kn நேரு மீது ஊழல் வழக்கு பதிவு செய்ய தடை கொடுக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்.
பாஜக தான் இனி காப்பாத்தனும்.
நடிப்பு அரக்கனுக்கு முன் ஜாமீன் தர முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்.
இனி மோடி காலில் விழுந்து தான் தப்பிக்கணும்.
இந்த மாதம் மழை ஆரம்பிக்கும் முன்பாக 32% கொள்ளளவில் இருந்த சென்னையின் நீர் இருப்பு தற்பொழுது 11% அதிகரித்துள்ளது. கடந்த வருடத்தில் இந்த நேரம் 70 சதவிகிதத்துக்கு மேல் தண்ணீர் நிரம்பி இருந்தது.
கிலோ மீட்டருக்கு 1000 ரூபாய் என்று நிர்ணயித்து விடுங்கள். அவனுங்க ஓரமா ஸ்டாண்ட்ல பாட்ஷா பாட்டு கேட்டு தூங்கட்டும்.
திமுக ஆட்சியில் மழை பெய்தால் முதல்வர் மற்றும் துணை முதல்வர் பார்வையிட போகும் இடங்களுக்கு அனைத்து அமைச்சர்களும் குடை பிடிக்க போய் விடுவார்கள். தவெக ஆட்சியில் முதல்வர் எங்கேயும் போகாமல் ஒவ்வொரு அமைச்சரும் ஒவ்வொரு பகுதிக்கு போய் பார்வையிட்டு நிவாரண பணிகளை மேற்கொள்கிறார்கள்.
இதில் எந்த மாடல் நல்ல மாடல்?
ஒரே ஒப்பாரியை வேறு வேறு மாதிரி செய்கிறார் ஸ்டாலின்.
“மூடநம்பிக்கையில் இருந்து...”
#MKStalin | #DMK | #Vijay | #CMJosephVijay | #CMVijay | #TVK | #TNGovt | #Tamilnadu | #Politics
திருடர்களை பார்க்க இவர்கள் கூடுவார்களாம். ஆனால் மக்கள் நடிகர்களை பார்க்க வரக் கூடாதாம்.
இத்தனை வருடங்களாக அரசியல் அதிகாரத்தில் இருந்து மக்களை ஏமாற்றியவர்கள் தான் நடிகர்களை நோக்கி மக்களை தள்ளி இருக்கிறார்கள்.
இது கொட்டிவாக்கம் ஸ்ரீராம் அவன்யூ 3வது தெரு மற்றும் நடேசன் காலனி முதல் தெருவின் படம். இன்று எடுக்கப்பட்டது. இதில் மழைநீர் கால்வாய்க்கும் சாலைக்கும் இடையில் கால்வாய் அமைத்த ஒப்பந்ததாரர் சிமெண்ட் தரை அமைத்திருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை. இதனால் அந்த பகுதி முழுவதும் சகதியாகி புல் முளைத்து காணப்படுகிறது. 2வது தெருவிலும் இதே நிலை தான். என்னுடைய வீட்டு முன்பாக மட்டும் நான் தரை போட்டு பராமரித்துக் கொண்டு இருப்பதால் அங்கே புற்கள் முளைக்கவில்லை. இது ஒப்பந்ததாரரின் டெண்டர் விதிகளில் கொடுக்கப்பட்டுள்ள பணியாக இருக்கும்பட்சத்தில் இதை முடிக்காமல் அவர்களால் பில் வாங்க முடியுமா? ஏன் இந்த பணியை அவர்கள் இது வரை செய்யவில்லை? எப்பொழுது செய்வார்கள்? @chennaicorp @CMOTamilnadu @sameerangs @EcrPSaravanann @ThamizhachiTh
சாலை உயரம் அதிகரித்து வீடு பள்ளத்தில் போனதால், அதை உயர்த்த பணம் இல்லாமல் வீட்டை விற்று விட்டார்கள். புதிதாக வாங்கியவர் தற்பொழுது அதை இடித்து வருகிறார். இது போல பலரது உழைப்பால் உருவான வீடுகளை இடித்து தள்ளி இருக்கிறது தமிழக அரசின் முறையில்லாத சாலை பணிகள். எங்கள் சாலையில் கடந்த இரண்டு வருடங்களில் இடிக்கப்படும் 3வது வீடு இது. இது போக கடந்த 5 வருடங்களில் 6 வீடுகள் பல லட்சங்கள் செலவு செய்து ஜாக்கி வைத்து தூக்கப்பட்டிருக்கின்றன.
