Guna retweeted
BIG BREAKING 🚨 Copper vessel and wick taken to Thirupparankundram hilltop for Karthigai Deepam lamp lighting.
இனிய கார்த்திகை தீபம் வாழ்த்துகள்..! 🪔🔥
யாமிருக்க பயமேன்...
வெற்றிவேலுக்கு அரோகரா
ஓம் சரவணபவ 🙏🏼🙏🏼🙏🏼
🔥🔱🔥🔱🔥🔱🔥🔱🔥🔱🔥🔱🔥
#VetriVelMuruganukkuArohara
#திருப்பரங்குன்றம்
கந்தன் ஏற்றும் மகா தீபம் ✨🙏
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! 🪔🦚
கார்த்திகை மைந்தனுக்கு அரோகரா
திருப்பரங்குன்றத்துக்கு அரோகரா
வெற்றிவேலுக்கு அரோகரா
ஓம் சரவணபவ 🙏🏼🙏🏼🙏🏼
🔥🔱🔥🔱🔥🔱🔥🔱🔥🔱🔥🔱🔥
#VetriVelMuruganukkuArohara
#திருப்பரங்குன்றம்
Guna retweeted
தமிழக மக்கள் அனைவருக்கும், இனிய கார்த்திகை தீபத் திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த இனிய திருக்கார்த்திகை நன்னாளில், தீபத்தின் ஒளி நம் இல்லங்களில் வெளிச்சத்தை நிரப்பட்டும். அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சியும், வளமும் பெருகட்டும். ஒவ்வொருவரின் உள்ளத்திலும் அன்பு, அமைதி, நம்பிக்கை, நற்சிந்தனைகள் நிறையட்டும்.
இனிய திருக்கார்த்திகை தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🔥🔥
கார்த்திகை மைந்தனுக்கு அரோகரா 🔥🔥
திருப்பரங்குன்றத்துக்கு அரோகரா 🔥🔥
வெற்றிவேலுக்கு அரோகரா 🔥
#திருப்பரங்குன்றம்
#VetriVelMuruganukkuArohara
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், வரும் நவம்பர் 24-ம் தேதி கார்த்திகை தீபத் திருநாளன்று தீபம் ஏற்ற அனுமதி வழங்கிய மாண்புமிகு உச்சநீதிமன்றத்திற்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
~ அண்ணாமலை avl
சேவற்கொடியோன் துணை! வேலுண்டு வினையில்லை!!
@annamalai_k
Guna retweeted
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், வரும் நவம்பர் 24-ஆம் தேதி கார்த்திகை தீபத் திருநாளன்று தீபம் ஏற்ற அனுமதி வழங்கிய மாண்புமிகு உச்சநீதிமன்றத்திற்கு, முருகப்பெருமானின் பக்தர்கள் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
திருப்பரங்குன்றம் தீபத்தூண் குறித்த பாரம்பரிய நடைமுறைகளையும், பக்தர்களின் நீண்டகால கோரிக்கையையும் கருத்தில் கொண்டு, இனிவரும் ஆண்டுகளிலும் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு நிரந்தரமான தீர்வை மாண்புமிகு உச்சநீதிமன்றம் வழங்கும் என நம்புகிறோம்.
மேலும், மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளை மதித்து, எவ்வித இடையூறுகளும் இன்றி திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படுவதை, தவெக அரசு உறுதி செய்யும் என எதிர்பார்க்கிறோம்.
Guna retweeted
அம்மாபேட்டை அருகே உள்ள பூனாட்சி ஸ்ரீ ஐயப்ப சுவாமி திருக்கோயிலில் WE THE LEADERS அமைப்பின் தலைவர் அண்ணாமலை சாமி தரிசனம்.. பொதுமக்கள் உற்சாக வரவேற்பு..! பொதுமக்கள் நலத்திட்டப் பணிகளுக்காக புதிய வாகனத்தையும் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார் அண்ணாமலை..
#Erode | #Temple | #WeTheLeaders | #Annamalai | #PolimerNews
Guna retweeted
In Dec 2025, the HR&CE department under the erstwhile DMK govt told the Madurai bench of the Hon Madras High Court that the Deepathoon atop Thiruparankundram hill was placed by Jain monks to light lamps, contradicting its previous stand that the Deepathoon was a survey stone.
Yesterday, the incumbent TVK govt thru the District Collector of Madurai, has called the Deepathoon a survey stone in the Honourable Supreme Court.
How can a govt have entirely contradictory positions on the very same structure before two courts?
This only reflects a serious lapse in the TN govt’s (Be it DMK then or TVK now) understanding or a deliberate misunderstanding of the subject as a whole.
Guna retweeted
அடையாளக் குறியீடாக தரையில் வைக்கப்பட்டிருந்த இந்திய தேசியக் கொடி... உடனே பிரதமர் மோடி செய்த செயல்
#modi | #indianflag | #phillipines | #Puthiyathalaimuraitv | Puthiya thalaimurai
தவெக, திமுக, அதிமுக இந்த மூன்று கட்சிகளுக்கு ஆதரவாக,ஒட்டுமொத்தமாக 75% க்கும் அதிகமான அளவில் வாக்களித்திருக்கும் இந்துக்கள், தங்களுடைய தவறை உணர வேண்டிய நேரமிது. ஏமாற்றும் பொய்க்கால் குதிரைகளை நம்பாமல் ஓடும் குதிரையின் மேல் நம்பிக்கை கொள்ள வேண்டிய நேரமிது...
