. அந்தப் பேர்ல ஒரு dummy website போட்டு run பண்ணுற மாதிரிதான் இருக்கு. ஏன்னா, இந்தியாவுக்கு service இல்லனா, இந்தியர்களுக்கு account எப்படி ஆரம்பிக்க முடியும்? எப்படியும் EOW வாசல்ல நிப்பாங்க… இல்லைனா FEMA Act-ல சிக்கி court-ல நிப்பாங்க..!
டிரேடிங்ல இவ்ளோ லாபம் வருதா என்ன! ? இல்லை குறளி வித்தையா? Experts யாராவது இருக்கீங்களா?
12
149
4
390
26,616
Rapido bike taxi - எலக்சன்ல மொத்தமா ஒரு கும்பல் விசிலடிச்சாங்க... வண்டில போன ஆட்கள்ட கூட விசிலடிக்க சொன்னாங்க.. இப்ப என்ன ஆச்சினா😏😏
8
67
6
335
35,012
ஏன் உன் ஐடிய யூஸ் பண்ணிட்டு நாளைக்கு கேஸ் போட்டா கரண்ட் டிவைஸ் லாகின் பன்னவன் உள்ள போகவா..? போகும்போது கூட கோர்த்துவிட்டு போக ப்ளான் போடுற..!
இந்த ஐடி யூசர் நேம் பாஸ்வேர்டு யாருக்காவது வேணும்னா வாங்கிக்கோங்க கொஞ்சம் நாள் சோசியல் மீடியா விட்டு தூரமா இருக்கலாம்னு முடிவு பண்ணி இருக்கேன்
7
2
2
98
5,437
திமுக தலைமைக்கு ஓர் அறிவிப்பு UN OFFICIAL IT WING தனி அமைப்பு இல்ல அந்த பெயர்ல நிறைய உடன்பிறப்புகள் இயங்குறாங்க எல்லா கேஸையும் என் பேர்ல மட்டும் எழுதாதீங்க
1
2
34
1,932
Based on your account, the following results can be expected in the near future - AiRo
🤖 Made with AI
Generate image of twitter account based on my tweets @grok
9
2
1
73
4,502
Based on your Posts,Automated reply from the bot.
Based on my tweets, guess the following about me: Age Relationship status Ethnicity Location Religion IQ Ideology Profession Political leaning Good person rating (/10) @grok
6
2
38
2,594
If you hate LGBTQ people because of the abuse committed by some gay men, then first condemn all the straight men who make women go through that same torture every single day of their lives, sir.
19
287
22
1,645
60,371
அவர் ஒரிஜினல் பேரு Minor Vijay -- இப்ப இதுக்கு என்ன சொல்றது🤔🤔🤔
ஏன்டா @U2Brutus_off உன் பேரும் வீரமணியாமே
1
16
1
119
8,735