பழைய சாலையை அகற்றிவிட்டு அதே உயரத்தில் புதிய சாலை அமைக்க கூட தெரியாத, முடியாத ஒப்பந்ததாரர்களையும், அதை கண்காணிக்க திறனில்லாத அதிகாரிகளையும் கொண்டது தான் நமது பெருமைக்குரிய சென்னை மாநகராட்சி.
#Kottivakkam #SriramAvenue
@CMOTamilnadu @chennaicorp @sameerangs @TVKVijayHQ @AadhavArjuna
ஊரெல்லாம் மழை பெய்யும் போது சென்னை வேடிக்கை பார்க்கும். சென்னையில் மழை பெய்யும் போது ஊரே திரும்பி பார்க்கும்.
#ChennaiRains
என்னுடைய வீட்டு சம்ப் உள்ளே தண்ணீர் மிகவும் குறைவாக வந்து கொண்டிருந்ததால் மெட்ரோ வாட்டர் நிர்வாகத்தில் புகார் அளித்தேன். அவர்கள் என்னுடைய புகாரை சரி செய்ய செய்த முயற்சி மிகவும் ஆச்சரியத்தை தந்தது. சாலையை தோண்ட அனுமதி இல்லை என்பதால் வீட்டு அருகே இருக்கும் குழாய் இணைப்பில் இருந்து தண்ணீரை உள்ளே செலுத்தி அடைப்பை எடுக்க முயற்சி செய்தார்கள். முழு பலன் இல்லாவிட்டாலும் முன்பை விட அதிக தண்ணீர் உள்ளே வருகிறது. சாலை தோண்ட அனுமதி கிடைக்கும் வரை சமாளிக்க முடியும் என்று நினைக்கிறேன்.
ஆனால் அந்த புகாரை அவர்கள் கையாண்ட விதம் அருமையாக இருந்தது. இந்த புகார் என்று இல்லை, இதற்கு முன்பு கழிவுநீர் குழாய் பதிக்கும் பணியில் கொடுத்த புகார்களையும் பொறுமையாக சரி செய்தார்கள். ஒப்பந்ததாரர்களை சரியாக கையாளுகிறார்கள். மெட்ரோ வாட்டர் AE அவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுகளும். வேலை செய்ய வந்தவர்களில் ஒருவர் கூட பணம் கேட்கவில்லை என்பது உண்மையிலேயே மகிழ்ச்சியான விஷயம்.
கொட்டிவாக்கம் | ஸ்ரீராம் அவன்யூ
@CHN_Metro_Water @CMOTamilnadu @TVKVijayHQ
நீங்க விலக எல்லாம் தேவை இல்லை. மக்களே விலக்கி விடுவார்கள். 5 வருடம் சபாநாயகராக அடித்த கூத்து எல்லாம் சந்தி சிரிக்குது.
நான் சோலார் பவர் கம்பெனி நடத்துவதாகவும் அதன் அனுமதிக்கு பல பேர் மூலம் முயற்சி செய்ததாகவும் மின் துறை அமைச்சர் சொல்கிறார். அதனை அவர் நிரூபித்தால் அடுத்த நிமிடமே நான் அரசியலை விட்டு விலகத் தயார். நிரூபிக்கத் தவறினால் அமைச்சர் பதவியை விட்டு விலகத் தயாரா? கேட்டுச் சொல்லுங்கள் சிஎம் சார் - முன்னாள் சபாநாயகர் அப்பாவு
#Appavu #CMVijay #dmk
பொது இடங்களை இப்படி அசிங்கப்படுத்தி தங்களுக்கு விளம்பரம் செய்து கொள்ள இவர்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட கூச்சமாகவே இருக்காதா?



















