
Faculty. School of #Criminology and Criminal Justice @TNOUniversity. I Write, Speak,Teach, Research on Criminology, #Victimology, Human Rights & Social Justice.
Tamil Nadu
Joined May 2010
- Tweets15.4K
- Following735
- Followers2K
- Likes36.8K
சுற்றிலும் வயல்வெளிகளும்,
பணை மரங்களும்,குளங்களும்,
மேற்கு தொடர்ச்சி மலைகளும்,
கடனா நதி அணைகட்டும்
அதனடிவார கடனா நதியும் இந்தியாவில் மேற்கு திசையை
வாயிலாக கொண்ட சிவசைலம்
சிவன் கோவிலையும் அடையாளமாக கொண்டது என் பூர்வீக கிராமம். #அழகப்பபுரம்
தர்மபுரம்மடம் ஊராட்சி
தென்காசி மாவட்டம்
Anantharamakrishnan Senthivel, Ph.D. retweeted
உறுதிப்பாடற்ற ஒரு கோழை அரசு' என தமிழ்நாட்டை தலையில் குட்டி அனுப்பியிருக்கிறது உச்சநீதிமன்றம்.
அரசியல் சுயமரியாதையை, இந்தியாவிற்கு கற்றுக்கொடுத்த தமிழ்நாட்டின் மானத்தை வாங்கியிருக்கிறது தவெக அரசு.
மாநிலக் காவல்துறை மீது நம்பிக்கை இல்லை' என மத்தியப்படைகளை தமிழ்நாட்டிற்குள் அனுமதிக்கவிட்டு தமிழ்நாடு வரலாற்றில் பலவீனமான முதலமைச்சராக இடம்பெறுகிறார் விஜய்.
உச்சநீதிமன்ற நீதிபதிய பாத்து 'ஐயோ கலாய்ப்பாரேன்னு' இப்போது பேசுவாரா முதலமைச்சர்.
தவெக அமைச்சர்கள்- எம்எல்ஏக்கள் -நிர்வாகிகள் பாலியல், வன்முறை குற்றச் செயல்களால் ஆறு மாதத்திற்குள் தமிழ்நாட்டை உத்திரப்பிரதேசமாக மாற்றினார்கள்.
நிர்வாகத் திறமையின்மையால், அரசியல் முதிர்ச்சியின்மையால், கொள்கையற்ற அணுகுமுறையால் மதுரையை அயோத்தியாக மாற்றியிருக்கிறார் முதலமைச்சர் விஜய்.
தமிழ்நாட்டிற்கு கருப்பு நாள்.
Anantharamakrishnan Senthivel, Ph.D. retweeted
தமிழ்நாட்டு வரலாற்றில் இல்லாத வகையில் மரபு - மதநல்லிணக்கம் - மாநில உரிமைக்கு ஆபத்தைத் தேடித் தந்திருக்கிறது திறனற்ற த.வெ.க. அரசு!
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு தவெக அரசின் அப்பட்டமான தோல்வி!
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் நாளை தீபம் ஏற்ற உத்தரவிட்டிருக்கிறது உச்சநீதிமன்றம். நிர்வாகத் திறனற்ற விஜய் அரசு, நீதிமன்றத்தில் வலிமையான வாதங்களை வைக்காமல் தமிழ்நாட்டிற்கு அவமானத்தைத் தேடிக் கொடுத்துவிட்டது.
’மலை முழுவதும் CRPF படையிடம் ஒப்படைப்பு; கோயில் அறங்காவலர்கள் குழு கலைப்பு; முன்னாள் நீதிபதிகள் கொண்ட குழுவிடம் பொறுப்பு ஒப்படைப்பு; தலைமைச் செயலாளர், DGP, அறநிலையத்துறை ஆணையர், மதுரை ஆட்சியர், DC உள்ளிட்டோர் நேரில் ஆஜராக வேண்டும்’ என உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் அதிர்ச்சி அளிக்கின்றன.
