gopaljames retweeted
கழக இளைஞர் அணிச் செயலாளர் - மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் @Udhaystalin அவர்களின் பிறந்தநாளினை முன்னிட்டு, இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் @Joel_Dmk அவர்களின் வரிகளில், ‘உதயா அண்ணன் வாராரு’ என்ற பாடலை விருதுநகர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் @TThenarasu அவர்கள் வெளியிட, மாநில துணைச் செயலாளர்கள் பெற்றுக்கொண்டனர்.
@Inba_AN_Ragu, @ilaiyadmk, @keprakashdmk, @AbdulmalikDmk, @Prabhugajendran, @pssrinivasandmk, @GprMadurai, @C_ANAND_KUMAR
#HBDUdhay #UdhayanidhiStalin
gopaljames retweeted
நூலக விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுப்பது முக்கியமான ஒன்று.
எப்படிங்க என்னால சும்மா இருக்க முடியும்ன்னு? கேட்கும் இந்த முதலமைச்சர் தான், கள்ளக்குறிச்சி பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஜூலை 31 ஆம் தேதியே புகார் அளித்து, 116 நாட்கள் ஆகியும் நடவடிக்கை எடுக்காமல் சும்மா இருந்தவர்..
gopaljames retweeted
Rajini-யும் Rajini Fans-um பண்ண முடியாததையும், Ajith-um Ajith Fans-um பண்ண முடியாததையும், இந்த ஒருத்தன் அசால்ட்டா பண்ணிட்டான்! 😂
ஒரு Brand-ஐ எப்படி Total Damage பண்ணணும்னு சொல்லிக் கொடுத்தது மட்டுமில்ல… சொன்னபடியே செஞ்சும் காட்டிட்டான்! 🤣
இப்படியொரு அரிய பொக்கிஷத்தைப் பத்திரமா பாதுகாத்து வையுங்கப்பா! 🙏
இந்தப் பொக்கிஷம் தமிழ்நாட்டுக்குத் தேவை! 😂🔥 @Saattaidurai 🔥
gopaljames retweeted
🔺கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்கு த.வெ.க. எம்.எல்.ஏ. குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரம்:
நீதிமன்றத்தில் அரசு தரப்பு பொய் சொன்னதற்கு முதலமைச்சர் பொறுப்பேற்க வேண்டாமா?
🔺கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ.வை உடனடியாகக் கைது செய்க!
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அம்மையாருக்கு கள்ளக்குறிச்சி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் அருள்விக்னேஷ் ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியது தொடர்பாகவும், அத்துமீறி அவரது இருப்பிடத்திற்குள் நுழைய முயன்றது தொடர்பாகவும் இதுவரை எந்தப் புகாரும் வரவில்லை என்று இத்தனை நாட்களாகத் தமிழ்நாடு அரசும், அமைச்சர்களும் சொன்னது பொய் என்பது இன்று (24.11.2026) நீதிமன்றத்தில் வெளிப்பட்டுள்ளது.
ஜூலை மாதமே இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் புகார் அளித்துள்ளார் என்பதை இன்று தான் சென்னை உயர்நீதிமன்ற விசாரணையின் போது நீதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.
🔺கண்டிக்கத்தக்கதும், தண்டிக்கத்தக்கதுமாகும்!
இத்தனை நாள் பொதுவெளியிலும், பொது மக்களிடமும் மட்டுமல்ல, உயர்நீதிமன்றத்திலேயே ஓர் அரசு மறைத்திருக்கிறது, ‘புகார் எதுவும் இல்லை’ என்று பொய் சொல்லியிருக்கிறது என்பது வெட்கப்படத்தக்கது மட்டுமல்ல; கண்டிக்கத்தக்கதும், தண்டிக்கத்தக்கதும் ஆகும்.
அய்ந்து மாதங்களுக்கு முன்பே மாவட்ட ஆட்சியர் புகார் அளித்திருக்கிறார்; அது குறித்து எந்த நடவடிக்கையும் இல்லை. பொதுவெளிக்கு இந்தப் பிரச்சினை வந்த பிறகும் அமைச்சர்களும், சில கூட்டணிக் கட்சித் தலைவர்களும் ‘அப்படியெல்லாம் புகார் இல்லை’ என்று மறுத்தார்களே... இப்போது அவர்களெல்லாம் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?
