Dr_LEFT_ PANDI_TVK (@leftpandi) header
Dr_LEFT_ PANDI_TVK (@leftpandi) profile picture

தமிழக வெற்றிக்கழகத்தின் தேனி தெற்கு மாவட்ட செயலாளர் 🌿விவசாயிகளை 🌿 காப்போம்🧅🥕🥬 🌿விவசாயம்🌿 காப்போம்🍅🌶️🥥 போற உயிர் தளபதிக்காக போகட்டும்

Theni Allinagaram, India
Joined November 2015
Photo by Dr_LEFT_ PANDI_TVK (@leftpandi)Photo by Dr_LEFT_ PANDI_TVK (@leftpandi)Photo by Dr_LEFT_ PANDI_TVK (@leftpandi)Photo by Dr_LEFT_ PANDI_TVK (@leftpandi)Photo by Dr_LEFT_ PANDI_TVK (@leftpandi)Photo by Dr_LEFT_ PANDI_TVK (@leftpandi)Photo by Dr_LEFT_ PANDI_TVK (@leftpandi)Photo by Dr_LEFT_ PANDI_TVK (@leftpandi)Photo by Dr_LEFT_ PANDI_TVK (@leftpandi)Photo by Dr_LEFT_ PANDI_TVK (@leftpandi)
Dr_LEFT_ PANDI_TVK retweeted
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு சென்னை, கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ்.பாபு அவர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். இதனையடுத்து, இன்று முதல் ஏழு நாட்களுக்கு கழகத்தின் சார்பில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. மேலும் இந்த ஏழு நாட்களுக்கும் கழக நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, கழகக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்பதை மாண்புமிகு முதலமைச்சர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறோம். என்.ஆனந்த், மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர், பொதுச்செயலாளர், தமிழக வெற்றிக் கழகம்.
226
2,371
42
8,334
401,059
Dr_LEFT_ PANDI_TVK retweeted
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். கடந்த சட்டமன்றத் தேர்தலில், யாருக்கும் வழங்கிடாத பேரன்பையும், பெருவாரியான வாக்குகளையும் நமக்கு வாரி வழங்கி, வாகை சூடும் வரலாற்றைத் திரும்ப வைத்து, உங்களின் முதல் சேவகனாக என்னை அமர்த்திய உங்களுக்கு என் நன்றிக் கடனைத் திருப்பி அளிக்கும் நேரமிது. உண்மையான மனசாட்சியுள்ள மக்களாட்சியை அமர்த்திய தமிழக மக்கள் அனைவருக்கும் எவ்வளவு நன்றி சொன்னாலும் அது மிகையாகாது. தற்போது நடைபெற்றுக் கொண்டிருப்பது, தமிழக மக்களாகிய உங்கள் தலைமையிலான ஆட்சி! இந்த ஆட்சி தொடர்ந்திட, மென்மேலும் வலுப்பெற உங்கள் ஆதரவு எப்போதும் தேவை. கடந்த 25ஆம் தேதி (25.09.2026) மதுராந்தகம் தொகுதியிலும், 30ஆம் தேதி (30.09.2026) தாராபுரம் தொகுதியிலும் இடைத்தேர்தலுக்காக நாம் பரப்புரை மேற்கொண்டோம். இதனைத் தொடர்ந்து கடந்த 2ஆம் தேதி (02.10.2026) மதுராந்தகம் தொகுதியிலும், இன்று (04.10.2026) தாராபுரம் தொகுதியில் வாகனப் பிரசாரம் மேற்கொண்டோம். இந்த இடைத்தேர்தல் பரப்புரைக்காக நாம் வந்த போது, செங்கல்பட்டு மாவட்ட மக்களும், கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட மக்களும் நமக்களித்த வரவேற்பும், நம்மிடம் காட்டிய அன்பும் பாசமும் எதற்கும் நிகரில்லாதது. எக்காலத்திற்கும் என் நெஞ்சில் நிலைத்திருக்கக் கூடியது. இதற்காக எவ்வளவு நன்றி சொன்னாலும் அது மிகையாகாது. இதற்காக உங்களுக்கு வாழ்நாள் கடமைப்பட்டுள்ளோம். நடைபெற உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், இவ்வளவு காலமாக நம்மை ஏமாற்றி வந்த, தீய சக்தியையும், தீர்ந்துபோன சக்தியையும் புறந்தள்ளுவீர்கள்; மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி சார்பில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களை