உச்சநீதிமன்றத்தில் முறையான வலுவான வாதங்களை முன்வைக்காமல் இருந்தது, பல்வேறு இரட்டை நிலைப்பாடுகளை எடுத்தது, அரசு பொறுப்பேற்க வேண்டிய இடத்தில் கோழைத்தனமாக அறங்காவல் குழுவைக் காரணம் காட்டி ஒளிந்துகொண்டது எனக் குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல எல்லாவற்றையும் சிதைத்திருக்கிறது த.வெ.க. அரசு.
திருப்பரங்குன்றத்தில் காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வந்த வழிபாட்டு மரபுகளையும், வழக்கங்களையும் காப்பாற்றியது தி.மு.க. அரசு. மதநல்லிணக்கத்தையும், அமைதியையும், மாநில உரிமையையும் நிலைநாட்டியது தி.மு.க. அரசு.
இன்று மொத்தமாகத் தன் திறமையின்மையால், விளம்பர வெறியால், கோழைத்தனத்தால் கோட்டை விட்டுள்ளது த.வெ.க. அரசு.
அறுபது ஆண்டுகளாகத் திராவிட இயக்கம் இரத்தம் சிந்தி, உயிர்கள் பல நீத்துப் போராடிப் பெற்றுப் பாதுகாத்து வந்த மாநில உரிமைகளையும், கோயில்கள் மோசடிக் கும்பல்களிடம் இருந்ததை, 100 ஆண்டிற்கு முன்பு தொடங்கிப் படிப்படியாக மக்களாட்சியின் கட்டுப்பாட்டில் திராவிட இயக்கமும் - திமுகவும் கொண்டு வந்ததையும் ஒரே வழக்கில் ஒன்றிய அரசிடம் தாரைவார்த்துள்ளனர்.
முதலமைச்சர் தமது பொறுப்புகளைப் பிறரிடம் outsource செய்துவிட்டு, stand-up comedian-ஆக வசனங்களை நடித்துக் காட்டிக் கொண்டிருக்கின்ற ஒரு மாநில அரசின் நிலை என்னவாக இருக்கும் என்பதைத்தான் இன்றைய உச்சநீதிமன்ற உத்தரவு காட்டியிருக்கிறது.
தமிழ்நாட்டின் முதலமைச்சராகத் தற்போது இருப்பவர் அரசியலுக்குப் புதியவர், ஆட்சி நிர்வாகத்தில் அனுபவமற்றவர் என்பதல்ல பிரச்சினை.
அனுபவம் வாய்ந்தவர்களையும், அறிவுடைய எவரையும் அவர் அண்டவே விடுவதில்லை என்பதுதான் தமிழ்நாட்டின் பல பிரச்சினைகளுக்கும் காரணமாக அமைந்து வருகிறது.
இத்தனைக்குப் பிறகும்கூட முதலமைச்சர் விஜய் வாயைத் திறக்க மறுப்பது தமிழ்நாட்டிற்குச் செய்யும் வரலாற்றுத் துரோகம்.
நான் தமிழ்நாட்டு மக்களிடம் வைக்கும் கோரிக்கை: எந்தச் சூழ்நிலையிலும் நம்முடைய மதநல்லிணக்கத்திற்குப் பாதகம் வராமல் காப்பாற்றுவோம். நம் வருங்காலத் தலைமுறைக்கு நாம் எடுத்துக்காட்டாய் இருப்போம்.
Anantharamakrishnan Senthivel, Ph.D. retweeted
தொகுதி மறுவரையறையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து இந்தியாவிலேயே முதன் முதலில் குரல் எழுப்பியது தி.மு.க.தான்!
நியாயமான மறுவரையறை என்ற கோரிக்கையுடன் அகில இந்தியத் தலைவர்களை ஒன்றிணைத்து முதன் முதலில் கூட்டம் நடத்தப்பட்டதும், சென்னையில்தான்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தின்படியும், நியாயமான தொகுதி மறுவரையறைக்கான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்களின்படியும், நாம் முன்வைத்த உறுதியான கோரிக்கைகள்:
• நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டால், எக்காரணத்தைக் கொண்டும், தமிழ்நாட்டின் பங்கு தற்போதுள்ள 7.18%-ல் இருந்து குறையக் கூடாது!