🔺நீதிமன்றத்தில் அரசு தரப்பு பொய் சொன்னதற்கு முதலமைச்சர் பொறுப்பேற்க வேண்டாமா?
இந்த அரசும், அமைச்சர்களும் மக்களை என்னவென்று கருதுகிறார்கள்? மாவட்ட ஆட்சியர்கள், இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் குறித்த நிர்வாகத்துக்குப் பொறுப்புடையவர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் தானே? அவர் எடுத்த நடவடிக்கைகள் என்ன? நீதிமன்றத்தில் அரசு தரப்பு பொய் சொன்னதற்கு முதலமைச்சர் பொறுப்பேற்க வேண்டாமா?
விலைவாசி பற்றிப் பேசினார் என்பதற்காகப் பொருளாதாரப் பேராசிரியர் மீது, வேறு ஒரு பொய் வழக்குத் தொடுத்து அதிகாலையில் கைது செய்த அரசு, தன்னுடைய கட்சி எம்.எல்.ஏ.வின் முறைகெட்ட நடத்தைக்கும், குற்றத்துக்கும் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது?
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. மீது வழக்குத் தொடுத்து, என்னென்ன சட்டப் பிரிவுகள் என்று சொன்னால் மட்டும் போதாது! அவர் இழைத்த குற்றத்துக்கு உடனடியாகக் கைது செய்ய வேண்டாமா?
தமிழ்நாடு அரசுக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டின் பெயருக்கே அவமானத்தை ஏற்படுத்தியிருக்கும் இந்தப் பிரச்சினையில் அய்ந்து மாதம் கடத்திய அரசு, இனியும் துளியும் தாமதிப்பதை ஏற்க முடியாது.
மகளிர் உரிமை என்பதும், பாதுகாப்பு என்பதும் வாய்ப் பேச்சு வீரம் அல்ல! செயல், செயல், செயல் - அதுவே அவசியம்!
- கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
gopaljames retweeted
தவெக தற்குறிகளை பொளந்து எடுத்து இருக்கிறார் பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன்
//வெட்கப்படுங்க விஜய்! தமிழ்நாட்டுக்கே அசிங்கம்! தெருவுல நிப்பாட்டிட்டாங்க! மூடிமறைத்த உண்மைகள்! சாய்குமாரை தூக்குங்க! உச்சக்கட்ட கோபத்தில் SPL//
gopaljames retweeted
கூட்டணிக்காக நீதி பலிகடாவா?
தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீதான புகாரில் கைது நடவடிக்கை தேவையில்லை என காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கூறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது!
ஏற்கனவே மாணிக்கம் தாகூர் அவர்கள் முன்னதாக ஆதரவுக் குரல் கொடுத்த நிலையில், தற்போது மற்றொரு காங்கிரஸ் எம்.பி.யும் களமிறங்கியிருப்பது பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைப்பதைவிட, கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ.வைக் காப்பாற்றுவதில்தான் காங்கிரஸ் அதிக அக்கறை காட்டுகிறதோ என்ற கேள்வியை எழுப்புகிறது.
இரண்டு அமைச்சர் பதவிகளுக்காக ஒட்டுமொத்த கட்சியின் சுயமரியாதையையும் அடகு வைத்து, தவெக-வின் தவறுகளுக்கெல்லாம் முட்டுக்கொடுப்பதுதான் தமிழக காங்கிரஸின் அரசியலா? பணியிடப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்ணுக்கு ஆதரவாக நின்று நீதி பெற்றுத் தருவதுதான் மக்கள் பிரதிநிதிகளின் கடமை. மாறாக, கைது நடவடிக்கை கூடாது என்று முன்கூட்டியே வக்காலத்து வாங்குவது அல்ல!