@annamalai_k போன்ற
Guna retweeted
நேற்று, திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவின்போது, இந்து சமய அறநிலையத்துறை குழு உறுப்பினரான திரு.வேல்முருகன், தமிழக முதலமைச்சருக்கு “அரோகரா”, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருக்கு "அரோகரா" என முழக்கமிட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. முருகப்பெருமானின் திருவிழாவையும், பக்தி முழக்கங்களையும் அரசியல் புகழ்ச்சிக்குப் பயன்படுத்துவது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல.
“அரோகரா” என்பது முருகப்பெருமானை போற்றிப் பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் எழுப்பும் புனிதமான முழக்கம். அந்த இறை முழக்கத்தை அரசியல் தலைவர்களுக்காகப் பயன்படுத்துவது ஆன்மிக மரபுகளைக் கொச்சைப்படுத்துவதுடன், முருகப்பெருமானை வழிபடும் கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளையும் புண்படுத்தும் செயலாகும்.
இந்து சமய அறநிலையத்துறையின் குழு உறுப்பினராக இருப்பவரே இத்தகைய செயலில் ஈடுபடுவது முற்றிலும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. பக்தர்களின் நம்பிக்கையையும் வழிபாட்டு மரபுகளையும் அவமதிக்கும் வகையிலான இதுபோன்ற செயல்களைத் தவிர்க்குமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு தமிழக முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்கள் அறிவுறுத்த வேண்டும்.
Guna retweeted
தீமையை அழித்து நன்மையை நிலைநாட்டிய முருகப்பெருமானின் அருளால், சஷ்டி விரதத்தை சூரசம்ஹார தினமாகிய இன்றுடன் நிறைவு செய்யும் பாக்கியம் எனக்குக் கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
நாளை நடைபெறவிருக்கும் திருக்கல்யாணத்தை முன்னிட்டு, சஷ்டி விரதத்தை நிறைவு செய்யும் பக்தர்கள் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துகள். முருகப்பெருமானின் அருள் அனைவருக்கும் என்றும் துணை நிற்கட்டும்!
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!
வீரவேல் முருகனுக்கு அரோகரா!
திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது என்பது காலங்காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் வழிபாட்டு மரபு. வருடம் ஒரு நாள், அமைதியாகச் சென்று, தீபம் ஏற்றுவதில், யாருக்கு என்ன பிரச்சனை வந்துவிடப் போகிறது.
தலைவன் அண்ணாமலை ❤️🔥
@annamalai_k #Annamalai
#WeTheLeaders #WTL
Guna retweeted
திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது என்பது காலங்காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் வழிபாட்டு மரபு. மக்களின் மத நம்பிக்கையோடும், பாரம்பரியத்தோடும் தொடர்புடைய இந்த நடைமுறையை, அரசியல் காரணங்களுக்காகத் தடுத்து நிறுத்துவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
கடவுள் மறுப்பு என்ற போலியான பிம்பத்தைக் கட்டமைப்பதற்காக, முந்தைய திமுக அரசு கையாண்ட அதே அணுகுமுறையை தற்போதைய தவெக அரசும் தொடர்வது முற்றிலும் ஏற்புடையதல்ல.
மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தெளிவான உத்தரவு பிறப்பித்த பிறகும், அந்த உத்தரவைச் செயல்படுத்துவதற்குப் பதிலாக மேல்முறையீடுகள் மூலமும் நிர்வாகத் தாமதங்கள் மூலமும் விவகாரத்தைத் தொடர்ந்து இழுத்தடிப்பது நீதித்துறையின் உத்தரவுகளுக்கும், பக்தர்களின் உரிமைகளுக்கும் எதிரானது. அரசின் பொறுப்பு பிரச்சனையை நீட்டிப்பதல்ல, சட்டத்தின் அடிப்படையில் தீர்வை உறுதிப்படுத்துவதே.
அனைத்து மதங்களையும் சேர்ந்த மக்கள் சகோதரத்துவத்துடனும் நல்லிணக்கத்துடனும் வாழ்ந்து வரும் திருப்பரங்குன்றத்தில், தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கி அமைதியைக் குலைக்கும் நடவடிக்கைகளுக்கு மாநில அரசே காரணமாகிவிடக் கூடாது. வருடம் ஒரு நாள், பக்தர்கள் ஒரு குழுவாக அமைதியாகச் சென்று, தீபம் ஏற்றுவதில், யாருக்கு என்ன பிரச்சனை வந்துவிடப் போகிறது.