ஆதரிப்பீர்கள்; மதுராந்தகம் தொகுதி திருமதி மரகதம் குமரவேல் மற்றும் தாராபுரம் தொகுதி திருமதி சத்தியபாமா ஆகியோருக்கு வெற்றிச் சின்னமாம் நமது விசில் சின்னத்தில் உங்களின் பொன்னான வாக்குகளை அளிப்பீர்கள் என்பதை இந்த நாடறியும். அதற்காக நான் முன்கூட்டியே உங்களுக்கு என் நன்றியை உரித்தாக்குகின்றேன். மேலும், இந்தத் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், தேர்தல் கண்காணிப்பாளர்கள், தேர்தல் பொறுப்பாளர்கள், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், மாவட்டக் கழக நிர்வாகிகள், முழு ஒத்துழைப்பு நல்கிய தன்னார்வலர்கள் குழு, காவல் துறையினர், மருத்துவக் குழுவினர், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி. தமிழ்நாட்டு மக்களுக்கான முதன்மைச் சக்தியான நாம், மக்கள் நலன்களைக் காப்பதற்காக, எதிலும், எப்போதும் சமரசம் செய்துகொள்ளவே மாட்டோம். லஞ்சம், ஊழலற்ற நேர்மையான நிர்வாகத்துடன் மனசாட்சி உள்ள மக்களாட்சியை இப்போது போலவே எப்போதும் தொடர்வோம்! மீண்டும் நினைவூட்டுகிறோம். தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதி மக்களே, நீங்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டிய ஒரே சின்னம் உங்கள் வெற்றிச் சின்னமான விசில் சின்னம் என்பதை மறந்துவிடாதீர்கள். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்.
656
5,200
112
15,188
489,854
Dr_LEFT_ PANDI_TVK retweeted
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணித் தலைவர்களின் தேர்தல் பரப்புரை மற்றும் பொதுக்கூட்டம்! தமிழ்நாட்டின் மதச்சார்பற்ற தன்மையை, தனித்துவமான சமூகநீதியைப் போற்றிப் பாதுகாத்து, ஊழலற்ற, நேர்மையான, திறன் மிகுந்த ஆட்சியைத் தமிழகத்திற்கு வழங்கிக் கொண்டிருக்கிறார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர், வெற்றித் தலைவர் அவர்கள். அந்த நல்லாட்சி தொடரவும் ஜனநாயக மாண்புகள் காக்கப்படவும் அமைந்த கொள்கைக் கூட்டணியே மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தமிழக வெற்றிக் கழகம் ஒருங்கிணைப்பில் உருவான இந்தக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகளின் சார்பில், மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியின் வேட்பாளர் திருமதி மரகதம் குமரவேல் அவர்களை ஆதரித்து, வருகின்ற அக்டோபர் 1ஆம் தேதி, மாலை 4 மணிக்கு மதுராந்தகத்தில் மாபெரும் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், முன்னணி நிர்வாகிகள், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், மாண்புமிகு நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு வாக்கு சேகரிக்கிறார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். நாள்: 01.10.2026, வியாழக்கிழமை நேரம்: மாலை 4 மணி இடம்: மதுராந்தகம் (ஹோட்டல் ஹைவே இன் அருகில்). தலைமை நிலையச் செயலகம், தமிழக வெற்றிக் கழகம்
74
915
6
2,638
115,476
Dr_LEFT_ PANDI_TVK retweeted
மாண்புமிகு தமிழக முதல்வர், தங்க தளபதி @CMOTamilnadu அவர்களை, தேனி தெற்கு மாவட்ட செயலாளர் அண்ணன் @leftpandi அவர்கள் நேற்று மதுரையில் வரவேற்ற போது 🙏❤️ #CMVijayAtMadurai
3
5
79