• 1971 மக்கள்தொகை அடிப்படையில், மாநிலங்களுக்கு இடையேயான நாடாளுமன்றப் பிரதிநிதித்துவ விகிதாசாரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு, முன்னர் நிலைப்படுத்தப்பட்டவாறே, அடுத்த 25 ஆண்டுகளுக்கும் எந்தவித மாற்றமும் செய்யப்படக் கூடாது!
எடுத்த இந்த இரண்டு நிலைப்பாட்டிலும் தி.மு.க. இன்றும் என்றும் உறுதியாக இருக்கிறது. இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை, சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை!
ஊடகங்களில் பரப்பப்படும் ஊகங்களும், முதுகுகுத்திகளின் முணுமுணுப்புகளும் எங்களது இந்த நிலைப்பாட்டை எந்த விதத்திலும் அசைத்துப் பார்க்காது.
பதவிக்காகக் கொள்கையை உதறிவிட்டுச் செல்லும் மானமற்ற, நன்றிகெட்ட கூட்டத்தினர் இதனை உணர வேண்டும்.
தமிழ்நாட்டின் நலனைக் கழகம் ஒருபோதும் விட்டுக்கொடுக்காது. கொண்ட கொள்கையில் இருந்து தடம் மாறாது!
The DMK was the first in India to raise its voice against the dangers of delimitation!
It was only in Chennai that political leaders from across the country came together for the first time to demand fair delimitation.
In keeping with the resolution passed by the Tamil Nadu Legislative Assembly and the resolutions adopted at the Joint Action Committee meeting for #FairDelimitation, we put forth two categorical demands:
• If the number of parliamentary constituencies is increased, under no circumstances should Tamil Nadu’s existing 7.18% share of seats in the lower house be reduced!
• The existing proportion of parliamentary representation among States, as determined on the basis of the 1971 Census and frozen earlier, must remain frozen for another 25 years!
The DMK stands firm on these two demands and will continue to do so. There is no change in our position, and there is no question of any compromise!
Neither the speculations being circulated in the media nor the wails of backstabbers can shake our resolve.
The shameless and ungrateful lot who abandoned their principles for positions of power must realise this.
The DMK will never compromise on Tamil Nadu’s interests. Nor will it depart from its principles!
Anantharamakrishnan Senthivel, Ph.D. retweeted
The government’s announcement of a special session of Parliament is a complete violation of established parliamentary norms and conventions.
The Monsoon Session was deliberately left unprorogued since mid-August. A regular Winter Session would have required at least 14 days’ notice. Instead, a special session is being called with barely three days’ notice.
No agenda. No consultation. No clarity. No meaningful opportunity for MPs to hold the government accountable through Questions, Zero Hour and other parliamentary devices.
The message is clear: the BJP has no regard for parliamentary accountability or democratic conventions. Its priority is to push its own agenda to continue in power, even at the cost of trampling our constitutional vision.
What a shame that this was announced on Constitution Day!
Anantharamakrishnan Senthivel, Ph.D. retweeted
How do they explain their silence for so many days ? How are they effective governance personnel of the IAS cadre who could not come to the rescue of their own colleague who is junior in service to them. Shame on the IAS association which did not rush to meet the @CMOTamilnadu and represent on her behalf. Do they know that the District Collectors are Chairpersons of the Local Complaint Committee under the POSH Act.
Tamil Nadu IAS officers’ association urges action against TVK MLA Arul Vignesh
thenewsminute.com/tamil-nadu…
இன்று எழுபத்து ஏழாவது அரசியலமைப்பு நாளில், அறிவாசான், அண்ணல் அம்பேத்கர் நமக்களித்த அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதோடு, சமத்துவம், சமூக நீதி, மதச்சார்பின்மை, கூட்டாட்சித் தத்துவம் ஆகியவற்றின் மாண்பு, விழுமியங்களை சமரசமின்றி காத்திட உறுதியேற்போம்.