காலங்காலமாகத் தொடரும் வழிபாட்டு உரிமையை இனியும் அரசியல் மற்றும் நிர்வாகக் காரணங்களைக் கூறி முடக்காமல், உயர்நீதிமன்ற உத்தரவை மதித்து, இந்த விவகாரத்திற்கு தவெக அரசு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
Guna retweeted
அறுபடை வீடுகளில் அருள்பாலிக்கும் முருகப்பெருமானை மனமுருகி வழிபட்டு, சஷ்டி விரதம் கடைப்பிடிக்கும் அனைத்து முருக பக்தர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
சஷ்டி விரதத்தின் நிறைவாக, இன்று நடைபெறும் சூரசம்ஹாரத் திருநாளிலும், நாளை நடைபெறவிருக்கும் திருக்கல்யாண வைபவத்திலும், முருகப்பெருமானின் அருளால் அனைவரது வாழ்விலும் தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகி, அன்பும் அமைதியும் வளமும் நிறைந்திடட்டும்.
வெற்றி வேல்! வீர வேல்!
Guna retweeted
Heartiest congratulations to our U-19 cricket team on defeating Pakistan by 1 wicket and to be crowned the U-19 Asia Cup Champions.
Our young boys have made the entire nation incredibly proud. The future of Indian cricket is in great hands.
Guna retweeted
இன்றைய தினம் கோவையில் நமது APJ Centre for Ethics and Politics மையத்தில், மாணவர்களின் கனவுகள், அவர்களின் குடும்பப் பொருளாதாரச் சூழலால் ஒருபோதும் தடைபடக்கூடாது என்ற உயரிய நோக்கத்துடன், TNPSC aspirants முன்னிலையில் நமது @WTLFoundation சார்பில், ஏற்றம் அகாடமி (Etram Academy) academy.wetheleader.org/ என்ற புதிய கல்வித் தளத்தை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
இதன் தொடக்கமாக, தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கான TNPSC Group 4 தேர்வு மற்றும், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய அளவிலான TN NMMS உதவித்தொகைத் தேர்வு என இரண்டு முக்கியத் தேர்வுகளுக்கும், தரமான பயிற்சியை முற்றிலும் இலவசமாக இந்தத் தளம் மூலம் வழங்கவிருக்கிறோம். தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளிலும் பாடங்கள், சிறு காணொளிப் பாடங்கள், பயிற்சி வினாக்கள், முந்தைய ஆண்டு வினாத்தாள்கள், மாதிரித் தேர்வுகள் என மாணவர்கள் முழுமையாக தயாராவதற்கு, இந்தத் தளம் உதவும்.
தரமான கல்வி என்பது வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே உரிய வாய்ப்பாக இருக்கக்கூடாது; ஒவ்வொரு மாணவரின் உழைப்புக்கும் திறமைக்கும் சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும். அந்த இலக்கை நோக்கிய எங்களின் மற்றுமொரு முன்னெடுப்புதான் நமது ஏற்றம் அகாடமி. மாணவர்கள் அனைவரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்கள் கனவுகளை நனவாக்க நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
academy.wetheleader.org/ (1/2)
Guna retweeted
அனைத்துக் குழந்தைகளுக்கும் இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
குழந்தைகள் மகிழ்ச்சியாக வாழும் நாடே, வளமான நாடு. குழந்தைகளின் கனவுகளுக்கும், திறமைகளுக்கும் ஊக்கமளித்து, அச்சமின்றி மகிழ்ச்சியாக வளர வழிவகுப்பது நம் ஒவ்வொருவரின் கடமை.
ஒவ்வொரு குழந்தைக்கும் அன்பும், பாதுகாப்பும், தரமான கல்வியும், விளையாடுவதற்கான வாய்ப்பும் சமமாகக் கிடைப்பதை உறுதி செய்வோம்.
Guna retweeted
மனு அளிக்க வந்த ஒரு சாமானியர் தாக்கப்பட்ட சம்பவமும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் வெளியிட்ட காணொளியைத் தொடர்ந்து, தன் மீது தாக்குதல் நடைபெறவில்லை என்று அவரையே வாக்குமூலம் அளிக்க நிர்பந்தித்ததாக வெளியாகியுள்ள தகவல்களும் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.
துணை சபாநாயகர் பொறுப்பில் இருக்கும் துறையூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. ரவி சங்கர் அவர்களும், சட்டத்தைக் காக்க வேண்டிய காவல்துறை ஆய்வாளரும் இத்தகைய செயல்களில் ஈடுபட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் வன்மையான கண்டனத்திற்குரியவை.
தாக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒருவருக்கு நீதி வழங்குவதற்குப் பதிலாக, தாக்குதலே நடக்கவில்லை என்று அவரையே சொல்ல வைப்பது எந்த வகையான சட்டம் ஒழுங்கு?
அதிகாரம் என்பது மக்களின் குரலை ஒடுக்குவதற்கான கருவி அல்ல. காவல்துறை என்பது அதிகாரத்தில் இருப்பவர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப செயல்படும் அமைப்பும் அல்ல.
பாதிக்கப்பட்ட திரு. கார்த்திக் குமார் அவர்களுக்கு நீதி கிடைப்பதை தவெக அரசு உறுதி செய்ய வேண்டும். இச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது பாரபட்சமற்ற விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


