கைது செய்ய வேண்டுமா, வேண்டாமா என்பதைச் சட்டமும், காவல்துறையும், நீதிமன்றமும் தீர்மானிக்கட்டும். ஆனால், புகாரின் தீவிரத்தைச் சிறுமைப்படுத்தி, பாதிக்கப்பட்டவரின் நீதிக்கான குரலை அரசியல் காரணங்களுக்காக நசுக்க முயல்வதை ஒருபோதும் ஏற்க முடியாது.
எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் போன்று நாளை இன்னொருவர் உருவாகக் கூடாது என்பதற்காகவே கைது நடவடிக்கை கட்டாயம் வேண்டும் அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
கூட்டணி தர்மத்தைவிடப் பெண்களின் கண்ணியத்திற்கு முதலில் மதிப்பளித்து குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களைக் காப்பாற்றத் துடிப்பதை நிறுத்தி பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்கக் குரல் கொடுங்கள் @KartiPC அவர்களே..!
gopaljames retweeted
மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் பாலகிருஷ்ணன் உயிரிழந்த விவகாரத்தில், அவர் சட்டவிரோதக் காவலில் வைக்கப்பட்டு சித்திரவதையால் உயிரிழந்துள்ளதாகவும், அப்போது காவல் நிலையத்தில் இருந்த அனைத்து காவலர்களும் கைது செய்யப்படத் தகுதியானவர்களே என்றும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கடுமையாகக் கண்டித்துள்ளது.
புகாரளிக்க வந்தவரையே தாக்கிச் சித்திரவதை செய்துவிட்டு, அதனைத் தற்கொலை என தவெக அரசு நாடகமாடியிருக்கிறது. இன்னும் எத்தனை உண்மைகளை இந்த அரசு மறைக்கப் போகிறது? சமரசம் செய்துகொள்ள ரூ. 3 லட்சமும் அரசு வேலையும் தருவதாகக் காவல்துறையினர் கூறியிருக்கிறார்கள் என பாலகிருஷ்ணனின் மனைவி சுதா குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு அரசு என்ன பதிலளிக்கப் போகிறது?
பாதிக்கப்பட்டவர்களை ஒடுக்குவதும், குற்றவாளிகளைக் காப்பாற்றுவதும்தான் இந்த அரசின் ஒரே கொள்கையா? பொய்களை மட்டுமே பேசி ஆட்சி செய்யும் இந்தக் கேடுகெட்ட ஆட்சியில் பாலகிருஷ்ணன் அவர்களின் உயிரிழப்புக்கு நீதி கிடைப்பது கடினம். இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்.
gopaljames retweeted
பெண் IAS அதிகாரி ஒருவருக்கு ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பிய ஆளுங்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷை கைது செய்ய வேண்டுமென தமிழ்நாடு காவல்துறை DGP-இடம் தி.மு.கழகம் சார்பில் இன்று புகார் மனு அளித்தோம்.
பாதிக்கப்பட்ட அதிகாரி ஜூலை மாதமே தலைமைச் செயலாளரிடம் புகாரளித்தும், அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று சட்ட அமைச்சர் நிர்மல்குமார் பொய் பேசி பேட்டி கொடுத்தார்.
இந்த சம்பவத்தில், புகாரளித்து 116 நாட்கள் ஆகியும், உயர்நீதிமன்றம் சொன்ன பிறகே இந்த டம்மி முதலமைச்சரின் அரசு வழக்குப்பதிவு செய்துள்ளது.
மற்றவர்களை பாய்ந்து பாய்ந்து கைது செய்யும் காவல்துறை, அருள் விக்னேஷை கைது செய்யவில்லை. அவரை கைது செய்ய வேண்டும்.
குற்றத்தை மறைத்தை குற்றத்திற்காக தலைமைச் செயலாளர் - சட்ட அமைச்சர் ஆகியோரையும் விசாரிக்க வேண்டும் - சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று DGP-யிடம் புகாரளித்தோம்.
இதே போல, கோரிக்கை அளிக்க வந்த ஒருவரை துணை சபாநாயகர் ரவிசங்கர் கடுமையாக தாக்கி இருக்கிறார்.