#ConstitutionDay
52
Anantharamakrishnan Senthivel, Ph.D. retweeted
On this day in 1949, India adopted a remarkably progressive Constitution that guaranteed equality and laid the foundation for social justice in a society riddled with centuries of inequalities.
Babasaheb Dr. B.R. Ambedkar envisioned our Constitution as a living document, evolving with the changing needs and aspirations of society.
After 75 years of our constitutional journey, a comprehensive review is imperative to make India truly federal. It was with this objective that our #DravidianModel Government constituted the High-Level Committee on Union-State Relations headed by retired Supreme Court Justice Kurian Joseph.
Though the present rulers have chosen to disband the Committee, the DMK’s crusade for State autonomy and genuine federalism will continue.
On this #ConstitutionDay, let us resolve to protect the progressive ideals of our Constitution and further strengthen its federal character.
Anantharamakrishnan Senthivel, Ph.D. retweeted
Shame on you, Chief Secretary of Tamil Nadu; Shame on you IAS Association; shame on you DGP Tamil Nadu. It needed the Madras High Court to come to the aid of a District Collector
Anantharamakrishnan Senthivel, Ph.D. retweeted
It took the Judiciary to shake up the TVK Govt. A strong rebuke by Justice Victoria Gowry outside the court and a pointed question by Justice Lakshmi Narayanan inside the court. TVK govt is unravelled.
What an absolute shame on the Chief Secretary and the Chief Minister.
The Chief Secretary is not able to protect his own officer and the Chief Minister protecting his own MLA.
The Chief Minister did not take any action on the MLA, as he has to protect his own Chair.
Why did the Chief Secretary remain a mute spectator is the million dollar question?
Anantharamakrishnan Senthivel, Ph.D. retweeted
தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ், மாவட்ட ஆட்சியரிடம் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாகச் செய்திகள் வெளியானபோதே, இதுகுறித்து விசாரித்து, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன்.
அன்று என்னையும், பிற அரசியல் தலைவர்களையும், தி.மு.க.வையும் கேள்வி கேட்டவர்களும், பெண்களின் பாதுகாப்பு குறித்துப் பேசுவதைக்கூட அரசியல் செய்வதாகக் குற்றம்சாட்டியவர்களும் இன்று என்ன சொல்லப் போகிறார்கள்?
ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினருக்கு எதிராகத் துணிச்சலுடன் காவல்துறையில் புகார் அளித்து, பணியிடங்களில் அத்துமீறல்களைச் சகித்துக்கொண்டிருக்கும் அத்தனை பெண்களுக்கும் முன்னுதாரணமாகத் திகழும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரை மனதாரப் பாராட்டுகிறேன்.
இத்தனை நாட்களாகியும் தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்காத முதலமைச்சர் @TVKVijayHQ , இனியாவது நடவடிக்கை எடுப்பாரா? அல்லது பெண்களின் பாதுகாப்பைவிட, இத்தகைய கீழ்த்தரமான குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள தனது கட்சிக்காரரைப் பாதுகாப்பதுதான் முக்கியம் என்ற நிலைப்பாட்டிலேயே தொடர்வாரா?
தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம். இப்போதாவது நடவடிக்கை எடுக்கப்படுமா?
Anantharamakrishnan Senthivel, Ph.D. retweeted
ஆளுங்கட்சியைச் சேர்ந்த MLA-வின் ஒழுங்கீனமான செயல் குறித்து மாவட்ட ஆட்சியர் முறையாகப் புகார் அளித்திருக்கும் செய்தி 'தி இந்து' நாளேட்டில் இன்று வெளியாகியிருக்கிறது.