Dr_LEFT_ PANDI_TVK retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், வெற்றித் தலைவர் அவர்கள் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத் தோழமைக் கட்சிகளின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் வாகை சூடும் வரலாறு படைத்த தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான புதிய கூட்டணிக்கு, மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி எனப் பெயர் சூட்டப்பட்டது. மேலும், தமிழ்நாட்டில் இக்கூட்டணியின் தலைவராக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். #Secular_Social_Justice_Victory_Alliance #TVKVijay #மதச்சார்பற்ற_சமூகநீதி_வெற்றிக்_கூட்டணி #தமிழக_வெற்றிக்_கழகம்
141
2,209
35
6,788
100,467
Dr_LEFT_ PANDI_TVK retweeted
சட்டமன்றத்தில் 7.9.2026 அன்று காவல்துறை மானிய கோரிக்கையில், என்னுடைய பதிலுரையின் இடையேயான எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எவ்வகையிலும் உள்நோக்கம் கொண்டதில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆகவே, தனிப்பட்ட முறையில் யார் மனதையும் புண்படுத்துகிற செயலாக அதை அர்த்தம் கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
2,754
6,502
1,047
27,032
3,494,049
Anga Avanungala misa ku explanation kudu vachittu inga silent ah work ah pakkura paru mass na nee @TVKVijayHQ nitter.gq/Vignesh_twitz/status/2…
12
42
290
Dr_LEFT_ PANDI_TVK retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களின் அறிவுறுத்தலின்படி, நாளை ஆகஸ்ட் 15ஆம் தேதி மக்களும், மக்களின் பிரதிநிதிகளும் தங்கள் கிராமங்கள் மேம்பட கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். கிராம சபை சிறக்கட்டும்!கிராமங்கள் செழிக்கட்டும்!! #Gramasabai
55
1,077
4
4,236
68,247
Dr_LEFT_ PANDI_TVK retweeted
TN Minister Vijay Balaji visits Anna cooperative spinning mill in Theni, vows to boost production, create more job opportunities for youth.
4
21
3,380
Dr_LEFT_ PANDI_TVK retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் தளபதி அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! உங்களின் தலைமையில் தமிழகம் ஒரு புதிய பொற்காலத்தை நோக்கிய அடிகளை எடுத்து வைத்துள்ளது. கல்வி, சுகாதாரம், தொழில் மற்றும் உள்கட்டமைப்பு என அனைத்துத் துறைகளிலும் நீங்கள் மேற்கொள்ளும் புரட்சிகரமான மாற்றங்கள் அனைத்தும் என்றும் நீடித்திருக்கக் கூடிய புதிய வரலாற்றைப் படைத்து வருகிறது. இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் தொலைநோக்குப் பார்வையும், விவசாயிகள், தொழிலாளர்கள், பெண்கள், குழந்தைகள் என சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் அரவணைத்து, அவர்களின் ஆரோக்கியமான எதிர்காலத்தை நோக்கிய உங்களின் சிந்தனைகள் என்றும் போற்றத்தக்கவை. நீங்கள் நீண்ட காலம் நல்ல ஆரோக்கியத்துடனும், நீடித்த ஆயுளுடனும் வாழ்ந்து, நம் மாநிலத்தை தொடர்ந்து வழிநடத்த வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் மக்களின் முன்னேற்றத்திற்காக நீங்கள் மேற்கொள்ளும் உன்னதப் பணியில் உங்களோடு இணைந்து பயணிப்பதில் பெருமிதம் கொள்கிறேன். வாழ்க தளபதி! வாழ்க வெற்றித் தலைவர்! நம் தளபதி… நம் தலைவர்… தமிழக மக்களின் நம்பிக்கை! தமிழ்நாட்டின் எதிர்காலம்! இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் தளபதி! #HBDCMJosephVijay @TVKVijayHQ
67
1,396
8
6,684
59,295
தீய சக்தி திமுக அதிமுக அமமுக மற்றும் பல மாற்று காட்சிகளில் இருந்து பல்வேறு நிர்வாகிகள் இன்று மாண்புமிகு அமைச்சர் திரு @CTR_Nirmalkumar அவர்கள் தலைமையில் தேனி தெற்கு மாவட்ட செயலாளர் அண்ணன் @leftpandi முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்துகொண்டனர்