இதில் தாக்குதலுக்கு ஆன நபர் காவல் நிலையத்தில் புகாரளித்தும் இதுவரை வழக்குப்பதிவு செய்யவில்லை.
ஆகவே துணை சபாநாயகர் மேல் உடனே வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் அளித்தோம்.
ஆளுங்கட்சிக்காரர்களின் atrocity-ஐ டம்மி முதலமைச்சரும் அவர் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையும் இனியும் வேடிக்கை பார்க்கக் கூடாது என்ற தமிழ்நாட்டு மக்களின் குரலை ஊடக நண்பர்களிடம் எடுத்துரைத்தோம்.
gopaljames retweeted
ஆளுங்கட்சி பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கத்தான் ஆட்சி நடத்துகிறாரா முதல்வர்?
#ljk #jcm #kallakurichi #womenssafety #ArrestArulVignesh
gopaljames retweeted
கள்ளக்குறிச்சி எம் எல் ஏ பெண் கலெக்டருக்கு வக்கிர மெசேஜ் அனுப்பிய விசயத்தை விமர்சித்தவர்களை நோக்கி “வாட்ஸ் அப் வதந்தியை” வைத்து பேசுவீர்களா? அதற்கு என்ன ஆதாரம்? எனக் கேட்டார் அமைச்சர் நிர்மல் குமார். தற்போது கலெக்டரே புகார் அளித்து இருக்கிறார். தன்னைப் பற்றிய வாட்ஸ் அப் வதந்தியை அவரே உண்மை என்று நம்பி கலெக்டர் புகார் அளித்து இருக்கிறார் போலும்!!
gopaljames retweeted
தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ. சி.அருள் விக்னேஷ், தன்னிடம் முறையற்ற வகையில் நடந்துகொண்டதாகவும் மிக மோசமான குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும் மாவட்ட எஸ்.பியிடம் மாவட்ட ஆட்சியர் முறைப்படி புகார் அளித்துள்ளார். thehindu.com/news/national/t…
gopaljames retweeted
திருச்சி மாவட்டம் முசிறி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில், 8 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.
விபத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சையையும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணத் தொகையையும் தமிழ்நாடு அரசு விரைந்து வழங்க வேண்டும்.
gopaljames retweeted
மக்கள் காவலன் படத்துக்குச் சிக்கல் – விவரம்
cinemavalai.com/makkal-kaval… #MakkalKaavalan
@Manikabali87 @ananya_birla @beemji @Tisaditi @thinkmusicindia @SonylivTam @sony_vizha @gobeatroute @proyuvraaj #Manikandan
gopaljames retweeted
gopaljames retweeted
தந்தை அடையாளம் வேண்டாம் – லியோ சிவகுமார் பேச்சு
cinemavalai.com/delivery-boy… #DeliveryBoy @leosivakumar02, @realradikaa
@Brigidasagaoffl @DushyanthJayap1 @dhivakargj @DirectorBose @SundaramurthyKS @AmuthaLeoni @nanisignin @coloristmuthu
gopaljames retweeted
gopaljames retweeted
திராவிட இயக்கத்தின் தொடக்கப்புள்ளி நீதிக்கட்சி உருவான நாள் இன்று!
சமூகநீதி - பெண் விடுதலை - சுயமரியாதை - மாநில உரிமை - மொழி உரிமை ஆகியவற்றை தமிழ்நாட்டின் அரசியல் அடையாளமாக்கியது நீதிக்கட்சி.
நீதிக்கட்சியின் வழியில் இந்த அடையாளங்களை வளர்த்தெடுத்தது திராவிட முன்னேற்ற கழகம்.
தமிழ்நாட்டின் இப்பெருமைகளை அழிக்கத்துடிக்கும் Reels சோப்ளாங்கிகளின் முயற்சிகளை முறியடிப்போம்.
நீதிக்கட்சி காட்டிய கொள்கை பாதையில் இன்னும் உறுதியோடு நடைபோடுவோம்.
#JusticeParty