இத்தகைய ஒரு சம்பவம் நடைபெற்றதாக பல வாரங்களுக்கு முன்பு செய்திகள் வெளிவரத் தொடங்கியபோதே, முதலமைச்சரும் தலைமைச் செயலாளரும் மாவட்ட ஆட்சியரை அழைத்துப் பேசி இருக்க வேண்டும். அவருக்கு உறுதுணையாக அரசு இருக்கும் என்ற நம்பிக்கையை அளித்திருக்க வேண்டும்.
தவறிழைத்த சட்டமன்ற உறுப்பினரைக் கண்டித்து, சட்டநடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
பெண்களின் பாதுகாப்பிற்கும், ஆட்சி மாண்பிற்கும் முக்கியத்துவம் அளிக்கும் எந்த ஒரு அரசும் இதைத்தான் செய்திருக்கும்.
ஆனால், தன் கட்சி சட்டமன்ற உறுப்பினரையும் தன் மைனாரிட்டி அரசையும் காப்பாற்றினால் போதும் என்ற நோக்கத்தில் இவர்கள் இந்த சம்பவத்தை மறைக்க அனைத்து வகைகளிலும் முயற்சித்ததால்தான், பாதிக்கப்பட்ட பெண் அலுவலர் முறையாகப் புகார் அளிக்கவே இத்தனை நாட்கள் ஆகியிருக்கின்றன.
ஒரு மாவட்ட ஆட்சியருக்கே இந்த நிலைமை என்றால் தமிழ்நாட்டில் வாழும் சராசரிப் பெண்களின் நிலை எப்படி இருக்கும் என்ற கேள்வி கவலை அளிக்கிறது.
இதில், பதவிக்கு மாரடிக்கும் சில கட்சித் தலைவர்கள் பாதிக்கப்பட்டவரின் பக்கம் நிற்காமல், MLA பாவம் என்று முட்டு கொடுத்தது கேவலத்தின் உச்சம்.
பல்வேறு வகைகளிலும் இந்த சம்பவம் அரசின் கவனத்திற்கு வந்த பிறகும், இந்த அரசு நடவடிக்கை எடுக்காமல் நீதிமன்றத்திலும் பொய் சொல்கிறார்கள் என்பது கடும் கண்டனத்துக்குரியது.
பாலியல் குற்றங்களிலும், போதைப் பொருள் கடத்தலிலும், கொள்ளைச் சம்பவங்களிலும் த.வெ.க.வினர்தான் அதிகம் ஈடுபடுகிறார்கள் என நாங்கள் தொடர்ந்து சொல்லி வருவது ஒவ்வொரு நாளும் உண்மையாகி வருகிறது.
இனியும் தாமதிக்காமல், கள்ளக்குறிச்சி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினரைக் கைது செய்து விசாரிக்க வேண்டும்.
“மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி துன்புறுத்தல் தந்த சம்பவம் எதுவும் நடக்கவில்லை. கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பாவம்” என சொன்னவர்கள் தாமாக முன்வந்து பதவி விலக வேண்டும்.
@manickamtagore @CTR_Nirmalkumar
@CMOTamilnadu @RahulGandhi
65
Anantharamakrishnan Senthivel, Ph.D. retweeted
NOT EVEN A WOMAN DISTRICT COLLECTOR IS SAFE UNDER CM VIJAY’S TVK RULE! 🚨
When a sitting District Collector, the administrative head of an entire district, is allegedly subjected to obscene messages, intimidation, and even house trespass by a ruling TVK MLA, what message does that send to every woman in Tamil Nadu?
If a District Collector has to fight for basic dignity and safety inside the system, no ordinary woman can trust the hollow slogans of this TVK regime.
Article by @the_hindu
🔗: thehindu.com/news/national/t…
Anantharamakrishnan Senthivel, Ph.D. retweeted
TVK MLA Sent Obscene Messages To District Collector, Police Took No Action On Complaint : Justice Victoria Gowri
#TamilNadu #TVK
livelaw.in/high-court/madras…
Anantharamakrishnan Senthivel, Ph.D. retweeted
தமிழ்நாடு தலைமைச்செயலகத்தில் சட்ட விரோதமாக பணியாற்றி வரும் ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி ஆகியோர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏன்?