3
7
763
முதலமைச்சர் @TVKVijayHQ (ம) அமைச்சர், பொதுச் செயலாளர் @BussyAnand அவர்கள் ஆசியுடன், சட்டத்துறை(ம) எரிசக்தி துறை அமைச்சர் @CTR_Nirmalkumar(ம) தேனி தெற்கு மாவட்ட செயலாளர் அண்ணன் @leftpandi முன்னிலையில் #திமுக,#அதிமுக கட்சியைச் சேர்ந்த பலர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர் 🙏
7
30
660
திமுக அதிமுக அமமுக மற்றும் பல மாற்று கட்சியில் இருந்து விலகி மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்ட துறை அமைச்சர் தேனி மாவட்ட பொறுப்பு அமைச்சர் அண்ணன் திரு @CTR_Nirmalkumar முன்னிலையில் தேனி தெற்கு மாவட்ட செயலாளர் @leftpandi அவர்கள் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்து கொண்டனர் இன்றைய தினத்தந்தி‌ மற்றும் தினமலர் செய்திகளில்
2
3
425
Dr_LEFT_ PANDI_TVK retweeted
அருமை நண்பர் திரு. அஜித் குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி அம்மையார் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன். வாழ்வில் அனைத்து நிலைகளிலும் அரணாக இருந்து அரவணைத்த தாயாரை இழந்து வாடும் நண்பர் திரு. அஜித் குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். #CMJosephVijay‌
474
7,817
131
33,496
832,929
Dr_LEFT_ PANDI_TVK retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (20.05.2026) தலைமைச் செயலகத்தில் 2.90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககத்தின் பயன்பாட்டிற்காக 40 புதிய வாகனங்களை வழங்கிடும் வகையில், அவ்வாகனங்களுக்கான சாவிகளை ஒட்டுநர்களுக்கு வழங்கி, வாகனத்தை இயக்கி தொடங்கி வைத்தார்கள். #CMJosephVijay‌
313
4,382
51
22,103
481,663
Dr_LEFT_ PANDI_TVK retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (20.05.2026) தலைமைச் செயலகத்தில், விவசாயிகளின் நலன் கருதி நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல அனுமதி அளிப்பது குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. #CMJosephVijay‌
137
1,224
21
4,314
130,758
Dr_LEFT_ PANDI_TVK retweeted
மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. என். ஆனந்த் அவர்களிடம் தமிழ்நாடு பசுமை / புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சிறப்பாக சாலைகள் மேம்பாடு செய்ததில், தேசிய அளவில் இரண்டாம் மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்வதைப் பாராட்டி 1/2
5
140
1
417
11,667
Dr_LEFT_ PANDI_TVK retweeted
மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. என். ஆனந்த் அவர்களிடம் உஷ்பெகிஸ்தான் நாட்டின் தாஷ்கண்டில் நடைபெற்ற 15 வயதிற்குட்பட்டவர்களுக்கான ஆசிய குத்துச்சண்டை போட்டியில் வெற்றிபெற்ற தமிழ்நாடு வீரர் சாஸ்தா வசந்த் அவர்கள் 1/2
4
197
640
14,057
Dr_LEFT_ PANDI_TVK retweeted
தமிழகம் முழுவதும் மக்கள் பணிகளை உத்வேகத்துடன் செயல்படுத்தி வருகின்றனர் நமது கழகச் சட்டமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும்! இதுவே மக்களுக்கான ஆட்சி; நமது முதலமைச்சர் விஜய் அவர்களின் 'மனசாட்சி' உள்ள மக்களாட்சி!
70
1,292
5
3,801
41,250
மாண்புமிகு மின்சார துறை மற்றும் சட்ட துறை அமைச்சர் திரு. @CTR_Nirmalkumar அவர்களை... தமிழக வெற்றிக் கழக தேனி தெற்கு மாவட்ட செயலாளர் சேவை செம்மல் @leftpandi* அவர்கள் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்த தருணங்கள்....
9
79
1,199