பள்ளி, கல்லூரி, தொழிற்சாலைகள், அலுவலகங்கள் என பணிபுரிபவர்களுக்கு ஐடி கார்டு அல்லது பணி நியமன ஆணைகள் இருக்கும்.
அப்படி எந்த அரசாணையும் இல்லாமல், முதலமைச்சர் அறையில் அமர்ந்துகொண்டு ஐஏஎஸ் அதிகாரிகளை வரச்சொல்லி கேள்வி கேட்பது சட்டவிரோதமான செயல் இல்லையா?
சோத்துப்பாறை அணையை சட்டவிரோதமாக திறந்த உள்ளூர் தவெக நிர்வாகிகளுக்கும், அரசாணை இல்லாமல் சட்டவிரோதமாக பணியாற்றிவரும் முதலமைச்சரின் ஆலோசகர்களுக்கும் எந்த வித்தியாசமுமில்லை.
அணையை திறந்த தவெக நிர்வாகிகள் மீது சட்டப்படி வழக்குப் பதிவு செய்து கைது செய்திருக்க வேண்டும். ஆனால் சோத்துப்பாறை அணைக்கு புதிய பூட்டு வாங்கி மாட்டியிருக்கிறார் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா.
ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி இருவரையும் அரசே நியமித்திருந்தால் அரசாணைகள் எங்கே? அரசாணையை வெளியிட ஆறு மாதமாகவா நல்ல நேரம் பார்ததுக் கொண்டிருக்கிறீர்கள்?
அரசாணை இல்லையெனில் இருவரையும் வெளியேற்றி, அறைக்கு புதிய பூட்டு வாங்கி பூட்டப்போவது எப்போது?
துளியளவு வெளிப்படைத்தன்மை இல்லாத அரசு, இந்தியாவில் உண்டென்றால் அது முதலில் ஒன்றிய பாஜக அரசு. இரண்டாவது விஜய் அரசு.
Anantharamakrishnan Senthivel, Ph.D. retweeted
குரியன் ஜோசஃப் கமிட்டி கலைக்கப்பட்டுவிட்டது.
திருப்பரங்குன்றத்தில் மதநல்லிணக்கம் சிதைக்கப்பட்டுவிட்டது.
தமிழ்நாட்டில் பார்ப்பனீய ஆதிக்கம் விதைக்கப்பட்டுவிட்டது.
இந்திய அளவில் மகுடமாகத் திகழ்ந்த தமிழ்நாட்டின் தரம், விலைவாசி, சட்டம்–ஒழுங்கு, GDP growth rate எனப் பல தளங்களில் புதைக்கப்பட்டுவிட்டது.
Federalism என்றால் என்னவென்றே தெரியாதவர்கள்,
Religious fanaticism என்றால் என்னவென்றே தெரியாதவர்கள்,
Brahminical supremacy என்றால் என்னவென்றே தெரியாதவர்கள்,
Governance என்பதற்கு spelling கூடத் தெரியாதவர்கள்,
அனைவரும் ஒன்று கூடி, இவை அனைத்தையும் தங்களைவிடக் குறைவாகத் தெரிந்த ஒரு நடிகரைத் தேர்ந்தெடுத்தனர்.
அன்று தமிழ்நாடு என்று எவற்றையெல்லாம் பெருமையாக நினைத்தோமோ, அவை ஒவ்வொன்றாகப் படிப்படியாகப் பறிபோய்க் கொண்டிருப்பதைப் பார்த்து நமக்குத்தான் ரத்தக் கண்ணீர் வருகிறது.
அவர்களோ, ‘Cute CM’ஐ என்ஜாய் செய்து கொண்டிருக்கிறார்கள்.
Ignorance is bliss என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். அது ஒருவகையில் வரம்தான் போல!
பாரதி சுப்பராயன்
Anantharamakrishnan Senthivel, Ph.D. retweeted
குறுவை போச்சு! சம்பாவும் கருகுது! Survival Mode-இல் தவிக்கும் விவசாயிகளுக்கு, Silent Mode-இல் உள்ள CM-இன் பதில் என்ன?
காவிரியில் 11 TMC தண்ணீர் கேட்ட தவெக அரசின் இரண்டு மனுக்களும் தள்ளுபடி! நாகையில் குறுவை சாகுபடிப் பரப்பு சுமார் 94% சரிவு! இன்று சம்பா பயிரைக் காப்பாற்ற விவசாயிகள் தண்ணீரையே விலைக்கு வாங்கும் அவலம்!
🌾 காவிரி நீருரிமையை நிலைநாட்ட என்ன செய்தீர்கள்?
🌾 பயிர்களைக் காப்பாற்ற என்ன திட்டம்?
🌾 பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் எப்போது?
🌾 விவசாயிகளுக்கு முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி எப்போது?
முதலமைச்சர் அவர்களே…
அனைத்துக்கட்சிக் கூட்டத்தை உடனடியாகக் கூட்டுங்கள்! தீர்மானங்களை நிறைவேற்றி, பிரதமரைச் சந்தித்து முறையிடுவோம்!
விவசாயிகளின் கண்ணீரைவிட உங்களது Ego பெரிதல்ல. பொறுப்புகளைத் தாரைவார்த்துவிட்டு Zero Accountability-யுடன் சொகுசாக இருக்கலாம் என்று எண்ணாமல், விவசாயிகளின் கண்ணீருக்குப் பதில் சொல்லுங்கள்!
#Cauvery #DeltaFarmers #TVKfails
Anantharamakrishnan Senthivel, Ph.D. retweeted
இந்தியாவிலேயே மிகப் பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்கள் ஒன்றிய அரசின் அமைப்புகளால் தமிழ்நாட்டில் பிடிக்கப்படும் நிலையில், அவற்றில் இருந்து மக்களையும் ஊடகங்களையும் திசைதிருப்பவே முன்னாள் அமைச்சர் மூர்த்தி அவர்களைக் குறிவைத்து ரெய்டு நடத்தப்படுகிறது.
கையாலாகாத த.வெ.க. ஆட்சியின் சட்டம் ஒழுங்கு சீர்கேடும், த.வெ.க.வினரின் குற்றச் செயல்களும், சட்டமன்ற உறுப்பினர்களின் ஒழுங்கீனமும் சந்தி சிரிக்கும் ஒவ்வொரு முறையும் தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது ரெய்டு நடத்துவது வாடிக்கையாகி விட்டது.
அரசியல் காரணங்களுக்காகத் த.வெ.க. அரசு தொடரும் பொய் வழக்குகளை நீதிமன்றத்தில் சட்டப்படி எதிர்கொண்டு கழகம் வெல்லும்.
ஆறு மாத ஆட்சியில் சொல்லிக் கொள்ள எந்தச் சாதனையும் இன்றி, மக்களின் அவநம்பிக்கையை மட்டுமே சம்பாதித்துள்ள முதலமைச்சர் விஜய் அவர்கள் இனியும் 'தி.மு.க., தி.மு.க.,' என உச்சரித்து ஏமாற்றுவதைத் தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளாது.
#TVKfails
Anantharamakrishnan Senthivel, Ph.D. retweeted
Can I have a word with you urgently, Hon'bel CM Mr. Joseph Vijay? @CMOTamilnadu
Women in governance need you to stand with them!
Victims of custodial violence need you to speak to them!
Please listen carefully. @Chief_Secy_TN @tnpoliceoffl @the_hindu @IndianExpress @VanniTamizhVCK @CTR_Nirmalkumar @peopleswatch @jaacttn @cpimspeak @tncpim

































